Friday, April 9, 2010

Forrest Gump - ஃபாரஸ்ட் கம்ப் (1994)

என்னைப் பொறுத்தவரை, படங்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
1. ஃபாரஸ்ட் கம்ப்
2. மற்ற எல்லா படங்களும்

அவ்வளவு முக்கியமான படம். அதனால விமர்சனம் கொஞ்சம் நீ....ளம்தான். பயந்துடாதீங்க. நான் இதுவரை எழுதிய, இனி எழுதப்போகும் பதிவுகளிலேயே முக்கியமான பதிவு இதுதான். என் வாழ்க்கையின் திருப்புமுனை இந்தப்படம். நிச்சயமா உங்க வாழ்க்கையிலயும் ஒரு மாறுதலா இருக்கும். நேரம் இருக்கப்போ பொறுமையா படிங்க/பாருங்க.

வாழ்க்கையை இவ்வளவு எளிதாக வாழ முடியுமா அப்படின்னு உங்களை ஆச்சரியப் படுத்தும் படம். மற்ற படங்கள் எல்லாம் காதல், பாசம், குடும்பம், நட்பு, நம்பிக்கை என ஓரிரண்டு விஷயங்களைப் பத்தி மட்டுமே பேச, மொத்த வாழ்க்கையையும் வாழக் கற்றுக் கொடுக்கிறது இந்தப்படம்.

ஸ்பெஷல் படம்கிறதால, எப்பவும் போடற விமர்சன மொக்கை மட்டுமில்லாம, இந்த தடவை இலவசமா 20% அதிக மொக்கையும் போட்டுருக்கேன். அதெல்லாம் வேண்டாம் விமர்சனம் மட்டும் போதும்னா, இந்த நீலத்தில் எழுதியிருக்கறதை ஸ்கிப் பண்ணிடுங்க.

என்னோட வாழ்க்கையில எப்பவெல்லாம் நான் தன்னம்பிக்கையோட இருந்திருக்கேன்? எப்பவெல்லாம் சந்தோஷமா எதிர்காலத்தைப் பார்த்திருக்கேன்? பள்ளி இறுதித்தேர்வு முடிவுகள் வெளியாகியபோதும்... பல்கலைக்கழகத்தில் முதல் அடியெடுத்து வைத்தபோதும்... வேலை கிடைத்தபோதும்... காதலை பெரியவர்கள் ஒப்புக்கொண்டபோதும்... ஒவ்வொரு முறையும் இந்தப்படத்தைப் பார்க்கும்போதும்..!!

ஒருவித பயபக்தியுடன்தான் எழுதவே தொடங்கி உள்ளேன். ஸ்ரீராமஜெயம் எழுதுவார்களே. அப்படி!! இதைப் படிக்கும், படத்தைப் பார்த்திராத ஒவ்வொரு வாசகரையும் இப்படிப்பட்ட படத்தை பார்க்க வைக்கும் அளவுக்கு எழுத வேண்டும் என்கிற கடமை உணர்ச்சியுடன். ஒவ்வொரு முறையும் யாராவது நண்பர் ஒரு படத்தைப் பரிந்துரைத்து, படம் பார்க்கத் தொடங்கும்போதும், எனக்குள் முதலில் எழும் கேள்வி, “இந்தப் படம் Forrest Gump-ஐ விட நல்லா இருக்குமா?”. இதுவரை இருந்ததில்லை. It’s a Wonderful Life, Casablanca, Shawshank Redemption, Life is Beautiful, Schindler’s List, Cast Away, One Flew over Cuckoo’s Nest, 12 Angry Men, Amelie, Saving Private Ryan, Cinema Paradiso, American Beauty, Big Fish, Paths of Glory இன்னும் வேறு என்னவெல்லாம் feel good படங்கள் நான் பார்த்துள்ளேனோ, எதுவுமே இப்படி இல்லை.

ஏன் அப்படி? இந்தப் படத்தைப் பற்றி நான்தான் இப்படி அளவுக்கு அதிகமாக யோசிக்கிறேனா? இல்லை என்றே தோன்றுகிறது. சில படங்களைப் பார்க்கும்போது நாம் நல்ல மூடில் இருக்க மாட்டோம். நமக்கு அவ்வளவாக படத்தின் பாதிப்பு இருக்காது. நண்பர்களோடு சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு ஒரு சோகப்படத்தைப் பார்த்தாலும் ஒரு effect இருக்காதுதான். இது அவ்வளவு நல்ல படம் இல்லை எனத் தோன்றினால், நீங்கள் படத்தை சரியாக கவனிக்கவில்லை. அரட்டை அடிக்காமல், தனியாக உட்கார்ந்து பாருங்கள். உங்களுக்கும் தோன்றும்.

ஃபாரஸ்ட் கம்ப். இவரை ஒரு படத்தில் வரும் கதாபாத்திரம் என நினைத்ததேயில்லை. படம் என்ற எல்லையைக் கடந்து எனக்குள் புகுந்த கதாபத்திரம். ராமரை, ஏசுவை, புத்தரை, காந்தியை, அன்னை தெரசாவை நான் நேரடியாகப் பார்த்ததில்லை. பழகியதில்லை. அவர்களின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். அவர்களைப்பற்றி நிறைய படித்திருக்கிறேன். அவ்வளவுதான். எனவே, எனக்கு அவர்கள் நான் பழகாத, “கேள்வி(மட்டுமே)பட்ட கதாபாத்திரம்”. அதேபோல், ஃபாரஸ்ட் கம்ப்-உடனும் நான் பழகியதில்லை. புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன். படத்தில் பார்த்திருக்கிறேன். எனவே, எனக்கு இதுவும் நான் பழகாத, “கேள்வி(மட்டுமே)பட்ட கதாபாத்திரம்”தான். நான் சந்தித்த, பழகிய நண்பர்களின் கதாபாத்திரங்களை விட இவை மிக அருமையானவை. இவற்றுள் அருமை ஃபாரஸ்ட் கம்ப்-தான். (ஆத்திகர்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்).

20 முறையாவது பார்த்திருப்பேன். இதோ, என்னுடைய profile-ல் கூட ஃபாரஸ்ட் கம்ப் ஃபோட்டோதான். Desktop Wallpaper கூட ஃபாரஸ்ட் கம்ப் தான்.
சரி.. புலம்பியது போதும். விமர்சனத்திற்கு வருவோம்.

நம்ம டாம் ஹேன்க்ஸ் (Tom Hanks)-தான் ஃபாரஸ்ட் கம்ப். படத்தின் கடைசி 15 நிமிடங்களைத் தவிர, 2 மணி நேரம் ஃப்ளாஷ்பேக்தான். நம்ம ஹீரோ ஒரு பஸ் ஸ்டாப் பென்ச்சில் உட்கார்ந்துகிட்டு அவரோட சொந்த கதைய பக்கத்துல உட்கார்ந்து இருக்கவங்ககிட்ட சொல்லறார். ஒவ்வொருத்தரும் தன் பஸ் வந்தவுடனே கிளம்பிடறாங்க. இன்னொருத்தர் வர்றாங்க. விட்ட இடத்துல இருந்து அடுத்தவங்ககிட்ட சொல்ல ஆரம்பிக்கறார். இப்படி நாலஞ்சு வேற வேற ஆளுங்ககிட்ட சொல்லறார்.

ஒருத்தர் ஆர்வமா கேக்கறார். வேறொருத்தர் இவர நம்பல. இன்னொரு பெண் கவனிக்காம புத்தகம் படிச்சுட்டு இருக்காங்க. ஹீரோ நம்மல மாதிரி அடுத்தவங்களுக்காக கதை சொல்லறவர் இல்ல. கேக்கறவங்க என்ன நினைப்பாங்கன்னு எல்லாம் யோசிக்கற கேரக்டர் இல்ல அவரு. தன்போக்கில கதை சொல்லிகிட்டே இருக்காரு. படம் முழுக்க Narration வகைதான். அவரோட அம்மா சொல்லற ஒரு கருத்தை அடிக்கடி சொல்லறாரு. “Life is like a box of chocolates. You never know what you are going to get next” அப்படின்னு. இதுதான் கிட்டத்தட்ட இந்த படத்தோட message.

படம் முழுக்க narration அப்படிங்கறதால, நிறைய்ய்ய்ய வேகமாக நகர்கிற காட்சிகள். ஃபாரஸ்ட் கம்ப்-ன் கதாபாத்திரம்தான் படத்தில் முக்கியமான விஷயம். அதை விவரிக்க நிறைய காட்சிகளை விவரிப்பது அவசியமாகிறது.

IQ குறைவாக உள்ள 6 வயது சிறுவன் ஃபாரஸ்ட். அப்பா கிடையாது. அன்பான அம்மா. IQ குறைந்த மகனை பள்ளியில் சேர்க்க விலையாக, தன் உடம்பையே தலைமை ஆசிரியருக்கு கொடுக்கிறாள் அம்மா. அதுவும் ஃபாரஸ்ட்டுக்கு அப்போ புரியல.
ஃபாரஸ்ட்க்கு சுயமாக அதிகம் சிந்திக்கத் தெரியாது, ஏதாவது சொன்னால் செய்வான், அவ்வளவுதான். சரியாக நடக்க வராது. காலை இழுத்துக்கொண்டுதான் நடப்பான். பள்ளிக்கு முதல் நாள் பேருந்தில் ஏறினால், இவனைப் பார்த்து யாருமே அருகில் அமர இடம் தரவில்லை, ஒரு சின்னப்பெண் ஜென்னியைத் தவிர. ஜென்னியுடன் நெருங்கிய நண்பனாகிறான். ஜென்னிக்கு பாடகியாகணும்னு ஆசைன்னு சொல்லறா.

பள்ளியில் அப்பாவி ஃபாரஸ்ட்டை கிண்டல் செய்து துரத்தும் மாணவர் கும்பலிடம் இருந்து தப்பிக்க, ஜென்னி அவனை வேகமாக ஓட சொல்கிறாள். சரியாக நடக்கக்கூட முடியாத ஃபாரஸ்ட் கொஞ்சம் கொஞ்சமாக ஓட ஆரம்பித்து முழு வேகத்தில ஓடறான். இந்த கிண்டலும் ஓட்டமும் கல்லூரி வரைக்கும் தொடருது. கல்லூரியில் ரக்பி ஆடுகிறான். பந்தை எங்கே எடுத்துட்டு போகணும்னு தெரியாது. எல்லாரும் சொல்லற திசையில பந்தை எடுத்துட்டு வேகமா ஓடுவான். அவ்வளவுதான் அறிவு. ஆனா ரொம்ப சின்சியர்.

ஜென்னி ஒரு தனிமையான சமயத்துல அவனோட நெருக்கமா இருக்க முயற்சி செய்யறா. ஆனா ஃபாரஸ்ட் பயந்து போயி அவள தடுத்துடறான். அவ்வளவு அப்பாவி.

கல்லூரியில நல்லா விளையாடறதால, தேசிய குழுவில சேர்த்துக்கறாங்க. அப்போ குழுவை சந்திக்க வர்ற ஜனாதிபதிகிட்ட கைகுலுக்கும்போது, அவசரமா பாத்ரூம் போகணும்னு சொல்லறான். எங்கே எது பேசணும்னு எல்லாம் யோசிக்கத் தெரியாது. தோணுச்சுன்னா சொல்லிடுவான்.

அதுக்கப்பறம் ராணுவத்துல சேர்றான். ராணுவ பஸ்ல திரும்பவும் அதே மாதிரி யாருமே உட்கார இடம் தரல, ஒருத்தனைத் தவிர. அவன் பேரு புப்பா. (Bubba). அவனும் இவன மாதிரி அப்பாவிதான். மீனவ குடும்பத்துப் பையன். மீன் புடிச்சுட்டு இருந்தவனை ராணுவத்துல சேர சொல்லிட்டாங்க. அவனுக்கு மீனைத்தவிர எதுவும் தெரியாது.

மீன் பிடிக்கறதையும், சமைக்கறதையும், விக்கறதையும் பத்தி ஃபாரஸ்ட் கிட்ட பேசறான் பேசறான் பேசறான்.. இரவு பகலா பேசறான். ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள் ஆயிடறாங்க. ராணுவத்துல குடுக்கற கடுமையான பயிற்சியில சின்சியரா கத்துக்கறான். பயிற்சில முதலாவதா வர்றான்.

அவனையும், புப்பாவையும், வியட்னாமுக்கு போருக்காக அனுப்பறாங்க. அங்கே இவங்க ரெண்டு பேரும் டான் (Dan) அப்படின்னு ஒரு ராணுவ அதிகாரியோட குழுவுல இருக்காங்க. போர்ல புப்பாவுக்கு குண்டு அடிபட்டு, ஃபாரஸ்ட்டோட மடியிலயே இறந்துடறான்.

பாம் வெடிச்சு, ரெண்டு கால்களையும் இழந்துடறாரு டான். அவரோ கால்களில்லாம வாழறதை விட சாகறதே மேல்னு நினைக்கறாரு. அவரே வேண்டாம்னு சொல்ல சொல்ல கேட்காம, அவரை ஃபாரஸ்ட் காப்பாத்தறான். ஃபாரஸ்ட்டுக்கு விருது கிடைக்குது.

விருது விழாவில மறுபடியும் ஜென்னிய பார்க்கறான். அவள் Call Girl மாதிரி வேலை பார்க்கிறா. அவளை ராணுவ வீரன் ஒருத்தன் கொடுமை படுத்தறான். இதப்பார்த்த ஃபாரஸ்ட் அவளைக் காப்பாத்தறான். ஆனாலும் அவள் அதிகம் பேசாம போயிடறா. ஃபாரஸ்ட்டுக்கு குண்டடி பட்டதால சிகிச்சை எடுத்துக்கறான். அப்போ ஓய்வு நேரத்துல டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பிச்சு, அதுலயும் வழக்கம்போல சின்சியரா விளையாடி, வழக்கம்போல சாம்பியன் ஆகறான்.

ராணுவ அதிகாரி டான் இரண்டு காலும் இழந்து சக்கர நாற்காலியில விரக்தியான மனசோட இவனைப் பார்க்க வர்றார். அவர்கிட்ட ஃபாரஸ்ட் புப்பா சொல்லிக்குடுத்த மீன் தொழில் பத்தியும், போருக்கு அப்பறம் மீன் தொழில் ஆரம்பிக்கறதா புப்பாவுக்கு வாக்கு கொடுத்ததையும் சொல்லறான். அந்த வாக்கைக் காப்பாற்ற மீன் தொழில் ஆரம்பிக்கப் போவதாகவும் சொல்லறான். இதைக் கேட்டு டான் கிண்டல் செய்துட்டு போறார். இதுக்கெல்லாம் ஃபாரஸ்ட் எப்போதுமே உணர்ச்சிவசப்படுவதோ, பதில் சொல்வதோ கிடையாது. எப்போதும் போலவே இருக்கிறான்.

ஒருநாள் ஒரு ராணுவ அதிகாரி வந்து ஃபாரஸ்ட்டின் ராணுவ சேவை அன்றோடு முடிந்ததுன்னு சொல்லிட்டுப் போறார். அவன் எந்த வருத்தமும் இல்லாம வீட்டுக்குக் கிளம்பறான். வீட்டுல அவனோட அம்மா அவனைத்தேடி விளம்பரதாரர்கள் வந்ததாவும், அவன் படத்தை டேபிள் டென்னிஸ் மட்டையில போட அனுமதி தந்தா 25000 டாலர் தர்றதாகவும் சொல்லறாங்க. அதுக்கு எந்த தற்பெருமையும் இல்லாம ஒத்துக்கறான்.

அந்த பணத்தை வச்சு படகு வாங்கி மீன் பிடிக்கறான். அதுலயும் கொஞ்சம் கொஞ்சமா நல்ல நிலைமைக்கு வர்றான். டான் அவனோட பார்ட்னராக விரும்பறார். அவரையும் சேர்த்துக்கிறான். நிறைய பணம் கிடைக்குது.

டான் அதை Apple Computer நிறுவனத்தில் முதலீடு செய்யறார். அதனால இனி ஃபாரஸ்ட்டுக்கு எப்போதும் பணத்தட்டுப்பாடு இருக்காதுன்னு சொல்லறார். லாபத்தில் பாதியை புப்பாவின் குடும்பத்துக்குக் குடுக்கறான்!! எல்லோரும் அதை முட்டாள்தனம்னு சொன்னாலும், அதைப்பத்தி அவனுக்கு கவலையில்லை.

இதையெல்லாம் பஸ் ஸ்டாப்பில் உட்கார்ந்து கேட்டுகிட்டு இருக்க பெரியவர், அமெரிக்காவின் பெரிய மீன் கம்பெனியான கம்ப்-புப்பா கம்பெனிக்கு நீயா முதலாளி? இந்த மாதிரி புழுகற ஒருத்தனை பார்த்ததில்லைனு கேலி பண்ணிட்டு போயிடறார். அவன் அதையெல்லாம் பெருசா எடுத்துக்கல. இன்னொரு பெண்மணி அங்கே உட்கார்றாங்க. அவங்ககிட்ட அவனோட புகைப்படம் Fortune நாளிதழின் அட்டையில் வந்திருக்கறத எந்தப் பெருமையும் இல்லாம காண்பிக்கறான். அவங்ககிட்ட தொடர்ந்து கதைய சொல்லறான்.

கொஞ்ச நாளில், ஃபாரஸ்ட்டோட அம்மா இறந்துடறாங்க. அப்பறம் ஜென்னி ஃபாரஸ்ட்டை தேடி வர்றா. அவங்க சேர்ந்து சந்தோஷமா வாழறாங்க. ஃபாரஸ்ட் அவளைக் கல்யாணம் செஞ்சுக்க விரும்பறான்.

ஆனா ஜென்னி அடுத்த நாளே ஃபாரஸ்ட்கிட்ட சொல்லாம வீட்டை விட்டு கிளம்பிடறா. வீட்டுல அவன் மட்டும் தனியா இருக்கான். எந்த காரணமும் இல்லாம வீட்டை விட்டு ஓட ஆரம்பிக்கறான். ஓடறான்.. ஓடறான்.. திரும்பி வராம ஓடிட்டே இருக்கான். அமெரிக்காவின் ஒவ்வொரு மூலைக்கும் ஓடறான். பத்திரிக்கையிலும் டிவிலயும் திரும்பவும் பிரபலம் ஆகிறான். Global warming, human rights, world peace-னு அவன் ஓடறதுக்கு ஏதாவது கொள்கை இருக்குதான்னு கேக்கறாங்க. எந்த காரணமும், எதிர்பார்ப்பும் இல்லாம ஒருத்தன் ஓடறதை எல்லாரும் அதிசயமா பார்க்கறாங்க. அவனுக்கோ அவங்க பார்க்கறதுதான் விசித்திரமா இருக்கு. எனக்கு ஓடணும் போல தோணுது. நான் ஓடறேன்னு சொல்லறான். நாலு வருஷத்துக்கு அப்பறம் ஒரு நாள் அவனுக்கு ஓடுனது போதும்னு தோணுது. வீட்டுக்கு வந்துடறான்.

ஜென்னிகிட்ட இருந்து அவனுக்கு லெட்டர் வருது. அவளை வந்து சந்திக்க சொல்லி முகவரி குடுத்து அனுப்பி இருக்கா. அவளை சந்திக்கதான் அங்க பஸ்ஸுக்கு காத்திருக்கதா சொல்லறான். அந்த முகவரியை பார்க்கிற கதை கேட்கிற பெண்மணி, அந்த இடத்துக்கு நடந்தே போயிடலாம்னு சொல்லறாங்க. இவ்வளவு நேரம் தேவையில்லாம காத்திருந்தோம்னு கொஞ்சம் கூட கவலையில்லாம, சந்தோஷமா அவளைப் பார்க்க ஓடறான்.

அவளை சந்திக்கிறான். அவள் இதுக்கு முன்னாடி பல சமயங்கள்ல அவனைப் பிரிஞ்சதுக்கு மன்னிப்பு கேக்கறா. அங்கே அவளுக்கு ஒரு 4 வயது மகன் இருக்கான். அவன் பேரும் ஃபாரஸ்ட்தான்னு சொல்லறா. நம்ம ஹீரோ ஃபாரஸ்ட்தான் இந்த குட்டி ஃபாரஸ்ட்டோட அப்பான்னு சொல்லறா.

அவள் ஒரு வியாதியினால இறந்துகிட்டு இருக்கறா. அதுக்கு முன்னாடி அவனை கல்யாணம் செஞ்சுக்க விரும்பறா. அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்கறாங்க. அதுக்கு பழைய ராணுவ அதிகாரி டான் வர்றாரு. அவருக்கு செயற்கைக்கால் பொருத்தி இருக்காங்க. சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்கார். அவரை போரில் காப்பாத்தினதுக்கு நன்றி சொல்லறார்.

அதுக்கப்பறம் ஜென்னியும் அவனும் சந்தோஷமா இருக்காங்க. பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்துக்கறாங்க. ஒருநாள் ஜென்னி வியாதியால இறந்துடறா. ஃபாரஸ்ட் அவனோட மகனை நல்லா கவனிச்சுக்கறான். அவனை ஸ்கூல் பஸ்ல ஏத்திட்டு, பஸ் ஸ்டாப் பென்ச்சில் உட்கார்றான். அங்க கீழே கிடக்கற ஒரு சிறகு காத்துல அப்படியே இலகுவா பறக்குது, அவனோட வாழ்க்கை மாதிரி.


சுபம்.

13 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 6 ஆஸ்கர் விருதுகளை வாங்கியது. 677 மில்லியன் டாலர் வசூல்!!! அப்போ உலக அளவில அதிக வசூலான படங்கள்ல நாலாவது இடம். மத்த மூணும் Star Wars, ET, Jurrasic Park. எல்லாம் Fantasy and Graphics கலக்கல். பெரிய வெற்றி அடைஞ்சதுல ஃபாரஸ்ட் கம்ப்-தான் முதல் feel good படம்.

நமக்கு வாழ்க்கையில என்னல்லாம் வேணும்? சந்தோஷம், நிம்மதி, அன்பு, காதல், நட்பு, வெற்றி, பணம், புகழ்?

ஃபாரஸ்ட் மாதிரி IQ கம்மியான, அப்பா இல்லாத, நல்ல காதலி கிடைக்காத, அமெரிக்க இளைஞர்களின் மோசமான காலமான வியட்னாம் போர்க்காலங்களில் வாழ்ந்த ஒருத்தனாலேயே இது அத்தனையும் மிக எளிதாக அடையமுடியும்போது, நம்மால் ஏன் முடியாது? அதுவும் அவன் இதில் எதையுமே தேடி ஓடல. எல்லாம் அதுவாவே வருது.

அப்படி என்ன வித்தியாசம் நமக்கும் அவனுக்கும்? அவன் பொய் சொல்றதில்ல. யாரையும் பகைச்சுக்கறதில்ல. கிண்டல் பண்ணறதை சகிச்சுக்கறான். நேர்மையா இருக்கான். சத்தியத்தை நம்பறான். பணத்தை நேசிக்கறதில்ல. பலனை எதிர்பார்த்து எதையும் செய்யறதில்ல. ஒரே காதலியை நேசிக்கறான். மனசுக்கு பிடிச்சதை பண்ணறான். கடினமா உழைக்கிறான். எல்லாத்துலயும் ஈடுபாடா இருக்கான்.

நமக்கு இதையெல்லாம் பத்தி பேசவே bore அடிக்குதில்ல?

ஒரு முட்டாளுக்கே வாழ்க்கையில இவ்வளவு நல்லது கிடைக்கிற உலகத்தில் இருந்துகிட்டு, பொறாமை, ஏமாத்தறது, கோவப்படறது, நேர்மையா இல்லாதது, பொய் பேசறது, சோம்பேறியா இருக்கது, கேலி பண்ணறது, எரிச்சல் படறதுன்னு இருக்கற எல்லா தப்பையும் கத்துகிட்டு, உலகத்தை குறை சொல்லிட்டு, வாழ்க்கையை நாமே கடினமாக்கிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

உங்களோட Character-ல இந்தப்படம் ஒரு முன்னேற்றத்தை கொண்டு வரலைன்னா, நீங்க படத்தை சரியா பார்க்கலைன்னு அர்த்தம். கவலைப்படாம இன்னொரு தடவை பாருங்க. ரெண்டு மணி நேரம் ஃபாரஸ்ட்டோட பார்வையில வாழ்க்கையைப் பார்த்துட்டா, வாழ்க்கை பத்தின உங்க பார்வையே மாறி இருக்கும்.

ட்ரெய்லர்லயே ஒரு effect தெரியும். பாருங்க.




Related Posts with Thumbnails

49 comments:

  1. நல்லா எழுதி இருக்கிங்க... வாழ்த்துக்கள்..
    அன்புடன்
    ஜாக்கி..

    ReplyDelete
  2. நன்றி அண்ணாமலையான், புது கார் போல.. :) கலக்குங்க..

    நன்றி ஜாக்கி சேகர்.

    nigdyn, good.. :)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  4. well done pl. keep writing

    Elamurugan
    Nigeria.

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம். நன்றி.

    ReplyDelete
  6. I have see this film several times - since 1998.

    Every time I see I still see this with my full heart as I am seeing for the first time for the different paths the the movie takes into different phases of Forrest Gump's life.

    When I see this movie running in any channel while surfing the channels I still stop at this movie for few minutes and then move.

    Unforgettable movie...

    ReplyDelete
  7. Yes it's really good movie

    thanks for this post.

    ReplyDelete
  8. அழகான படம். அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  9. படிப்பதற்கு எளிமையாக இனிமையாகவும் இருக்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  10. அருமையான விமர்சனம் , அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete
  11. நன்றி கேபிள் சங்கர், இளமுருகன், இராமசாமி கண்ணண். :)

    Anonymous, I too use to stop surfing channels and continue to watch this movie. :)

    நன்றி ♠புதுவை சிவா♠, துபாய் ராஜா, ஜோதிஜி, அஹோரி.

    படம் பார்க்கத் தவறாதீர்கள்.

    ReplyDelete
  12. மச்சி பின்னிட்டப்பூ.. அருமையா எழுதிருக்கிங்க. எனக்கு மிகவும் பிடித்தபடம் எத்தனையோ த்டவை பார்த்துவிட்டேன், ஆனால் இப்போ மறுபடியும் பார்க்கனும்போல இருக்கு. அவ்வளவு அழகா எழுதியிருக்கிங்க......

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. ஜெய்...ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க..!!!
    இதை படித்தவுடன் படத்தை மீண்டும் ஒரு முறை பார்க்க தோன்றுகிறது...!!!

    ReplyDelete
  14. படத்தை பார்த்த பீலிங் வந்து விட்டது,
    உங்கள் விமர்சனத்தை படித்த உடன்!!!
    அருமை.

    ReplyDelete
  15. நன்றி முரளிகுமார், சிவன். கண்டிப்பா மறுபடியும் பாருங்க.

    நன்றி சைவகொத்துப்பரோட்டா. படம் பார்த்த ஃபீல் வந்துடுச்சுன்னு, பார்க்காம இருந்துடாதீங்க.

    ஒரு படம் பார்க்க நேரம் இருந்தாலும், அதுல இந்த படத்தை பாருங்க.

    ReplyDelete
  16. நல்லா எழுதிருக்கீங்க. திரும்பப் படம் பார்த்தது போல இருந்தது.

    ReplyDelete
  17. அழகாக ரசித்து, உள்வாங்கி எழுதி இருகிறீர்கள். சமயத்துல டாம் ஹாங்க்ஸ், அமீர்கான் மாதிரி இருப்பார்.
    வாய்ஸ் நேரசன் படங்களுக்கு கண்டிப்பாக இது ஒரு இன்ஸ்பிரேசன் ஆக இருந்திருக்கும்.

    வாழ்த்துகள் தொடருங்கள்!

    ReplyDelete
  18. It is true that this film is an eye opener,friend.The basic message of this film is ''If you could enjoy the current moment and be sincere,everything will rush towards you.''

    ReplyDelete
  19. நன்றி pappu, balavin, கண்டிப்பாக narration வகைப் படங்களில் இது சிறந்த படம்தான்.

    நன்றி ILLUMINATI. You are right.

    ReplyDelete
  20. ஒவ்வொருவருக்கும் அவர்களை உச்சமாக பாதித்த ஒரு மனிதரோ, நிகழ்வோ, புத்தகமோ, சினிமாவோ இருக்கக்கூடும். உங்களை ஃபாரஸ்ட் எந்த அளவுக்கு பாதித்துள்ளார் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

    அதற்குத் தகுதியான படம்தான். அதற்குத் தகுதியான டாம் ஹாங்க்ஸ்தான்.

    ReplyDelete
  21. நண்பரே,

    இந்தத் திரைப்படம் வெளியாகிய வேளையில் Run Forrest Run எனும் வாசகம் எங்கள் மத்தியில் மிகப்பிரபலமாக இருந்தது. ஃபாரஸ்டும், சிறுவனும் தொலைக்காட்சி பார்க்கும் காட்சி நினைவில் நிற்கிறது. நல்லதொருபடம், சிறப்பான விமர்சனம்.

    ReplyDelete
  22. எனக்கு இந்த படத்தை விட, அதே வருடத்தில் வெளியான Shawshank Redemption பிடித்து இருந்தது.. ஆனால், உங்கள் விமரிசனத்தை படித்த பிறகு.. திரும்பி படம் பார்த்துட்டு வந்துடறேனே :)

    //படத்தைப் பார்த்திராத ஒவ்வொரு வாசகரையும் இப்படிப்பட்ட படத்தை பார்க்க வைக்கும் அளவுக்கு எழுத வேண்டும்//
    படத்தைப் பார்த்தவர்களையும் திரும்பி பார்க்க தூண்டி விட்டீர்கள் :))
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  23. வாவ்.. அருமையா சொல்லி இருக்கீங்க...

    நிச்சயம் பார்க்கிறேன்...

    ReplyDelete
  24. நன்றி ஆதிமூலகிருஷ்ணன், கனவுகளின் காதலன், பிரசன்னா, அகல்விளக்கு.

    ReplyDelete
  25. Jai

    I have seen this movie few years back, but did not impact so much as u mentioned. But your review is so interesting and i will surely watch this movie again and will comment again.

    Also you should write about my favourite movie 'Cast Away'

    ReplyDelete
  26. Naren, :)

    I have always thought that there must be a technical problem with IMDB rating for Cast Away (7.5 is too low for such a movie) when so many of us like it very much.

    Cast Away is surely in the list as i have mentioned in my first blog.(http://worldmoviesintamil.blogspot.com/2010/03/blog-post.html) Will write it soon.

    ReplyDelete
  27. very nice review...surely will see it...thanks a lot for suggesting like this movie...i will also suggest this move to my friends....

    Selva
    vkmselva@gmail.com

    ReplyDelete
  28. ஜெய்,
    உங்கள் விமர்சனத்தை படித்து விட்டு உடனே படத்தை பார்த்தேன் உண்மையிலேயே மிக சிறந்த படம். மீண்டும் பார்ப்பேன் மிக அழகான நடையில் சொல்லி இருப்பது நேர்த்தி வாழ்த்துக்கள் பயணம் தொடர...

    ReplyDelete
  29. அய்யா ஜெய் அவர்களே,

    உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்

    என் முகவரி http://cute-paruppu.blogspot.com/

    அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது...அதனால வந்துரங்களேன்

    என்றும் என்றென்றும் அன்புடன்
    சிஷ்யன் பருப்பு
    கத்தார்

    ReplyDelete
  30. Thanks Selva.. Knowing that you and friends watch such good movies is an encouragement for me to write more such movies. :-)

    Thanks Priya.

    podakkudian, நன்றி. தொடர்ந்து வாசியுங்கள். நல்ல படங்களைப் பாருங்கள்.

    பருப்பு, கண்டிப்பாக வருகிறேன். ஆனா, நானே கத்துக்குட்டிதான்.. என்னப்போயி.. :)

    ReplyDelete
  31. Jai,

    There is a big piece in the movie you have missed. The Most important piece is that during that time all the major headliners would have happened and Tom would have been a part of that. That is why the movie was a big hit, not because of the story. The Watergate Scandal, Kennedy speech, The Famous Anti-war rally with kerry and jane fonda. It is all well meshed in the movie. Also it is American Football not Rugby. Please do not write without understanding the whole concept of the movie. See the movie again and write. This is half baked and a hogwash. Sorry for being hard. But I have see this kind of attitude with a lot of tamil writers who writes, directs without doing the proper research. With regds. Mani

    ReplyDelete
  32. Thanks Mani for providing a different interpretation of the movie.

    Yes. I have missed a big piece, to be right, one of the themes in the movie (it has several layers of themes), in which Forrest is invovled in historical events and interacted with celebrities. But, as I explained "ஃபாரஸ்ட் கம்ப்-ன் கதாபாத்திரம்தான் படத்தில் முக்கியமான விஷயம். அதை விவரிக்க நிறைய காட்சிகளை விவரிப்பது அவசியமாகிறது.", So, I explained a few scenes to make the readers understand the characterization of Forrest Gump. I didn't try to explain the complete plot. I hope you would agree that there could be many CORRECT interpretations to a movie. And for my interpretation, I don't think the above said theme is most important one. In fact, I didn't even tell about Hanks's acting, Zemeckis's direction, Narration Style, Extraordinary Dialogues which are more important. I felt, Forrest Gump's character is the best among several good things in the movie and thats the only thing I wanted to convey.

    P.S: The most accepted User comment in IMDB reads as follows:Forrest meets some interesting people(Bubba, Dan) along the way too that are even better than these celebrities combined(Elvis Presley, Kennedy, Johnson, Nixon). Forrest Gump movie is not just about someone stupid who happens to be in great places and historic events just because of being in the right place at the right time. This story is beautiful and will inspire everyone to go the distance and see the world like Forrest did and will never give up on their dreams.

    About football thing, you are correct. I was always confused as he narrates as "Football" but seems to play "Rugby". :-) (நமக்கு பாழாப்போன கிரிக்கெட் விட்டா வேற எதுவும் தெரியாதுங்க..) Now I understand it is "American Football" which resulted from its parent rugby. (Thanks wiki: http://en.wikipedia.org/wiki/American_football)
    I don't think that too matters much for the point of discussion in the review so didn't worry much. But, really thanks for notifying it.

    We, the tamil writers may not match with your opinions and interpretations. But, we write after good research of the movie.
    Keep reading. :-)

    ReplyDelete
  33. I just went through the user comments of IMDB to see what people tell about the movie. I hope I am in line with almost everybody who loved the movie. :-)

    http://www.imdb.com/title/tt0109830/usercomments?start=0

    And one of the important comment there is, "... the political events witnessed by the character in the movie make many miss the whole substance of the film. I think these bits of history only add to the magic of the film, making Forrest part of a fantastic world that seems so incredibly real though. ..."

    ReplyDelete
  34. எனக்கும் மிகவும் பிடித்த படங்களில் ஒன்று
    ஆனால் இதை விட என்னவோ "the sawshank redemption" நல்லப் படமென எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் பலமாகக் கருதும் விடயங்களே எனக்குப் பலவீனமாய் படுகிறது. forrest gump பாத்திரம் ஒரு அற்புத குணநலன்கள் கொண்ட சூப்பர் ஈகோ பாத்திரம். நிஜத்தில் யாரும் அப்படியில்லையே? ஏதோ இப்படித்தான் இருக்க வேண்டுமென நீதி சொல்லும் படம்.
    முடிந்தால் இதைப் படித்துப் பாருங்கள்

    பகுதி 1

    http://sridharshan.blogspot.com/2009/12/forest-gump_30.html

    பகுதி 2
    http://sridharshan.blogspot.com/2010/01/forest-gump.html

    ReplyDelete
  35. ஆனால் எனக்கும் ஆதர்ஷம் இந்தப் பாத்திரம்தான்
    ரொம்பவும் பாதித்தது

    ReplyDelete
  36. முதல் வரியிலேயே கவர்ந்து விட்டீர்கள் நண்பரே.

    முழுவதும் படித்து விரிவாக பின்னூட்டம் இடுகிறேன்.

    ReplyDelete
  37. தர்ஷன், உங்க பதிவை படிச்சேன். ரொம்ப நல்லா எழுதறீங்க.
    // புனிதக் கற்பிதங்களின் மீது நம்பிக்கையற்ற இப்படித்தான் வாழ வேண்டுமென்ற வரையறைகளை எல்லாம் மீறுதலே வாழ்க்கை என்ற எண்ணம் கொண்ட எனக்கு // (http://sridharshan.blogspot.com/2010/01/forest-gump.html)
    இதனால்தான் உங்களுக்கு Forrest Gump-ஐ விட Shawshank Redemption பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். நான் உங்களுக்கு நேர் எதிர். :-) நல்ல கருத்துள்ள படங்கள்ல தப்பான (ஆனால் உண்மையில் நடக்கிற) விஷயங்களை காண்பிக்காமலேயே நல்ல கருத்தை சொல்லலாம்னு நினைக்கிறேன். அதுனாலதான் எனக்கு Shawshank Redemption-ஐ விட Forrest Gump பிடிச்சிருக்கு. :-)

    ReplyDelete
  38. Forrest Gump ஐ என் நண்பர் பரிந்துரை செய்தார், போன வாரம் தான் பார்த்தேன்.

    Forrest எதை செய்கிறானோ அதுவாகவே இருக்கிறான், அதுவே அவனுக்கு வெற்றியை தருகிறது. நாம் செய்யும் விஷயங்களில் இருந்து வெகுவாக தள்ளி இருக்கிறோம்.

    ReplyDelete
  39. இதென்ன கதை, ஒன்றும் சிறப்பாக இல்லையே என்று நினைத்தால் கண்டிப்பாக நீங்கள் படத்தை பார்க்கவும். தனியாக பார்த்தால் இன்னும் சிறப்பு.

    ReplyDelete

  40. தர்ஷன் said...
    forrest gump பாத்திரம் ஒரு அற்புத குணநலன்கள் கொண்ட சூப்பர் ஈகோ பாத்திரம்.


    தர்ஷன் forrest gump பாத்திரம் அப்படி ஒன்றும் எனக்கு தோன்றவில்லை. அவனுக்கு வேறொன்றும் தெரியாது.

    நீ சொன்னத தான் நான் செய்தேன்
    (Run forrest run)
    இந்த பதக்கம் அதுக்கு தான் கொடுத்தாங்கன்னு சொல்லு அந்த பதக்கத்தை காதலியிடம் கொடுக்கும் இடம் என்று பல இடங்களில் அழகாக அவன் குணம் வெளிப்பட்டிருக்கும்.

    ReplyDelete
  41. ஜெய்..எனக்கும் ரொம்ப பிடித்தப்படம் இது..இந்த வசனம் என்னிடமிருந்து மட்டுமல்ல..இந்த படத்தை பார்த்தவர்கள் அனைவரும் இப்படித்தான் சொல்லுவார்கள். நல்ல விமர்சனம்..நன்றி

    vijay armstrong.cinematographer

    ReplyDelete
  42. // நாம் செய்யும் விஷயங்களில் இருந்து வெகுவாக தள்ளி இருக்கிறோம்.//
    சரியாக சொல்லியிருக்கீங்க வெங்கட்ராமன்.

    Vijay Armstrong!!!, :-) நீங்கள் சொல்வது போல யாருக்கும் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லைதான்.
    வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாசிக்கவும்.

    ReplyDelete
  43. உங்களது விமர்சனம் நன்றாக இருந்தது.
    தொடரவும்...!
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  44. i like this movie very much. thanks for ur review, its really wonderful, thanks buddy.

    ReplyDelete
  45. What you said is absolutely true. And like you I am an ardent fan of Tom Hanks. I did see Sleepless in Seattle, Saving Private Ryan, Cast away and Forrest Gump in one night.. Forrest gump is the best of the pick for me. The change it brought me is to keep things simple and not to go on assume what people really meant when they said. Proved really worthy for me. And the historical events.. just another cliche to prove Gump's innocense to tell he hasnt lost that in the years. From the day he picks up the book for a African american to the interview with John Lenon.

    ReplyDelete
  46. ஜெய்

    பாலாவின் அக்கறைப்பச்சை வலைதளத்தை காணவில்லை, எதுவும் செய்து விட்டாரோ?

    ReplyDelete