Monday, May 24, 2010

A Beautiful Mind [2001] – அங்கீகரிக்கப்படாத மனதின் வலி

உங்களுக்கு அதிக திறமை இருந்தும், புரிந்துகொள்ளப்படாமல் நிராகரிக்கப் பட்டிருக்கீங்களா? கல்லூரியில் புரியாமல் படிப்பவர்கள், உங்களை விட அதிக மதிப்பெண் வாங்கி இருக்கிறார்களா? நீங்க கேக்கற நல்ல கேள்வி புரியாமல் ஆசிரியர் உங்களை உட்கார சொல்லியிருக்கிறாரா? அலுவலகத்தில் நீங்கள் சொல்லும் புத்திசாலித்தனமான விஷயங்கள் உங்கள் மேலதிகாரிக்கு விளங்கவேயில்லையா? இந்தப்படம் உங்களை அப்படியே பிரதிபலிக்கும்..

நீங்க புத்திசாலித்தனமா ஒரு விஷயத்தை சொன்னா, அது எவ்வளவு தூரம் மத்தவங்க கிட்ட போய் சேருதுங்கறது, அவங்களோட புரிந்துகொள்ளும் சக்தியைப் பொறுத்தது.. உலகத்தின் சிறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களாலேயே புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு ஒருவன் புத்திசாலியாக இருந்தால், அவனோட கருத்துக்கள் எல்லாமே புரிந்து கொள்ளப்படாமல் நிராகரிக்கவே படும்.. அப்படி ஒருவனின் கதையே இது..

ஜான் நாஷ் (John Nash) என்ற விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை.

1947. அமெரிக்காவுல இருக்கற Princeton பல்கலைக்கழகம்.. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள்ல ஒன்னு.. அங்க படிக்கற எல்லாரும் வளரும் விஞ்ஞானிகள்.. ஹீரோ ஜான் நாஷ் (Russell Crowe) அங்க படிக்க சேர்ந்திருக்கிற மாணவர்.. அவர் யார்கிட்டேயும் அதிகம் பேசறது கிடையாது.. முதல் நாள் கல்லூரியில் நடக்கிற பார்ட்டியில கலந்துக்கறார்.. அங்கே வர்ற ஒரு மாணவனோட tie டிஸைனையும், கண்ணாடி கோப்பையில பட்டு பிரதிபலிக்கும் சூரியனின் ஒளியையும், அடுக்கிவச்சுருக்கற பழங்களையும் ஒப்பிட்டு, அந்த tie டிஸைன்ல இருக்கற தப்பை mathematical-ஆ நிரூபிக்கலாம்னு சொல்லறாரு.. அது அவங்களுக்கெல்லாம் புரியல.. (நமக்கும் புரியல..)

உலகத்துல நடக்கிற எல்லா விஷயங்களையுமே அறிவியல்ரீதியா equations-லேயே சொல்லிடலாம்.. அதை அவர் ரொம்ப சுலபமா செய்யறாரு.. அவ்வளவு புத்திசாலி.. ஆனா, மத்தவங்களுக்கு புரியாததால கிண்டல் பண்ணறாங்க..

மற்ற மாணவர்கள் எல்லாரும் நல்லா பேசி நண்பர்கள் ஆகிடறாங்க.. ஆனா, ஹீரோ மட்டும் தனியா ஹாஸ்டலுக்கு போறார்.. அவங்க எல்லாரும் சிரிச்சு பேசிகிட்டே ஹாஸ்டலுக்கு போறாங்க.. தனியா இருக்கறதுக்கு அவர் கொஞ்சம் ஃபீல் பண்ண ஆரம்பிக்கற அந்த நிமிஷம், அவர் அறைக்கு ஒரு ரூம் மேட் வர்றாரு.. அவர் பேரு சார்லஸ்.. அவர் ஹீரோகிட்ட நல்லா பழகறாரு..

மற்றொரு நாள்.. மைதானத்துல நடக்கிற கால்பந்தாட்டத்தை பார்க்கறாரு.. பந்து எப்படி கொண்டுசெல்லப்படுதுன்னு ஒரு ஃபார்முலா எழுதறாரு.. ஒரு குருவிக்கூட்டத்துக்கு தீனி போட்டு. அதுங்க எப்படி தீனியை நோக்கி நகருதுன்னு ஃபார்முலா எழுதறாரு..!! இதெல்லாம் மத்தவங்களுக்கு கேலியா தெரியுது.. அவங்க எல்லாரும் சுலபமான ஆராய்ச்சிகளை செய்யறாங்க.. ஆனா மத்தவங்க மாதிரி இல்லாம, புதுமையா ஏதாவது கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறாரு ஹீரோ.. ஆனா, பல மாதங்கள் ஆகியும் அவர் எதுவும் கண்டுபிடிக்காததால, அவருக்கு மட்டும் வேலை கிடைக்காம போக வாய்ப்பிருக்குன்னு ஆசிரியர் சொல்லறாரு..

ஆசிரியர் ஹீரோவை canteen-க்கு கூட்டிட்டு போறாரு.. அங்க மற்றொரு பேராசிரியருக்கு எல்லாரும் அவங்களோட பேனாவை குடுத்துட்டு, வாழ்த்து சொல்லிட்டுப் போறாங்க.. அவரு ஏதோ விருது வாங்கியிருப்பாரு போல.. (ஏதாவது பெருசா சாதிச்சுட்டா, பேனாவை கொடுத்து வாழ்த்து சொல்லிட்டு போறது அவங்க வழக்கம்) அந்தக் காட்சியைக் காட்டி, ஆசிரியர் ஹீரோகிட்ட பேசற வசனம் இது..

Teacher: What do you see, John?

John: Recognition

Teacher: Try seeing accomplishment.

இது ரொம்ப முக்கியமான வசனம்.. ஆசிரியரைப் பொறுத்தவரை விருது வாங்கினவரு பெருசா சாதிச்சு இருக்காரு.. ஆனா, ஹீரோவை பொறுத்தவரை, பேராசிரியர் சாதிச்சதை மத்தவங்க இப்பதான் recognize பண்ணறாங்க.. அதாவது ஒவ்வொருத்தருக்கும் திறமை எப்பவுமே இருக்கு.. ஆனா, அதை அடுத்தவங்க புரிஞ்சுக்கறப்போதான் பாராட்டறாங்க.. பாராட்டப்படாதவங்களுக்கு திறமை கிடையாதுன்னு அர்த்தமில்லை.. இந்த கருத்தைதான் படம் முழுக்க பல காட்சிகள்ல மறைமுகமா சொல்லறாங்க..

ஹீரோ தான் எந்த ஆராய்ச்சியும் ஆரம்பிக்கலைன்னு ரொம்ப வருத்தப்படறாரு.. ரூம் மேட் சார்லஸ் வந்து அவருக்கு ஆறுதல் சொல்லறாரு..

ஒரு நாள், ஹீரோ மற்ற 4 மாணவர்களோட bar-ல உட்கார்ந்து இருக்கும்போது, 5 பொண்ணுங்க அங்க வர்றாங்க.. அதுல ஒரு பொண்ணுதான் அழகா இருக்கா.. எல்லாருக்கும் அவ மேல ஒரு கண்ணு.. எல்லாரும் அந்த பொண்ண கரெக்ட் பண்ண பார்த்தா, யாராவது ஒருத்தருக்கு அந்த பொண்ணு கிடைக்கும்னு மத்த 4 மாணவர்களும் சொல்ல, ஹீரோ மறுக்கறாரு.. அப்படி போனா, அது மத்த 4 பொண்ணுங்களை அவமானப்படுத்தறது மாதிரி.. அது மட்டும் இல்ல.. அந்த அழகான ஒரு பொண்ணுக்கு 5 பேர் போட்டி போடறதால யாருக்குமே கிடைக்காம போக வாய்ப்பிருக்கு.. அதுனால, முதல்ல 4 பேர், மத்த 4 பொண்ணுங்க கிட்ட போனா, அந்த அழகான பொண்ணும் மீதியிருக்கிற ஒரு பையனும் மட்டும் இருப்பாங்க.. ரொம்ப சுலபமா ஒர்க் அவுட் ஆயிடும்னு சொல்லறாரு..

அப்போதான் ஹீரோவுக்கு தோணுது.. Adam Smith-னு ஒரு விஞ்ஞானி 150 வருஷத்துக்கு முன்னாடி சொல்லியிருக்கற தத்துவம் என்னன்னா, சமூகத்துல ஒவ்வொருத்தரும் அவங்கவங்க நல்லதுக்காக மட்டும் உழைச்சாலே, சமூகத்துக்கும் நல்லது நடக்கும்.. ஆனா, நம்ம ஹீரோவோட தத்துவத்தின்படி, அவங்கவங்க நல்லதுக்காக மட்டுமில்லாம, எல்லோருடைய மொத்த நல்லதுக்காகவும் சேர்ந்து உழைச்சாதான், சமூகத்துக்கும் நல்லது நடக்கும்.. ஹீரோவுக்கு ஐடியா தோணிடுச்சு.. மாசக்கணக்கில அந்த தத்துவத்துக்கான சமன்பாடுகளை எழுதறாரு.. 150 வருஷமா இருந்த தப்பான தத்துவத்தை மாத்தி எழுதியிருக்காரு.. இது ஒரு பெரிய சாதனை.. அதனால அவர் விரும்பிய வேலை கிடைக்குது.. ரூம் மேட், ஆசிரியர்கள், நண்பர்கள் எல்லாரும் அவரைப் பாராட்டறாங்க..

5 வருஷத்துக்கு அப்பறம், ஹீரோ ரகசிய குறியீடுகளாக எழுதப்பட்ட விஷயங்களை கண்டுபிடிப்பதில் தேர்ந்தவரா இருக்கிறாரு.. ரஷ்யாகிட்ட இருந்து கைப்பற்றின ஒரு ரகசிய குறியீட்டை என்னன்னு கண்டுபிடுக்க அவர் ராணுவத் தலைமையிடமான பெண்டகனுக்கு வர்றாரு.. ஒரு சுவர் முழுக்க ஆயிரக்கணக்கான எண்கள் மட்டுமே இருக்கு.. அதுல என்ன ரகசிய குறியீடு இருக்குன்னு கம்ப்யூட்டரால கண்டுபிடிக்க முடியல.. அதை ஹீரோ கண்டுபிடிக்கணும்.. அதுதான் வேலை..

பல மணி நேரமா யார்கிட்டேயும் பேசாம, அந்த சுவர்ல இருக்கற எண்களை பார்த்து யோசிச்சுகிட்டே இருக்காரு.. அவருக்கு குறியீடுகள் எழுதப்பட்ட விதம் புரிய ஆரம்பிக்குது.. அதெல்லாம் அமெரிக்க வரைபடத்துல இருக்கற சில இடங்களை குறிக்குதுன்னு புரியுது.. அவர் செஞ்சது பெரிய கண்டுபிடிப்பு.. ஆனா, ராணுவ விஷயம்கிறதால அதுக்கெல்லாம் மேடை போட்டு பாராட்டுவிழா நடத்த முடியாது.. சுலபமா, தேங்க்ஸ்னு சொல்லி அனுப்பிடறாங்க.. அதனால கொஞ்சம் வருத்தமடையறப்போ, அங்க ஒருத்தர் தொப்பி போட்டுகிட்டு இவரையே பார்த்துகிட்டு இருக்கறதை கவனிக்கறாரு..

இவ்வளவு திறமை இருந்தும், வெளியே தெரியாததால, ஹீரோவை பல்கலைக்கழகத்துல பாடம் எடுக்க அனுப்பிடறாங்க.. ஆராய்ச்சியை விட்டுட்டு பாடம் எடுக்கறதுல அவருக்கு விருப்பம் இல்ல.. அந்த சமயத்துல அந்த தொப்பி போட்ட ஆள் ஹீரோவை சந்திக்கறாரு.. அவர் பேரு பார்ச்சர்.. (Parcher) அவர் அமெரிக்க ராணுவ அதிகாரின்னும், ஹீரோவோட திறமையில வியந்து, அவருக்கு ஒரு ரகசிய ரஷ்ய குறியீட்டை கண்டுபிடிக்கற வேலை தர்றதாகவும் சொல்லறாரு.. ஹீரோவும் சந்தோஷமா ஒத்துக்கறார்..

தினசரி நாளிதழ்கள்ல வர்ற விளம்பரங்கள்ல சில ரகசிய குறியீடுகளை ரஷ்யா அனுப்பறதாகவும், அதைக் கண்டுபிடிச்சா, அமெரிக்காவுக்கு நல்லதுன்னும் சொல்லறார்.. அதனால, தினமும் நாளிதழ்ல வர்றதை பல மணி நேரம் ஆராய்ச்சி செஞ்சு பல குறியீடுகளை கண்டுபிடிச்சு, பார்ச்சர் சொன்ன அட்ரஸுக்கு கண்டுபிடிச்சதை அனுப்பி வைக்கறாரு..

இதுக்கு இடையில, ஹீரோவும் அவரோட மாணவி ஒருத்தியும் காதலிக்க ஆரம்பிக்கறாங்க.. கல்யாணமும் செஞ்சுக்கறாங்க..

ஹீரோ பார்ச்சருக்காக செய்யற ரகசிய வேலையைப் பத்தி யார்கிட்டேயும் சொல்ல முடியல.. தனியா உட்கார்ந்து வேலை பார்த்துகிட்டு இருக்கப்போ, அவரோட பழைய ரூம் மேட் சார்லஸ் அவரைப் பார்க்க வர்றாரு.. பல வருஷத்துக்கு அப்பறம் பார்க்கறதால, நிறைய பேசறாங்க.. சார்லஸின் அக்காவோட 8 வயசு பொண்ணும் கூட இருக்கா.. .

ஒருநாள் பார்ச்சரை பார்க்க போறப்போ, ரஷ்யர்கள் அங்கே வந்து சுட ஆரம்பிக்கறாங்க.. அங்க இருந்து ஹீரோ தப்பிச்சுடறாரு.. ஆனாலும், அவரை விடாம துரத்தறாங்க.. ஹீரோ ஒரு மேடையில பலபேர் முன்னிலையில பேசிகிட்டு இருக்கப்போ, அங்கேயும் ரஷ்யர்கள் வந்துடறாங்க.. தப்பிச்சு ஓடறாரு.. இருந்தாலும் அவரை பிடிச்சு மயக்கமாக்கிடறாங்க..

இதுக்கப்பறம் படத்துல பெரிய ட்விஸ்ட் இருக்கு.. ட்விஸ்ட்டை தெரிஞ்சுக்க விரும்பாதவங்க, படம் பார்த்துட்டு வந்து படிங்க..

கண்விழிச்சா மருத்துவமனையில இருக்காரு.. டாக்டர் அவரைப் பரிசோதிச்சுட்டு, அவர் மனைவிகிட்ட சொல்லறாரு.. ஹீரோவுக்கு Schizophrenia அப்படின்னு ஒரு மனநோய்.. இல்லாத மனிதர்களை இருக்கறதா நினைச்சுக்கற வியாதி.. சார்லஸ், சார்லஸ் கூட இருக்கற அந்த சின்ன பொண்ணு, பார்ச்சர் யாருமே உண்மை இல்லை..!!

எல்லாமே ஹீரோவோட கற்பனையே.. எப்போவெல்லாம் மத்தவங்களால ஹீரோவோட திறமையை புரிஞ்சுக்க முடியலையோ, எப்பவெல்லாம் நிராகரிக்கப்படுகிறாரோ, அப்போதெல்லாம் இதுபோல கற்பனை ஆட்கள் அவரைப் பாராட்டறதாகவும், அவர் திறமைக்கு வேலை தர்றதாகவும் அவரா நினைச்சுக்கறாரு.. மேலே விமர்சனத்துல பச்சை நிறத்துல இருந்த எல்லாமே அது போன்ற காட்சிகளே..

அவருக்கு யாருமே ரூம் மேட் இருந்த்தில்ல.. பார்ச்சர்னு யாரும் எந்த வேலையும் கொடுக்கல.. இவராவே கற்பனை பண்ணிட்டு, தினசரி நாளிதழ்ல இல்லாத விஷயங்களை கண்டுபிடுச்சுட்டு இருந்திருக்காரு.. ரஷ்யர்கள் யாரும் அவரை துரத்தினதும் இல்லை.. எல்லாமே அவரா கற்பனை பண்ணிட்ட விஷயங்கள்..!!

அவருக்கு சிகிச்சை தர்ற டாக்டர்கள், மருத்துவமனை எல்லாம் ரஷ்யர்களின் ஏற்பாடுன்னு ஹீரோ நினைக்கறாரு.. அங்கிருந்து தப்பிக்கணும்னு அவரோட மனைவிகிட்ட சொல்லறாரு.. மனைவியோ அவருக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியாம கஷ்டப்படறாங்க.. அவருக்காக வருத்தப்படறாங்க.. அவரோட சிகிச்சையப்போ கூடவே இருந்து கவனிச்சுக்கறாங்க.. பலநாள் சிகிச்சைக்கு அப்பறம் ஹீரோ வீட்டுக்கு வர்றாரு..

இருந்தாலும் முழுமையா குணமடையல.. இப்பவும், யாரும் ஹீரோவோட திறமையை பாராட்டாததுனால, பார்ச்சர் திரும்பவும் வர்றாரு.. (ஹீரோவோட கற்பனைதான்) குறியீடுகளைக் கண்டுபிடிக்கற வேலையை மீண்டும் ஆரம்பிக்கணும்னு சொல்லறாரு.. ஹீரோ மறுபடியும் கற்பனை பண்ணறதை தெரிஞ்சுக்கற அவரோட மனைவி, டாக்டருக்கு ஃபோன் பண்ணறாங்க.. இதனால, மனைவியைக் கொன்னுடுன்னு சார்லஸ், பார்ச்சர் எல்லாரும் சொல்லறாங்க.. ஹீரோவுக்கு ரொம்ப குழப்பமாகி, ஒரு நிமிஷம் யோசிக்கறாரு.. இப்பதான் புரியுது.. சார்லஸுக்கும், அந்த சின்ன பொண்ணுக்கும், இத்தனை வருஷமாகியும், வயசு அதிகமாகவே இல்ல.. அப்படியே இருக்காங்க.. அவருக்கு ஒரு நிமிஷத்துல எல்லாம் கற்பனைன்னு புரியுது..

ஒரு பக்கம் இதெல்லாம் புரிஞ்சாலும், அந்த கற்பனை உருவங்களும் இருந்துட்டேதான் இருக்கு.. சார்லஸும், குட்டி பொண்ணும் அவரையேதான் சுத்தி சுத்தி வர்றாங்க.. இதனால டாக்டர் சிகிச்சை அவசியம்னு சொல்லறாரு.. ஹீரோவோ, இப்ப தனக்கு எல்லாம் புரிஞ்சுட்டதாகவும், தன்னால சமாளிக்க முடியும்னும் சொல்லறாரு.. அவர் மனைவி அதைப் புரிஞ்சுகிட்டு அவருக்கு ஆதரவா பேசறாங்க.. ஹீரோவும் அவரோட மனைவியும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா தினமும் கற்பனை மனிதர்களை தவிர்க்கறது எப்படின்னு பேசறாங்க..

ஆராய்ச்சி வேலையை விட்டுட்டு, அவர் படிச்ச பல்கலைக்கழகத்துலேயே வேலைக்கு சேர நினைக்கிறாரு.. அங்க அவரை கல்லூரி நாட்கள்ல கேலி செஞ்ச மாணவர்தான் தலைமை பேராசிரியரா இருக்காரு.. திறமை அதிகமா இருந்தும், அவர்கிட்ட போய் வேலை கேட்டு நிக்கறதுக்கே ஹீரோவுக்கு ஒரு மாதிரி இருக்கு.. அந்த சமயம் சார்லஸ் அங்க வந்து, இந்த தலைமை ஆசிரியரை விட நீதான் திறமைசாலின்னு சொல்லறாரு.. (திரும்பவும் ஹீரோவோட மனதை பிரதிபலிக்கிற கற்பனையே) இருந்தாலும், இந்த முறை சார்லஸை அவர் கண்டுக்கவேயில்லை.. அங்கேயே வேலைக்கு சேர்றாரு..

ஒருநாள் கறபனை மனிதர்கள் கிட்ட பேசறதை நிறுத்திடணும்னு நினைக்கிறாரு.. ஹீரோ, சார்லஸ்கிட்ட அவர்தான் வாழ்க்கையில சிறந்த நண்பர்னும், ஆனால் இதுதான் கடைசியா அவர்கிட்ட பேசறதாகவும் சொல்லறாரு..

அதுக்கப்பறம் பல வருஷங்களா அங்கே பேராசிரியரா வேலை பார்க்கறாரு.. நண்பர்கள்கிட்ட நல்லா பழகறாரு.. மாணவர்கள்கிட்ட சிரிச்சு பேசி பாடம் எடுக்கறாரு.. அவரோட மனைவி ரொம்ப சந்தோஷப்படறாங்க..

1994. ஹீரோவுக்கு 70 வயசு.. இன்னும் சார்லஸ், குட்டிப்பெண், பார்ச்சர் எல்லாரும் இன்னும் தொடர்ந்து வந்துகிட்டே இருக்காங்க.. ஆனாலும் அவங்களை பார்க்கறதையோ, பேசறதையோ தவிர்த்துடறாரு..

ஹீரோவைப் பார்க்க ஒருத்தர் வர்றாரு.. ஹீரோவோ ஒரு மாணவியைக் கூப்பிட்டு, வந்திருக்கவர் மாணவி கண்ணுக்கு தெரியறாரான்னு கேக்கறாரு.. :-) (அவர் கற்பனையில்லைன்னு தெரிஞ்சாதான் புது மனிதர்கள் கிட்ட பேசறாரு..) பார்க்க வந்திருக்கிறவர் நோபல் பரிசு குழுவிலிருந்து வந்திருக்கார்.., பல வருஷங்களுக்கு முன்னாடி ஹீரோ எழுதிய கோட்பாடுக்காக, நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறதா சொல்லறாரு.. அதை எல்லோரும் இப்போதான் recognize பண்ணி உபயோகப்படுத்த ஆரம்பிச்சு இருக்காங்கன்னு சொல்லறாரு..

இரண்டு பேரும் பேசிகிட்டே கேண்டீனுக்கு போறாங்க.. அங்கேயிருக்கிற ஒவ்வொருத்தரா அவங்க பேனாவை குடுத்து வாழ்த்திட்டுப் போறாங்க..!!

1994 நோபல் பரிசு வழங்கும் விழா.. அதுல ஹீரோ விருது வாங்கியபின் பேசறாரு.. அவ்வளவு அழகான வசனத்தை என்னோட வார்த்தையில சொல்ல விரும்பல.. அந்த வசனம் அப்படியே:

“I always believed in numbers, in the equations and logics that lead to reason. But, after a lifetime of such pursuits, I ask myself, what truly is logic? Who decides reason? And I have made the most important discovery of my life. It is only in the mysterious equations of love, any logical reasons can be found. (Seeing his wife,) I am only here tonight because of you. You are the reason I am. You are all my reasons”

எத்தனையோ ஆஸ்கர் விருது விழாக்களில் இதே மாதிரி ஒரு டயலாக்கை நேரடியா கேட்டிருந்தாலும், இந்த அளவுக்கு டச் இருந்ததில்லை..

கல்லூரி நாட்களில் மாணவர்களிடையே வேறு எந்த படத்துக்கும் இப்படி ஒரு வரவேற்பு இருந்ததில்லை.. பல காட்சிகளில் எங்களின் பிரதிபலிப்பை பார்த்தோம்.. GATE பரீட்சையில் இந்திய அளவில் 20வது ரேங்க் வாங்கிய என் நண்பன் அதே பாடத்தில் ஃபெயில் ஆனான்.. அவன் எழுதும் பதில்களும், அவன் கேட்கும் சந்தேகங்களும், செத்தாலும் புரியாது Ph.D. வாங்கிய என் கல்லூரி ஆசிரியர்களுக்கு..

Russell Crowe-க்கு ஆஸ்கர் கிடைக்காதது அதிசயம்தான்.. Gladiator-ல மாவீரனா நடிச்சுட்டு, இந்தப்படத்துல அதுக்கு நேரெதிர் கதாபாத்திரம்.. அப்பப்போ நெத்தியை சொறிஞ்சு அப்பாவியா சிரிக்கறதும், கல்லூரி மாணவரா இருக்கறதுல இருந்து, 70 வயசு பெரியவர் ஆகற வரைக்கும் அதே மேனரிஸத்தோடு இருக்கறதும் அருமை.. ஹீரோயின் Jennifer Connelly-ம் அபாரமான நடிப்பு.. சிறந்த படம், திரைக்கதை, இயக்கம், துணை நடிகை என 4 ஆஸ்கர் வாங்கியது..

Titanic, Avatar படங்களுக்கு இசையமைத்த James Horner-தான் இந்தப்படத்துக்கு இசை.. படம் பார்த்து பல மணி நேரத்துக்கு மனசுல ரீங்காரம் இருந்துட்டே இருக்க மாதிரி அருமையான பின்னணி இசை ஒன்னு இருக்கு.. அடிக்கடி விஜய் டிவில பின்னணி இசையா உபயோகப்படுத்தறாங்க..

திறமை புரிந்து கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுவதின் வலியையும், நிராகரிக்கப்பட்டவனின் மனதை சரிசெய்யும் காதலின் வலிமையையும் இயல்பா சொல்லியிருக்காங்க.. கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்..






Related Posts with Thumbnails

48 comments:

  1. ஆழமான கருத்து கொண்ட படத்தைப் பற்றிய விமர்சனம்,
    அற்புதமான வரிகளில்...

    நல்ல அறிமுகம் ஜெய்...

    வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  2. சில மேட்டர் என்னுடையது போலவே இருக்கே!!!

    ReplyDelete
  3. என்னால் மறக்கமுடியாத படங்களில் ஒன்று...

    ReplyDelete
  4. அருமையான் விமர்சனம் ஜெய். நான் மிகவும் விரும்பி பார்த்த படங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  5. என்னுடைய பேவரிட் படங்களில் ஒன்று.

    நன்றி ஜெய்.

    ReplyDelete
  6. // (ஏதாவது பெருசா சாதிச்சுட்டா, பேனாவை கொடுத்து வாழ்த்து சொல்லிட்டு போறது அவங்க வழக்கம்)//

    நம்ம கலைஞறு கூட அதைத்தானே செய்யுறாரு? அவரோட பேனா இப்போ இயக்குனர் பாண்டி கிட்ட இருக்காம்.

    ReplyDelete
  7. //Russell Crowe-க்கு ஆஸ்கர் கிடைக்காதது அதிசயம்தான்..//

    பரிசு அவருக்குத்தான்னு... கிட்டத்தட்ட முடிவு பண்ணியிருப்பார். அனவ்ன்ஸ் பண்ணும்போது, லைட்டா எந்திரிச்சிடுவாரு.

    பார்த்தா... டென்ஸல்....!!!!!!! :)

    ReplyDelete
  8. காலம் உருண்டோடுவதை ஜான் நாஷ் ஈகுவேஷன்கள் எழுதிக்கொண்டிருக்க, பின்னணியில் ஜன்னலுக்கு வெளியே ஒரே ஷாட்டில் கோடை , மழை, குளிர்,வசந்தம் என எல்லாவற்றையும் திரையில் பதித்த ரான் ஹோவர்டின் திரைக்கதை ஒரு அற்புதம்.
    Good review buddy!

    ReplyDelete
  9. //ஆசிரியரைப் பொறுத்தவரை விருது வாங்கினவரு பெருசா சாதிச்சு இருக்காரு.. ஆனா, ஹீரோவை பொறுத்தவரை, பேராசிரியர் சாதிச்சதை மத்தவங்க இப்பதான் recognize பண்ணறாங்க.. அதாவது ஒவ்வொருத்தருக்கும் திறமை எப்பவுமே இருக்கு.. ஆனா, அதை அடுத்தவங்க புரிஞ்சுக்கறப்போதான் பாராட்டறாங்க.. பாராட்டப்படாதவங்களுக்கு திறமை கிடையாதுன்னு அர்த்தமில்லை.. //

    அர்த்தம் மிகுந்த வரிகள்.மிக அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே.மிகவும் நல்ல முறையில் review செய்து இருக்கிறீர்கள்.... :)
    Keep up the good work...

    ReplyDelete
  10. I will try to see this film soon.... :)

    ReplyDelete
  11. //ஆசிரியரைப் பொறுத்தவரை விருது வாங்கினவரு பெருசா சாதிச்சு இருக்காரு.. ஆனா, ஹீரோவை பொறுத்தவரை, பேராசிரியர் சாதிச்சதை மத்தவங்க இப்பதான் recognize பண்ணறாங்க//

    இந்த மாதிரி உங்க Interpretation-அ நடுநடுவுல எழுதுரீங்கள்ள.. அது.. அதுதான் உங்ககிட்ட புடிச்ச விஷயம்..
    அற்புதமான படம், அருமையான விமர்சனம்..

    ReplyDelete
  12. அந்த வருட ஆஸ்கர் டென்சலுக்குப் போனதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் இந்தத் திரைப்படத்தில் ரஸ்ஸலின் நடிப்புடன் ஒப்பிடுகையில் கிளாடியேட்டர் மிகச் சாதாரணமாகத் தெரிந்தது எனக்கு...

    ஹாலிவுட் பாலா.. என்ன ஆச்சு?

    ReplyDelete
  13. // //ஆசிரியரைப் பொறுத்தவரை விருது வாங்கினவரு பெருசா சாதிச்சு இருக்காரு.. ஆனா, ஹீரோவை பொறுத்தவரை, பேராசிரியர் சாதிச்சதை மத்தவங்க இப்பதான் recognize பண்ணறாங்க.. அதாவது ஒவ்வொருத்தருக்கும் திறமை எப்பவுமே இருக்கு.. ஆனா, அதை அடுத்தவங்க புரிஞ்சுக்கறப்போதான் பாராட்டறாங்க.. பாராட்டப்படாதவங்களுக்கு திறமை கிடையாதுன்னு அர்த்தமில்லை.. //

    அருமையா வெளிப்படுத்தியிருக்கீங்க தலைவரே.. ஆனாலும் நீங்க பதிவுகளில் எழுதும் வேகம் இன்னும் அதிகரிக்கலாம். இன்னும் நிறைய எழுதணும்னு ஆசையா இருக்குது.

    ReplyDelete
  14. இந்தப் படம், எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று. எவ்வளவோ வருடங்களுக்கு முன்னர் இதைப் பார்த்திருந்தும், ஒவ்வொரு காட்சியும் எனது மனதில் பச்சை குத்தப்பட்டிருப்பதைப் போல் பதிந்துள்ளது. படம் வெளிவந்தவுடன், ஜான் நேஷ் பத்தி கண்டபடி இண்டர்னெட்ல R&D பண்ணது நினைவு வருது. . எப்ப பார்த்தாலும் மனச சும்ம கவ்வு கவ்வுன்னு கவ்வுற படம். . . பின்னுங்க !!

    ReplyDelete
  15. பகிர்வுக்கு நன்றி பாஸ்!

    ReplyDelete
  16. நன்றி அகல்விளக்கு, Subankan, இராமசாமி கண்ணண், ரெட்டைவால், ILLUMINATI , பிரசன்னா, கருந்தேள் மற்றும் அதிஷா.

    // ஜெய்லானி said...
    சில மேட்டர் என்னுடையது போலவே இருக்கே!!! //
    கதையிலயா? எந்த சில மேட்டர்?

    // King Viswa said...
    நம்ம கலைஞறு கூட அதைத்தானே செய்யுறாரு? அவரோட பேனா இப்போ இயக்குனர் பாண்டி கிட்ட இருக்காம். //
    ஓகோ.. இதெல்லாம் தமிழ்நாட்டுக்கே வந்துடுச்சா.. நான்தான் கொஞ்சம் லேட் பிக் அப் போல.. நானும் இனி எல்லாருக்கும் பேனா குடுக்க போறேன்..

    @ ஹாலிவுட் பாலா, சென்ஷி,
    இன்னும் Training Day படம் பார்க்கலைங்க.. அதுனால டென்ஸல் எப்படி நடிச்சுருக்கார்னு தெரியல.. இருந்தாலும் ரஸ்ஸல் கிளாடியேட்டரை விட இதுல ரொம்ப நல்லா நடிச்சிருந்தார்..

    ReplyDelete
  17. உங்கள் விமர்சனம் அருமை. இந்த படத்தை நான் ஐந்து முறைக்கு மேல் பார்த்துவிட்டேன். அந்த கிளைமாக்ஸ் சீன் இன்னும் இன்னும் பார்க்கதுண்டும். படத்தின் இசையை பற்றி ஏன் எழுதவில்லை ?? ரொம்ப அருமையான பின்னணி இசை .

    ReplyDelete
  18. நன்றி ~~Romeo~~
    ச்ச.. கடைசியா இசை பத்தி எழுதணும்னு நெனச்சுட்டே இருந்தேன்.. மறந்துட்டேன்.. இப்போ சேர்த்துடறேன்.. Titanic, Avatar படங்களுக்கு இசையமைத்த James Horner-தான் இந்தப்படத்துக்கு இசை.. படம் பார்த்து பல மணி நேரத்துக்கு மனசுல ரீங்காரம் இருந்துட்டே இருக்க மாதிரி அருமையான பின்னணி இசை ஒன்னு இருக்கு.. அடிக்கடி விஜய் டிவில பின்னணி இசையா உபயோகப்படுத்தறாங்க..

    ReplyDelete
  19. நல்ல அறிமுகம் ஜெய்.

    ReplyDelete
  20. மிக‌ அழ‌கான‌, அருமையான விம‌ர்ச‌ன‌ம் ஜெய், நீங்க‌ எழுதின‌தை ப‌டிச்ச‌ப்புற‌ம்தான் 'கில் பில்' பார்த்தேன். இந்த‌ ப‌ட‌த்தையும் லிஸ்ட்ல‌ சேர்த்துக்க‌றேன். ஒரு வேண்டுகோள், அடுத்த‌தா த்ரில்ல‌ர், ஆக்ஷ‌ன், அட்வென்ச்ச‌ர் மாதிரியான‌ ப‌ட‌ங்க‌ளை ப‌ற்றியும் எழுதுங்க‌ ஜெய் :)

    ReplyDelete
  21. இந்த படத்தை பாதி மட்டும் தான் பார்த்தேன் ரொம்ப நாட்களுக்கு முன்
    மிக நல்ல படம்

    ReplyDelete
  22. Hi Jai ,

    Review is so Excellent. Did not miss or kill the essence of the movie. Please keep posting about good movies.

    Harris

    ReplyDelete
  23. //ஒவ்வொருத்தருக்கும் திறமை எப்பவுமே இருக்கு.. ஆனா, அதை அடுத்தவங்க புரிஞ்சுக்கறப்போதான் பாராட்டறாங்க.. பாராட்டப்படாதவங்களுக்கு திறமை கிடையாதுன்னு அர்த்தமில்லை.. //

    ஆழமான கருத்துக்கள்
    அழகான விமர்சனம்
    அழுத்தமான திரைப்படம்.

    ReplyDelete
  24. நன்றி ஜீவன்பென்னி, John Peter, Harris.

    @ ரகு,
    கண்டிப்பா மத்த Genre படங்களையும் எழுதறேன்.. வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே எடுக்கப்பட்ட படங்களை மட்டும் எழுதக்கூடாதுன்னு நினைச்சிருக்கேன்.. மத்தபடி, நல்ல கருத்துள்ள படங்களோ, நல்ல டெக்னிகல் அம்சம் உள்ள படங்களோ எந்த genre ஆனாலும் சரி.. நிச்சயம் எழுதுகிறேன்..

    @ Cibi,
    அச்சச்சோ.. சீக்கிரம் முழுப்படத்தையும் பாருங்க.. உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருக்கும்..

    ReplyDelete
  25. one of the best review, i ever seen!

    I liked ur review, cos u almost explain all the brilliant scenes with excellent words.

    Fantastic! Superb Presentation!!

    this is the reason, i already asked you to write abt "The Pursuit of Happyness"

    I'm Expecting

    Cheers!

    ReplyDelete
  26. நண்பரே,

    உங்கள் அழகான நடையில் மீண்டும் ஒரு அருமையான பதிவு.

    ReplyDelete
  27. ஒரு வேலை படம் பார்த்தால் நீங்கள் எழுதிய ஃபீலிங் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. ஆனால் உங்களின் விமர்சனம் படம் பார்ப்பதை விட மேலான திருப்தியை தந்தது உண்மை.

    ReplyDelete
  28. >>டம் பார்த்து பல மணி நேரத்துக்கு மனசுல ரீங்காரம் இருந்துட்டே இருக்க மாதிரி அருமையான பின்னணி இசை >> thappaa sollirukinga... naan inda padam parthu pala varusama en manasula inda padathoda isai oodite irukku... neram kidaikum podellam inda padam thirumba thirumba parpen...

    ReplyDelete
  29. நன்றி கிறுக்கல்கள், கனவுகளின் காதலன்.

    @ பருப்பு The Great,
    கண்டிப்பா சீக்கிரம் எழுதறேன் நண்பரே.. ஆனா, அந்தப்படத்துல ஒரு சின்ன வருத்தம் எனக்கு.. படம் முழுக்க வேலையும், காசும்தான் வாழ்க்கையே அப்படிங்கிற மனநிலையில இருக்காரு ஹீரோ வில் ஸ்மித்.. வேலை கிடைக்காத வரைக்கும் வாழ்க்கையே நரகமா காட்டியிருக்காங்க.. (அதையாவது ஓரளவு ஒப்புக்கலாம்) ஆனா, வேலை கிடைச்சப்பறம் வாழ்க்கையே சொர்க்கமாயிட்ட மாதிரி சொல்லறது கொஞ்சம் இடிச்சது.. பிளாட்பாரத்துல இருக்கவங்க எல்லாம் அழுதுட்டே இல்ல.. பணக்காரன் எல்லாரும் சிரிச்சுகிட்டே இல்ல.. எந்த சூழ்நிலையில் இருந்தாலும், சந்தோஷம் மனசுலதான் இருக்குன்னு சொல்லற "Life is Beautiful" படத்துக்கு நேரெதிரா இந்தப்படம் தோணிச்சு எனக்கு.. இதையும் மீறி படத்துல இருக்கற நல்ல விஷயங்களை நான் கண்டிப்பா எழுதறேன்.. ஆனா, எனக்கே பிடிக்காதப்போ, இந்த அளவு டச் வருமான்னு தெரியலங்க.. தப்பா எடுத்துக்காதீங்க..

    @ அக்பர்,
    படம் பார்க்காம விட்டுடாதீங்க.. ஃபீல் கிடைக்காம போக வாய்ப்பே இல்லை.. நூற்றுக்கணக்கில படம் பார்த்துட்டு, அதுல இருந்து தேர்ந்தெடுத்த படங்களை மட்டும்தான் எழுதறேன்.. கண்டிப்பா இதெல்லாம் எல்லாரும் பார்க்க வேண்டிய படம்..

    @ மனசு,
    உண்மைதான்.. இன்னும் என் செல்ஃபோனில் உள்ள எனக்குப்பிடித்த 20-25 இசைகளில் இதுவும் ஒன்று..

    ReplyDelete
  30. Were you a post graduate student in IIT? ( u said about 20th rank in GATE was your classmate?

    -Reena

    ReplyDelete
  31. No Reena. He was my classmate in B.E. He did post graduate in IITK.

    ReplyDelete
  32. தமிழ்த்தோழன்
    ஐயா
    இதில் ஒரு காட்சி விஜய் மிக சமீபத்தில் நடித்த படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  33. ஹா ஹா.. கேள்விப்பட்டேன் jana.. வகுப்பில் சத்தம் அதிகமா இருக்குன்னு ஜன்னலை மூடற காட்சி வேட்டைக்காரன் படத்துல வருதுன்னு நண்பர்கள் சொன்னாங்க.. கொடுமை சார்.. சொந்தமா காட்சி யோசிக்க தெரியாதவங்களுக்கு எல்லாம் நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்கறாங்க.. திறமை இருக்க இளம் இயக்குனர்களை யாரும் கண்டுக்கறதில்லை.. :-(

    ReplyDelete
  34. Good Review...

    I loved this movie and was sad when Russel did not get Oscar.

    //படம் வெளிவந்தவுடன், ஜான் நேஷ் பத்தி கண்டபடி இண்டர்னெட்ல R&D பண்ணது நினைவு வருது//

    R, okay, "D"la enna panninga?

    ReplyDelete
  35. தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்?

    தமிழ் படங்கள் தொடர் தோல்வி ஏன்? http://cinema-gallary.blogspot.com/2010/05/blog-post_25.html

    ReplyDelete
  36. இந்தப் படம் பார்த்து சில மாதங்கள் ஆனாலும் உங்கள் எழுத்தைப் படித்தவுடன் படம் பார்த்தபோது உண்டான அதே மனவலி உண்டானது.

    ReplyDelete
  37. ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டேன் ..
    நல்ல நல்ல படமா சொல்லுறீங்க .. நன்றி ....
    அதுவும் கடைசியா நீல எழுத்திலை இருக்கிற வசனங்கள் எனக்கும் டச் ஆச்சு ...
    படத்தை பார்த்து விட்டு கதைக்கிறேன் .. உண்மையில் இப்படி பல திறமைசாலிகள் மழுங்கடிக்கப்படுகின்றனர் என்பது கவலையே ..
    இந்த பதிவை ஆசிக்கும் போதே டச் ஆகுது .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  38. ஜனநாயக கடமையை செய்துவிட்டேன்.

    ReplyDelete
  39. K.C.Daas ல போய் ஸ்வீட் சாப்பிடுங்க அப்படின்னு சொல்ல வந்தேன்... அருமையான... பதிவு ..இந்த படம் ரொம்ப முன்னாடியே பாத்துட்டேன் , அப்படியே அந்த கால கட்டத்துக்கு கூட்டிகிட்டு போய் திரும்பி வந்துடீங்க ... அருமை ..மற்ற பதிவுகளும் மெதுவா பார்க்கேறேன் ...

    ReplyDelete
  40. //ஆசிரியரைப் பொறுத்தவரை விருது வாங்கினவரு பெருசா சாதிச்சு இருக்காரு.. ஆனா, ஹீரோவை பொறுத்தவரை, பேராசிரியர் சாதிச்சதை மத்தவங்க இப்பதான் recognize பண்ணறாங்க.. அதாவது ஒவ்வொருத்தருக்கும் திறமை எப்பவுமே இருக்கு.. ஆனா, அதை அடுத்தவங்க புரிஞ்சுக்கறப்போதான் பாராட்டறாங்க.. பாராட்டப்படாதவங்களுக்கு திறமை கிடையாதுன்னு அர்த்தமில்லை.. //

    very true...

    nice one...

    ReplyDelete
  41. அருமையான விமர்சனம் நண்பரே, அனால் இதை மட்டும் ஒரு மருத்துவ மாணவராக ஒத்துக்கொள்ள முடியவில்லை. "உங்களுக்கு அதிக திறமை இருந்தும், புரிந்துகொள்ளப்படாமல் நிராகரிக்கப் பட்டிருக்கீங்களா? கல்லூரியில் புரியாமல் படிப்பவர்கள், உங்களை விட அதிக மதிப்பெண் வாங்கி இருக்கிறார்களா? நீங்க கேக்கற நல்ல கேள்வி புரியாமல் ஆசிரியர் உங்களை உட்கார சொல்லியிருக்கிறாரா? அலுவலகத்தில் நீங்கள் சொல்லும் புத்திசாலித்தனமான விஷயங்கள் உங்கள் மேலதிகாரிக்கு விளங்கவேயில்லையா? இந்தப்படம் உங்களை அப்படியே பிரதிபலிக்கும்.." ஏனென்றால் இந்தப் படம் பிரதி பலிக்கும் விடயம் சற்று வேறுபாடானது என்பது எனது கருத்து..

    மனதில் தெறித்த சாரல்கள்

    ReplyDelete
  42. நன்றி முகிலன், ஜெயந்தி, சுதர்ஷன், எப்பூடி, அது ஒரு கனாக் காலம், Dyena Sathasakthynathan.

    @செல்வராஜா மதுரகன், எப்படி என புரியவில்லை.. விளக்கிச்சொன்னால் நல்லது.. :-)

    ReplyDelete
  43. ஆழமான விமர்சனம்.... நல்லாவிரிவா சொல்லி இருக்கிங்க...

    ReplyDelete
  44. ரொம்ப அழகா உள்வாங்கி எழுதிருக்கீங்க எனக்கு ரொம்ப புடிச்ச 10 படங்கள்ல இதுவும் ஒன்னு :-))

    ReplyDelete
  45. நல்ல பகிர்வு.
    பச்சை கலர் பாரா பின்னால் அதை உபயோகித்திருப்பது என்று ரொம்ப மென்க்கெட்டு எழுதி இருக்கீங்க எல்லோருக்கும் விளங்கும்படியாக.

    நன்றி, சீக்கிரம் படம் பார்க்கிறேன்.

    ReplyDelete
  46. The best movie. My all time favorite!

    ReplyDelete