Sunday, April 18, 2010

ஸ்டான்லி குப்ரிக் - Stanley Kubrick


அடுத்து எழுதப்போற படத்தோட டைரக்டர் ஸ்டான்லி குப்ரிக் (Stanley Kubrick) (1928-1999)

தலைவரைப்பத்தி சொல்லாம, படத்தைப் பத்தி மட்டும் எழுதிட்டு போனா, அது மகா பாவம். குப்ரிக்கோட ஆவி துரத்தி துரத்தி அடிக்கும். உலக சினிமா விமர்சனம் தொடர்ந்து படிக்கற நண்பர்களுக்கு, குப்ரிக்கைப் பத்தி சொல்லவே தேவையில்லை.

குப்ரிக் கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல்?


இதோ இப்படி இருந்த இவரு,

இப்படி ஆகற வரைக்கும்

48 வருஷத்துல 13 படம் எடுத்துருக்காரு. அதுல ஒரு எட்டு ஒன்பது படம் IMDB Top 250-ல இருக்கு. த்ரில்லர், டார்க் ஹ்யூமர், ட்ராமா, சயின்ஸ் ஃபிக்‌ஷன், ஹாரர், ஹிஸ்ட்ரி, ரொமான்ஸ், எரோடிக்(erotic) அப்படின்னு எதையுமே விட்டு வைக்கல மனுஷன். எல்லா ஏரியாலயும் சிக்ஸர் அடிச்சுருக்காரு. ஆனா, இவர் படம் ரிலீஸாச்சுன்னா பிரச்சினைகளுக்கு பஞ்சமே இருக்காது. பல நாடுகள்ல இவரோட படங்கள் ரிலீஸே ஆகல. வன்முறையிலும் சரி, ‘அந்த’ காட்சிகளிலும் சரி.. குறையேதும் இல்லை.

புதுமை. 1992-ல க்வெண்டின் எடுத்த non linear கதையை (Reservoir Dogs), 1956-லேயே (The Killing) எடுத்தவரு. “Reservoir dogs is my version of killing”-னு க்வெண்டினே சொல்லியிருக்காரு. 1968-லயே சயின்ஸ் ஃபிக்‌ஷன் வச்சு “2001 A Space Odyssey”-னு அற்புதமா ஒரு படம் எடுத்து இருக்காரு. அந்தப்படம் இப்போவரை AFI Top 10 Science Fiction Movies-ல முதல் இடத்தில இருக்கு. இதுக்கு அப்பறம்தான் ET, StarWars எல்லாம். இந்த படத்துக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்-க்கு ஆஸ்கர் வாங்கினாரு.

மறைமுக அர்த்தங்கள். 2001 A Space Odyssey படம் எடுத்தப்பறம் படம் முழுசா யாருக்காவது புரிஞ்சுட்டா, நான் தோத்துட்டேன்னு குப்ரிக் சொன்னாராம். நம்ம “Memento Christopher Nolan மாதிரி குழப்பறவரு இல்ல குப்ரிக். நல்லாவே புரியும். ஆனா, குப்ரிக்கின் படங்களை ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் ஒரு சில விஷயங்கள் புதுசா புரியும். அவ்வளவு புதிர் அர்த்தங்களை படங்களுக்குள்ள ஒளிச்சு வச்சுருக்காரு.

நேர்த்தி. அவருக்கு மாவீரன் நெப்போலியன் பத்தி ஒரு படம் எடுக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அதுக்காக நெப்போலியன் பத்தி நூற்றுக்கணக்கான புத்தகங்களை படிச்சுருக்கார். உலகம் முழுக்க லொகேஷனுக்காக சுத்தி 15000 லொகேஷன் ஃபோட்டோ எடுத்துருக்கார். நெப்போலியனோட சாப்பிடற பழக்கம், உடைப்பழக்கம், கேள்வி கேக்கற பழக்கம்னு எல்லாத்தையும் ஆராய்ச்சி செஞ்சு, 17000 குறிப்புகள் எடுத்துருக்கார். (சைபர் எல்லாம் சரியாதான் போட்டுருக்கேன்). குப்ரிக்கோட சாப்பிடற, கேள்வி கேக்கற பழக்கமே நெப்போலியன் மாதிரி மாறிடுச்சாம்..!!


போர்க்காட்சிக்கு அந்த காலத்துக்கு கிராஃபிக்ஸ் சரியா வராததால, உண்மையிலேயே 50000 போர் வீரர்களை நடிக்க வைக்கணும்னு பேசி தயாரிப்பளரை சம்மதிக்க வச்சுருக்கார். அந்த அளவுக்கு Perfectionist. ஆனா, பல காரணங்கள்னால அந்த படத்தை முழுசா எடுக்கவேயில்ல. அந்த படத்துக்கு அவர் செஞ்ச ஆராய்ச்சி பத்தியே ஒரு புத்தகம் வந்திருக்கு.


அவரோட Eyes Wide Shut படத்துல வர்ற பங்களாவோட முன்புறம் எப்படி இருக்கணும்னு செட் போட, 500க்கும் மேற்பட்ட வீடுகளோட முன்புறத்தை ஃபோட்டோ எடுத்து இருக்காரு..!! இதையெல்லாம் அவரு இறந்ததுக்கு அப்பறம்தான் அவரோட அறையில கண்டு பிடிச்சு இருக்காங்க.. இப்படி ஒவ்வொரு படத்துக்கும் சேகரிச்ச தகவல்களை வச்சுருக்காரு.. இதைப் பத்தியும் ஒரு டாகுமெண்டரி வந்திருக்கு.. ”Stanley Kubrick’s Boxes”-னு.

பல அடுக்கு தீம்கள் (Themes). எல்லாத்துலயும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும். தசாவதாரம் படத்துல ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமா ஒரு பேர் வச்சுருந்தாங்களே அப்படி. அந்த மாதிரி பல விஷயங்கள் நிறைய இருக்கும் இவர் படத்துல. ஒவ்வொரு காட்சிலயும் இருக்கற பொருட்கள், நிறம், உடை, பின்னணி இசை, ஆட்களின் பெயர் அப்படின்னு எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதுக்கெல்லாம் கதையோட ஒரு தொடர்பும் இருக்கும்.

2001 A Space Odyssey-ல முதல் 22 நிமிஷம் குரங்குகளை மட்டும்தான் காட்டறாங்க. டயலாக் எல்லாம் கிடையாது. அது என்னன்னு புரியவே ஸ்கிரிப்டை தேடி படிக்க வேண்டி இருந்தது.

சமூக அக்கறை. குப்ரிக் படங்கள் மத்த படங்களை மாதிரி, ’ஒரு ஊர்ல ஒரு ஹீரோவும் ஹீரோயினும்...’ அப்படின்னு இருக்காது. எப்பவுமே, அவரோட படத்துல வர்ற கதாபாத்திரங்கள் சமூகத்தை பிரதிபலிக்கறதாவே இருக்கும். எல்லா படத்துலயும் சமூகத்தின் ஒரு பிரச்சினைதான் மையக்கருத்து. அவர் சொல்லற பிரச்சனைகள் எல்லா குடும்பத்துலயும், எல்லா சமூகத்துலயும் இருக்கற பிரச்சனைகள். போர் பத்தி ரெண்டு படம் எடுத்திருக்கார். அதைப்பார்க்கிற எல்லாருக்கும் அது அவங்க நாட்டுல நடக்கற போர் மாதிரிதான் தெரியும்.

டைரக்டர் மார்டின் (Martin Scorsese) குப்ரிக்கின் படங்களை இன்னும் பலமுறை பார்த்து கத்துக்கறதா சொல்லி இருக்கார்..!! குப்ரிக் 1970-ல இருந்து Artificial Intelligence படத்த எடுக்கணும்னு வச்சுருந்து, அவர் எதிர்பார்த்த அளவுக்கு Special Effects இல்லைங்கிறதால, ரொம்ப நாள் கதையை அப்படியே வச்சுருந்து, 1995-ல ஸ்பீல்பெர்க்-ஐ எடுக்க சொல்லியுள்ளார். Kubrick இறந்ததுக்கு அப்பறம், அவருக்கு அற்பணிப்பாக ஸ்பீல்பெர்க் அந்த படத்தை 2001-ல் எடுத்தார். இதுக்காக ஸ்பீல்பெர்க் குப்ரிக்கோட டைரக்‌ஷன் டெக்னிக் எல்லாம் அவரோட பழைய நோட்ஸ்ல இருந்து படிச்சு, அவர மாதிரியே எடுக்க முயற்சி பண்ணி இருந்தாலும், ஏணி வச்சும் எட்டலைன்னுதான் பரவலா பேசிக்கறாங்க. (எனக்கு படம் ரொம்ப பிடிச்சு இருந்தது)

அடுத்த பதிவுல ஒரு குப்ரிக் படத்தைப் பத்தி பார்க்கலாம்.. :-)




Related Posts with Thumbnails

27 comments:

  1. My Fav. Director.

    Full Metal Jacket? Next Post?

    ReplyDelete
  2. //குப்ரிக்கின் படங்களை ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் ஒரு சில விஷயங்கள் புதுசா புரியும்//

    படிக்கவே பிரமிப்பா இருக்குங்க

    ReplyDelete
  3. 2001 A Space Odyssey ஸ்கிரிப்ட் எல்லாம் தேடி படிச்சி எழுதி இருக்கீங்க, சூப்பர்.
    //வீரன் நெப்போலியன் பத்தி ஒரு படம் எடுக்கறதுக்காக நெப்போலியன் பத்தி நூற்றுக்கணக்கான புத்தகங்களை படிச்சுருக்கார்//
    என்ன ஒரு உழைப்பு!

    டைரக்டர் அறிமுகத்திற்கு நன்றி.மீண்டும் குப்ரிக் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  4. ஓட்டு போட்டு ஜனநாயக கடமையையும் நிறைவேற்றி விட்டாச்சுங்கோ...

    ReplyDelete
  5. சூப்பர் பதிவுங்க ஜெய்... சுருக்கமா அருமையா சொல்லிட்டீங்க :) :)

    இன்னொரு மேட்டர் என்னன்னா நெப்பொலியன் படத்துக்கான உழைப்ப வச்சி தான் ‘பேரி லிண்டன்’ படத்த எடுத்தாரு... :) :)

    பட விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.. :) :)

    ReplyDelete
  6. வாத்யாரே!!நா தமிழ் படமுன்னாலே தூர ஓடுவேன். இதுல இங்கிலீஷ் படமா ?. ஓகே..ஓகே.. திருந்த முயற்ச்சி செய்யுறேன்.

    ReplyDelete
  7. Thanks King Viswa. For me too, he is the favorite director. :-)

    இளமுருகன், நன்றி.
    // படிக்கவே பிரமிப்பா இருக்குங்க //
    அவரோட பட விமர்சனங்களை பார்க்கறப்போ இன்னும் பிரமிப்பா இருக்கும்..

    kanagu, நன்றி.
    // நெப்பொலியன் படத்துக்கான உழைப்ப வச்சி தான் ‘பேரி லிண்டன்’ படத்த எடுத்தாரு //
    கேள்விப்பட்டேன். ஆனா, இன்னும் ‘Barry Lyndon' பார்க்கல. இந்த வாரமே பாத்துடறேன்..

    ஜெய்லானி, அட.. நான் என் வாழ்க்கையில இருந்து கத்துகிட்டத விட படங்கள்ல இருந்து கத்துகிட்டது அதிகம்ங்க.. நிறைய நல்ல படங்கள் இருக்கு.. பாருங்க..

    ReplyDelete
  8. வழக்கம் போல நல்லா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. நல்ல பதிவு ஜெய்.

    ReplyDelete
  10. நாமல்லாம் படம் பார்க்குறதோட சரி. இனி டைரக்டைரையும் யாருன்னு பார்த்து நியபகம் வச்சுக்குறேன். அறிமுகத்திற்கு நன்றி.

    இப்படி உலக படத்த பார்த்ததினாலயே அக்மார்க் தமிழ் படம் பார்க்கின்ற ரசனையே இல்லாம போச்சு, எனக்கு.

    ReplyDelete
  11. என்ன இவர் படம் அனியாத்துக்கு மெதுவா போகும்
    சைனிங் எனக்கு ரொம்ப புடிச்ச படம் :-))

    ReplyDelete
  12. அருமையான பதிவு நண்பா.

    ReplyDelete
  13. நண்பரே,

    வரவிருக்கும் விமர்சனத்திற்கு முன்பாக நீங்கள் வழங்கியிருக்கும் இயக்குனர் குறித்த அறிமுகம் சிறப்பாக இருக்கிறது. நல்லதொரு பதிவு நண்பரே.

    ReplyDelete
  14. வெறி நைஸ்.. என்ன படம்னு சச்பென்ஸ்ல விட்டுடீங்க:)
    Let me guess.. Dr. Strangelove.. Clockwork Orage...

    ReplyDelete
  15. Thanks for introducing a good director friend.I have seen only his last film.

    ReplyDelete
  16. ப‌ட‌த்துக்கான‌ விம‌ர்ச‌ன‌த்துக்கு வெயிட்டிங் ஜெய் :)

    ReplyDelete
  17. சூப்பரான அறிமுகப்படுத்தி இருக்கீங்க...

    படங்களோட விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

    :-)

    ReplyDelete
  18. ஜெய், உங்களின் முந்தைய பதிவு ஏற்படுத்திய தாக்கத்தில், Shawshank Redemption படத்தை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளேன்.. உங்கள் கருத்தை சொல்லவும் :)

    http://tamilkothu.blogspot.com/2010/04/shawshank-redemption.html

    ReplyDelete
  19. அருமை. வாழ்த்துகள். தொடருங்கள்.

    ReplyDelete
  20. நன்றி அண்ணாமலையான், Cable Sankar

    சமீர், ஹி ஹி.. அக்மார்க் தமிழ்ப்படம் பாக்கறதுன்னு முடிவு பண்ணி தியேட்ட்ருக்குள்ள போயாச்சுன்னா, உலகப் படத்தையெல்லாம் மறந்துட்டு விசிலடிக்க ரெடி ஆயிட வேண்டியதுதான்..

    நன்றி அதிஷா, கனவுகளின் காதலன்.

    பிரசன்னா, அந்த ரெண்டு படமும் இல்ல.. இன்னும் கொஞ்சம் ‘ரேஞ்ச்’சான படம்.. ;-)

    நன்றி ILLUMINATI, ர‌கு, அகல்விளக்கு.

    பிரசன்னா, படிச்சாச்சு. சூப்பரா எழுதி இருக்கீங்க.. நான் எழுத ரொம்ப பயப்படற படம் அது.. :-) கலக்குங்க..

    ReplyDelete
  21. ஆக்ஸ்வுலா குயூப்ரிக் பத்தி் இன்னும் டெக்னிக்கலா எழுதனும்னு வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்... அவரோடு இன்னும்5 படங்களை பார்க்கலை,... அது எல்லாம் கெடச்ச அப்புறம் கண்டிப்பா எழுதுவேன்...
    ஆனா ஜெய்

    ரொம்ப அற்புதமா எழுது இருக்கிங்க...கியூப்ரிக் பத்தி் நிறைய தகவல் தெரிஞ்சிகிட்டேன்...

    அவர் அளவுக்கு சினிமா வெறியனை இந்த உலகத்துல நான் பார்த்தது இல்லை....அவர் அளவுக்கு பர்பக்சனி்ஸ்ட்டையும் நான் பார்த்தது இல்லை... என்னை பொறுத்தவரை கியூப்ரிக் சினிமாவின் பிரம்மா...

    தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. நன்றி பட்டாம்பூச்சியாரே.. :)

    நானும் இன்னும் 5 படம் பாக்கல சேகர்.. ஆனா அடுத்த பட விமர்சனத்துக்கு முன்னாடி குப்ரிக்கைப்பத்தி சின்னதா ஒரு அறிமுகம்.. கண்டிப்பா நீங்க குப்ரிக்கைப்பத்தி ஒரு தொடர்பதிவே எழுதணும்.. ஃபோட்டோகிராபரான உங்களுக்கு அவரோட டெக்னிகல் விஷயங்கள் எல்லாம் இன்னும் நல்லாவே தெரிஜ்சுருக்கும்.. கூடிய சீக்கிரம் உங்ககிட்ட இருந்து பதிவை எதிர்பார்க்கிறேன்..

    ReplyDelete
  23. நல்ல பகிர்வு,என் அபிமான இயக்குனர்.இவரின் படங்களை டெக்னாலஜியின் டாப் ஸ்டாண்டர்டுக்கு ஒப்பிடலாம்,உதாரணம் 2001ஸ்பேஸ் ஒடிசி,எனக்கு இவரின் எல்லா பட்முமே ஃபேவரிட் தான்

    ReplyDelete
  24. அடேங்கப்பா!!!
    படத்துக்கு அவர் தகவல் சேகரித்த மாதிரி,
    அவரைப்பற்றி ஏகப்பட்ட தகவல் நீங்க
    வச்சு இருக்கீங்களே!!!

    ReplyDelete
  25. நல்லதொரு பதிவு

    நான் பார்த்த ஒரு ஸ்டான்லி குப்ரிக் படம் A Clockwork Orange.

    இன்னும் நிறைய படங்களை பற்றி எழுதுங்கள்

    ReplyDelete
  26. இவரோட படங்களில்,
    CLOCKWORK ORANGE
    SHINING
    FULL METAL JACKET
    மட்டும்தான் பார்த்திருக்கிறேன்..மீதியை உங்க பதிவுகள படிச்சிட்டு பாக்கிறேன்..!!!
    சீக்கிரம் எழுதுங்க...!!!

    ReplyDelete
  27. குப்ரிகின் clockwork orange மட்டுமே பார்த்து உள்ளேன். space odyseey பார்க்க ஆசை. clock work நான் பார்த்த படங்களில் மிக முக்கியமான படங்களுள் ஒன்று. அதன் வன்முறை அழகியல் நான் பார்த்த எந்த படங்களிலும் இல்லாத ஒன்று (க்வெண்டின் படங்கள் முதற்கொண்டு).
    A.I குப்ரிக்கின் கனவா??! ஹ்ம்ம்ம்... நிச்சயம் அது அவரது சாயலில் இல்லாத அக்மார்க் ஸ்பீல்பெர்க் படமாகவே இருந்தது. (நல்ல படம் தான் ...என்ன இருந்தாலும்...)

    ReplyDelete