Saturday, July 17, 2010

Inception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க...

இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று... இரண்டாம் இடத்தில் என்ன படம் இருந்தாலும் இதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாது...
இதை மெமெண்டோ பத்தின போஸ்ட்ல சொல்லியிருந்தேன்... அதைக் கொஞ்சம் மாத்திக்குங்க... மெமெண்டோவை அலேக்காக தூக்கி ரெண்டாவ்து இடத்துக்குப் போட ஒரு படம் வந்தாச்சு... படம் பார்த்தவங்களுக்கு எல்லாம் ஃபோன் பண்ணி மூணு மணி நேரம் விவாதிச்சு, இன்னும் ஆச்சரியத்துல பேயடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கேன்... அப்படி ஒரு படம்...
Related Posts with Thumbnails

Saturday, June 26, 2010

டாய் ஸ்டோரி 3 - 3D [2010] – குழந்தைகளுக்கு மட்டுமல்ல

முதல் விஷயம்... அனிமேஷன் படம்னா அது குழந்தைகளுக்கு மட்டும்தான்னு நீங்க நினைச்சா, பாவம் நீங்க... வாழ்க்கையில நிறைய சந்தோஷங்களை மிஸ் பண்ணறீங்க... நாமளும் ஒரு காலத்துல குழந்தையாதான் இருந்தோம்.... அந்த சந்தோஷ நினைவுகள் திரும்ப வேணும்னா, அப்பப்போ இந்த மாதிரி படமெல்லாம் பாக்கணும்...

ரெண்டாவது விஷயம்... பிக்ஸார்(PIXAR)... ஹாலிவுட்ல இருக்கற அனிமேஷன் ஸ்டூடியோ... மத்த அனிமேஷன் படங்களுக்கும், பிக்ஸார் அனிமேஷன் படங்களுக்கும் இருக்கற வித்தியாசம் ராமநாராயணன் படத்துக்கும், ஷங்கர் படத்துக்கும் இருக்கற வித்தியாசம் மாதிரி... அவ்வளவு பிரம்மாண்டம்... நுணுக்கம்... உழைப்பு... ஒவ்வொரு காட்சிக்கும் இவங்க பண்ணற உழைப்பை சொல்ல தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்... ஹாலிவுட் பாலா அதை 18 போஸ்ட்டா போட்டுருந்தாரு... பிக்ஸார் பத்தி நீங்க அவ்வளவா கேள்விப்பட்டதில்லைன்னா, சாமிகுத்தமாயிடும்... படிச்சுட்டு வந்துருங்க...

Related Posts with Thumbnails

Wednesday, June 23, 2010

Les Diaboliques (The Devils)[1955] – ஃப்ரென்ச் படம்

ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல ‘பிறமொழிப்படங்கள்’-னு பதிவுக்கு பேரு வச்சேனே தவிர, ஹாலிவுட்டைத் தாண்டி வேற எதுவும் எழுதுனபாடு இல்ல... நம்ம கருந்தேள், கீதப்பிரியன் அளவுக்கெல்லாம் நான் உலகப்படம் பார்க்கறது இல்லை... விரல்விட்டு எண்ணிடலாம்... ஆனாலும், ‘பேருக்காவது ஒரு பிறமொழிப்படம் எழுதுனியான்னு யாரும் கேட்டுடக்கூடாது பாருங்க... அதுக்குதான் இந்த போஸ்ட்...

உங்களுக்கு Psycho, Rebecca மாதிரி படங்கள் பிடிக்குமா..? சஸ்பென்ஸ் த்ரில்லர் பிடிக்குமா..? அப்படின்னா, இதுக்கு மேல படிக்கவே தேவையில்லை... அப்படியே டவுன்லோடு போடுங்க... ஹிட்ச்காக் எஃபெக்ட்டை விட நல்லாவே இருக்கும்...

Related Posts with Thumbnails

Tuesday, June 8, 2010

Memento-வின் புதிர்கள் - பாகம் 3

முதல் போஸ்ட்ல, இந்தப் படத்துல என்ன ஸ்பெஷல்னும், கதையோட அமைப்பு எப்படி இருக்குதுன்னும் பார்த்தோம்..

ரெண்டாவது போஸ்ட்ல, கதையைப் பார்த்தோம்..

இந்த போஸ்ட்ல, படத்துல இருக்க புதிர்களையும், ஆச்சரியமான விஷயங்களையும் பார்ப்போம்...

Related Posts with Thumbnails

Monday, June 7, 2010

Memento (2000) - படத்தோட கதை...

இது முந்தைய போஸ்ட்டோட தொடர்ச்சி... அதுல இந்த படத்துல என்ன ஸ்பெஷல்னும், கதையோட அமைப்பு எப்படி இருக்குதுன்னும் பார்த்தோம்.. இந்த போஸ்ட்ல கதையைப் பார்ப்போம்...

கதை...

கதை புரியற அளவுக்கு, தேவையான காட்சிகளை மட்டும் எழுதியிருக்கேன்...

கருப்புல எழுதி இருக்கறது, கருப்பு வெள்ளைக் காட்சிகள்..

நீலத்துல எழுதி இருக்கறது, கலர் காட்சிகள்...

சிவப்பு கலர்ல நம்பர் போட்டுருக்கதுதான் காட்சிகள் நடந்த கால வரிசை... நேரா படிச்சு புரியலைன்னா, நம்பர் வரிசையில படிச்சுப் பாருங்க...

Related Posts with Thumbnails

Sunday, June 6, 2010

Memento (2000) – இது வெறும் படமல்ல... ஒரு அனுபவம்...

விமர்சனத்தின் நீளம் கொஞ்சம் அதிகம்... அதனால, மூணு பாகமா பிரிச்சு இருக்கேன்... முதல் பாகம் இந்த இடுகையில்...

இந்த படத்தைப் பத்தி கேள்விப்பட்டும், படம் பார்க்காதவங்க சொல்லற காரணங்கள் இதுதான்...

· கஜினியோட ஒரிஜினல்தானே... அதான் தமிழ்லயே பார்த்தாச்சே... அதை எதுக்கு இங்க்லீஷுல வேற பார்த்துகிட்டு...

· கதை தெரிஞ்சுடுச்சு... அதான் பார்க்கல...

· ரொம்ப குழப்பமா இருக்கும்னு சொன்னாங்க...

· கொஞ்சம் பார்த்தேன்... ஒன்னும் புரியல... நிறுத்திட்டேன்...

இதுல ஒன்னுதான் உங்க பதிலுமா..? அப்ப உங்களுக்காகதான் இந்த பதிவே...

Related Posts with Thumbnails

Monday, May 31, 2010

Christopher Nolan-னும் அரை டஜன் குழப்பங்களும்

பேரு: கிறிஸ்டொஃபர் நோலன்

வயசு: 39

தொழில்: ஹாலிவுட்ல ஒரு முக்கியமான இயக்குனர்

எடுத்தது: 6 படங்கள், Following (1998), Memento (2000), Insomnia (2002), Batman Begins (2005), Prestige (2006), The Dark Knight (2008) (இதுல 4 IMDB Top 250-ல இருக்கு...)

பொழுதுபோக்கு: படம் பார்க்கறவங்களோட மூளையைக் குழப்பறது

பிடிச்சது: மனநோய் இருக்கற கதாபாத்திரங்களை

பிடிக்காதது: Linear-ஆ இருக்கற படங்களை

சிறப்பம்சம்: அதைத்தான் இந்த பதிவுல தெரிஞ்சுக்கப்போறீங்க..

சில படங்கள்ல பார்வையாளனை சிரிக்கவச்சே வயிறு வலி வரவழைச்சுடுவாங்க.. சில படங்கள்ல பயமுறுத்தியே ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கும்.. கிறிஸ்டொஃபர் நோலன் கொஞ்சம் வித்தியாசம்.. பார்வையாளனின் மூளையோட விளையாடறவர்.. எப்படின்னு பார்ப்போம்..

Related Posts with Thumbnails

Monday, May 24, 2010

A Beautiful Mind [2001] – அங்கீகரிக்கப்படாத மனதின் வலி

உங்களுக்கு அதிக திறமை இருந்தும், புரிந்துகொள்ளப்படாமல் நிராகரிக்கப் பட்டிருக்கீங்களா? கல்லூரியில் புரியாமல் படிப்பவர்கள், உங்களை விட அதிக மதிப்பெண் வாங்கி இருக்கிறார்களா? நீங்க கேக்கற நல்ல கேள்வி புரியாமல் ஆசிரியர் உங்களை உட்கார சொல்லியிருக்கிறாரா? அலுவலகத்தில் நீங்கள் சொல்லும் புத்திசாலித்தனமான விஷயங்கள் உங்கள் மேலதிகாரிக்கு விளங்கவேயில்லையா? இந்தப்படம் உங்களை அப்படியே பிரதிபலிக்கும்..

நீங்க புத்திசாலித்தனமா ஒரு விஷயத்தை சொன்னா, அது எவ்வளவு தூரம் மத்தவங்க கிட்ட போய் சேருதுங்கறது, அவங்களோட புரிந்துகொள்ளும் சக்தியைப் பொறுத்தது.. உலகத்தின் சிறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஒருவன் புத்திசாலியாக இருந்தால், அவனோட கருத்துக்கள் எல்லாமே புரிந்து கொள்ளப்படாமல் நிராகரிக்கவே படும்.. அப்படி ஒருவனின் கதையே இது..

Related Posts with Thumbnails

Monday, May 17, 2010

தி டெர்மினல் – The Terminal [2004]

இங்க இருந்து ஒரு வேலை விஷயமா அமெரிக்கா போறீங்கன்னு வச்சுக்குங்க.. நீங்க விமானத்துல இருக்கற நேரம் பார்த்து, ஆஃப்கானிஸ்தான்ல தாலிபான் ஆட்சியைப் பிடிச்சாங்களே, அந்த மாதிரி நம்ம நாட்டுல கலவரம் நடந்து, கலவரக்காரங்க ஆட்சியைப் பிடிச்சுட்டா, பழைய அரசாங்கம் கொடுத்த பாஸ்போர்ட் செல்லாது.. அதனால விசாவும் செல்லாது..!!

விசா இல்லாம ஏர்போர்ட்டை விட்டு அமெரிக்கா உள்ள போகமுடியாது.. பாஸ்போர்ட் செல்லாததுனால திரும்ப ஊருக்கும் வரமுடியாது.. நீங்க இறங்கினவுடனே, செல்லாத பாஸ்போர்ட்டை வாங்கிகிட்டு, ஏர்போர்ட்லயே ஒரு ஓரமா உட்காரு தம்பின்னு சொல்லிடுவாங்க..

அப்பறம் பழைய அரசாங்கம் வர்ற வரைக்குமோ, புது அரசாங்கத்தை எல்லாரும் அங்கீகரிச்சு, அவங்க புது பாஸ்போர்ட் கொடுக்கற வரைக்குமோ, ஏர்போர்ட்லயே இருக்க வேண்டியதுதான்.. அப்படி மாட்டிகிட்ட ஒருத்தரைப் பத்திதான் படம்..

Related Posts with Thumbnails

Sunday, May 9, 2010

மிகச்சிறந்த தன்னம்பிக்கையூட்டும் படம் - It’s a Wonderful Life (1946)

எதுக்காக உயிர் வாழணும்? இவ்வளவு நாள் உயிரோட இருந்து என்னத்த சாதிச்சு இருக்கோம்? வாழ்க்கையில இவ்வளவு பிரச்சினை இருக்கே.. பேசாம தற்கொலை பண்ணிட்டு செத்துடலாமா? இப்படியெல்லாம் என்னைக்காவது நினைச்சுருக்கீங்களா?

உங்களுக்கு டாக்டர் கவுன்சலிங் எல்லாம் வேணாம்.. இந்தப்படத்தை ஒரே ஒரு தடவை பாருங்க.. போதும்.. சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுடுவீங்க..

வித்தியாசமான திரைக்கதை இல்ல... ’நச்’சுனு வசனம் இல்ல... ஆச்சர்யப்படுத்தற தொழில்நுட்பமோ, இயக்கமோ இல்ல... வெறும் கதைதான்... அதை வச்சே பின்னியிருக்காங்க...

Related Posts with Thumbnails

Tuesday, May 4, 2010

ஸ்டான்லி குப்ரிக்கின் புதிர்கள் – Eyes Wide Shut [18+] – பாகம் 2

இது போன பதிவோட தொடர்ச்சி. அதுல படத்தோட கதையை பார்த்தோம். இந்த பதிவுல, படத்துல இருக்கற புதிர்களைப் பத்தி பார்க்கலாம்.

சப்வே ரெஸ்டாரண்ட்(Subway Restaurant)-க்கு ஒரு விளம்பர கட் அவுட் போட்டாங்களாம்.. SEX அப்படின்னு பெரிய்ய்......ய எழுத்துல எழுதி, குட்டியா அதுக்கு கீழே, ”Now we got your attention. Eat at Subway” அப்படின்னு போட்டு… பல கட் அவுட் இருக்கற இடத்துல எல்லாரும் அந்த கட் அவுட்டைதான் பார்த்தாங்களாம்… ’அந்த’ விஷயத்துக்குதானே நாமெல்லாம் அடிச்சு புடிச்சு படிக்கறோம்…

அதே மாதிரிதான் இந்த படமும்… ஏகப்பட்ட சீன் இருக்குன்னு கேள்விப்பட்டு படத்தைப் பார்த்தா... (பயப்படாதீங்க... நிறையவே இருக்குதான்...) ஆனா, அதுக்கு நடுவுல தத்துவம் சொல்லறாரு குப்ரிக்...

Related Posts with Thumbnails

Tuesday, April 20, 2010

ஐஸ் வைட் ஷட்[1999] [18+] – Eyes Wide Shut

டைரக்டர் குப்ரிக்கோட கடைசி படம்... டைட்டில் போடறதுக்கு முன்னாடி இருந்து, The End-னு போடற வரைக்கும் ஒன்லி 18+.

கிட்டத்தட்ட பாதி படம், ஒரே ராத்திரில நடக்கற விஷயங்கள்தான்.. ஹீரோ டாம் க்ரூஸ் (Tom Cruise) ஒரு டாக்டர்... ஹீரோயின் நிகோல் கிட்மன் (Nicole Kidman) அவரோட மனைவி... அவங்க ஹவுஸ்வைஃப்... அவங்களுக்கு ஒரு 5 வயசு குழந்தை இருக்கு... ஹீரோவும், ஹீரோயினும் Ziegler-னு ஒரு நண்பர் தர்ற பார்ட்டிக்கு போறாங்க... அங்க ஹீரோ அவரோட கல்லூரி நண்பரை பாக்கறாரு. நண்பர் நிக் (Nick) ஒரு இசைக்குழுவில் வேலை பாக்கறாரு... ஹீரோவும் Nick-ம் பேசிகிட்டு இருக்கற சைக்கிள் கேப்புல, தனியா நிக்கற ஹீரோயின் கூட இன்னொருத்தர் வந்து டான்ஸ் ஆட ஆரம்பிக்கறார்.. நாசூக்கா பேசி அதுக்கும் கூப்பிடறார்.. இதுக்கு நடுவில, நண்பர்கிட்ட பேசிட்டு திரும்பி வர்ற ஹீரோவை ரெண்டு பொண்ணுங்க பிக்-அப் பண்ண பாக்கறாங்க.. அதை ஹீரோயின் கவனிச்சுடறாங்க.. இருந்தாலும் பிசியா இன்னொருத்தரோட டான்ஸ் ஆடிட்டு இருக்கறதால விட்டுடறாங்க.. (குட் ஃபேமிலி...)

Related Posts with Thumbnails

Sunday, April 18, 2010

ஸ்டான்லி குப்ரிக் - Stanley Kubrick


அடுத்து எழுதப்போற படத்தோட டைரக்டர் ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick) (1928-1999)

தலைவரைப்பத்தி சொல்லாம, படத்தைப் பத்தி மட்டும் எழுதிட்டு போனா, அது மகா பாவம். குப்ரிக்கோட ஆவி துரத்தி துரத்தி அடிக்கும். உலக சினிமா விமர்சனம் தொடர்ந்து படிக்கற நண்பர்களுக்கு, குப்ரிக்கைப் பத்தி சொல்லவே தேவையில்லை.

குப்ரிக் கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல்?

Related Posts with Thumbnails

Friday, April 9, 2010

Forrest Gump - ஃபாரஸ்ட் கம்ப் (1994)

என்னைப் பொறுத்தவரை, படங்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
1. ஃபாரஸ்ட் கம்ப்
2. மற்ற எல்லா படங்களும்

அவ்வளவு முக்கியமான படம். அதனால விமர்சனம் கொஞ்சம் நீ....ளம்தான். பயந்துடாதீங்க. நான் இதுவரை எழுதிய, இனி எழுதப்போகும் பதிவுகளிலேயே முக்கியமான பதிவு இதுதான். என் வாழ்க்கையின் திருப்புமுனை இந்தப்படம். நிச்சயமா உங்க வாழ்க்கையிலயும் ஒரு மாறுதலா இருக்கும். நேரம் இருக்கப்போ பொறுமையா படிங்க/பாருங்க.

வாழ்க்கையை இவ்வளவு எளிதாக வாழ முடியுமா அப்படின்னு உங்களை ஆச்சரியப் படுத்தும் படம். மற்ற படங்கள் எல்லாம் காதல், பாசம், குடும்பம், நட்பு, நம்பிக்கை என ஓரிரண்டு விஷயங்களைப் பத்தி மட்டுமே பேச, மொத்த வாழ்க்கையையும் வாழக் கற்றுக் கொடுக்கிறது இந்தப்படம்.

Related Posts with Thumbnails

Monday, April 5, 2010

சிறந்த திரைக்கதைகள் - Kill Bill Vol.2 (2004) [18+]


Kill Bill Vol.2 (2004) [18+]

இது படத்தின் இரண்டாவது பாகம். முதல் பாகம் 2003-ல் வந்தது. அதுவும் சூப்பர்னாலும், சிறந்த திரைக்கதைன்னு சொல்ல முடியாது. 18 வயசுக்கு சின்ன பசங்களும், சாஃப்ட் ஹார்ட் மக்களும் படிக்கறதோட நிறுத்திக்கங்க. படத்தையெல்லாம் பார்க்கவேண்டாம். (உபரி தகவல்: ஒரு சீனும் கிடையாது. ஒன்லி வயலன்ஸ், வயலன்ஸ், வயலன்ஸ், அப்பறம் கடைசியா சூப்பர் திரைக்கதை) Cannibal Holocaust மாதிரி இதைவிட வயலன்ஸ் இருக்க படங்கள் நிறைய இருந்தாலும், mainstream படங்களிலும், அடிதடி வயலன்ஸ்-க்கும் நான் பார்த்தவரையில் இதுதான் முதலிடம்.
Related Posts with Thumbnails

Tuesday, March 30, 2010

சிறந்த திரைக்கதைகள் - Sleuth (1972)

Sleuth (1972)
ஒரு படத்துல பெருசா ஒரு ட்விஸ்ட் வைக்கலாம். இல்லன்னா, சின்ன சின்னதா நடுவில சிலபல ட்விஸ்ட் வைக்கலாம். ஆனா படத்துல நாலஞ்சு பெரிய ட்விஸ்ட் வைக்க முடியுமா? அதுவும் வெறும் 3 பேரை வச்சுகிட்டு. அதுவும் ஒரே வீட்டுக்குள்ளயே!! என்னைப்பொறுத்தவரை, இதுதான் திரைப்பட வரலாற்றிலேயே சிறந்த த்ரில்லர். Psycho, Silence of the Lambs, North by Northwest எல்லாம் பயமுறுத்தும் இசை, கேமராவின் கோணம், கொடூரமான கொலையாளிகளைக்காட்டி கொண்டுவந்த விறுவிறுப்பை, வெறும் கதையிலேயே கொண்டுவந்திருக்கிறாங்க. ஆனால் பாவம், Godfather வந்த அதே வருஷத்துல வெளிவந்துடுச்சு. அதனால, சிறந்த இயக்கம், சிறந்த நடிப்புக்கான விருதுகளை வாங்க முடியல.
Wyke-னு ஒரு பணக்கார எழுத்தாளர். டிடெக்டிவ் நாவல் எழுதுறவரு. க்ரிமினல் மூளைக்காரர். சுமார் 50 வயசு இருக்கும். அவரைப்பார்க்க அவரு வீட்டுக்கு ஒரு சலூன் கடை வச்சிருகறவர் (பேரு Milo) வர்றார்.
Related Posts with Thumbnails

Sunday, March 28, 2010

சிறந்த திரைக்கதைகள் - 12 Angry Men(1957), Pulp Fiction(1994), Sixth Sense(1999)

எனக்குப் பிடித்த படங்கள்: பட்டியல் – 2.1
(மிகச்சிறந்த திரைக்கதை/கதை/இயக்கம் கொண்ட படங்கள்)
இது முந்தைய இடுகையின் தொடர்ச்சி. முதல் இடுகையைப் படிக்க இதை க்ளிக் செய்யவும்: எனக்குப் பிடித்த படங்கள்: பட்டியல் – 2

12 Angry Men (1957)

விவாதம் அப்படின்னா என்ன? அது எப்படி இருக்க வேண்டும்ணு தெரியணுமா? இந்தப்படத்தைப் பாருங்க. 96 நிமிட படத்துல, தொடர்ந்து 88 நிமிடம் ஒரு கோர்ட்டில் இருக்கற ஒரு அறையில் மட்டும். மொத்தம் 12 பேர் மட்டும் அந்த அறையில். ஒரு கொலை கேஸ் பத்தி விவாதிக்கறாங்க.. விவாதிக்கறாங்க.. விவாதிச்சுட்டே இருக்கறாங்க.. ஆனா, ரொம்ப subtitle படிக்கற மாதிரி இருக்கும்ணு நினைச்சுடாதீங்க. எளிமையான வசனங்கள். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இழுத்துச்செல்லும் படம்.

கதை என்ன? ஒரு 18 வயசுப்பையன் அவனோட அப்பாவையே கொன்னுட்டான்னு, கோர்ட்ல நிறுத்தி இருக்காங்க. நம்ம ஊர்லன்னா நீதிபதியே விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடுவாரு. ஆனா, அந்த ஊர்ல மக்கள் ஒவ்வொருத்தரும் வருஷத்துக்கு ஒரு தடவை கோர்ட்ல போயி, ஏதாவது ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்லணும். ஓட்டு போடற மாதிரி அதுவும் ஒரு கடமை. அதுக்கு ஆஃபீஸுல லீவு கூட குடுப்பாங்க. போக முடியாதுன்னா அபராதம் கட்டணும். சரி.. தனியா நாம் மட்டும் போயி ஏதாவது ஒரு தீர்ப்பு சொல்லிட முடியுமா? அதுனால, ஒரே வழக்குக்கு நிறைய பேரைக் கூப்பிடுவாங்க. நீதிபதி அவங்ககிட்ட வழக்கோட எல்லா விவரங்களையும் சொல்லுவார். அப்பறம் அவங்களை ஒரு அறையில தனியா விவாதிச்சு முடிவு எடுக்க சொல்லுவாங்க. ஆனா, எல்லாரும் ஒருமித்த தீர்ப்பை சொல்லணும். அதுவரை விவாதம் தொடரும்.

இந்தப்படத்துல அதுமாதிரி 12 பேரைக் கூப்பிடறாங்க. அவங்களுக்குள் யாரும் யாருக்கும் அறிமுகமானவங்க இல்ல. குற்றவாளியையும் இதுக்கு முன்னாடி தெரியாது. நீதிபதி சொல்லற ஆதாரங்களையும், குற்றவாளியோட வாக்குமூலத்தையும் கேட்டபின் ஒரு அறைக்கு 12 பேரை மட்டும் அனுப்பி வைக்கறாங்க. அவங்க முடிவு எடுக்க வேண்டியதுதான். 12 பேருல, 11 பேர் அந்தப்பையன்தான் குற்றவாளின்னு தீர்மானமா இருக்காங்க. ஒருத்தர் மட்டும் சாட்சிகள் பத்தாது, அதனால அந்தப்பையன் நிரபராதியா இருக்கலாம்னு சொல்றார். (அதாவது he has not done anything wrong legally அப்படிங்கறாரு – நன்றி:நித்தி). அதனால அவர் தன்னோட தீர்ப்பை மாத்தற வரையிலோ, இல்ல மீதி 11 பேரும் அவங்க தீர்ப்பை மாத்தற வரைக்குமோ அந்த அறையிலேயே இருந்து ஒருத்தரை ஒருத்தர் மாத்த முயற்சி செய்ய வேண்டியதுதான். இதெல்லாம் 10 நிமிடக்கதை.
இதுக்கப்பறம் என்ன பேசறாங்க அப்படிங்கறதுதான் படம்.

சரி.. 1948-ல் வந்த Rope படத்துலயே ஒரே வீட்டுக்குள்ளேயே 8 பேரை மட்டும் வச்சு படம் எடுத்துட்டாங்களே.. அதுக்கப்பறம் 10 வருஷம் கழிச்சு வந்த இந்தப்படத்துல அப்படி என்ன இருக்கு?
முதல் விஷயம் - கதாபாத்திரங்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். சாது, கோபக்காரர், அடிக்கடி கருத்து மாறுகிறவர், பிடிவாதமாக கருத்தை நம்பறவர், கசப்பான சொந்த அனுபவங்களால் முடிவெடுப்பவர் என சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கும் கதாபத்திரங்கள். 10 பேரு டீக்கடையில உட்கார்ந்துகிட்டு சூடான ஒரு விஷயத்தைப் பேசினா எப்படி இருக்குமோ அதை அப்படியே காட்டி இருக்காங்க.
இரண்டாவது விஷயம் - வசனம். முதல்வன் படத்துல அர்ஜுனும் ரகுவரனும் இன்டர்வியூ காட்சில பேசுவாங்களே. அந்த அஞ்சு நிமிஷத்துக்கே அசந்துட்டீங்கன்னா, இங்க 90 நிமிஷமும் அப்படித்தான். இயல்பான விறுவிறுப்பான வசனங்கள்.
மூன்றாவது ஒவ்வொருவரும் மனம் மாறும் விதம். ஒவ்வொருவரையும் அவங்க கருத்து தப்புன்னு உணர வைப்பதையும், ஒரு விஷயத்தை எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் காண்கிறார்கள் என்பதையும் அப்படியே திரையில் கொண்டு வந்திருக்காங்க. (இந்தப்படம் வந்து 53 வருஷம் கழிச்சு தமிழில போன மாசம் வந்த ஒரு படத்தைப் பார்த்தேன். மூனு ஹீரோயின். எப்படித்தான் க்ளைமாக்ஸுல இப்படி திடீர்னு குணம் மாறுகிறாங்களோ.. அது டைரக்டருக்கே வெளிச்சம்)
AFI, IMDB மாதிரி சிறந்த திரைப்பட வரிசைகளில் முதல் 10 இடத்தில் உள்ளது!! மொத்தப்படமும் உங்களை நிச்சயம் இருக்கையில் கட்டிப்போடும்.


Pulp Fiction (1994) [18+]

டைரக்டர் Quentin Tarantino. பக்கத்துல ஃபோட்டோல இருக்காரே அவருதான். தலைவரைப்பத்தி தனியா தொடர் இடுகைகளே எழுதணும். 18 வருஷத்துல 6 படம் எடுத்துருக்காரு. 5 படம் IMDB All Time Top 250 Movies List-ல இருக்கு. இந்தப்படம் 5வது இடத்துல இருக்கு.
இந்த திரைக்கதையை வச்சு ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம். இதைப்பத்தி எழுத ஒரு இடுகை பத்தாது. ஆரம்பிச்சா இன்னும் ரெண்டு மணி நேரம் எழுதணும். அப்பதான் முழுசா சொல்ல முடியும். அதனால இப்போ ஒரு அறிமுகம் மட்டும்.
அப்படி என்ன இருக்கு இந்தப்படத்துல?
திரைக்கதை: க்ளைமாக்ஸில் எல்லாரும் திருந்தி, குடும்பத்தோட சிரிச்சுகிட்டே போஸ் தர்றதெல்லாம் நம்ம K.S.Ravikumar படத்துலதான் நடக்கும். Gangster படத்துல எல்லாம் நடக்காது இல்லயா? ஆனாலும் அந்த effect கொண்டு வந்திருக்காரு டைரக்டர் Quentin. எப்படி? காட்சிகளை அத்தியாயங்களா பிரிச்சு அத முன்ன பின்ன மாத்திப்போட்டு. மூன்று வெவ்வேறு கதைக்களங்கள். ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கதைகள். Non linear-ஆக மாறி மாறி வரும் ஏழு அத்தியாயங்கள். ஏழு அத்தியாயங்களை ஏன் இப்படித்தான் பிரிக்க வேண்டும்? அந்த ஏழும் ஏன் அந்த குறிப்பிட்ட வரிசையில்தான் வரவேண்டும்? இதற்கான பதில்தான் படத்தின் ஸ்பெஷல். படத்துல வர்ற முக்கியமான ஏழு கதாபாத்திரங்களும் கதையின் ஏதாவது ஒரு இடத்தில் நல்ல, நேர்மையான (Positive character) கதாபாத்திரமாக உள்ளன. வேறு ஒரு இடத்தில் மிகக் கெட்டதாக (Negative Character) உள்ளன. இந்த நல்ல கதாபாத்திரத்தை முடிவில் கொண்டுவர அத்தியாயங்கள் மாற்றிக் காட்டப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மைப் பிரியும்போது Positive Character-ஆகவே பிரிகின்றன.

வசனங்கள்: எதிரியின் வீட்டினுல் நுழையும்முன் பாதத்தை மசாஜ் செய்வது பற்றி பேசுவதும், கொல்லப்போன இடத்தில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கூலாக பர்கர் சாப்பிடிவதும், 10 நிமிடத்திற்கு இரண்டு பேர் உட்கார்ந்து மில்க்‌ஷேக் பற்றிப் பேசுவதும், Gangster-ஆக இருப்பவன் பைபிளில் இருந்து கருத்து சொல்வதும் மிகப்புதிது. எப்போதும் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டு இருக்கும் Gangster படங்களுக்கு நடுவே இது மிக வித்தியாசம். நிஜமாவே Gangster எல்லாம் இப்படி ஜாலியாவும் பேசிப்பாங்க போல எனத்தோன்றும்.
Genre: எவ்வளவு முறை பார்த்தாலும், இதை ஒரு Genre-ல் சேர்க்க முடியாது. Crime, dark comedy, thriller, drama, mystery, noir என எல்லாம் கலந்து இது ஒரு புதுவகை.
Forrest Gump, Shawshank Redemption மாதிரியான படங்கள் வந்த வருடம், முன்ன பின்ன தெரியாத ஒரு டைரக்டர் இயக்கத்தில் வெளிவந்து, 320 மில்லியன் டாலர் வசூலையும், 5 ஆஸ்கரையும் வாங்கியது இந்தப்படம்.
Sixth Sense (1999)
நிறைய கேள்விப்பட்டிருப்பீங்க இந்தப்படம் பத்தியும் டைரக்டர் பத்தியும். டைரக்டர் மனோஜ் ஷ்யாமளனுக்கு இது முதல் படம். நம்ம பாண்டிச்சேரிதாங்க இவருக்கு பூர்வீகம்!! அமெரிக்கால குடியேறின குடும்பம். இந்தப்படம் எடுக்கறப்போ பையனுக்கு 28 வயசு. (எனக்கு இ எழுதவே யோசிக்க வேண்டியிருக்கு) 17 வயசுலயே 45 குறும்படம் எடுத்து இருக்காறாம்!!
பொதுவா அமெரிக்க படங்கள்ல யாரு திருடன், யாரு கொலைகாரன் இப்படின்னு சின்ன சின்னதா ட்விஸ்ட்(twist) வச்சுகிட்டு இருந்தாங்க. நம்மாளு வந்து வச்சாரு பாருங்க ட்விஸ்ட். (கவுண்டமணி பாஷையில சொல்லணும்னா, உலக மகா ட்விஸ்ட்டுடா சாமீ..) அத இங்க சொல்லிட்டா எல்லாரும் சேர்ந்து என்னை அடிச்சுடுவாங்க. படம் பார்க்காதவங்க கூகிள்ல தேடாதீங்க. யாருகிட்டயும் கேக்காதீங்க. முதல்ல படத்தைப்பாருங்க. பார்த்தவங்க ட்விஸ்ட் பத்தி வெளியே பேசாதீங்க.

சரி. கதையில திருப்பம் மட்டுமா? நமக்குக் கொஞ்சம் கூட சந்தேகமே வராத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் கொண்டு போயிருக்காரு. Usual Suspects மாதிரி ட்விஸ்ட் இருக்கற படங்கள்ல (இந்த படத்தைப்பத்தி அப்பறம் பேசலாம்), எங்கடா மாட்டிப்போமோ அப்படின்னு டைரக்டர் ஒரு க்ளூ கூட நமக்கு குடுக்காம, கடைசியா ஒருத்தன திருடன்னு காட்டுவார். இந்தப்படத்துல அப்படியில்ல. எல்லாக்காட்சிலயும் நமக்கு க்ளூ இருக்குது. அதக்கண்டுபிடிக்கறது நம்ம திறமை.
ஒரே படத்துல மொத்த ஹாலிவுட் உலகமும் ஷ்யாமளன்தான் அடுத்த ஸ்பீல்பெர்க்-னு கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கப்பறம் அவரு இந்த அளவுக்கு ஒரு படம் எடுக்கலைங்கறது வேற விஷயம்.

கதையா? ஹீரோ Bruce Willis மனநல மருத்துவர். அவர்கிட்ட சிகிச்சைக்காக ஒரு 10 வயசு பையனை சேர்க்கறாங்க. கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ள, அப்பப்போ திகிலடைந்து கத்தற, அதிகம் பேசாத பையன் (Haley Joel Osment - Artificial Intelligence படத்துல வர்ற பையன், Forrest Gump-ல இவர்தான் Tom Hanks-ன் மகன்). பையனுக்கு அப்பா இல்ல. அம்மா மட்டும்தான். பள்ளிக்கூடத்துல அதிகமா யார்கிட்டயும் பேசறது இல்ல. இந்தப் பள்ளிக்கூடம் 100 வருஷத்துக்கு முன்னாடி தூக்குல போடற இடமா இருந்ததுன்னு டீச்சர்கிட்ட சொல்றான். Drawing வகுப்புல எல்லாரையும் படம் வரைய சொன்னா, இவன் மட்டும் ஒரு கொலையை படமா வரையறான். தனியா படுக்க பயப்படறான். இதனாலதான் அவன் நம்ம டாக்டர்கிட்ட சிகிச்சைக்கு வர்றான். இவனுக்கு என்னதான் பிரச்சனைன்னு கண்டுபிடிக்கறார் அவர். அவருக்கும் சொந்த வாழ்க்கையில கொஞ்சம் பிரச்சனை. மனைவி சரியா பேச மாட்டேங்கிறாங்க. (இது நல்ல விஷயம்தானே!!) மருத்துவரும், இந்தப்பையனும் எப்படி அவங்களோட பிரச்சினைகளைத் தீர்க்கறாங்கன்னு படத்துல பாருங்க.

க்ளைமாக்ஸுக்கு முன்னாடியே ட்விஸ்ட்டை கண்டுபிடிக்கறவங்களுக்கு, 'சிறந்த கணிப்பாளர்' விருது வழங்கப்படும் என அறிவித்துக்கொள்கிறோம்.
Related Posts with Thumbnails

Monday, March 22, 2010

எனக்கு பிடித்த படங்கள்: பட்டியல் – 2


பட்டியல் – 2 (மிகச்சிறந்த திரைக்கதை/கதை/இயக்கம் கொண்ட 9 படங்கள்)
4 படங்கள் இந்தப்பதிவில், மீதம் 5 அடுத்த பதிவில்...
இந்தப்பதிவில், படங்களின் கதையை விட, படங்களில் என்ன சிறப்பு (திரைக்கதை, கதை சொல்லப்படும் விதம், படமாக்கப்பட்ட விதம், புதுமையான இயக்கம், வசனங்கள்) என்பதை அதிகம் பார்ப்போம். ஒவ்வொரு படத்தின் கதையையும் முழுமையாக தனிப்பதிவில் பின்னர் பார்க்கலாம்.
இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று. இரண்டாம் இடத்தில் என்ன படம் இருந்தாலும் இதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாது.
முதல் விஷயம். நம்ம கஜினி பட்த்தையும், இந்த படத்தையும் ஒப்பிடுவது, LIC பில்டிங்கின் உயரத்தையும் Everest சிகரத்தின் உயரத்தையும் ஒப்பிடுவது மாதிரி.

இதிலும் Short term memory loss உள்ள ஹீரோ காதலியை கொன்றவனைத் தேடுகிறார்தான். பச்சைக்குத்தி கொள்கிறார்தான். ஃபோட்டோ கேமரா வைத்திருக்கிறார்தான். ஆனால் அதுவல்ல இந்தப்படத்தின் ஸ்பெஷல். சரி.. அப்போ என்னதான் ஸ்பெஷல்?
Related Posts with Thumbnails

Friday, March 19, 2010

எனக்கு பிடித்த படங்கள்: பட்டியல் – 1

முதல் முறை கணிணியில் தமிழில் எழுதுகிறேன். பள்ளி முடித்து 10 வருடங்களில் நூற்றுக்கண்க்கில் நாவல்களும், ஆயிரக்கணக்கில் வலைப்பதிவுகளும், வார இதழ்களும் படித்து இருந்தாலும், முதல் முறை இவ்வளவு எழுதுகிறேன். பிழையிருந்தால் அடியேனை மன்னிக்கவும்.
பிற மொழிப் படங்களைப் பற்றி எழுதப்படும் தமிழ் வலைப்பதிவுகள் பல இருந்தாலும், அவைகளில் பல விறுவிறுப்பான/மசாலா படங்களைப் பற்றியே அதிகம் கூருகின்றன. மிகச்சிறந்த கதைகள், கருத்துக்கள் உள்ள படங்கள், வித்தியாசமான திரைக்கதை/கரு/தொழில்நுட்பம் உள்ள படங்களைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த வலைப்பதிவின் நோக்கம். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். உஙகள் கருத்துக்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
எனக்கு பிடித்த படங்கள்:
முதலில் எந்த படங்களை எழுத வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். இதுவரை நான் பார்த்த அனைத்து படங்களில் இருந்தும், எனக்கு மிக மிகப் பிடித்த படங்கள் என ஒரு பட்டியல் தயாரித்தேன். 28 படங்கள் உள்ளன. அவற்றை முதலில் சொல்ல வேண்டும். இந்த படங்களை 4 பிரிவுகளில் சொல்லலாம்.
அதில் முதல் பிரிவாக 8 படங்களைப் பற்றி சின்னதாக ஒரு intro. ஒவ்வொரு படத்தையும் விரிவாக மீண்டும் பார்க்கலாம்.
Related Posts with Thumbnails