Sunday, June 6, 2010

Memento (2000) – இது வெறும் படமல்ல... ஒரு அனுபவம்...

விமர்சனத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்... அதனால, மூணு பாகமா பிரிச்சு இருக்கேன்... முதல் பாகம் இந்த இடுகையில்...

இந்த படத்தைப் பத்தி கேள்விப்பட்டும், படம் பார்க்காதவங்க சொல்லற காரணங்கள் இதுதான்...

· கஜினியோட ஒரிஜினல்தானே... அதான் தமிழ்லயே பார்த்தாச்சே... அதை எதுக்கு இங்க்லீஷுல வேற பார்த்துகிட்டு...

· கதை தெரிஞ்சுடுச்சு... அதான் பார்க்கல...

· ரொம்ப குழப்பமா இருக்கும்னு சொன்னாங்க...

· கொஞ்சம் பார்த்தேன்... ஒன்னும் புரியல... நிறுத்திட்டேன்...

இதுல ஒன்னுதான் உங்க பதிலுமா..? அப்ப உங்களுக்காகதான் இந்த பதிவே...

இது கஜினி இல்லை:

வேர்ல்ட் கப் கிரிக்கெட்லயும் மூணு ஸ்டெம்ப், பேட், பால் எல்லாம் வச்சுதான் விளையாடறாங்க... உங்க தெருவுல விளையாடற சின்னப்பசங்களும் மூணு ஸ்டெம்ப், பேட், பால் எல்லாம் வச்சுதான் விளையாடறாங்க... தெருவுல நடக்கற கல்லி கிரிக்கெட் பார்த்தா, வேர்ல்ட் கப் பார்த்த மாதிரி ஆகிடுமா..? அது ரெண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ, அவ்வளவு வித்தியாசம் இருக்கு கஜினிக்கும் மெமெண்டோவுக்கும்...

1. சில நிமிஷங்கள்ல நடந்ததை மறந்துபோற ஹீரோ...

2. அவர் எப்பவும் வச்சுருக்கற போலராய்ட்(Polaroid) கேமிரா...

3. உடம்புலயும், வீட்டு சுவர்லயும் கிறுக்கல்கள்...

இந்த மூணு விஷயங்களைத்தவிர ரெண்டு படத்துக்கும் வேற எந்த ஒற்றுமையும் கிடையாது.. 1008 வித்தியாசங்கள் இருக்கு... (இந்த மூணு விஷயங்களைத் தாண்டி வேற எதுவும் புரிஞ்சுருக்காது...)

இது படமல்ல, ஒரு அனுபவம்:

நீங்க எத்தனை படம் வேணும்னாலும் பார்த்திருக்கலாம்... ஆனா ஒரு 3-D படம் பார்க்கிற மாதிரி வருமா? அது ஒரு தனி அனுபவம்... புதுமையான அனுபவம்... சொன்னாலோ, படிச்சாலோ புரியாது... அனுபவிக்கணும்... அதே மாதிரிதான் மெமெண்டோவும்... புதுமையான குழப்ப அனுபவம்... அவதார் பார்க்கிறப்போ, ரெண்டு மணி நேரம் பண்டோரா கிரகத்துக்கே போயிட்டு வந்த மாதிரி இருக்குமே... அது மாதிரி, இதுல ஹீரோவோட குழப்பத்தை நீங்களே அனுபவிப்பீங்க... இதுவரை இப்படி வேறெந்த படமும் வந்ததில்லை...

எதுக்காக நம்மைக் குழப்பணும்?

இதுக்கான காரணத்தை போன பதிவுலயே ஓரளவு பார்த்தோம்...

படத்தோட நோக்கம் காதலியைக் கொன்னவனை பழிவாங்கும் ஹீரோவைக் காட்டறது இல்லை... காதலி எப்படி செத்துப்போனா..? யாரு கொன்னாங்க..? ஹீரோவுக்கு எப்படி இந்த வியாதி வந்தது..? வில்லன் கடைசில என்ன ஆனான்..? இந்த விஷயங்களைப் பத்தி எல்லாம், டைரக்டருக்கு கவலையே இல்லை... கடைசி வரை இதையெல்லாம் அவர் நமக்கு சொல்லப்போறதும் இல்லை...

படத்தோட நோக்கமே short term memory loss அப்படின்னு செல்லமா அழைக்கப்படுகிற, anterograde amnesia அப்படிங்கிற வியாதி வந்தா எப்படி இருக்கும்னு நமக்கு புரியவைக்கணும்... அவ்வளவுதான்... அதனால ஹீரோவோட குழப்பத்தை நாமும் அனுபவிக்கணும்...

ஆனா, கடைசி வரை குழப்பமாவே இருக்கும்னு நினைக்காதீங்க... நமக்குதான் short term memory loss இல்லையே... அதுனால, கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்சு, படம் முடியறப்போ முழுசா புரிஞ்சுருக்கும்.. புரியறப்போ, ஒரு தெளிவு வரும்... இப்படி ஒரு படமான்னு ஒரு ஆச்சரியம் வரும்... குறுக்கெழுத்துப் புதிரையோ, Sudoku-வையோ முடிச்சா ஒரு சந்தோஷம் வரும் பாருங்க... அதுவும் வரும்..

கதை அமைப்பு

ஹீரோவுக்கு சில நிமிங்கள்லயே நடந்தது மறந்துடும்கிறதால, யார் நண்பர், யார் எதிரி, யாரை நம்பலாம் நம்பக்கூடாதுன்னு எதுவுமே புரியாது அவருக்கு… படத்தை நேரா சொன்னா, நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு நமக்கு தெரிஞ்சுடும்... ஹீரோவுக்கு இருக்கிற குழப்பம் நமக்கும் இருக்கணும்னு, படத்துல கதையை Reverse-ல சொல்லறாங்க... அதாவது முதல் காட்சியே, கிட்டத்தட்ட climax மாதிரிதான்... அந்த காட்சில, அவரு சாகடிக்கறது வில்லன்தானா இல்ல போலீஸான்னு அவருக்கே கொஞ்சம் குழப்பம்தான்... நமக்கும்தான் அடுத்த காட்சில அவருக்கு உதவி செய்யற பொண்ணு நல்லவளா இல்ல கெட்டவளான்னு அவருக்கும் கொஞ்சம் குழப்பம் நமக்கும் கொஞ்சம் குழப்பம்... இப்படி போகுது கதை

ஆனா ஒரு introduction கூட இல்லாம இப்படி ரிவர்ஸ்ல கதை சொன்னா ரொம்ப குழப்பிடுமே..! அதனால, ஒவ்வொரு reverse காட்சிக்கு நடுவிலேயும் ஒரு ஃப்ளாஷ்பேக் ஓடுது... (கருப்பு வெள்ளையில், ஆனால் ஃப்ளாஷ்பேக் reverse-ல ல்ல நேராக...) அதுல ஹீரோ தனக்கு எப்படி இப்படி ஆச்சுன்னு சொல்றாரு. மொத்தம் 44 காட்சிகள் 22 காட்சிகள் கலரில்... 22 ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கருப்பு வெள்ளையில்... தற்போது நடக்கும் 22 காட்சிகளை A முதல் V வரையும் (A முதலில் நடந்தது, V பின்னர் நடந்தது), ஃப்ளாஷ்பேக் 22 காட்சிகளை 1 முதல் 22 வரையும் வைத்துக்கொண்டால் (1 முதலில் நடந்தது, 22 பின்னர் நடந்தது), இப்படித்தான் போகிறது படம்: 1 V 2 U 3 T 4 S 5 R 6 Q ….. 20 C 21 B 22/A. அதென்ன 22/A..? கருப்பு வெள்ளைக்கும், கலருக்கும் ஒரு தொடர்பு இருக்கணும் இல்ல... கடைசி கருப்பு வெள்ளைக் காட்சி, அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கலரா மாறுது... முதல்முறை இதை புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கலாம்... ஆனா, மெமெண்டோ மாதிரி ஒரு once-in-a-generation படத்தைப் பார்க்க, கஷ்டப்படலாம்... தப்பேயில்லை...

(படம்:Wikipedia)

மேலே இருக்கிற படத்துல, நீல கலர்ல இருக்கிற நம்பர்களும், சிவப்பு கலர்ல இருக்கிற எழுத்துக்களும்தான் காட்சிகள்... கீழே இருந்து மேலே போனா, எந்த வரிசையில வருதுன்னு பாருங்க... 1, 2, 3, .... 21, 22, A, B, C, …. T, U, V. இதுதான் காட்சிகள் நடந்த காலவரிசை... ஆனா, படத்தில நமக்கு காட்டப்படற வரிசை இடமிருந்து வலமாக... 1, V, 2, U, ... 20, C, 21, B, 22, A அப்படி... படம் பார்க்கிறப்போ இதைப் புரிஞ்சுக்கறது உதவியா இருக்கும்...

அதாவது கதையில நடுவுலயே முக்கியமான ட்விஸ்ட் வருது... கதையை நேரா சொல்லறப்போ, அந்த ட்விஸ்ட் பாதிலயே வந்துரும்... ஆனா, அப்ப்டி நேரா சொல்லாம, முதல் பாதியின் முதல் காட்சி, இரண்டாவது பாதியின் கடைசிக்காட்சி, முதல் பாதியின் இரண்டாவது காட்சி, இரண்டாவது பாதியின் கடைசிக்கு முந்தைய காட்சி, அப்படின்னு இரண்டு பாதியையும் மாற்றி மாற்றிகாட்டி இருக்காங்க... முன் பாதி நேராவும், பின் பாதி ரிவர்ஸ்லயும் வர்றதால, ரெண்டும் வந்து கதையோட நடுவுல முட்டிக்குது... அங்கதான் ட்விஸ்ட் வச்சுருக்காங்க...

கதையும், ட்விஸ்ட்டும் இரண்டாவது பாகத்தில்... நாளைக்கு...

ட்ரெய்லர் இங்கே...





Related Posts with Thumbnails

34 comments:

  1. மீ தி பர்ஸ்ட்.

    எனக்கு மிகவும் பிடித்த படம்.

    ReplyDelete
  2. நண்பா மிக நல்ல விமர்சனத்தின் தொடக்கம்,கண்டின்யூ,

    ReplyDelete
  3. மெயில் பார்த்தேன்,சரியாக சொன்னீர்கள்.நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லியிருக்கென்,பார்ப்போம்

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்.. அவசியம் படம் பார்க்கிறேன் நண்பா...

    ReplyDelete
  5. இப்போதெல்லாம் படங்களை முழுக்க முழுக்க அப்படியே காப்பி அடிப்பதில்லை. ஒரு இன்ஸ்பிரேஷன் எடுத்துக்கொண்டு அதற்க்கு பிறகு முற்றிலும் நம்ம டேஸ்டுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைப்பது தான் ஸ்டைல்.

    உதாரணமாக சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்தில் மார்டின் குரோ ஒரு புது மாதிரி ரூல் கொண்ட கிரிக்கெட் மேட்சை கொண்டுவர முயற்சித்தார். அதில், ஸ்ட்ரெயிட்டாக சிக்சர் அடித்தால் மேக்சிமம் என்று அதிக ரன்கள் உண்டு. பின்னர் அதில் பல மாற்றங்கள். அந்த பந்தயங்களில் பலவிதமாக ரசிகர்களை கவர முயற்சித்தனர்.

    மூன்று வருடங்களுக்கு முன்பு கபில்தேவும் ஜீ டிவி சந்திராவும் சேர்ந்து ஒரு புது மாதிரி க்ளப் கிரிக்கெட் போட்டியை கொண்டு வந்தனர். அதுவே இங்கிலாந்து புட்பால் மாடலை கொண்டது. பின்னர் தான் IPL வந்தது.

    இப்போது எதில் இருந்து எது இன்ஸ்பையர் என்றே சொல்லமுடியாது.

    ஒரு பேசிக் தீம்: குறைந்த நேரத்தில் மக்களை கவரும் வகையில் புதிய ரூல்களை கொண்டு ஒரு கிரிக்கெட் போட்டி.

    சோ, இந்த வகையில் பார்த்தால் சரிதான்.

    ReplyDelete
  6. மீ த தேர்டு. . .எனக்கும் மிக மிகப் பிடித்த படம்... :-)

    ReplyDelete
  7. நடத்துங்க.... :)

    ReplyDelete
  8. நண்பரே,

    அருமையான ஆரம்பம். கலக்குங்கள்.

    ReplyDelete
  9. சில வருடங்களுக்கு முன் படத்தைப் பார்த்து, பலது புரியாமலேயே, ரசித்த படம். படம் பார்த்து முடித்த உடன், விக்கி போய், நிறைய படித்து, கதையை புரிந்து கொண்டேன். மீண்டும் பார்க்க வேண்டும். நல்ல பதிவு.

    ReplyDelete
  10. இந்த கதையை முதல்ல சின்னதா படிச்சிருக்கேன் . ஆனா நீங்க சொல்ற முறையை பாக்கும் போதுதான் வித்தியாசம் புரியுது. டைம் கிடைக்கும் போது பாத்துட வேண்டியதுதான்.

    ReplyDelete
  11. நல்ல ஆரம்பம்ங்க... ஆனா பதிவு சின்னதா இருக்குனு ஃபீல் பண்றேன்..

    ஒரு இரண்டு பாகமா போட்டு இருக்கலாம்... :)

    மீதி இரண்டு பாகம் போடுங்க... உங்களது பார்வையை பற்றி தெரிஞ்சிகணும்...

    ஹாலிவுட் பாலா அண்ணா.. இந்த படத்த பத்தி எழுதுன போது இந்த படத்த பாத்தவங்க எல்லாம் அவங்க பார்வைய பகிர்ந்துகிட்ட நல்லா இருக்கும்னு சொன்னாரு... உண்மையாவே ந்ல்லா இருக்கு :)

    நானும் இன்னொரு வாட்டி இந்த படத்த பாத்துட்டு எழுதிறேன்(முடியுமா-னு தெரியல...)

    ReplyDelete
  12. இந்த படத்திற்குபோன என் நண்பன் ஏதோ புரியாத வேற்றுமொழியில் படம் எடுத்து இருக்காங்க என்று புலம்பிக்கொண்டிருந்தான் .ஆனால் இப்பொழுதுதான் தெரிந்தது அது என்ன மொழியென்று .நல்ல இருக்கு . தொடருங்கள் மீண்டும் வருவேன்

    ReplyDelete
  13. நன்றி விஸ்வா.. நீங்க வர்ற வேகத்தைப் பார்த்தா, என் பதிவுக்கு நானே கூட மீ த பர்ஸ்ட் ஆக முடியாது போல... ஆமா, அதென்ன கிரிக்கெட் பத்தி சொல்லியிருக்கீங்க.. நான் சொல்ல வந்தது ஒரு உதாரணமப்பா... கல்லி கிரிக்கெட்டுக்கும், இண்டர்நேஷனல் கிரிக்கெட்டுக்கும் தரத்துல எவ்வளவு வித்தியாசம் இருக்குமோ, அவ்வளவு வித்தியாசம் இருக்கும் ரெண்டு படத்துக்கும்... பலபேரு கஜினிதான் மெமெண்டோன்னு சொல்லிகிட்டு திரியறாங்க... ஹாலிபாலி கேட்டா டென்ஷன் ஆயிடுவாரு...

    நன்றி கார்த்திக்கேயன்... ஆனா எனக்கு இன்னமும் ஹேக் பண்ணியிருப்பாங்களோன்னு ஒரு டவுட்...

    நன்றி கே.ஆர்.பி.செந்தில்..

    நன்றி கருந்தேள்... யூ த ஃபோர்த்...

    நன்றி இலுமி, கனவுகளின் காதலரே, பின்னோக்கி...

    நன்றி ஜெய்லானி, கண்டிப்பா மீண்டும் பாருங்க...

    நன்றி mythoughtsintamil,
    // ஆனா பதிவு சின்னதா இருக்குனு ஃபீல் பண்றேன்.. //
    நான்கூட ஃபீல் பண்றேங்க.. ரெண்டா உடைக்க முடியல... அதான் மூணா உடைச்சுட்டேன்... நாளைக்கு பதிவு பெரு....சா இருக்கும்...

    // ஹாலிவுட் பாலா அண்ணா.. இந்த படத்த பத்தி எழுதுன போது இந்த படத்த பாத்தவங்க எல்லாம் அவங்க பார்வைய பகிர்ந்துகிட்ட நல்லா இருக்கும்னு சொன்னாரு..//
    நானும் அதையேதான் சொல்லப்போறேன்... ஏன்னா, எனக்கும் என் புரிதல் சரியான்னு ஒரு சந்தேகம்...

    நன்றி சங்கர், புரியாதவங்களுக்காகதான் இந்த படத்தைப் பத்தி பதிவே... க்ளாஸ் எடுத்துடலாம்...

    ReplyDelete
  14. நீங்க சொன்ன மாதிரியே தான் நினைத்து கொண்டிருந்தேன் பார்த்துவிடுகிறேன்

    ReplyDelete
  15. என்ன தான் அவரோட படங்கள் எனக்கு புடிச்சு இருந்தாலும்.. முக்கியமா அவர்கிட்ட இருந்து நான் எதிர்பாக்குறது பேட்மேன் - 3... என்னோட ஃபேவரிட் சூப்பர் ஹீரோ...

    ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சிட்டதா படிச்சேன்... ரொம்ப சந்தோஷமா இருந்துது.. :)

    ReplyDelete
  16. ஆரம்பமே அட்டகாசம்.. Waiting for next posts :)

    ReplyDelete
  17. எளிமையாக இதன் திரைக்கதை அமைப்பை விளக்கியிருக்கிறீர்கள். அற்புதம் நண்பா.

    நான் கஜினி பார்த்த பின்பே இந்த படம் பார்த்தேன். இரண்டு முறை பார்த்த பின்னரே சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

    உங்கள் அருமையான விளக்கம் இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நன்றி.

    ReplyDelete
  18. Nice one Jay. Just watched over this weekend after reading your Nolan's post... But still reading your review is interesting... :)

    ReplyDelete
  19. ஜெய் அற்புதமான எழுத்து நடை(நீயெல்லாம் எப்ப இப்படி எழுத போறேன் மனசாட்சி திட்டுதுப்பா).

    ReplyDelete
  20. சூப்பர்ஆ எழுதி இருக்கீங்க...
    நிறைய விஷயம் சொல்லி இருக்கீங்க....
    படத்தை இது வரைக்கும் நான் பார்க்கலை..
    இப்ப பார்க்கனும்னு தோணுது...
    பார்த்துட்டு சொல்றேன் ஜெய்...
    நன்றி...

    ReplyDelete
  21. எதிர்பார்ப்புடன் இரண்டாம் பதிவை நோக்கி :)

    ReplyDelete
  22. //படம் முடியறப்போ முழுசா புரிஞ்சுருக்கும்.. புரியறப்போ, ஒரு தெளிவு வரும்... இப்படி ஒரு படமான்னு ஒரு ஆச்சரியம் வரும்... குறுக்கெழுத்துப் புதிரையோ, Sudoku-வையோ முடிச்சா ஒரு சந்தோஷம் வரும் பாருங்க... அதுவும் வரும்.. //

    சரியா சொன்னீங்க. எனக்கு இப்படி ஒரு பிரமிப்பு வந்துச்சு அதே போல ஹாலிபாலா எழுதினப்போவும் ஒரு பிரமிப்பு இப்போ உங்க மூலமா திரும்ப, அதுவும் மூனு முறை ஜூப்பரு.

    நான் ரொம்ப நாளா ட்ராப்ட்லயே இந்த படத்தை வச்சிட்டிருக்கேன். உங்கோளடது முடிஞ்சதும் என் புரிதல் சரியா இருந்தா கொஞ்சம் பட்டி பார்த்து தட்டுறேன்.

    ReplyDelete
  23. ஜெய் உன் அனுமதியில்லாமயே நண்பர்கள் இருபது பேருக்கு இதை மெயிலாக ஃபார்வெர்ட் செய்திருக்கிறேன், நம்ம டார்கெட்டே இதை நாலு பேருக்கு புரிய வைக்கிறதுதனே.. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.... அவ்வ்வ்.
    :-)

    ReplyDelete
  24. இதுக்குப் பேருதான் பிரிச்சு மேயறதா? இதுக்கு பிசிக்ஸ் சப்ஸக்ட் படிக்கற மாதிரி ஒரு படம் வேற. ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. அந்த கிரிக்கெட் உதாரணம் சூப்பர்.

    ReplyDelete
  25. ஜெய் போன பதிவுக்கு கமெண்ட் பண்ணல. இந்த படத்த நானும் டிராப்ட்ல ரொம்ப இரண்டு வருசமா வச்சிருக்கேன். இன்னும் பாக்கல. உங்க பதிவு முடிஞ்சவுடனே பார்த்துடவேண்டியதுதான்.

    ReplyDelete
  26. மூணு பார்ட்டா??????????? பாஸ் முனைவர் பட்டம் வாங்காம விடமாட்டீங்க போலே?

    ReplyDelete
  27. எனக்கு இந்த படம் அவ்வளவா பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் சலிப்பே ஏற்பட்டது. நாலு பேர்ல மூன்று பேர் புல்லா பாக்கவேணும் என்று பிடிவாதம் பிடித்ததால் அதை பார்த்துத் தொலைத்தேன். .=((

    இன்னும் ஒன்று வந்தது, இரண்டு வருடங்களுக்கு முன்னர். வன்டேஜ் பொயின்ட் என்று நினைக்கிறேன். பாதியிலேயே தூக்கிப் போட்டுட்டேன்.

    ReplyDelete
  28. நன்றி லக்கி லிமட், சீக்கிரம் படம் பாருங்க...

    நன்றி கனகு...( யாருடா இது mythoughtsintamil-னு பார்த்தா நீங்களா... :)
    // ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சிட்டதா படிச்சேன்... // யோசிச்சுட்டு இருக்காறாம்... இன்செப்ஷன் ரிலீஸுக்கு அப்பறம்தான் வேலையை ஆரம்பிக்கறாங்களாம்... இன்னொரு தகவல்.. அதுல ஜோக்கர் கிடையாதாம்..

    நன்றி பிரசன்னா...

    நன்றி சரவணக்குமார்,
    // இரண்டு முறை பார்த்த பின்னரே சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது. //
    நீங்க கொஞ்சம் ஃபாஸ்ட் பிக்-அப்புதான்... :)

    நன்றி ஜான்...

    நன்றி ராமசாமி, என்ன நீங்க.. கதை, கவிதையெல்லாம் அழகா எழுதறீங்க... ஆமா.. என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே..?

    நன்றி ஜெட்லி... கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்...

    நன்றி Bharathi Dhas, ரெண்டாவது போஸ்ட் இன்னைக்கே... :)

    நன்றி சுப.தமிழினியன்,
    நான் Beautiful Mind எழுதினப்போதான் உங்க beautiful mind, into the wild, cast away போஸ்ட்களைப் பார்த்தேன்... அருமையா எழுதி இருந்தீங்க... சீக்கிரமே memento-வையும் உங்க வரிகள்ல எதிர்பார்க்கிறேன்...

    நன்றி முரளி,
    // நம்ம டார்கெட்டே இதை நாலு பேருக்கு புரிய வைக்கிறதுதனே.. நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல.. //
    அதேதாங்க... சூப்பரா சொன்னீங்க.. இதுக்கென்ன அனுமதி வேண்டிக்கிடக்கு...

    நன்றி ஜெயந்தி,
    // இதுக்கு பிசிக்ஸ் சப்ஸக்ட் படிக்கற மாதிரி ஒரு படம் வேற. //
    ஃபிசிக்ஸ் கூட கொஞ்சம் ஈஸிதான்னு நினைக்கிறேன்... :)

    நன்றி ஜீவன்பென்னி,
    // இந்த படத்த நானும் டிராப்ட்ல ரொம்ப இரண்டு வருசமா வச்சிருக்கேன். //
    அட... சீக்கிரம் அந்த பப்ளிஷ் பட்டனை க்ளிக் பண்ணுங்க...

    நன்றி Phantom Mohan,
    // மூணு பார்ட்டா??????????? //
    கதை ரொம்ப பெருசுங்க... எந்த சீனையும் சொல்லாம விடமுடியாது... அதான் பெருசாயிடுச்சு...

    நன்றி அனாமிகா துவாரகன்,
    // எனக்கு இந்த படம் அவ்வளவா பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் சலிப்பே ஏற்பட்டது //
    இப்படி சொல்லிபுட்டீங்களே துவாரகன்... :(
    நியூயார்க் டைம்ஸ், எம்பயர் மேகஸின் மாதிரி பெரிய பத்திரிக்கையில ரெவ்யூ எழுதறவங்களே ஒரு தடவையில புரியலன்னு சொல்லிட்டாங்க தல... நாமெல்லாம் முகமது கஜினி பரம்பரை... 17 தடவையாவது முயற்சி பண்ணாம விடமாட்டோம்... எதுக்கும் அடுத்த ரெண்டு பதிவு படிச்சுட்டு, திரும்ப பார்க்க முயற்சி பண்ணுங்க... அப்பறம் சொல்லுங்க... சலிப்பா இருக்கான்னு...

    ReplyDelete
  29. பார்த்துடுவோம்

    வழக்கம் போல உங்களது விளக்கங்கள் மிக அருமை


    Keep it up

    ReplyDelete
  30. i watched the movie couple of week ago. very nice movie. but i watch it alone. my friend start with me he didn't understand anything he told me this movie very bore. but i watched until end very good movie,,,, really simply super,,,,

    ReplyDelete
  31. //நியூயார்க் டைம்ஸ், எம்பயர் மேகஸின் மாதிரி பெரிய பத்திரிக்கையில ரெவ்யூ எழுதறவங்களே ஒரு தடவையில புரியலன்னு சொல்லிட்டாங்க தல... நாமெல்லாம் முகமது கஜினி பரம்பரை... 17 தடவையாவது முயற்சி பண்ணாம விடமாட்டோம்...//

    :-) :-) :-)

    //அதுல ஜோக்கர் கிடையாதாம்.. //
    என்னாது? டார்க் நைட்ல ஜோக்கார் சாகலையே.

    ReplyDelete
  32. நன்றி சிபி, வரதராஜ்..

    @ சுப.தமிழினியன்,
    // என்னாது? டார்க் நைட்ல ஜோக்கார் சாகலையே //
    ஆமாங்க.. ஆனா, அப்படித்தான் சொல்லறாரு நோலன்.. ரெண்டு நாள் முன்னாடி அவரோட பேட்டி:
    http://www.imdb.com/name/nm0634240/news#ni2760238

    ReplyDelete
  33. அருமை. ஏற்கனவே பார்த்த படம்தான் இன்னொருமுறையும் பார்த்துவிடுகிறேன். :-)

    ReplyDelete
  34. கலக்குறீங்க பாஸ்....பட்டைய கெளப்புறீங்க... :)

    ReplyDelete