Tuesday, April 20, 2010

ஐஸ் வைட் ஷட்[1999] [18+] – Eyes Wide Shut

டைரக்டர் குப்ரிக்கோட கடைசி படம்... டைட்டில் போடறதுக்கு முன்னாடி இருந்து, The End-னு போடற வரைக்கும் ஒன்லி 18+.

கிட்டத்தட்ட பாதி படம், ஒரே ராத்திரில நடக்கற விஷயங்கள்தான்.. ஹீரோ டாம் க்ரூஸ் (Tom Cruise) ஒரு டாக்டர்... ஹீரோயின் நிகோல் கிட்மன் (Nicole Kidman) அவரோட மனைவி... அவங்க ஹவுஸ்வைஃப்... அவங்களுக்கு ஒரு 5 வயசு குழந்தை இருக்கு... ஹீரோவும், ஹீரோயினும் Ziegler-னு ஒரு நண்பர் தர்ற பார்ட்டிக்கு போறாங்க... அங்க ஹீரோ அவரோட கல்லூரி நண்பரை பாக்கறாரு. நண்பர் நிக் (Nick) ஒரு இசைக்குழுவில் வேலை பாக்கறாரு... ஹீரோவும் Nick-ம் பேசிகிட்டு இருக்கற சைக்கிள் கேப்புல, தனியா நிக்கற ஹீரோயின் கூட இன்னொருத்தர் வந்து டான்ஸ் ஆட ஆரம்பிக்கறார்.. நாசூக்கா பேசி அதுக்கும் கூப்பிடறார்.. இதுக்கு நடுவில, நண்பர்கிட்ட பேசிட்டு திரும்பி வர்ற ஹீரோவை ரெண்டு பொண்ணுங்க பிக்-அப் பண்ண பாக்கறாங்க.. அதை ஹீரோயின் கவனிச்சுடறாங்க.. இருந்தாலும் பிசியா இன்னொருத்தரோட டான்ஸ் ஆடிட்டு இருக்கறதால விட்டுடறாங்க.. (குட் ஃபேமிலி...)

அப்போ Zielgler வந்து ஹீரோவை அவசரமா அழைச்சுட்டு போறாரு.. போனா, Ziegler-ரோட பாத்ரூம்ல ஒரு பொண்ணு நிர்வாணமா மயங்கி கிடக்கறா.. Ziegler-ம் அரையும் குறையுமாதான் இருக்காரு. ஹீரோதான் டாக்டர் ஆச்சே.. அதிக போதையில மயங்கி இருக்க அந்த பெண்ணை அங்கேயே காப்பாத்திட்டு, இனிமேல் போதை மருந்து சாப்பிட்டாதேன்னு எச்சரிச்சுட்டு போறார்.. அவ பேரு Mandy.. தன் மானம் வெளியே போகாம அவளை இங்கேயே காப்பாத்தினதுக்கு Ziegler நன்றி சொல்லறார்..

இதெல்லாம் தெரியாம டான்ஸ் ஆடிட்டு இருக்க ஹீரோயின் தனக்கு கல்யாணம் ஆயிட்டதால வேற எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு அந்த டான்ஸ் ஆடின ஆளை விட்டு விலகிடறா.. அதுக்கப்பறம் எதுவும் நடக்காம (அ) எதுவும் பண்ணமுடியாம ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துடறாங்க.

ஹீரோயினுக்கு ஹீரோ அந்த பொண்ணுங்களோட ஏதோ பண்ணிட்டாரோன்னு சந்தேகம்... ராத்திரி படுக்கையில அத கேக்கப்போயி பெரிய வாய்த்தகராறு வந்துடுது.. ஹீரோவோ ரொம்ப நேர்மையா, கல்யாணத்துக்கு அப்பறம் யாராச்சும் இப்படியெல்லாம் இருப்போமா எனக்கேட்க, ஹீரோயின் “ஏன் இருக்கமாட்டோம்? போன வருஷம் டூர் போனப்போ, ஸ்மார்ட்டா கப்பல் படை ஆபீஸர் ஒருத்தனைப் பார்த்தேன். அவனைப் பார்த்தவுடனே, உன்னையும் குழந்தையையும் விட்டுட்டு அவனோட போயிடலாம்னு யோசிச்சேன், ஆனா அப்பறம் என்னோட முடிவை மாத்திகிட்டேன்அப்படின்னு சொல்லறா..

ஹீரோ இதக்கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டாரு. அந்த நேரத்துல ஹீரோவோட தோழி ஒருத்தி அவளோட அப்பாவுக்கு உடம்பு சரியில்லன்னு கூப்பிடறா. ஹீரோ அங்க போனா, அங்க அந்த பொண்ணு ஹீரோகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணறா. (அவளுக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் வேற இருக்கான்) அவளை ஒதுக்கிட்டு வெளியே வந்துடறார்.

ராத்திரி நேரம்.. வீட்டுல நடந்த பிரச்சனையில வீட்டுக்கு போகவே இஷ்டமில்ல.. தெருவில சுத்தறார்.. ஒரு விலைமாதுவைப் பார்க்கறார்.. அவ பேரு Domino.. அவளோட போறார்.. நெருக்கமா இருக்கார்.. அந்த சமயம் பார்த்து வீட்டுல இருந்து ஃபோன் வர, மனசு மாறி வெளியே வந்துடறார்.. (ச்ச.. வட போச்சே..)

திரும்பவும் தெருவில சுத்தறார்.. அப்போ அவன் ஃப்ரெண்ட் நிக் இசை வாசிக்கற ஒரு Bar-க்கு போறார்.. அங்க நண்பன்கிட்ட பேசிகிட்டு இருக்கறப்போ, எதேச்சையா நண்பன் ஒரு Orgy பத்தி சொல்லறான். Orgy அப்படிங்கறது பல பேர் கூடி, முகமூடி போட்டுகிட்டு ஃப்ரீ செக்ஸ் வச்சுக்கிற இடம். யாருக்கும் யாரையும் தெரியாது. யாரும் இதப்பத்தி வெளியே சொல்லக்கூடாது. உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. வெளியாட்கள் யாராவது வந்தா பெரிய தண்டனை உண்டு. ஒவ்வொரு முறையும் இது நடக்கற இடம் எதுன்னும், ஒரு பாஸ்வேர்டும் ஃபோன் பண்ணி சொல்லறாங்க.. நண்பன் அங்கயும் இசைக்குழுவோட வாசிக்கப் போவான்.. அதுனால அவனுக்கு பாஸ்வேர்ட் தெரியும்..

அங்க போகணும்னு ஆசைப்படற ஹீரோ, நண்பன் எச்சரிச்சும் கேட்காம, அதுக்கு போறதுக்குத் தேவையான முகமூடி, ட்ரஸ் வாங்க ஒரு கடைக்குப் போறார். அங்க கடையில இருக்க பெரியவர் ட்ரஸ் காமிக்கறப்போ, கடைக்காரரோட 16 வயசு பொண்ணு ரெண்டு பசங்களோட சில்மிஷம் செஞ்சுட்டு இருக்கறதை ஹீரோவும் கடைக்காரரும் பாக்கறாங்க. அதை கடைக்காரர் கண்டிச்சு, அந்த பசங்களை விரட்டறார்..

அப்பறம் ஹீரோ Orgy–க்கு போறார்.. அங்க ஒரு 20 நிமிஷம்.. ஒரு நூறு பேரு.. இப்பதான் தெரியுது ஏன் இந்த படத்துக்கு NC-17 ரேட்டிங்-னு..

அங்க ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஹீரோகிட்ட வந்து, இங்க இருக்கது ஆபத்து, அதனால வெளியே போயிடுன்னு எச்சரிக்கறாங்க.. அவங்க யாருன்னு ஹீரோவுக்கு தெரியல.. எல்லாரும் முகமூடி போட்டுருந்தாலும் ஹீரோ வெளியாள்னு எல்லாருக்கும் தெரிஞ்சுடுது.. மாட்டிகிட்ட ஹீரோவுக்கு தண்டனை தர்றப்போ, முன்னாடி எச்சரிச்ச அதே பொண்ணு வந்து, அவருக்கு பதிலா நான் தண்டனை ஏத்துக்கறேன்னு சொல்லறா.. அதனால ஹீரோவை எச்சரிச்சு அனுப்பி வச்சுடறாங்க.. இது எல்லாமே முகமூடி போட்டுகிட்டே நடக்குது.. ஹீரோவுக்கு கடைசி வரை யாரையும் அடையாளம் தெரியல.. அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னும் தெரியல.. வீட்டுக்கு வந்துடறார்.. இப்படி ஒரே இரவுல ஏகப்பட்ட அனுபவங்கள்..

அங்க ஹீரோயின் தூக்கத்துல சிரிச்சுகிட்டு இருக்கா.. என்னன்னு கேட்டா அழ ஆரம்பிச்சுடறா.. ஒரு கெட்ட (?) கனவில, தன்னை பல ஆண்கள் அனுபவிச்சிட்டு இருக்கதாவும் அதை ஹீரோவே பார்த்துகிட்டு இருக்கதாவும் சொல்லறா.. இப்படி ஒரு கனவுக்காக மன்னிப்பு கேக்கறா..

அடுத்த நாள், ஹீரோ நண்பன் Nick–க்கு என்ன ஆச்சுன்னு பாக்க அவன் தங்கி இருக்க Bar-க்கு போறார்.. பாஸ்வேர்ட் குடுத்தது அவன்தான்னு தெரிஞ்சா அவனுக்கும் தண்டனை உண்டே.. ஹோட்டல்ல அவன் காலி பண்ணிட்டு போயிட்டதாவும், அவன் முகமெல்லாம் அடி பட்டு இருந்ததாவும் சொல்லறாங்க..

முந்தின நாள் விலைமாது Domino-வை பார்த்த அதே வீட்டுக்கு திரும்ப போறார்.. அங்க அவ இல்ல.. அவளோட அறைத்தோழிதான் இருக்கா.. அவளோடவும் நெருக்கமா இருக்கார்.. ஆனா, அவ Domino–க்கு அன்னைக்கு காலையிலதான் ப்ளட் டெஸ்ட் ரிபோர்ட் வந்துச்சுன்னும், அவளுக்கு எய்ட்ஸ் இருக்கதாவும் சொல்லறா.. அதைக்கேட்டு மனசு மாறி, ஹீரோ வெளியேறிடறார்..

முந்தின நாள் ராத்திரி ட்ரஸ் வாங்கின கடைக்கு, ட்ரஸ்ஸைத் திருப்பி கொடுக்க போறார்.. அங்கே அந்த கடைக்காரரின் மகளும், அவர் அடிச்சு விரட்டின இரண்டு ஆட்களும், கடைக்காரர் கண்முன்னாடியே சந்தோஷமா இருக்கறதைப் பார்க்கிறார்.. கடைக்காரர் ஹீரோவுக்கு ‘என்ன வேண்டும்னாலும் இங்கே வரலாம்னு சொல்லறாரு.. திரும்பவும் இப்படி ஒரே நாள்ல பல அனுபவங்கள்..

நியூஸ் பேப்பர்ல ஒரு இளம்பெண் போதை மருந்துனால இறந்துட்டதா போட்டுருக்காங்க.. அந்தப்பெண்தான் அவனை Orgy–ல காப்பாத்தின பெண்ணா இருக்கலாம்னு சந்தேகப்பட்டு, ஹாஸ்பிடல்ல அந்த பெண்ணோட உடம்பை பாக்கறார்.. அது அவர் Zielgler–ன் பார்ட்டியில காப்பாத்தின Mandy!!

அவ எப்படி இறந்தான்னு தெரிஞ்சுக்க Ziegler-ஐப் பார்க்க அவரோட வீட்டுக்கு போறார்.. Ziegler அவன்கிட்ட அந்த orgy–ல இருந்தது அவர்தான்னும், அந்தப்பொண்ணுதான் அவனைக் காப்பாத்தினதாவும் சொல்லறார். ஆனா, orgy ஆளுங்க அந்த பொண்ணுக்கு எந்த தண்டனையும் கொடுக்கலைன்னும், அது வெறும் மிரட்டல்தான்னும், போதையினாலதான் இறந்துட்ட்தாகவும் சொல்லறார். ஹீரோ இதை முழுசா நம்பல.. வீட்டுக்கு வந்துடறார்..

வீட்டுல வந்து பாத்தா, படுக்கையில ஹீரோயின் தூங்கிட்டு இருக்கா.. படுக்கையில அவள் பக்கத்துல...... அவன் orgy–ல போட்டிருந்த முகமூடி..!! அதப்பாத்துட்டு அழ ஆரம்பிக்கறார்.. ஹீரோயின் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடறேன் மன்னிச்சுடு-ன்னு நடந்ததை சொல்ல ஆரம்பிக்கறார்..

அடுத்த நாள் காலையில, ரெண்டு பேரும் அழுத முகங்களோடு உட்கார்ந்து இருக்காங்க.. அவங்க குழந்தை ஷாப்பிங் போக விரும்பறதால வெளியே கிளம்பறாங்க.. நடந்தது நடந்துடுச்சு.. உண்மையோ கனவோ, இனிமேல் நாம நேர்மையா சந்தோஷமா இருப்போம்னு சொல்லிக்கறாங்க..

படத்தின் கடைசி டயலாக் இது:

ஹீரோயின்: There is something very important that we need to do as soon as possible

ஹீரோ: What’s that?

ஹீரோயின்: Fuck

அவ்வளவுதான். சுபம்.

அப்பேர்பட்ட டைரக்டர் குப்ரிக் 12 வருஷ இடைவெளிக்கு அப்பறம் இதையா எடுத்தாரு? இந்தக் கண்றாவி படத்துல அப்படி என்ன இருக்கு? எந்த அளவுக்கு இந்த படத்தை நாம புரிஞ்சுகிட்டு இருக்கோம்னு இன்னும் டீடெய்லா பேசலாம்...

இதோ அதுக்கான பதிவு ரெடியாகிட்டே இருக்கு.. அதுக்குள்ள படம் பாக்காதவங்க எல்லாம் பாத்துட்டு வந்துட மாட்டீங்க? :-)

ஹி.. ஹி.. ட்ரெய்லரே இப்படி இருந்தா படம் எப்படி இருக்கும்...


Related Posts with Thumbnails

10 comments:

 1. ஹீரோயின்: There is something very important that we need to do as soon as possible

  ஹீரோ: What’s that?

  ஹீரோயின்: Fuck//

  ஜெய் இந்த படத்தோட விமர்சனம் நான் எழுதும் போது கண்டிப்பா இந்த லாஸ்ட் கான்வர்சேஷன் எழுதனும்னு நினைச்சேன்....

  பட் நீ எழுதிட்ட...

  இந்த படத்தை நான் எப்படி எழுதறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்....

  பொண்டாட்டி படுக்கையில மாஸ்க் இருப்பது பார்வையாளர்களை குழப்ப குயூப்பரிக்கோட உத்தி அதுன்னு நான் சொல்லுவேன்...

  அந்த 20 நிமிஷத்து ஷட் அதிகம் கட் ஷாட் இல்லாம எடுத்து இருப்பார்..கியூப்ரிக்....

  அன்புடன்
  ஜாக்கி

  ReplyDelete
 2. அடாடா இன்னும் பாக்கலியே :( அடிச்சு புடிச்சு பாத்துட வேண்டி தான் (ஐயோ உங்க அடுத்த பதிவ படிக்கதான்) :)
  பல இடங்களில் வாய் விட்டு சிரித்தேன்.. சூப்பரு..

  Eg. //ஹீரோ இதக்கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டாரு//

  ReplyDelete
 3. நண்பரே,

  சிறப்பான ஆக்கம். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 4. ஜெய் நான் இன்னும் இந்த படத்த பாக்கலங்க... அதனால முழு கதையையும் எழுத மாதிரி இருந்ததால பதிவ படிக்கல... பாத்துட்டு வந்து படிக்கிறேன்.... :) :)

  ReplyDelete
 5. ஆங்காங்கே வந்த உங்களின் கமெண்ட்ஸ் நன்றாக
  இருந்தது.

  ReplyDelete
 6. //ஹீரோ இதக்கேட்டு அப்படியே ஷாக் ஆயிட்டாரு//

  இந்த வரிய படிச்சுட்டு அப்புடியே அடுத்ததுக்கு நகராம நின்னுட்டேன்.

  பார்த்துவிட்டேன் ஏற்கனவே.

  ReplyDelete
 7. நல்லதொரு விமர்சனம்.

  ஹாலிவுட் பாலாவின் விமர்சனம் பாடித்து தரவிறக்கி பார்த்தேன். உங்கள் இருவரின் விமர்சனம் ஈர்த்த அளவு படம் என்னை ஈர்க்கவில்லை.

  ReplyDelete
 8. கேஸட் இருந்தும் படம் இன்னும் பாக்கல
  உங்க விமர்சனம் அருமை :-))

  ReplyDelete
 9. நன்றி ஜாக்கி. உங்க பதிவை எதிர்பார்க்கிறேன். :-)

  நன்றி பிரசன்னா, சைவகொத்துப்பரோட்டா , கனவுகளின் காதலன், கொஞ்ச நாள் ஊர்ல இல்ல.. இதோ நாளைக்கே அடுத்த பதிவை போட்டுடறேன்.

  நன்றி Kolipaiyan, ஜீவன்பென்னி.

  kanagu, கார்த்திக், கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.. :-)

  அக்பர், நன்றி. அடுத்த பதிவுல அதைத்தானே பார்க்கபோறோம்.. ஏன் இந்த படம் அவ்வளவு சிறப்புன்னு..

  ReplyDelete