எதுக்காக உயிர் வாழணும்? இவ்வளவு நாள் உயிரோட இருந்து என்னத்த சாதிச்சு இருக்கோம்? வாழ்க்கையில இவ்வளவு பிரச்சினை இருக்கே.. பேசாம தற்கொலை பண்ணிட்டு செத்துடலாமா? இப்படியெல்லாம் என்னைக்காவது நினைச்சுருக்கீங்களா?
உங்களுக்கு டாக்டர் கவுன்சலிங் எல்லாம் வேணாம்.. இந்தப்படத்தை ஒரே ஒரு தடவை பாருங்க.. போதும்.. சந்தோஷமா வாழ ஆரம்பிச்சுடுவீங்க..
வித்தியாசமான திரைக்கதை இல்ல... ’நச்’சுனு வசனம் இல்ல... ஆச்சர்யப்படுத்தற தொழில்நுட்பமோ, இயக்கமோ இல்ல... வெறும் கதைதான்... அதை வச்சே பின்னியிருக்காங்க...
ஆஸ்கர், IMDB, AFI ரேட்டிங் எல்லாம் எப்பவுமே நம்ம விருப்பத்தோட ஒத்துப்போறது இல்ல... அதை வச்சு ஒரு படத்தை கணிக்க முடியாது... ஆனாலும், இந்த படத்தைப்பத்தி அதிகம் கேள்விப்படலைன்னா, ஏதோ எனக்கு மட்டும் பிடிச்ச படம்னு நினைச்சுடாதீங்க... அதுக்காக இந்த லிஸ்ட்...
- IMDB சிறந்த படங்கள் வரிசையில் இந்தப்படம் 28வது இடம்.
- AFI சிறந்த படங்கள் வரிசையில் 11வது இடம்.
- AFI சிறந்த உற்சாகப்படுத்தும் படங்கள்ல (Inspirational Movie) முதல் இடம்.
- AFI சிறந்த கதாநாயகன் கதாபத்திர வரிசையில் 9வது இடம்.
சிறந்த கிருஸ்துமஸ் படம், சிறந்த Passion வகைப்படம், சிறந்த Fantasy படம்னு இன்னும் நிறைய இருக்கு..
ஹீரோ நம்ம ஜேம்ஸ் ஸ்டீவர்ட் (James Stewart)… இவர் AFI சிறந்த கதாநாயகர் வரிசையில 3வது இடம்... (எவ்வளவு வரிசை...) டாம் ஹேன்க்ஸை 21ம் நூற்றாண்டின் ஜேம்ஸ் ஸ்டீவர்ட்-னு சொல்லறாங்க... (எனக்கு அதில் உடன்பாடில்லை… என்னதான் இருந்தாலும், டாம் ஹேன்க்ஸ்க்கு அடுத்துதான் ஜேம்ஸ் ஸ்டீவர்ட்...) அந்த காலத்துல, ஹிட்ச்காக் மாதிரி பல டைரக்டர்களுக்கு கம்பெனி ஹீரோவாவே இருந்திருக்காரு இவரு..
சரி.. படத்துல அப்படி என்ன Inspirational கதை வச்சுருக்காங்க...?
கதாநாயகன் பேரு ஜார்ஜ் பெய்லி (George Bailey)... கிருஸ்துமஸுக்கு முந்தின தினம் இரவு... ஹீரோவோட அம்மா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள்னு எல்லாரும் கடவுள்கிட்ட, ஹீரோவை காப்பாத்தணும்னு வேண்டிக்கறாங்க... அந்த வேண்டுதல்கள் கடவுளுக்கு கேட்டு, கடவுள் ஹீரோவைக் காப்பாத்த நினைக்கிறாரு... அவர்கிட்ட நிறைய தேவன்கள் இருக்கறாங்க... (ஆண் தேவதைன்னா தேவன்தானே?) சில நல்ல காரியங்களை செஞ்சா, தேவன்களுக்கு சிறகுகள் கிடைக்கும்... ப்ரமோஷன் மாதிரி... க்ளாரன்ஸ் (Clarence)-னு ஒரு தேவன்... அவருக்கு இன்னும் சிறகுகள் கிடைக்கல... பூமிக்கு போயி, ஹீரோவை காப்பாத்திட்டா, க்ளாரன்ஸுக்கு சிறகு தர்றேன்னு கடவுள் சொல்லறாரு… எப்படா சிறகு கிடைக்கும்னு எதிர்பாத்திருந்த க்ளாரன்ஸும் சந்தோஷமா ஒத்துக்கறாரு... ஹீரோவுக்கு என்ன உடம்பு சரியில்லையான்னு கேக்கறார் க்ளாரன்ஸ்.. அதுக்கு கடவுளோ, “அதைவிட மோசம்.. நம்பிக்கையை இழந்து விரக்தியில இருக்கான். அவனைக் காப்பாத்தணும்”-னு சொல்லறாரு.. ஹீரோவோட கதையை க்ளாரன்ஸ் கிட்ட சொல்ல ஆரம்பிக்கறாரு..
ஃப்ளாஷ்பேக்.. 12 வயசுல ஹீரோ ஒரு பனி மலையில அவன் தம்பியோட விளையாடிகிட்டு இருக்கப்போ, தம்பி ஒரு தண்ணி குட்டையில விழுந்து மூழ்க போறான்... உடனே ஹீரோ குட்டையில குதிச்சு, அவன் தம்பியைக் காப்பாத்தறான்.. ஆனா, ஹீரோவுக்கு சளி பிடிச்சு, ஒரு காது நிரந்தரமா கேட்காம போயிடுது..
அதுக்கப்பறம் விடுமுறையில, ஒரு மெடிக்கல் ஷாப்-ல வேலை பார்க்கறான்... அவனுடைய முதலாளி தவறுதலா விஷ மருந்தை நோயாளிக்கு குடுக்கறதை தடுத்து நோயாளியைக் காப்பாத்தறான்... முதலாளி பாராட்டறார்...
பல வருஷத்துக்கு அப்பறம், ஹீரோ கல்லூரிப் படிப்பை முடிச்சுட்டு வர்றான்... அவன் மேற்படிப்புக்காக வெளிநாடு போக நினைக்கறப்போ, அவனோட அப்பா இறந்துடறாரு... வீடு கட்ட கடன் தர்ற கம்பெனி முதலாளியா இருந்தவர் அவர்... ஏழைகளுக்காக குறைந்த வட்டியில கடன் குடுத்தவர்... அதே ஊர்ல, பாட்டர் (Potter)-னு ஒரு முதலாளியும் கடன் அளிக்கற கம்பெனி வச்சுருக்கான்.. அவனோ அதிக வட்டிக்கு கடன் கொடுத்து ஏழைகளை நசுக்க பாக்கறவன்.. அப்பாவோட கம்பெனியை மூடிட்டா, Potter ஏழைகளை ஏமாத்திடுவான்னு ஹீரோ நினைக்கிறான்.. அதனால அப்பாவோட கம்பெனிக்கு அவனே முதலாளி ஆகறான்.. தம்பி படிப்பு முடிந்து வரும்வரை தற்காலிகமா மேற்படிப்பு எண்ணத்தை கைவிடறான்..
ஆனா தம்பியும் படிப்பு முடிந்து வேற வேலைக்குப் போய்விட, அதே முதலாளி வேலையில் ஹீரோ இருந்துடறான்... காதலித்த பெண்ணை கல்யாணம் செஞ்சுக்கிறான்..
ஹீரோ அவனோட கம்பெனியை மூடப்போறதா, Potter புரளி கிளப்பிவிட, பணம் போட்ட எல்லாரும் கம்பெனியை சுத்தி வளைச்சுடறாங்க.. அவங்களை சமாளிச்சு, இது Potter–ரோட சதின்னு புரியவச்சு, தேனிலவுக்காக வச்சிருந்த பணத்தையும் அவங்ககிட்ட பிரிச்சுக் கொடுக்கறான்.. குரு படத்துல இதே மாதிரி ஒரு சீன் வரும்.. அபிஷேக் பச்சன் பேசியே சமாளிக்கற மாதிரி.. ஆனா, இதுல ஹீரோ சமாளிக்கற விதமும், ஜேம்ஸின் நடிப்பும், அப்பப்பா.. அபாரம்..
சில வருடங்களில், ஹீரோ மக்கள்கிட்ட நல்லபேர் வாங்கறான்... பெய்லி பார்க் (Bailey Park)-னு ஒரு இடம் வாங்கி, அதுல குறைந்த பணத்துல ஏழைகளுக்கு வீடு கட்டி தர்றான்.. இதனால Potter–க்கு பிஸினஸ் குறையுது...
கிருஸ்துமஸுக்கு முதல் நாள் காலை... 8000 டாலர் கம்பெனி பணத்தை பேங்க்-ல போட வர்ற ஹீரோவோட மாமா, பணத்தை தவற விட்டுடறார்.. அந்த சமயத்துல அங்க வர்ற Potter கையில அந்த பணம் கிடைச்சிடுது.. Potter பணத்தை எடுத்துகிட்டு கிளம்பிடறான்.. பணம் தொலைந்ததால ஹீரோ அவனோட மாமாவை திட்டறான்.. கோவப்படறான்..
அதே எரிச்சலோட வீட்டுக்கு வந்தா, வீட்டுல குழந்தைகள் எல்லாரும் விளையாடிட்டும், பாட்டு பாடிட்டும் இருக்காங்க.. அந்த பாட்டும், விளையாட்டும் எரிச்சலை அதிகப்படுத்த அவங்களை திட்டறான்.. அதை அமைதியா கேட்கிற மனைவிகிட்டேயும் எரிஞ்சு விழறான்.. குழந்தைகள் அழ அதுக்கும் திட்டறான்.. வீட்டை விட்டு வெளியே போறான்..
8000 டாலர் உடனடி தேவைங்கறதால, Potter-கிட்ட கேக்கறான்.. Potter இவனை அவமானப்படுத்தி, கம்பெனி பணத்தை தவறாகப் பயன்படுத்தி செலவு பண்ணிட்டான்னு குற்றம் சாட்டி, அதை போலீஸுக்கும் தெரியப்படுத்திடறான்.. ஹீரோ உயிரோட இருக்கறதை விட சாகறதே மேல்னு சொல்லி தற்கொலைக்கு தூண்டறான்..
அங்க இருந்து வெளியேறி, Bar-க்கு போறான்.. நிறைய குடிச்சுட்டு அங்கேயும் தகராறுல அடி வாங்கறான்.. குடிச்சுட்டு வண்டி ஓட்டி ஒரு வீட்டு மரத்துல இடிச்சு, அங்கேயும் சண்டை.. செத்துப்போனாலாவது 15000 டாலர் இன்ஸ்யூரன்ஸ் காசு கிடைக்கும்னு, விரக்தியில ஒரு பாலத்துல இருந்து கீழே ஆத்துல குதிக்க முடிவு செய்யறான்..
இவ்வளவு கதையையும் கேட்ட தேவன் க்ளாரன்ஸ், இப்போ அந்த பாலத்துல தோன்றி, க்ளாரன்ஸ் முதல்ல குதிச்சுடறாரு.. இதைப்பார்த்த ஹீரோ க்ளாரன்ஸைக் காப்பாத்தறான்.. அவரு குதிச்சதுக்கான காரணத்தை ஹீரோ கேக்கறான்.. அவர் தேவன்னு சொல்லறதை ஹீரோ நம்பவில்லை.. க்ளாரன்ஸ் ஹீரோ ஏன் தற்கொலை செய்ய முடிவு செஞ்சான்னு கேக்கறாரு.. ஹீரோ தான் வாழறதை விட சாகறதே மேல்-னும், பிறந்ததே வேஸ்ட்-னும் சொல்லறாரு.. இதைக்கேட்ட தேவன், “சரி.. நீ பிறக்கவே இல்லைன்னா என்ன ஆகியிருக்கும்னு பார்க்கலாம்..”-னு சொல்லறாரு..
அடுத்த நொடி, ஹீரோவுக்கு கேட்காத ஒரு காது கேட்க ஆரம்பிக்குது.. அவர் குடிச்சுட்டு வண்டியை இடிச்ச இடத்துல வண்டியும் இல்ல, மரமும் நல்லா இருக்கு.. சின்ன வயசுல ஹீரோ வேலை பார்த்த மெடிக்கல் ஷாப் முதலாளியா இருந்தவர், தப்பான மருந்து கொடுத்து ஒரு பையன் செத்துப்போனதால ஜெயிலுக்கு போயி, இப்போ பைத்தியமா தெருவில சுத்தறாரு.. அவரை எல்லோரும் கேலி பண்ணறாங்க.. (ஹீரோவே பிறக்காம இருந்தா என்ன ஆகியிருக்கும்னு காட்டறாங்க..)
வீட்டுக்குப்போலாம்னு போனா, அங்கே ஹீரோ கட்டின பெய்லி பார்க் இல்ல.. அதுக்கு பதிலா Potter’s Ville–தான் இருக்கு.. மொத்த இடமும் நைட் க்ளப்பும், சூதாடும் இடமாகவும் இருக்கு.. அவனோட வீடு பாழடைந்து போயிருக்கு.. அவனோட மாமா பிசினஸ்ல நஷ்டமடைஞ்சு, பைத்தியம் ஆகியிருக்காரு.. ஹீரோவோட தம்பி 10 வயசுல குட்டையில மூழ்கி செத்துப்போயிருக்கான்.. தம்பியோட கல்லறையைப் பார்க்கிறான்.. அவனோட மனைவி கல்யாணம் ஆகாம இருக்கறா.. யாருக்குமே இவனை அடையாளமே தெரியல..
எல்லாமே பழைய மாதிரியே இருக்கு.. ஹீரோவுக்கு ரொம்ப சந்தோஷம்.. 8000 டாலர் இல்லைன்னாலும் ஜெயிலுக்கு போக தயாரா இருக்கான்.. மனைவி, அம்மா, குழந்தைகள்கிட்ட சந்தோஷமா பேசறான்..
அவனோட மாமா எல்லோர்கிட்டேயும் பேசி பணத்துக்கு ஏற்பாடு செய்யறாரு.. நல்லவனான ஹீரோவுக்கு உதவி செய்ய எல்லோரும் தயாரா இருக்காங்க.. காசு கொண்டுவந்து குவிக்கறாங்க.. அவனுக்கு ஒரு கஷ்டம்னா கைகொடுக்க பலபேர் வர்றாங்க.. நண்பர்கள் எல்லாரும், கையிலிருக்கறதை குடுக்கறாங்க..
காசோட சேர்ந்து ஒரு கடிதமும் வருது.. அதுல எழுதியிருக்கது:
“Remember no man is a failure who has friends. Thanks for the wings. Love, Clarence.”
சுபம்.
ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் பலபேரோட வாழ்க்கையில இணைந்துதான் இருக்கு.. நாம விரும்பினாலும், விரும்பலைன்னாலும், நமக்குத் தெரியாமலேயே பல பேரோட வாழ்க்கையை நாம மாத்தியிருக்கோம்.. (அதைத்தானே பட்டர்ஃப்ளை எஃபெக்ட்-னு சொல்லறாங்க).. நாம உயிரோட இருக்கிற வரைக்கும் நம்மால உலகத்துல நல்லது நடந்துகிட்டேதான் இருக்குது.. அந்த உயிரை தூக்கி எறியக்கூடாது..
நல்லது செய்யறவங்களுக்கு நண்பர்கள் அதிகமா இருப்பாங்க.. நண்பர்கள் அதிகமா இருக்கவங்களுக்கு தோல்வியே கிடையாதுன்னு அழுத்தமா சொல்லியிருக்காங்க.. (கொஞ்சம் ஓவர் தத்துவமோ.. இதோட நிறுத்திக்கறேன்..)
குடும்பத்தோட கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்... பார்த்தா நிம்மதியான, சந்தோஷமான நாள் நிச்சயம்..
சொன்ன மாதிரியே போட்டுடிங்களே... :) நான் பின்ன படிச்சிட்டு வந்து கமெண்ட் போடறேன் பாஸ்.இப்ப கொஞ்சம் பிஸி... சாரி...அப்புறம்,பதில் கொடுமைக்கு நீங்க ரெடி ஆகுங்க... :)
ReplyDeleteகதை படிக்கும்போதே சிலிர்ப்பாக இருக்கிறது.. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.. எப்படி பாஸ் தேடி பிடிக்கிறீங்க... வாழ்த்துக்கள்..!!
ReplyDeleteஎப்படி ஜெய் இந்த படம்லாம் ஒங்களுக்கு கிடைக்க்குது. கட்டாயாம் பாத்துடலாம். நல்ல விமர்சனம். நன்றி.
ReplyDeleteசூப்பர்ங்க இந்த படத்த பாதி மட்டும் தான் பாத்தேன் மீதிய அப்புறமா பாக்களமேன்னு இருந்தப்ப ஹார்ட் ட்ரைவ் தவறதுலா ஃபார்மட் ஆய்டிச்சி என்னடா முடிவுனு யோசிச்சிக்கிட்டு இருந்தப்ப இப்படி அருமையான பதிவ போட்டுடிங்க வாழ்த்துகள்.... நன்றி
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு விமர்சனம் .
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteசிறப்பான விமர்சனம். நல்லதொரு பகிர்வு.
வழக்கம் போல் அருமையான விமர்சன
ReplyDeleteநடை!! வாழ்த்துக்கள் ஜெய்.
போன வாரம்தான் இந்த படத்தை டவுன்லோட் செஞ்சேன்...இன்னும் பார்க்கவில்லை, பார்த்தவுடன், பதிவை படித்துவிட்டு கமென்ட்டுகிறேன் ஜெய்... !!!
ReplyDeleteநல்ல பகிர்வு நண்பரே,பத்துடுறேன்
ReplyDeleteவானமே எல்லை.....
ReplyDeleteரெண்டு நிமிஷம் முன்னால தான் இந்தப் பதிவையே பார்த்தேன் . . முழுசா படிச்சேன் . . கண்கள் பனித்தன. . இதயம் இனித்தது :-)
ReplyDeleteஇந்தப் படத்த பேஸா வெச்சிகினு, நம்ம நாகேஷ் நடிச்ச ஒரு படம் கீதுன்னு னினைக்குறேன் .. வீ கே ராமசாமி தான் சிவன் . . அவரு நாகேஷ் முன்னாடி தோன்றி, அவருக்கு வரம் தர்ராப்பல போவும் . . :-)
ஏற்கனவே பார்த்திருக்கேன், இருந்தாலும் இப்ப இருக்கிற மன நிலைக்கு இன்னொருமுறை பார்க்கணும்போலதான் இருக்கு. தேங்க்ஸ் மச்சி
ReplyDeleteபடம் பார்க்காவிட்டாலும் உங்கள் விமர்சனம் படிக்கும் போதே ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது . உங்கள் எழுத்து நடை அருமை . வாழ்த்துகள்.
ReplyDeleteஅந்த பாலம் சந்திப்பிற்கு பின் வரும் நிகழ்வுகளை நீங்க விவரித்த விதமே படம் பார்க்க ஆர்வத்தைத் தூண்டுகிறது. எழுத்து நடை எக்ஸலண்ட்டா இருக்கு ஜெய் :)
ReplyDeleteஉண்மைதான்..இந்த விமர்சனம் படிக்கும் போதே..கண் கலங்குது..வாழ்க்கையில் நாம் ஒவ்வொவரும் விரும்பும் அங்கிகாரம்..
ReplyDeleteநல்லவனாக இருந்தால் மதிக்கப்படுவான் என்பது உண்மையானால், அது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிறுபிக்கப்பட்டால், எல்லாரும் நல்லவர்களாக இருக்க விரும்புவார்கள்.
அதேபோல் நாம் ஒவ்வொவரும் பிறந்தது காரணம் கொண்டுதான் என்று நம்பினால், அதை தேடினால் போதும் வாழ்க்கை அர்த்தமுல்லதாக ஆகிவிடும்.
நான் இன்னும் இந்தப்படம் பார்க்கவில்லை. விரைவில் பார்த்துவிடுகிறேன்.
நேர்த்தியாக கதைச் சொல்லி இருக்கிங்க..
நன்றி..
விஜய் ஆம்ஸ்ட்ராங்.
வாழ்த்திய எல்லா உள்ளங்களுக்கும் நன்றிங்க.. :) :)
ReplyDeleteபார்க்காதவங்க எல்லாம், ரெண்டு மணி நேரம் கிடைச்சா, உடனே பாருங்க.. சில படங்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடனே மறந்துடும்.. சில படங்கள் ஓரிரண்டு நாட்களுக்கு பாதிப்பு தரும்.. மிகச்சில படங்களே எப்போது நினைத்தாலும், பார்த்தாலும் நல்லாயிருக்கும்.. இது மூன்றாவது வகை..
ஜேம்ஸ் ஸ்டீவர்ட் செம நடிகர்ங்க,நடிப்பதே தெரியாது,இயலபா வாழ்வார்
ReplyDeleteஅருமையான பகிர்வுங்க. நன்றி!
ReplyDeleteநல்ல படம்.நல்லா எழுதியிருக்கீங்க. தொடர்கிறேன்.
ReplyDeleteஇந்த கதையை கொஞ்சம் மாற்றி ...பட்டி பார்த்து "முதல் தேதி" எடுத்தாங்க. அதுல சிவாஜி ஹீரோ.......என்எஸ்கே தான் காமெடி பண்ணிருப்பார்.
ReplyDeleteநல்ல சொல்லி இருக்கீங்க பாஸ் ...உங்க பிளாகை follow செய்றேன்
ஜெய் விமர்சனம் நல்லா எழுதியிருக்கீங்க. படம் பார்த்துட்டு சொல்லுறேன். பாசிடிவான படமா எழுதுறீங்க. தொடருங்கள்.
ReplyDeleteகண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
ReplyDeleteஉங்களின் தகவலுக்கு மிக்க நன்றி
Keep it up
பொதுவா பிளாக் அண்டு ஒயிட் படங்கள் நான் அதிகம் பார்த்தது இல்லை இந்த படத்தை நிச்சயம் பார்க்க முயற்ச்சிக்கின்றேன்...
ReplyDelete@ ஜாக்கி,
ReplyDeleteபலபேர் ப்ளாக் அண்ட் ஒயிட் படங்களை விரும்பறது இல்லைதான்.. ஆனா, கவலையே வேண்டாம்.. இந்தப்படம் Film Colorization டெகனாலஜியில இப்போ கலரிலும் இருக்கு.. டவுன்லோட் பண்ணலாம்.. :-)
வணக்கம்
ReplyDeleteநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
விமர்சனம் நல்லா இருக்கு. நல்லதொரு படத்தைபற்றி எழுதியதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஏற்கனவே தைரியசாலி.. தன்னம்பிக்கை உடையவங்க என்ன பண்ணறதுங்க ;)... இன்னைக்கு தான் நேரம் கிடைச்சது மேலோட்டமா பார்க்கறதுக்கு...
ReplyDeletebest of luck :)
a sivaji ganeshan movie also has the same story..movie name mudhal thaethi..the factory he worked will be closed due to labour strike ..so he wil struggle for money..his friend will help for 1 month then again money problem, at one stage he will comit suicide..that time god will show him what happens to his family after his death..nice movie tooo
ReplyDeleteஏற்க்கனவே பார்த்து சந்தோசப்பட்ட படம்..நல்லா எழுதிறிக்கீங்க...
ReplyDeleteநீங்க ஏன் "The Pursuit of Happyness" review போடக் கூடாது...நானும் அதே field ல(sales , Marketing , Business Dev) தான் இருக்கேன் அதான் கேட்டேன்...
தல,படம் பார்த்தேன்.நீங்க சொன்னது உண்மை....எல்லோரும் பார்க்க வேண்டிய படம்....மிகவும் நன்றி... :)
ReplyDeleteபடத்தை ரொம்பப் புகழ்ந்திருக்கீங்க. அப்படி என்ன தான் இருக்குன்னு பார்க்கவே கியூல வெச்சுக்குறேன்.
ReplyDelete