Sleuth (1972)
ஒரு படத்துல பெருசா ஒரு ட்விஸ்ட் வைக்கலாம். இல்லன்னா, சின்ன சின்னதா நடுவில சிலபல ட்விஸ்ட் வைக்கலாம். ஆனா படத்துல நாலஞ்சு பெரிய ட்விஸ்ட் வைக்க முடியுமா? அதுவும் வெறும் 3 பேரை வச்சுகிட்டு. அதுவும் ஒரே வீட்டுக்குள்ளயே!! என்னைப்பொறுத்தவரை, இதுதான் திரைப்பட வரலாற்றிலேயே சிறந்த த்ரில்லர். Psycho, Silence of the Lambs, North by Northwest எல்லாம் பயமுறுத்தும் இசை, கேமராவின் கோணம், கொடூரமான கொலையாளிகளைக்காட்டி கொண்டுவந்த விறுவிறுப்பை, வெறும் கதையிலேயே கொண்டுவந்திருக்கிறாங்க. ஆனால் பாவம், Godfather வந்த அதே வருஷத்துல வெளிவந்துடுச்சு. அதனால, சிறந்த இயக்கம், சிறந்த நடிப்புக்கான விருதுகளை வாங்க முடியல.
Wyke-னு ஒரு பணக்கார எழுத்தாளர். டிடெக்டிவ் நாவல் எழுதுறவரு. க்ரிமினல் மூளைக்காரர். சுமார் 50 வயசு இருக்கும். அவரைப்பார்க்க அவரு வீட்டுக்கு ஒரு சலூன் கடை வச்சிருகறவர் (பேரு Milo) வர்றார்.
ஷேவ் பண்ண இல்லீங்க. எழுத்தாளரோட மனைவியோட நண்பர்தான் Milo. அவருக்கும் எழுத்தாளரோட மனைவிக்கும் தொடர்பு இருக்கதாவும், அதனால அவரு எழுத்தாளரோட மனைவியைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறதாகவும் சொல்றார். (அவங்க மனைவி அந்த சமயம் வீட்ல இல்ல.. படம் முழுக்கவுமே அவங்க இல்லதான்.. எதுக்கு தேவை இல்லாம ஒரு கதாபாத்திரம்னு டைரக்டர் நினைச்சாரு போல..) இவங்களுக்குள் இருக்கற தொடர்பு தன்க்கு முன்னாடியே தெரியும்ணு சொல்லற எழுத்தாளர், முதல்ல திட்டறாரு. ஆனா, அதுக்கப்பறம் ஒரு உடன்பாடுக்கு ஒத்துக்கறார்.
ஷேவ் பண்ண இல்லீங்க. எழுத்தாளரோட மனைவியோட நண்பர்தான் Milo. அவருக்கும் எழுத்தாளரோட மனைவிக்கும் தொடர்பு இருக்கதாவும், அதனால அவரு எழுத்தாளரோட மனைவியைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறதாகவும் சொல்றார். (அவங்க மனைவி அந்த சமயம் வீட்ல இல்ல.. படம் முழுக்கவுமே அவங்க இல்லதான்.. எதுக்கு தேவை இல்லாம ஒரு கதாபாத்திரம்னு டைரக்டர் நினைச்சாரு போல..) இவங்களுக்குள் இருக்கற தொடர்பு தன்க்கு முன்னாடியே தெரியும்ணு சொல்லற எழுத்தாளர், முதல்ல திட்டறாரு. ஆனா, அதுக்கப்பறம் ஒரு உடன்பாடுக்கு ஒத்துக்கறார்.
அதாவது, எழுத்தாளருக்கும் ஒரு Girl friend இருக்கா. அவளைக் கல்யாணம் செய்யணும்னா, மனைவியை டைவர்ஸ் செய்யணும் இல்லயா? ஆனா, டைவர்ஸ் செஞ்சா, ஜீவாதாரம் தரணும். டைவர்ஸ் பண்ணாமலேயே Milo கூட அனுப்பி வச்சுட்டா, ஏழையான Milo கூட அவ ரொம்ப நாள் இருக்க மாட்டான்னு சந்தேகிக்கறார். திரும்ப வந்துட்டா இவருக்குப் பிரச்சனை. எல்லாத்துக்கும் ஒரு ஐடியா பண்றார்.
எழுத்தாளரே Milo-வை அவரோட வீட்ல இருக்கற நகையை திருட சொல்லறார். Milo திருடின பணத்தை வச்சு பிழைச்சுக்கலாம். எழுத்தாளர் இன்ஸுரன்ஸ் கம்பெனில யாரோ திருடினதா சொல்லி நகைக்கான பணத்தை வாங்கிடுவார். ரெண்டு பேருக்கும் லாபம். அவங்கவங்க விரும்பின பொண்ணோட வாழலாம். ஆனா, போலீஸுக்கும் இன்ஸுரன்ஸ் கம்பெனிக்கும் சந்தேகம் வரக்கூடாது இல்லயா? அதனால, ரொம்ப ப்ளான் பண்ணி நிஜமாவே திருடன் வந்தா எப்படி திருடுவானோ, வீடெல்லாம் எப்படி கலைஞ்சு இருக்குமோ அப்படியே பண்றாங்க.
இதுவரைக்கும் 45 நிமிஷ கதைதான் சொல்லியிருக்கேன். இன்னும் ஒன்ணரை மணி நேர கதை இருக்கு. இதுக்கு மேல கதை சொன்னா, முக்கியமான திருப்பத்தை சொல்ல வேண்டி இருக்கும். அதனால, நீங்களே பாத்துக்குங்க.
முக்கியமான விஷயம். ஒரு ட்விஸ்டை சொல்லிடக்கூடாதுன்னு, இந்த விமர்சனத்துலயே நான் ஒரு பொய் சொல்லியிருக்கேன். தெரிஞ்சவங்க.. ஷ்ஷ்ஷ்ஷ்...
முக்கியமான விஷயம். ஒரு ட்விஸ்டை சொல்லிடக்கூடாதுன்னு, இந்த விமர்சனத்துலயே நான் ஒரு பொய் சொல்லியிருக்கேன். தெரிஞ்சவங்க.. ஷ்ஷ்ஷ்ஷ்...
பெட்டர்... சொல்யூசன் இராமசாமி...,
ReplyDeleteநம்ம லைப்ரரிலயே இருக்கு. நான் முந்திகிட்டேனே..! :) :)
இன்னும் பாக்கல... ஆனா நீங்க சொல்றதுனால பாக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்... டவுன்லோட்க்கு போட்டுட்டேன்... :) :)
ReplyDeleteபாத்துட்டு சொல்றேங்க.. :) :)
நண்பரே,
ReplyDeleteபடத்தைப் பார்க்கும் ஆவலைத்தூண்டி விட்டீர்கள், ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் நாவல்களின் நினைவு உங்கள் பதிவைப் படித்தபோது மனதில் எழுந்தது. சிறப்பான பதிவு.
நன்றி. பார்க்க வேண்டும்.
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteஅருமையான படங்களை அறிமுகம் செய்கிறீர்கள். இதையெல்லாம் பற்றி அறிந்ததேயில்லை. நன்றி நண்பரே.
Good review. Wil see the movie.
ReplyDeleteபடம் பற்றிய அறிமுகத்திற்கு நன்றி தலைவரே.. தரவிறக்கி பார்த்து விடுவேன் என நம்புகிறேன் :)
ReplyDeleteSuper Balaji!! got to watch that movie soon.:)
ReplyDeleteI see a way ur own style of writing in the articles though the slang is commonly used by many bloggers.. and I believe u can start writing short stories soon.. :)
நல்ல பதிவு. Torrents புண்ணியத்தில் நல்ல படங்களை பார்க்க முடிகிறது. Run Lola Run என்ற மிக பிரபலமான ஜெர்மன் மொழிப் படம். எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. நம் பதிவர்கள் இப்படத்தை பற்றி எழுதியது இல்லை. அருமையான திரைக்கதையை கொண்டது. பாருங்களேன்
ReplyDeleteHi Balaji... Thanks for introducing me this movie.. just saw that .. wonderful... I liked it very much.. Please do write abt these type of movies often..
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சு போச்சே எனக்கு தெரிஞ்சு போச்சே சொல்லமாட்டேனே நான் சொல்லமாட்டேனே!
ReplyDeleteநேத்து தான் பாத்தேன் ஜெய். அட்டூழியம்.
கதை வறட்சி அப்படின்னு சொல்ற ப்ரகஸ்பதிகள் மூஞ்சில சாணிய கரைச்சு ஊத்தி இருக்காங்க. மறுபடியும் ஒரு DIAL M for Murder பார்த்த திருப்தி.அதாவது காட்சிகளால சொல்லாமே வாயிலேயே வட சுட்டுட்டு பார்வையாளன படம் எடுத்துக்க சொல்றது.
// காட்சிகளால சொல்லாமே வாயிலேயே வட சுட்டுட்டு பார்வையாளன படம் எடுத்துக்க சொல்றது //
ReplyDeleteஹா ஹ... அதேதான்... அதேதான்...