Monday, April 5, 2010

சிறந்த திரைக்கதைகள் - Kill Bill Vol.2 (2004) [18+]


Kill Bill Vol.2 (2004) [18+]

இது படத்தின் இரண்டாவது பாகம். முதல் பாகம் 2003-ல் வந்தது. அதுவும் சூப்பர்னாலும், சிறந்த திரைக்கதைன்னு சொல்ல முடியாது. 18 வயசுக்கு சின்ன பசங்களும், சாஃப்ட் ஹார்ட் மக்களும் படிக்கறதோட நிறுத்திக்கங்க. படத்தையெல்லாம் பார்க்கவேண்டாம். (உபரி தகவல்: ஒரு சீனும் கிடையாது. ஒன்லி வயலன்ஸ், வயலன்ஸ், வயலன்ஸ், அப்பறம் கடைசியா சூப்பர் திரைக்கதை) Cannibal Holocaust மாதிரி இதைவிட வயலன்ஸ் இருக்க படங்கள் நிறைய இருந்தாலும், mainstream படங்களிலும், அடிதடி வயலன்ஸ்-க்கும் நான் பார்த்தவரையில் இதுதான் முதலிடம்.



டைரக்டர் Quentin Tarantino. Pulp fiction போல இதுவும் non linear தான். இருந்தாலும் தெளிவாவே புரியும். இரண்டு பாகத்திலும் சேர்த்து மொத்தம் 10 அத்தியாயங்கள். வரிசை மாறி மாறி வரும்.
படத்தில ஹீரோவெல்லாம் கிடையாது. ஹீரோயின் (Uma Thurman) மட்டும்தான். Bill அப்படிங்கறவன் அவனோட ஏழெட்டு ஆளுங்களோட வந்து, கல்யாணத்துக்கு ரெடியா இருக்க ஹீரோயினையும், அவளோட காதலனையும், காதலனோட குடும்பத்தையும் சுட்டுட்டு போயிடறாங்க. ஹீரோயின் அப்போ கர்ப்பமா இருக்காங்க. (கல்யாணத்துக்கு முன்னாடியே.. அதுவும் non linear போல..) ஹீரோயின் செத்துட்டான்னு Bill-ம் மத்தவங்களும் போயிட, Police வந்தப்பறம்தான் தெரியுது ஹீரோயின் மட்டும் உயிரோட இருக்காங்கன்னு. ஆனா கோமா ஸ்டேஜ்ல இருக்காங்க. நாலு வருஷமா!!! அப்பறம் நினைவு திரும்பி, Bill-ஐயும், அவன் கூட்டாளிகளையும் கொல்லறதுதான் வாழ்க்கையின் ஒரே குறிக்கோள்னு கிளம்பறாங்க.
அது சாதாரண விஷயம் இல்ல. ஒவ்வொருத்தரும் பெரிய தாதா. பின்னாடி ஒரு கும்பலே இருக்கு. ரெண்டு பாகத்துலயும் சேர்த்து, நூத்துக்கணக்குல ஆட்களை கொன்னு குவிக்கறாங்க. ஷூட்டிங்குக்கு டூப்ளிகேட் ரத்தத்தை தண்ணி லாரியில எடுத்துட்டு வந்துருப்பாங்க போல. நம்ம அந்நியன்ல வர்ற பெரிய சண்டைக்காட்சிய கொஞ்சம் இங்க இருந்துதான் சுட்டுருக்காங்க.
இனிதான் முக்கியமான விஷயம். திரைக்கதையும், வித்தியாசமான கதாபாத்திரங்களும், நாம் பார்த்திராத விசித்திர காட்சி அமைப்புகளும். உதாரணம்: ஆக்ரோஷமான சண்டைக்கு நடுவில வர்ற குழந்தைக்காக சண்டையை நிறுத்திவிட்டு சிரிச்சுப்பேசறதும், படுகொலை பண்றதுக்கு முன்னாடி புல்லாங்குழல் வாசிப்பதும், கொல்ல வந்த இடத்தில் பொம்மைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு குழந்தையோடு விளையாடுவதும், Bill-ஐக்கொல்லாமல் Romance பேசுவதும் ரொம்பவே புதுசு. ஆனால் இயல்பான வசனங்களால், இதெல்லாம் விசித்திரமாக இல்லாமல், பொருந்தி வருகிறது. Quentin-ன் அடுத்த படம் Kill Bill Vol.3. அதுனால, இந்த ரெண்டு படங்களையும் அதுக்கு முன்னாடி பார்த்துடுங்க.





Related Posts with Thumbnails

5 comments:

  1. தேங்க்யூ பாஸ்.... பாத்துடுறேன்...

    ReplyDelete
  2. ரெண்டு பாகமும் பார்த்தாச்சு. மூணாவது பாகமும் வரப்போகுதா.. ம்ம்.

    ReplyDelete
  3. எனக்கு ரொம்ப பிடிச்ச படம் இது.... இந்த வகை வயலன்ஸ் படங்களில் நமக்கு கொஞ்சம் ஈடுபாடு அதிகம்...
    மூன்றாம் பாகம் வருகிறதா...??? வரட்டும் வரட்டும்...!!!

    ReplyDelete
  4. இது ரொம்ப அருமையான படம்... வயலன்ஸயே கவிதையா எடுத்து இருப்பாங்க...

    நீங்க சொன்ன மாதிரி திரைக்கதை இந்த பாகத்துல நல்லா இருக்கும்.. ஆனா மேக்கிங் முதல் பார்ட்-ல சூப்பரா இருந்த மாதிரி எனக்கு தோணுச்சு...

    ReplyDelete
  5. in the final moments girl will go in a nice car adn meet a old man who look after bill in small age. he will tell a stroy about bill's passion of blonde hair girls.. i dont know y i love that seen.. i think it is philosophical. or someting
    Mai

    ReplyDelete