Saturday, June 26, 2010

டாய் ஸ்டோரி 3 - 3D [2010] – குழந்தைகளுக்கு மட்டுமல்ல

முதல் விஷயம்... அனிமேஷன் படம்னா அது குழந்தைகளுக்கு மட்டும்தான்னு நீங்க நினைச்சா, பாவம் நீங்க... வாழ்க்கையில நிறைய சந்தோஷங்களை மிஸ் பண்ணறீங்க... நாமளும் ஒரு காலத்துல குழந்தையாதான் இருந்தோம்.... அந்த சந்தோஷ நினைவுகள் திரும்ப வேணும்னா, அப்பப்போ இந்த மாதிரி படமெல்லாம் பாக்கணும்...

ரெண்டாவது விஷயம்... பிக்ஸார்(PIXAR)... ஹாலிவுட்ல இருக்கற அனிமேஷன் ஸ்டூடியோ... மத்த அனிமேஷன் படங்களுக்கும், பிக்ஸார் அனிமேஷன் படங்களுக்கும் இருக்கற வித்தியாசம் ராமநாராயணன் படத்துக்கும், ஷங்கர் படத்துக்கும் இருக்கற வித்தியாசம் மாதிரி... அவ்வளவு பிரம்மாண்டம்... நுணுக்கம்... உழைப்பு... ஒவ்வொரு காட்சிக்கும் இவங்க பண்ணற உழைப்பை சொல்ல தனியா ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்... ஹாலிவுட் பாலா அதை 18 போஸ்ட்டா போட்டுருந்தாரு... பிக்ஸார் பத்தி நீங்க அவ்வளவா கேள்விப்பட்டதில்லைன்னா, சாமிகுத்தமாயிடும்... படிச்சுட்டு வந்துருங்க...

டாய் ஸ்டோரி முதல் பாகம் 1995-லயும், ரெண்டாவது பாகம் 1999-லயும் வந்தது... நாம விளையாடுற பொம்மைகளுக்கும் உயிர் இருந்து, நாம பார்க்காதப்போ அதுங்க பேசி, சிரிச்சு, அழுது, சண்டை போட்டு, கும்மி அடிச்சு விளையாடிகிட்டு இருந்தா எப்படி இருக்கும்..? அப்படி ஒரு அழகான கற்பனைதான் படத்தோட தீம்... முதல் பாகத்துல, Andy அப்படின்னு ஒரு மூணு வயசு பையன் வச்சுருக்க விதவிதமான பொம்மைகள் எப்படி லூட்டி அடிக்குதுன்னும், அதுங்கள்ல Andy-க்கு பிடிச்ச கௌபாய் பொம்மை Woody-க்கும், புதுசா வர்ற பொம்மையான Buzz Light Year-க்கும் நடக்கிற சண்டையும் சமாதானமும், ஆக்‌ஷன், காமெடின்னு கலந்து சொல்லியிருப்பாங்க...

ரெண்டாவது பாகத்துல Woody கடத்தப்படறதும், அதைக்காப்பாத்த பொம்மை பட்டாளமே போய், பல பிரச்சினையில மாட்டறதும், கடைசியா புது பொம்மைகளோட திரும்பி வர்றதும்தான் கதை...

இப்போ 11 வருஷத்துக்கு அப்பறம் மூணாவது பாகம்... Andy-க்கு 17 வயசாச்சு... காலேஜூக்கு போகப்போறான்... இந்த பொம்மைகளை தூக்கிப் போட மனசில்லாம, பரணில் எடுத்துவைக்கறப்போ, தவறுதலா குழந்தைகள் காப்பகத்துக்கு குடுக்கப்படுது... முதல்ல சொர்க்கமா தெரியற காப்பகம், ரொம்ப சின்ன வயசு குழந்தைகள் வந்து பொம்மைகளை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சதும் ரொம்ப கஷ்டமா தெரியுது... அதுல இருந்து பொம்மைகளைத் தப்பிக்க விடாம பண்ணற வில்லன் கரடி பொம்மை வர்றப்போ, கதை விறுவிறுப்பாகுது...

நடுவுல ரெண்டு லவ் ட்ராக், வில்லனின் கூட்டாளி பொம்மைகளின் அட்டகாசம், அங்க இருந்து தப்பிக்க பொம்மைகள் செய்யற ப்ளான், வில்லனுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக் அப்படின்னு ஒரு நொடி கூட சோர்வில்லாம பரபரன்னு போகுது படம்... ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்குதா... ஒவ்வொண்ணும் குறுக்க வந்து ஏதாச்சும் பண்ணிகிட்டே இருக்குது... அதுனால அடுத்து என்ன வரும்னு கொஞ்சமும் கணிக்கமுடியாத அளவுக்குப் போகுது படம்...

ஒவ்வொரு கேரக்டரையும் உருவாக்க, தனியா ரூம் போட்டு யோசிப்பாங்க போல... கண்ணைத் தனியா கழட்டி வேவு பார்க்கிற Potatohead பொம்மை, ஸ்பானிஷ் பேசி டான்ஸ் ஆடும் Buzz Light Year, அடியாள் பொம்மைகளோட வர்ற கரடி பொம்மை அப்படின்னு ஒவ்வொண்ணுக்கும் தனி ஸ்டைல், பழக்கவழக்கம், ஸ்பெஷல் திறமை, பிடிச்சது, பிடிக்காததுன்னு... அது ஒரு தனி உலகம்... பார்க்க ஆரம்பிச்சா அப்படியே உங்களை உள்ள இழுத்துடும்... அதுதான் பிக்ஸார் ஸ்பெஷல்... பொம்மைகளைப் பார்க்கறப்போ ஏதோ பழைய நண்பர்களை திரும்ப பார்க்கிற மாதிரி இருக்கு...

ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி, த்ரில்லர், ஹார்ரர் அப்படின்னு எல்லாத்தையும் கலந்து கட்டியிருக்காங்க... இதைவிட அற்புதமான ஒரு கடைசி பாகம் எடுத்துருக்கவே முடியாது... காட்ஃபாதர், லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஸ்டார் வார்ஸ் ட்ரைலாஜிக்கு எல்லாம் ஒரு அனிமேஷன் ட்ரைலாஜி சவால் விட முடியும்னு யாரும் நினைச்சு கூட பார்த்துருக்க மாட்டாங்க... சிறந்த அனிமேஷனுக்கான ஆஸ்கரை ஏற்கனவே எழுதி வாங்கிகிட்ட மாதிரிதான்... சிறந்த படத்துக்கும் கடுமையான போட்டியா இருக்கும்...

படத்துல Bonnie அப்படின்னு ஒரு குழந்தை வருது... அந்தக் காப்பகத்துல விளையாட வர்ற, அழகான அமைதியான மூணு வயசு குட்டிப்பாப்பா... வெறும் 5 நிமிஷமே வந்தாலும், கிட்டத்தட்ட 11 பிக்ஸார் படங்கள்லேயே இதுதான் அழகான கேரக்டர்னு சொல்லற அளவுக்கு கொள்ளை அழகு... அந்த குழந்தை வந்தாலே தியேட்டர்ல களை கட்டிடுது... 2001-ல வந்த Monsters Inc படத்துல வர்ற பாப்பாவின முக பாவனைகளையும், இந்த பாப்பாவோட முக பாவனைகளையும் பார்த்தாலே தெரியும்... பிக்ஸார் எந்த அளவுக்கு முன்னேறி இருக்குன்னு... இன்னும் கொஞ்ச நாள்ல இவங்களோட அனிமேஷன் கேரக்டர்கள் டாம் ஹேங்க்ஸையும், அல் பசீனோவையும் விட நல்லா நடிச்சாலும் நடிக்கும்... சிறந்த நடிப்புக்கான விருது எல்லாம் மனுஷங்க மட்டும்தான் வாங்க முடியுமான்னு விசாரிச்சு வைக்கணும்...

3D எஃபெக்ட் சூப்பர்... கண்ணைக்குத்தற மாதிரியெல்லாம் பயமுறுத்தாம, அமைதியா அந்த உலகத்துக்கு நம்மை இழுத்துட்டு போறாங்க... படம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, Day & Night அப்படின்னு 5 நிமிஷ பிக்ஸார் குறும்படம் ஒன்னு காமிக்கறாங்க... அதுவும் வழக்கம்போல சூப்பர்...

புள்ளக்குட்டிகளோட இந்த வருஷம் ஒரு படத்துக்கு போகணும்னு நினைச்சீங்கன்னா, இந்த படத்துக்குப் போங்க... படம் முடியும்போது குழந்தைகளுக்கும், உங்களுக்குமான வயசு வித்தியாசம் அதிகம் இருக்காது...

பொம்மைகளை இனி மிஸ் பண்ணப்போறது Andy மட்டுமில்ல... நாமும்தான்...

பி.கு: இதைப் பார்க்கறதுக்கு முன்னாடி, முதல் ரெண்டு பாகம் பார்த்துட்டு போனா, முழு மோட்சம் கிடைக்கும்... நல்லவங்களா இருந்தா டிவிடி வாங்கி பாருங்க... என்னை மாதிரின்னா, டோரண்ட்ல டவுன்லோட் போடுங்க...Related Posts with Thumbnails

40 comments:

 1. சந்தோசமா இருக்க்ற கணங்கள் மிஸ் பன்னலாம ஜெய். கண்டிப்பா பார்க்கறேன்.

  ReplyDelete
 2. nice :) நிச்சயம் பார்க்கணும் . shrek 4 எப்படி ??

  ReplyDelete
 3. குழந்தைகளுக்கு|மட்டும்| அல்ல

  என்ன?குழந்தைகள் பார்க்க கூடாதா?
  ஹிஹிஹி
  இப்புடியும் நாங்க மாற்றுபார்வ பாப்போம்.

  ReplyDelete
 4. நல்ல 3D டோரண்ட் தெடிக்கிட்டு இருக்கேன் ஒரு வாரமா இன்னும் கிடைக்கல. கிடைச்சா பார்த்துட வேண்டியதுதான்

  ReplyDelete
 5. //நாமளும் ஒரு காலத்துல குழந்தையாதான் இருந்தோம்.... அந்த சந்தோஷ நினைவுகள் திரும்ப வேணும்னா, அப்பப்போ இந்த மாதிரி படமெல்லாம் பாக்கணும்...//

  உண்மைதான் பாஸ்..!!

  ReplyDelete
 6. @ ராமசாமி, கண்டிப்பா பாருங்க.. அமெரிக்காவுல இருந்துட்டு ஒரு வாரமா பார்க்காம இருக்கதே பெருங்குற்றம்...

  @ சுதர்ஷன், shrek 4 இன்னும் பார்க்கலைங்க...

  @ கீதப்பிரியன்,
  நானும் அந்த மாதிரி யோசிச்சேன்.. ஆனா, நாந்தான் தமிழ்ல புலியாச்சே... எப்ப்டி எழுதறதுன்னு தெரியல.. விட்டுட்டேன்.. :)

  @ ஜீவன்,
  அதுக்குள்ள 3D டோரண்டா!! ரைட்டு...

  @ஜெய்லானி, நன்றி...

  ReplyDelete
 7. @ கீதப்பிரியன்,
  ஏதோ... என் தமிழ்ப்புலமையை பயன்படுத்தி, டைட்டிலை மாத்தி இருக்கேங்க.. :)

  ReplyDelete
 8. இன்னைக்கு புக் பண்ணிருக்கேன் போக வேண்டும் நண்பரே.ரொம்ப நாளா எதிர்பாத்துகிட்டு இருந்த படம்

  ReplyDelete
 9. vara Sunday book panni irukken Jai.. :) :) Romba naala ethirpaathutu irundhen :)

  Pixar padam na kandippa nambi paakalam :) :)

  ReplyDelete
 10. நண்பரே,

  இங்கு அடுத்த மாதம் வெளியாகும்போது கண்டிப்பாக பார்த்துவிடுவேன். வழமைபோலவே சினேகமான நடையுடன்கூடிய பதிவு. எப்போதும் குழந்தைகளாக உணர்வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். இவ்வகையான படங்கள் எமக்கு அவ்வகையான வாய்ப்புக்களை வழங்குகின்றன.

  ReplyDelete
 11. ஜெய்! என்னோட‌ க‌மெண்ட்ட‌ காணோம்!!!!

  ReplyDelete
 12. எப்ப‌டி ஜெய்? ஒவ்வொரு ப‌திவும் ஒவ்வொரு Genre.

  அட‌, அனிமேஷ‌னா இருந்தாலும் ந‌ல்லாருக்கும் போல‌ருக்கே. முத‌லிர‌ண்டு பாக‌ங்க‌ள் பார்த்துட்டு இதை பார்க்க‌றேன் :)

  ReplyDelete
 13. முதல் இரண்டு பாகமும் ஹாலிவுட் பாலா பதிவு படிச்சபிறகுதான் பார்த்தேன். பிக்ஸார்-இன் அத்தனை படங்களையும் பார்த்தாச்சு. இதை மாத்திரம் வுட்ருவோமா.. :))

  ReplyDelete
 14. விமர்சனம் அருமை ஜெய் .. கண்டிப்பாக பார்கிறேன்

  ReplyDelete
 15. ஜெய் இரண்டு பார்ட்டு பார்த்துட்டேன்... இதை பார்கனும் வேர்ல்ட் வைடு ரிலிஸ் இந்த படத்தை செய்யலையா?

  ReplyDelete
 16. நன்றி லக்கி லிமட், கனகு, கனவுகளின் காதலரே..

  @ ரகு, கமெண்ட்டைக்காணோமா.. :( நான் எதுவும் பண்ணலீங்க... என்னது... இன்னும் எந்த பார்ட்டுமே பாக்கலையா... முதல்ல அதைப்பாருங்க...

  நன்றி சென்ஷி, ரோமியோ...

  @ ஜாக்கி,
  அண்ணே... போன வாரம் அமெரிக்காவுலயும், நேத்து இங்க இந்தியாவுலயும் ரிலீஸ் ஆகிடுச்சு... சென்னையில எனக்கு தெரிஞ்சு சத்யம், ஐநாக்ஸ்ல ஓடுதுங்க... ஆமா.. வீட்ல ஒரு குழந்தையை வச்சுகிட்டு இன்னுமா இப்படி ஒரு 3D படத்துக்கு கூட்டிட்டு போகாம இருக்கீங்க...?

  ReplyDelete
 17. கண்டிப்பாக இந்தப் படம் பார்க்க வேண்டும். உங்கள் விமர்சனம் அருமை

  ReplyDelete
 18. ஏன் பாஸ்,ராம நாராயணன இழுக்காம இனி பதிவே வராது போல இருக்கே? :)

  அப்புறம்,நல்ல பதிவு.நான் இன்னும் toy story பார்த்தது இல்லை.இப்ப தான் டவுன்லோட் போட்டு இருக்கேன்.பார்த்துட்டு சொல்றேன். :)

  இந்த படம் 3d தான.அப்ப சீக்கிரமே பார்த்துடலாம்.

  ReplyDelete
 19. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க... அவதார்க்கு அப்புறம் 3d படம் ஒண்ணும் பாக்க முடியல.. how to drain a dragon படம் நான் கோயம்புத்தூரில் எதிர்பார்த்து ஏமாந்து விட்டேன்.. சரி.. இந்தப் படமாவது வருகிறதா என்று பார்ப்போம்..

  //நல்லவங்களா இருந்தா டிவிடி வாங்கி பாருங்க... என்னை மாதிரின்னா, டோரண்ட்ல டவுன்லோட் போடுங்க...//

  ஹி ஹி ஹி... டவுன்லோட் போட்டுட வேண்டியதுதான்..

  ReplyDelete
 20. படம் பார்க்கும் போது..., என்னோட பொம்மையை எல்லாம்.. எவ்வளவு மோசமா ஹேண்டில் பண்ணினேன்னு ரொம்ப கஷ்டமா போய்டுச்சிங்க.

  அது வெறும் ப்ளாஸ்டிக்.. ப்ளாஸ்டிக்-ன்னு புத்திக்கு தெரியுது. ஆனா மனசுக்கு???? :( :( :(

  ------

  அப்புறம் படம் இன்னும் ஸீக்வல் ஸ்டேஜ்லதான் இருக்கு. அடுத்த பாகம்.. இன்னும் 4-5 வருசம் கழிச்சி கூட வரலாம். அப்படி வந்தாலும் அதை இனிமே ஜான் இயக்குவார்ன்னு எனக்கு நம்பிக்கை வரலை.

  லீ.. ஜானை விட 16 3/4 அடி எக்ஸ்டாவா பாய்ஞ்சிருக்கார்.

  ReplyDelete
 21. // டோரண்ட்ல டவுன்லோட் போடுங்க...//

  டோரண்ட்லிங்க் அனுப்பி வைங்க தல..

  ReplyDelete
 22. //என்னை மாதிரின்னா, டோரண்ட்ல டவுன்லோட் போடுங்க//

  போட்டாச்சு போட்டாச்சு :)

  ReplyDelete
 23. நன்றி பின்னோக்கி...

  @ இலுமி,
  சரி... சரி... ரா.நா. மேல உங்களுக்கு இருக்கற பாசம் புரியுது... ரா.நா. வாழ்க... ஓகேவா? :)

  @ பிரகாஷ்,
  கோயமுத்தூர்ல வரலைன்னா, சென்னைக்கு பஸ் புடிச்சு வந்து பார்க்கலாங்க... அப்படி ஒரு படம் இது... (பஸ் டிக்கெட் + சினிமா டிக்கெட்) எப்படியும் பெங்களூர்ல சினிமா டிக்கெட்டை விட கம்மியாதான் இருக்கும்... அதுக்கே நான் அடுத்த வாரம் திரும்ப ஒரு தடவை பார்க்கப்போறேன்... :)

  @ ஹாலிவுட் பாலா,
  // படம் பார்க்கும் போது..., என்னோட பொம்மையை எல்லாம்.. எவ்வளவு மோசமா ஹேண்டில் பண்ணினேன்னு ரொம்ப கஷ்டமா போய்டுச்சிங்க. //
  அதேதாங்க... குழந்தைகள்கிட்ட அந்த அடி வாங்கிகிட்டு கத்தாம இருக்கற பொம்மைகளை பார்க்கவே கஷ்டமாயிடுச்சு... :( ஆமா.. No toy is left behind-னு போட்டுட்டு சில பொம்மைகளை கண்ணுலயே காட்டலியே... (wheezy பென்குயின், ஒரு மைக் & ஸ்பீக்கர், Etch ட்ராயிங் பேட்) அதுக்கே நான் ஃபீல் பண்ணினேன்...
  // படம் இன்னும் ஸீக்வல் ஸ்டேஜ்லதான் இருக்கு. அடுத்த பாகம்.. இன்னும் 4-5 வருசம் கழிச்சி கூட வரலாம். //
  சரிதான்... முடிவில்லாத கதைக்களம் இது... ஆனா ஏற்கனெவே cars, monsters inc ஸீக்வல் எடுக்கறதால, இன்னும் கொஞ்ச வருஷத்துக்காவது டாய் ஸ்டோரி ஸீக்வல் எடுக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்...

  @ சென்ஷி, மெயில் அனுப்பிடறேன்...

  @ பிரசன்னா... :)

  ReplyDelete
 24. wow, what a movie... stunning


  can u share torrent link to download first 2 parts?

  ReplyDelete
 25. மக்களே,
  நிரம்ப நாட்களாக நானும் இந்த ஒலக சினிமா விமர்சனம் எதையாவது எழுதணும் என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். இப்போது ஆரம்பித்தும் விட்டேன். இனிமேல் நான் ரசித்த ஒலக சினிமா காவியங்களை உங்களுக்கு அளிக்கும் / பகிரவும் முடிவெடுத்துவிட்டேன்.

  இந்த வரிசையில் முதல் படமாக ஓல்ட் டாக்ஸ் Old Dogs ௨௦௦௯ என்ற படத்துடன் ஆரம்பித்துள்ளேன். இந்த படத்தை பொறுத்த வரையில் இந்த படத்தின் இயக்குனர் ஒரு முக்கிய காரணம். மேலும் படிக்க இங்கே செல்லவும்:
  வெடிகுண்டு வெங்கட்டின் ஒலக சினிமா

  ReplyDelete
 26. இக்கட இன்னும் பார்க்கலேது. தியேட்டர் ரிலீஸுக்கு வெயிட்டிங்கி... இப்பத்தானே வந்துக்கீது.. இந்த வாரம் பார்த்துப்புடுவேன். . . ;-)

  ReplyDelete
 27. //ரா.நா. மேல உங்களுக்கு இருக்கற பாசம் புரியுது... ரா.நா. வாழ்க... ஓகேவா? :) //

  அது.ஒடுக்கப்படும் ஆட்களுக்கு கை கொடுத்து உதவுபவனே இந்த இலுமி...

  இப்ப நக்கல் கமெண்ட் போட்டு பாரும் ஓய்.ஒரு குரூப்பே உம்ம வீடு பூந்து அடிக்கும்.உம்ம பாட்டன்,முப்பாட்டன் எல்லோர் டவுசரையும் கிழிக்கும். :P

  ReplyDelete
 28. // அனிமேஷன் படம்னா அது குழந்தைகளுக்கு மட்டும்தான்னு நீங்க நினைச்சா, பாவம் நீங்க... வாழ்க்கையில நிறைய சந்தோஷங்களை மிஸ் பண்ணறீங்க... //

  ரொம்ப சரியா சொன்னீங்க ஜெய்

  நான் இப்பொழுதும் சுட்டி டிவியில் ஜாக்கி சானின் சாகசங்களுக்கு அடிமை

  // புள்ளக்குட்டிகளோட இந்த வருஷம் ஒரு படத்துக்கு போகணும்னு நினைச்சீங்கன்னா, இந்த படத்துக்குப் போங்க... படம் முடியும்போது குழந்தைகளுக்கும், உங்களுக்குமான வயசு வித்தியாசம் அதிகம் இருக்காது... //

  ததாஸ்து

  // என்னை மாதிரின்னா, டோரண்ட்ல டவுன்லோட் போடுங்க... //

  நாமளும் அதே தான்

  ரொம்ப தேங்க்ஸ்பா அப்பப்ப இது மாதிரி போஸ்டும் போடுங்க

  ReplyDelete
 29. நல்லா சொல்லியிருக்கீங்க.

  ReplyDelete
 30. தெளிவான மற்றும் விரிவான அலசல். நிறைய விஷயங்கள மிகவும் யதாரத்தமாக சொல்லியிருக்கீங்க..! அருமை நண்பா..!

  ReplyDelete
 31. ################
  உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
  http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

  அன்புடன் > ஜெய்லானி <
  ################

  ReplyDelete
 32. இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
  ஆனால் உங்கள் விமர்சனத்தைப் படித்தபிறகு எனது ஆவலைத் தூண்டுகிறது.
  கண்டிப்பாக பார்த்துவிடுவேன். பகிர்வுக்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 33. //நாமளும் ஒரு காலத்துல குழந்தையாதான் இருந்தோம்.... அந்த சந்தோஷ நினைவுகள் திரும்ப வேணும்னா, அப்பப்போ இந்த மாதிரி படமெல்லாம் பாக்கணும்...//

  சின்ன மாற்றம். இப்ப எல்லாம் பெரியவங்களையும் Target பண்ணி வருகிறது. கொஞ்சம் பெரியவங்களுக்குப் புரிகிற ஜோக்குகளுடன். :):):)

  அனிமேட்டட் படங்களே எப்போதும் எனது1st choice.

  10 வருடங்களிற்குப் பிறகு வந்தது என்றாலும் Toy Story 3 நன்றாகவே இருந்தது. Pixar நல்லாத்தான் பண்ணுவாங்க. இந்த டிஸ்னியோட சேர்ந்தால் தான் சொதப்புவாங்க.

  முதல் இரண்டு பாகங்களையும் ஏனோ தானோன்னு சின்ன வயசில பார்த்தேன். மூணு நிச்சயமாக நன்றாக வந்திருக்கிறது. கடைசியில் கொஞ்சம் சொதப்பிட்டாங்க.

  Cars, Monsters inc sequels வருகிறதா? Cars எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அடிக்கடி பார்க்கும் படங்களில் ஒன்று. Monsters inc அவ்வளவாக பிடிக்கவில்லை. இப்ப பாக்கும் போது க்யூட்டாக இருக்கிற மாதிரி தோன்றியது.

  Cars-2 ஐ சொத்தப்பக்கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். Curious George கூட பார்ட் 2 வருகிறது வருகிறது என்று சொல்லிட்டே இருங்காங்க. இன்னும் வரல. எப்ப வரும்னு பார்த்திட்டே இருக்கேன். இதுவும் எனக்குப் பிடித்ததே. நிறைய வாட்டி பார்த்திருக்கிறேன். ஆனாலும், ஜோர்ஜ் அழுதால் நானும் உக்காந்து ஓன்னு அழுவேன். (சிரிக்கக்கூடாது. அப்புறம் அந்திராஸ் அனுப்புவேன்)

  I just love those animated movies.

  ReplyDelete
 34. Pixar எல்லவற்றையும் பார்த்து அதிசயப்பட்டிருக்கிறேன் ....நிஜ நடிகர்களின் நடிப்பு தரும் சிலிர்ப்பை அந்த பொம்மைகளும் தரும்......இது போன்ற படங்களை மிக ரசித்து பார்ப்பேன்.
  முடிந்தால் என்னுடைய Forrest Gump
  விமர்சனத்தை பார்க்கவும்.
  http://rojavinkadhalan.blogspot.com/2010/07/forrest-gump-1.html

  ReplyDelete
 35. தல,

  இந்த போஸ்டரை பார்த்தீங்களா?

  வெங்கட்,
  வெடிகுண்டு வெங்கட்.
  அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்

  ReplyDelete
 36. Hi.. Yen ungala madhiri yenga pathirigaiyala vimarsanam yarum panamatengaraga...keep it up.. Idhudhan makkalin vimarsanam ..

  ReplyDelete
 37. புள்ளக்குட்டிகளோட இந்த வருஷம் ஒரு படத்துக்கு போகணும்னு நினைச்சீங்கன்னா, இந்த படத்துக்குப் போங்க... படம் முடியும்போது குழந்தைகளுக்கும், உங்களுக்குமான வயசு வித்தியாசம் அதிகம் இருக்காது...


  பாலா பிக்ஸார் பற்றி எழுதிய போது உணர்ந்த விசயங்கள். ரொம்ப அற்புதம் ஜெய்.

  ReplyDelete