Saturday, July 17, 2010
Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க...
Saturday, June 26, 2010
டாய் ஸ்டோரி 3 - 3D [2010] – குழந்தைகளுக்கு மட்டுமல்ல
ரெண்டாவது விஷயம்... பிக்ஸார்(PIXAR)... ஹாலிவுட்ல இருக்கற அனிமேஷன் ஸ்டூடியோ... மத்த அனிமேஷன் படங்களுக்கும், பிக்ஸார் அனிமேஷன் படங்களுக்கும் இருக்கற வித்தியாசம் ராமநாராயணன் படத்துக்கும், ஷங்கர் படத்துக்கும் இருக்கற வித்தியாசம் மாதிரி... அவ்வளவு பிரம்மாண்டம்... நுணுக்கம்... உழைப்பு... ஒவ்வொரு காட்சிக்கும் இவங்க பண்ணற உழைப்பை சொல்ல தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்... ஹாலிவுட் பாலா அதை 18 போஸ்ட்டா போட்டுருந்தாரு... பிக்ஸார் பத்தி நீங்க அவ்வளவா கேள்விப்பட்டதில்லைன்னா, சாமிகுத்தமாயிடும்... படிச்சுட்டு வந்துருங்க...
Wednesday, June 23, 2010
Les Diaboliques (The Devils)[1955] – ஃப்ரென்ச் படம்
ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல ‘பிறமொழிப்படங்கள்’-னு பதிவுக்கு பேரு வச்சேனே தவிர, ஹாலிவுட்டைத் தாண்டி வேற எதுவும் எழுதுனபாடு இல்ல... நம்ம கருந்தேள், கீதப்பிரியன் அளவுக்கெல்லாம் நான் உலகப்படம் பார்க்கறது இல்லை... விரல்விட்டு எண்ணிடலாம்... ஆனாலும், ‘பேரு’க்காவது ஒரு பிறமொழிப்படம் எழுதுனியான்னு யாரும் கேட்டுடக்கூடாது பாருங்க... அதுக்குதான் இந்த போஸ்ட்...
உங்களுக்கு Psycho, Rebecca மாதிரி படங்கள் பிடிக்குமா..? சஸ்பென்ஸ் த்ரில்லர் பிடிக்குமா..? அப்படின்னா, இதுக்கு மேல படிக்கவே தேவையில்லை... அப்படியே டவுன்லோடு போடுங்க... ஹிட்ச்காக் எஃபெக்ட்டை விட நல்லாவே இருக்கும்...