Monday, May 17, 2010

தி டெர்மினல் – The Terminal [2004]

இங்க இருந்து ஒரு வேலை விஷயமா அமெரிக்கா போறீங்கன்னு வச்சுக்குங்க.. நீங்க விமானத்துல இருக்கற நேரம் பார்த்து, ஆஃப்கானிஸ்தான்ல தாலிபான் ஆட்சியைப் பிடிச்சாங்களே, அந்த மாதிரி நம்ம நாட்டுல கலவரம் நடந்து, கலவரக்காரங்க ஆட்சியைப் பிடிச்சுட்டா, பழைய அரசாங்கம் கொடுத்த பாஸ்போர்ட் செல்லாது.. அதனால விசாவும் செல்லாது..!!

விசா இல்லாம ஏர்போர்ட்டை விட்டு அமெரிக்கா உள்ள போகமுடியாது.. பாஸ்போர்ட் செல்லாததுனால திரும்ப ஊருக்கும் வரமுடியாது.. நீங்க இறங்கினவுடனே, செல்லாத பாஸ்போர்ட்டை வாங்கிகிட்டு, ஏர்போர்ட்லயே ஒரு ஓரமா உட்காரு தம்பின்னு சொல்லிடுவாங்க..

அப்பறம் பழைய அரசாங்கம் வர்ற வரைக்குமோ, புது அரசாங்கத்தை எல்லாரும் அங்கீகரிச்சு, அவங்க புது பாஸ்போர்ட் கொடுக்கற வரைக்குமோ, ஏர்போர்ட்லயே இருக்க வேண்டியதுதான்.. அப்படி மாட்டிகிட்ட ஒருத்தரைப் பத்திதான் படம்..

எல்லோரும் பரபரப்பா நகர்கிற ஏர்போர்ட்ல தனியா மாட்டிகிட்டு தவிக்கறவனோட கதைன்னு படத்தோட போஸ்டர்லயே காட்டியிருக்கறது அருமை..

பாரிஸ்ல ஒருத்தர் இப்படி 18 வருஷமா ஏர்போர்ட்லயே இருந்துருக்காரு..!!

அதைப்பார்த்துதான் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்-க்கு இப்படி ஒரு கதை தோணுச்சாம்.. உண்மைச் சம்பவத்துல இருந்து கதை பண்ணறதுன்னா இவர்கிட்டதான் கத்துக்கணும்.. Schindler’s List, Saving Private Ryan, Catch me if you can, Munich எல்லாம் உண்மைச்சம்பவங்களின் அடிப்படைதான்..

அப்பறம் முக்கியமா படத்தோட இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் பத்தி சொல்லணும்..

இவருக்கு வயசு - 78

கடந்த 52 ஆண்டுகள்ல வெறும் 96 படங்களுக்குதான் இசையமைத்திருக்கிறார்..

அதுல வெறும் 45 ஆஸ்கர் பரிந்துரைகள் (5 விருதுகள்), 59 கிராமி பரிந்துரைகள் (21 விருதுகள்), 21 கோல்டன் க்ளோப் பரிந்துரைகள் (4 விருதுகள்), 11 BAFTA பரிந்துரைகள் (7 விருதுகள்).. அவ்ளோதான் வாங்கியிருக்காரு..

ஸ்பீல்பெர்க்கின் இரண்டு படங்களைத்தவிர மீதி படங்களுக்கு இவர்தான் இசை.. Jaws, Star Wars, E.T., Indiana Jones, Home Alone, Jurassic Park, Schindler’s List, Harry Potter – இதெல்லாம் இவர் இசையில வந்த படங்கள்..

தலைவருக்கு ஒரு கும்பிடு போட்டுகிட்டு, கதைக்கு வருவோம்..

க்ரகோஷியா அப்படின்னு ஒரு நாடு.. (உண்மையில அப்படி ஒரு நாடு கிடையாது.. கற்பனைதான்..) அங்க இருந்து ஹீரோ விக்டர் நவோர்ஸ்கி (டாம் ஹேங்க்ஸ்) அமெரிக்காவுக்கு வர்றாரு.. ஏர்போர்ட்ல கம்ப்யூட்டர் அவரோட பாஸ்போர்ட் சொல்லாதுன்னு காட்டுது.. அப்பறம் பிரச்சினை என்னான்னு பார்த்துட்டு, அவரை ஏர்போர்ட் மேலதிகாரி Dixon கிட்ட கூட்டிட்டு போறாங்க.. Dixon திறமையானவர்.. ஆனா ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்.. ரூல்ஸ் ராமானுஜம்.. இதோ கீழே ஃபோட்டோல முறைச்சுகிட்டு இருக்காரே அவருதான்..

அவர்தான் நம்ம ஹீரோகிட்ட அவங்க நாட்டுல ஏற்பட்டு இருக்கற கலவரம் பத்தி சொல்லறாரு.. கலவரம் முடியற வரைக்கும் இங்கதான் இருக்கணும்னு சொல்லறாரு.. எல்லாம் பேசி முடிச்சப்பறம்தான் தெரியுது.. ஹீரோவுக்கு இங்க்லீஷ் தெரியாதுன்னு.. ரஜினி படிக்காதவன் படத்துல சொல்லுவாரே.. அது மாதிரி எது கேட்டாலும் Yes தான் ஒரே பதில்.. இங்க்லீஷ் தெரியாதவனோட எல்லாம் மல்லுக்கட்ட வேண்டியிருக்கேன்னு ஆபீஸர் கொஞ்சம் கடுப்பாயிடறார்..

ஹீரோவுக்கு சாப்பாடு கூப்பனும், வீட்டுக்கு ஃபோன் பேச காலிங் கார்டும் குடுத்து ஏர்போர்ட்-லேயே சுத்திட்டு இருன்னு சொல்லி அனுப்பிடறாங்க..

அப்போதான் ஹீரோ அங்க இருக்கற TV-ல பார்த்து, தன் நாட்டுல ஏதோ கலவரம்னு தெரிஞ்சுக்கறார்.. ஆனா அதுவும் இங்க்லீஷ்ல சொல்லறாங்க.. ஒண்ணும் புரியல அவருக்கு.. அழறாரு.. வீட்டுக்கு ஃபோன் பண்ணறது எப்படின்னு தெரியல.. எல்லாரும் பரபரப்பா போயிட்டே இருக்காங்க.. யாரும் உதவி பண்ண வரல..

ஹீரோ ரொம்ப அப்பாவி.. அடுத்தவங்களுக்கு உதவி பண்ணப் போய் அது பிரச்சினையில முடியுது.. ஏர்போர்ட்ல கையில வாளியோட குளிக்கப் போற அவரைப் பத்தி பலர் புகார் செய்யறாங்க.. அதுவே ஆபீஸர் Dixon-க்கு தலைவலியா இருக்கு.. ஹீரோ ஏர்போர்ட்ல இருந்து வெளியே போயிட்டா, போலீஸ் அவரை பிடிச்சுடுவாங்க.. Dixon-க்கு பிரச்சினையில்லை.. அதுனால ஹீரோ தப்பிக்க Dixon-னே வ்ழி சொல்லறாரு.. ஆனா ஹீரோ போகலை.. காத்திருக்கிறேன்னு சொல்லறாரு.. இதுல Dixon இன்னும் பேஜாராயிடறாரு..

ஸ்பீல்பெர்க் படம்னா சுவாரஸ்யத்துக்கா பஞ்சம்.. சாப்பாட்டு கூப்பனை தொலைச்சிட்டு, காசுக்காக ஹீரோ பண்ணற வழிகளும், அவர் காசு சம்பாதிக்கறதை தடுக்க Dixon பண்ணற வழிகளும், இங்க்லீஷ் தெரியாம ஹீரோ பேச முயற்சிக்கறதும், ஹீரோவை CIA என பலர் சந்தேகப்படுறதும்.. படம் முழுக்க சுவாரஸ்யம்..

பல வித்தியாசமான கதாபாத்திரங்கள்.. செக்-இன் செய்யும் இடத்தில் இருக்கும் பெண் ஆபீஸர், அந்தப்பெண்ணை ஒருதலையாக காதலிக்கும் சமையல்கார இளைஞன், அவனுக்கு உதவி செய்ய தினமும் அந்த பெண்ணிடம் பேச க்யூவில் நிற்கும் ஹீரோ, தரை துடைப்பவராக இருக்கும் தாத்தா, அவருக்கு சென்னையில்(!) ஒரு முப்பது வருட பழமையான பின்னணி.. இப்படி நீள்கிறது பட்டியல்..

Dixon ஹீரோவுக்கு எதிராக அவ்வளவு சதி செய்தும், ஹீரோ எப்படியாவது சாப்பாட்டுக்கு வழி செய்து, கொஞ்சம் கொஞ்சமாக இங்க்லீஷ் கத்துகிட்டு, சில மாதங்களில் ஏர்போர்ட்டில் எல்லோர்கிட்டேயும் நண்பராகி விடுகிறார்.. Dixon-ஐத் தவிர..

ஒருநாள் கனடாவில் இருந்து அமெரிக்கா வழியாக ரஷ்யா போற ஒருத்தன் வைத்திருக்கும் மருந்தை கஸ்டம்ஸில் பிடித்து விடுகிறார்கள்.. காரணம் விமானத்தில கொண்டுபோற எல்லா மருந்துகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்கணும்.. கனடாவிலும் ரஷ்யாவிலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தும், அமெரிக்காவில் அது அங்கீகரிக்கப்படவில்லை.. அமெரிக்கா வழியாக போகிறான் என்ற ஒரே காரணத்துக்காக ரூல்ஸ் பேசி அந்த மருந்தை பிடுங்கிடறாங்க Dixon-னும், அவரோட ஆட்களும்.. ஆனால், ஹீரோ ரஷ்ய மொழியில் அவன்கிட்ட பேசி, அது ஆட்டுக்கான மருந்துன்னு சொல்ல சொல்லி, மருந்தை வாங்கி கொடுக்கிறார்.. (ஆட்டு மருந்துக்கு எல்லாம் செக்கிங் கிடையாதாம்..) தான் குற்றம் சாட்டிய ஒருத்தனுக்கு, ஹீரோ உதவி செஞ்சதால எரிச்சலடையறாரு Dixon..

ஹீரோவை அடிக்கிறார் Dixon.. அப்போ ஹீரோ அங்க இருக்கற Xerox இயந்திரத்தின் மேல கைவைக்க, அவரோட கைரேகை Xerox நகல்களாக வந்துகிட்டே இருக்கு.. அடுத்த நாள் காலை, Dixon-க்கு எதிரா தைரியமா செயல்பட்ட ஹீரோவைப் பாராட்ட அவரோட கைரேகை நகலை ஏர்போர்ட்ல இருக்கற எல்லா கடைக்காரர்களும் கடையில் மாட்டி வச்சுருக்காங்க..

எல்லாருக்கும் நண்பரா இருந்தாலும், ஹீரோ எதுக்காக அமெரிக்கா வந்திருக்கார்னு யாருக்குமே தெரியல.. அவர் பையில எப்போதுமே ஒரு தகர டப்பா வச்சுருக்காரு.. அதுல என்ன இருக்கு, அவர் ஏன் வந்திருக்காருன்னு Dixon–க்கு சந்தேகம்.. அதை தெரிஞ்சுக்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் முடியல..

இதற்கிடையில, அடிக்கடி ஏர்போர்ட் வரும் ஒரு அழகான பெண் பயணியிடம் காதலில் விழறார் ஹீரோ.. இவனைப்போயி ஒரு அழகான பொண்ணு காதலிக்கிறாளான்னு ஆச்சரியப்படற Dixon, அவளிடம் விசாரிக்கிறாரு.. அப்ப வர்ற டயலாக் முக்கியமானது..

Dixon: I'm just curious. You are the kind of woman who can get any guy she wants. Why Viktor Navorski?

Lady: That's something a guy like you could never understand.

எவ்வளவு பெரிய மனுஷனா இருந்தாலும், உதவி பண்ண மனசில்லாத Dixon-ஐ விட ஹீரோ எவ்வளவோ நல்லவர்னு படம் முழுக்க காட்டறாங்க.. ரூல்ஸ் முக்கியமில்ல.. மனிதர்கள்தான் முக்கியம்னு புரியவைக்கறாங்க..

பொதுவா ஹாலிவுட் படங்கள்ல அமெரிக்காதான் உலகமே.. அமெரிக்கர்கள் எல்லாம் புண்ணியவான்கள்னு காட்டுவாங்க.. ஆனா, ஸ்பீல்பெர்க் ரொம்பவே நியாயமானவர்.. அவரோட பல படங்கள்ல ஹீரோ வெளிநாட்டுக்காரர்தான்.. அதுவும் இந்தப்படத்துல ஐரோப்பாவை சேர்ந்த ஹீரோ, கருப்பின பெண் ஆபீஸ்ர், ஃப்ரான்ஸை சேர்ந்த சமையல் பையன், இந்தியாவை சேர்ந்த தாத்தா என எல்லோரும் நல்லவர்கள்.. பிஸியான அமெரிக்கர்களிடம் உதவி மனப்பான்மை இல்லாததை காட்டியிருக்காங்க..

டாம் ஹேங்க்ஸ் நல்லா நடிச்சுருக்காருன்னு சொன்னா அது understatement. ஒவ்வொரு காட்சியிலயும் அவர் காட்டற அப்பாவித்தனமும், படம் முழுக்க கொஞ்சம் காலை வீசி வீசி நடக்கும் கோமாளி நடையும், ஆங்கிலம் தெரியாமல் தவிப்பதும்.. ரசிச்சுட்டே இருக்கலாம்..

ஹீரோ எதுக்காக அமெரிக்கா வந்திருக்காரு? அந்த தகர டப்பாவில என்ன இருக்கு? அவரு ஏர்போர்ட்டை விட்டு போனாரா இல்லையா? அவரோட காதல் என்ன ஆச்சு? அதெல்லாம் படத்துல பாருங்க.. பெருசா தத்துவம் சொல்லற படம் இல்ல இது.. ஆனா, ரெண்டு மணி நேரம் சுவாரஸ்யத்துக்கும், விறுவிறுப்புக்கும், காமெடிக்கும் குறைவே இருக்காது..

ட்ரெய்லர் இங்கே..

Related Posts with Thumbnails

42 comments:

 1. இது அருமையான் படம் ஜெய். படம் முழுக்க டாம் பின்னிருப்பாரு.

  ReplyDelete
 2. Cast Awayக்கு அப்புறம் டாம் ஹான்க்ஸ்க்கு நல்ல திருப்பம் குடுத்தப் படம். மறக்க முடியாத காட்சிகள்..

  ReplyDelete
 3. படம் பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்துவிட்டது உங்களின் தி டெர்மினல் – The Terminal [2004] விமர்சனம் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 4. இந்த டப்பா படத்தை.. இப்படி ரசிச்சி பார்த்தீங்களா??

  //ஆனா, ஸ்பீல்பெர்க் ரொம்பவே நியாயமானவர்.. //

  அட.. இது எப்போல இருந்துங்க?? :):)

  இவர் எப்பவும் யூதர்களுக்கு மட்டும்தான் சப்போர்ட்டா படமெடுப்பார்ன்னு குற்றச்சாட்டு இருக்கே.

  ReplyDelete
 5. //இந்த டப்பா படத்தை.. இப்படி ரசிச்சி பார்த்தீங்களா?//

  ???????????????

  ReplyDelete
 6. நன்றி ராமசாமி, இளா, சங்கர்..

  @ஹாலிவுட் பாலா,
  // இந்த டப்பா படத்தை.. //
  ரைட்டு.. :-) Schindler's List, Forrest Gump கூட எல்லாம் கம்பேர் பண்ணக்கூடாது.. அதான் கடைசியா disclaimer சொல்லிட்டோம் இல்ல..
  ”பெருசா தத்துவம் சொல்லற படம் இல்ல இது.. ஆனா, ரெண்டு மணி நேரம் சுவாரஸ்யத்துக்கும், விறுவிறுப்புக்கும், காமெடிக்கும் குறைவே இருக்காது..”-ன்னு..

  // இவர் எப்பவும் யூதர்களுக்கு மட்டும்தான் சப்போர்ட்டா படமெடுப்பார்ன்னு குற்றச்சாட்டு இருக்கே. //
  இன்னும்கூட பல குற்றச்சாட்டுகள் இருக்குங்க பாலா.. படம் வெற்றியடையனும்னு சினிமாத்தனமான முடிவு வைக்கறாரு.. ஹாலிவுட் சினிமாவையே கமர்ஷியலாக்கி வச்சுருக்காருன்னு எல்லாம்.. உண்மைதான்.. ஆனாலும், அமெரிக்கர்களை நல்லவங்களா காட்டறதுல மத்த அமெரிக்க இயக்குனர்கள் மாதிரி இல்லாம இருக்காரே..

  ReplyDelete
 7. நண்பரே,

  அருமையான விமர்சனம். கேத்தரின் ஸெட்டா ஜான்ஸ் கூறும் வரிகள் என்னையே பொறாமைப்பட வைக்கின்றன :)) Jaws திரைப்படத்தில் ஜான் வில்லியம்ஸ் போட்டிருப்பார் ஒரு இசை.. சிறுவயதில் அந்த இசையைக் கேட்டாலே ஒரு திகிலாக இருக்கும்..சுறா வரும்போதெல்லாம் அந்த இசையும் அதன்கூடவே வரும். கலக்குங்கள்.

  ReplyDelete
 8. இது ஸ்பீல்பெர்க் படமுன்னு ஆரம்பத்துல என்னால் நம்பவே முடியல . இப்பவும் அந்த சீன் ஓடிக்கிட்டே இருக்கு. முழு படமும் பாத்துட்டு தூக்கமே வரல. கடைசில துண்டு டப்பால இருக்கிற பேப்பரில் உள்ள ஆளை நேரில பாத்துட்டு வர இவ்வளவு கஷ்டமான்னு

  அசத்தல் படம் :-))
  ஆனால் :-((

  ReplyDelete
 9. இந்தப் படம் பற்றி கேள்விப்பட்டு இருக்கேன்.என்னோட டவுன்லோட் லிஸ்ட்ல(ரொம்ப பெருசு :) ) இதுவும் இருக்கு.சீக்கிரமே டவுன்லோட் பண்ண பாக்குறேன்.நல்லா எழுதி இருக்கீங்க.ஸ்டீவன் எப்போதுமே வித்யாசமான படங்கள் தருபவர்தான்.

  //பாரிஸ்ல ஒருத்தர் இப்படி 18 வருஷமா ஏர்போர்ட்லயே இருந்துருக்காரு..!! //

  அப்படியா!!! என்ன கொடும?

  ReplyDelete
 10. நல்லா எழுதியிருக்கீங்க.2009ல என் நண்பன் எனது ப்ளாக்ல இப்படத்த பத்தி எழுதியிருக்கிறான். சுட்டி http://mayilravanan.blogspot.com/2009/05/blog-post.html..நேரமிருப்பின் பார்க்கவும். நன்றி.

  ReplyDelete
 11. மீண்டும் ஒரு அட்டகாசமான விமர்சனம் ஜெய்!! வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. அன்பின் ஜெய்... இந்த படத்தை எப்போது பார்த்தாலும் எனக்கு கண்ணில் நீர் தலும்பும்...மிக முக்கியமாக இந்த படத்தின் இசை... இந்த படத்தை பற்றி என்னிடைய பதிவில் 2008ல் நான் எழுதிய விமர்சனம் உனக்காக தேடி பிடித்து போட்டு இருக்கின்றேன்... முடிந்தால் படித்து பார்க்கவும் ..
  ஓட்டு போட்டுவிட்டேன்..


  http://jackiesekar.blogspot.com/2008/11/5_9687.html

  ReplyDelete
 13. நன்றி கனவுகளின் காதலர், kolipaiyan, Illuminati, சைவகொத்துப்பரோட்டா.

  @ King Viswa,
  ???? அப்படின்னா என்னங்க?

  @ ஜெய்லானி,
  // ஆனால் :-(( // ஆனால் என்ன ஆச்சுங்க?

  @ மயில்ராவணன்,
  அருமையா எழுதியிருக்கிறார் உங்க நண்பர் கோகுல்.. எல்லா நல்ல காட்சிகளையும் அழகா சொல்லியிருக்கார்.. வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்..

  @ ஜாக்கி சேகர்,
  அருமையா எழுதியிருக்கீங்க.. நான் சொல்லாம விட்ட நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கீங்க்..

  // ஸ்பில்பெர்க் எடுத்ததில் இதுதான் குப்பை படம் என்று விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். ( நம்ம ஊரில் அன்பே சிவம் படம் குப்பை என்பது போல்) //

  // படத்தில் காட்டப்படும் ஏர்போர்ட் அத்தனையும் செட்டு போட்டு எடுத்தார்கள் என்றால் நம்புங்கள் மக்களே... //

  // அதே போல் படத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் சத்தியம். நம்மில் எத்தனை பேர் செய்து கொடுத்த சத்தியத்துக்கு விசுவாசமாய் இருக்கிறோம் //

  @ ஹாலிவுட் பாலா,
  தல.. என்ன விட ஃபீல் பண்ணி ரசிச்சு பார்த்தவங்க பலபேர் இருக்காங்க போல.. :-)

  ReplyDelete
 14. இந்தப்படத்தை ஸ்டார் மூவீஸில் வெகு நாட்கள் முன்பு பார்த்தேன் . . பார்த்தவுடன் பிடித்துப் போனது . . அழகான படமாக்கம்; சுவாரஸ்யமான கதைமாந்தர்கள்.. . எனக்கு மிகவும் பிடித்தது அந்த இந்தியாவைச் சேர்ந்த தாத்தா . . நீங்கள் இப்பதிவில் போட்டிருக்கும் புகைப்படம் வரும் காட்சியில், அவர் வளையங்களைத் தவற விட்டுவிடுவார் . . அதன்பின் ஒரு லுக்கு விட்டுவிட்டு, அங்கிருந்து நகர்வார் . . அது மிகவும் நன்றாக இருக்கும் . .

  நல்ல விமர்சனம். பட்டையைக் கிளப்புங்கள் !!!

  @ பாலா - தல. . நீங்க இப்புடி சொல்றீங்கன்னா எதாவது காரணம் இருக்கும். . அந்தக் காரணத்தையும் சொல்லுங்க . . அத நாங்களும் தெரிஞ்சிக்கணும்ல . .

  ReplyDelete
 15. நான் ரசித்துப் பார்த்த இன்னுமொரு திரைப்படம்.. பதிவுக்கு நன்றிகள்... மாயா... இலங்கையிலிருந்து

  ReplyDelete
 16. ரசித்துப் பார்த்த படம்.. ஜாலியான என்டர்டைனர் :)

  ReplyDelete
 17. //ஹாலிவுட் பாலா said...
  இந்த டப்பா படத்தை.. இப்படி ரசிச்சி பார்த்தீங்களா??
  //

  இதை வன்மையாக் கண்டிக்கிறேன்.

  //ஆனா, ஸ்பீல்பெர்க் ரொம்பவே நியாயமானவர்.. //

  அட.. இது எப்போல இருந்துங்க?? :):)

  இவர் எப்பவும் யூதர்களுக்கு மட்டும்தான் சப்போர்ட்டா படமெடுப்பார்ன்னு குற்றச்சாட்டு இருக்கே.//

  இதை முழுமையா ஆதரிக்கிறேன்..

  ReplyDelete
 18. சூப்பர் படம் சார் அது..
  நான் அடிக்கடி விரும்பிப்பார்க்கும் படமும் கூட...

  ReplyDelete
 19. இது அருமையான படம் ஜெய்...

  நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க...

  :-)

  ReplyDelete
 20. உங்களின் கருத்துக்களில் இருந்து முடிவு செய்துவிட்டேன்
  இந்த படத்தை பார்த்து விடுவது என்று
  மிக்க நன்றி

  ReplyDelete
 21. நானும் இந்த‌ ப‌ட‌ம் பார்த்திருக்கேன் ஜெய். ஸ்பீல்பெர்க் இப்ப‌டிலாம் கூட‌ ப‌ட‌ம் எடுப்பாரான்னு விய‌ப்பா இருந்த‌து. அந்த‌ ஏர்போர்ட் ஒரு செட்ங்க‌ற‌தை ந‌ம்ப‌வே முடியாது. அவ்வ‌ள‌வு ய‌தார்த்த‌மா சூப்பரா ப‌ண்ணியிருந்தாங்க‌.

  பாலா ஏன் இவ்வ‌ளோ க‌டுப்புல‌ இருக்காரு?

  ReplyDelete
 22. //@ King Viswa,
  ???? அப்படின்னா என்னங்க?//

  இதைத்தான் //@ பாலா - தல. . நீங்க இப்புடி சொல்றீங்கன்னா எதாவது காரணம் இருக்கும். . அந்தக் காரணத்தையும் சொல்லுங்க . . அத நாங்களும் தெரிஞ்சிக்கணும்ல . // அப்புடி சொல்ல வந்தேன்.

  ReplyDelete
 23. அதாவது இந்த படத்தை எங்கள் ஹாலிவுட் ஒபாமா பாலா அங்கிள் (பின்னே, நாங்க யூத்துல) மொக்கை படம் என்று சொன்னார். அதைத்தான் ஏன் என்று வினவினேன்.

  ReplyDelete
 24. IT'S WONDERFULL LIFE பார்த்துமுடிக்கல, பாதில நிக்குது. அடுத்த பதிவ போட்டுட்டீங்க. டோரண்ட்ல போட்டாச்சு. அறிமுகத்திற்கு நன்றி ஜெய்.

  ReplyDelete
 25. நன்றி மாயா, பிரசன்னா, பட்டாபட்டி, அகல்விளக்கு, Cibi.

  @ கருந்தேள், முகிலன், ர‌கு, King Viswa,
  ஒவ்வொருத்தருக்கும் சில படங்கள் இந்த மாதிரி பிடிக்காம போறதை பார்த்திருக்கேன்.. எல்லாரும் பிடிக்கும்னு சொல்லற சில படங்கள் எனக்கு சாதாரணமா இருந்திருக்கு.. (Fight Club, North by Northwest, Taxi Driver-னு..)..
  எல்லாரும் Taare Zameen Par பார்த்துட்டு அழுதாங்களாமே.. முதல்முறை நண்பர்களோட சீட்டு விளையாடிட்டே திருட்டு சிடில பார்த்ததுல எனக்கு சிரிப்புதான் வந்தது.. படம் பார்க்கறப்போ இருக்கற mood-ஐ பொறுத்தும் பிடிக்காம போகலாம்..
  ஆனாலும் தல பாலா ஏதாவது காரணம் வச்சுருப்பார்.. பார்க்கலாம்..

  @ ஜீவன்பென்னி,
  என்னது.. பாதியில நிறுத்திட்டீங்களா.. இது தப்பாட்டம்.. ஒத்துக்கமுடியாது... திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிங்க..

  ReplyDelete
 26. இந்த படத்த பாத்து தான் நான் டாமுக்கு ஃபேன் ஆயிட்டேன்.

  அதுவும் தினமும் 'ரெஜெக்டட்' சீல அடிக்கும் பெண். அவரை பார்த்ததும் ரெடியா சீலை கையில் எடுத்துக்கறது. ட்ராலிக்கு 25 சென்ட் காசு, பின் அதையும் ஒழிச்சுக்கட்டுவது போன்றவை அருமை.

  அதுலையும் சூப்பர் காட்சி, காமெரா தன்னை பாக்குதுனு நெனச்சு வெளிய தப்பிச்சு போகாம இருக்க, அங்க டிக்ஸன் டென்ஷனாவதுனு சின்ன சின்ன விஷயங்கள் படத்தில் அருமையான இடங்கள்.

  அப்புறம் ஜான் வில்லியம்ஸை பத்தி அவ்வளவா தெரியாது. ஆனா, நேத்து தான் Catch me if you can படம் பார்த்தேன். அவர் இசையமைச்சதுனு நெனைக்கிறேன். டைட்டில் இசை அட்டகாசமா இருந்தது. இங்க ஜான் வில்லியம்ஸ் பத்தி படிச்சதும் தான் அவர் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர்னு புரியுது...

  ReplyDelete
 27. இன்று தான் உங்கள் தளத்தை பார்த்தேன் .. படங்களை பிச்சு உதறி இருக்கீங்க .பெரிசா ஆங்கில படம் பாக்கிறதில்லை ....... யாராவது நல்ல படம் எண்டா இல்லாட்டி ஏதாவது தொழில்நுட்பப படம் என்றால் பார்ப்பேன் . இதை நிச்சயம் பார்க்கிறேன் . உங்கள் பதிவு படத்தை சுவாரசியமாக கொண்டு சென்றது . கடைசீல கிளைமாக்ஸ் சொல்லாம போயிடீங்களே ??

  ReplyDelete
 28. நன்றி சீனு..

  @ S.Sudharshan,
  என் நண்பர்கள் எல்லா படத்துக்கும் க்ளைமாக்ஸை சொல்லி காலி பண்ணிடுவாங்க.. Psycho, Witness for the prosecution, Usual suspects, Sixth sense எல்லாமே முடிவு தெரிஞ்சுதான் பார்த்தேன்.. :( அதே பாவத்தை நானும் பண்ணக்கூடாது இல்லையா.. கண்டிப்பா விமர்சனத்துக்கு தேவைன்னா மட்டுமே திருப்பங்களையோ, முடிவுகளையோ சொல்லறேன்.. :)

  ReplyDelete
 29. தொடங்கிய விதமும் முடித்த விதமும் நன்றாக இருந்தது.

  ReplyDelete
 30. after seeing this movie, me and my husband placed a bet that kamalhasan will do this in tamil....i still remember enjoying this movie scene by scene....

  ReplyDelete
 31. முதன் முதலில் டாம் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்து அந்த பனிக்காற்றை அனுபவிக்கும் காட்சி...வாவ்..பிறகு அந்த கடைசி காட்சியில் டாக்ஸி டிரைவரிடம் பேசும் போது டாம் முகத்தில் தோன்றும் பெருமிதம்..பிரம்மாண்டம்

  .பார்க்காதவர்களை பார்க்க வைக்கும் Curiosity உருவாக்கும் திறமை இருக்கிறது உங்கள் விமர்சனத்துக்கு!

  ReplyDelete
 32. அட,உங்களுக்கும் fight club பிடிக்கலையா? :)

  ReplyDelete
 33. ரொம்ப நல்ல படம்.
  இது போல படம் பார்த்துவிட்டு டாம்ஹான்க்ஸிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர்.அவரிடமிருந்து கடைசியாய் வந்த ஒப்பில்லா படைப்பு . இது போல இன்னொரு படம் தேடுகிறேன்.ம்ம்ம்

  ReplyDelete
 34. நன்றி ஜோதிஜி, priya, ரெட்டைவால் ' ஸ்.

  @ILLUMINATI,
  Fight Club பிடிக்கலைன்னு இல்லை.. ஆனா IMDB-ல 8.8 வாங்கி Matrix-க்கு முன்னாடி இருந்ததால ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்துட்டேன்..

  @ கார்த்திக்கேயன்,
  நீங்க சொல்லறது சரிதான்.. இவ்வளவு திறமையை வச்சுகிட்டு, ஒரு பக்கம் Da Vinci code, Angels and Demons-னு யாரு வேணும்னாலும் நடிக்கலாம்கிற கதாபாத்திரங்கள்ல நடிக்கறாரு.. இன்னொரு பக்கம் Polar Express, Cars, Toy Story-னு அனிமேஷன், வாய்ஸ்னு பண்ணிட்டிருக்காரு.. இது மாதிரி ஒரு நடிக்க வாய்ப்பிருக்கற படம் எப்ப பண்ணுவாரோ..

  ReplyDelete
 35. முதல் முறையாக உங்கள் பதிவினைப் படிக்கிறேன்.
  உங்கள் எழுத்து நடையும் புகைப்படங்களும் அருமை.
  தெளிவான கருத்துக்கள். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. ###########################################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

  http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
  அன்புடன் >ஜெய்லானி <
  #############################################

  ReplyDelete
 37. சுவாரஸ்யமான விமர்சனம். இன்னும் பார்க்கவில்லை. இந்த வாரமே பார்க்கிறேன்.

  ReplyDelete
 38. அழகான கோர்வை :)

  ReplyDelete
 39. this is the first time i am reading your blog.. in this blog you said there is a person who lived like "victor nivorski" in paris for 18 years.. may i know where did you find that information. bcos as of i know there is no country in the world is unstable for 18 years.. kindly post the source for that 18 years..

  thanks,
  manoj

  ReplyDelete
 40. Hi Manoj,

  The reason why a person was held at Paris airport for 18 years is, his passport and refugee certificates were stolen. Not because a country was unstable. You can find more info in these links.

  http://www.imdb.com/title/tt0362227/trivia
  http://www.imdb.com/name/nm1166606/bio
  http://en.wikipedia.org/wiki/The_Terminal
  http://en.wikipedia.org/wiki/Mehran_Karimi_Nasseri

  Thanks,
  Jay

  ReplyDelete
 41. hi jay..

  thanks for the info.. its strange to hear these kind of news..i just imagined what i do in nasseri's position.. i couldn't think...

  ReplyDelete