Wednesday, June 23, 2010

Les Diaboliques (The Devils)[1955] – ஃப்ரென்ச் படம்

ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல ‘பிறமொழிப்படங்கள்’-னு பதிவுக்கு பேரு வச்சேனே தவிர, ஹாலிவுட்டைத் தாண்டி வேற எதுவும் எழுதுனபாடு இல்ல... நம்ம கருந்தேள், கீதப்பிரியன் அளவுக்கெல்லாம் நான் உலகப்படம் பார்க்கறது இல்லை... விரல்விட்டு எண்ணிடலாம்... ஆனாலும், ‘பேருக்காவது ஒரு பிறமொழிப்படம் எழுதுனியான்னு யாரும் கேட்டுடக்கூடாது பாருங்க... அதுக்குதான் இந்த போஸ்ட்...

உங்களுக்கு Psycho, Rebecca மாதிரி படங்கள் பிடிக்குமா..? சஸ்பென்ஸ் த்ரில்லர் பிடிக்குமா..? அப்படின்னா, இதுக்கு மேல படிக்கவே தேவையில்லை... அப்படியே டவுன்லோடு போடுங்க... ஹிட்ச்காக் எஃபெக்ட்டை விட நல்லாவே இருக்கும்...

த்ரில்லர் படங்கள்ல இருக்கற பயமுறுத்தற இசை, எக்குத்தப்பான கேமிரா கோணம் எல்லாம் இல்லை... வெறும் கதைதான்... அத வச்சே வித்தை காமிச்சுருக்காங்க...

படத்துல முக்கியமா மூணு கேரக்டர்தான்... மூணும் வித்தியாசமான கேரக்டர்கள்... மைக்கேல்-னு ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டர்... கொடுமைக்காரன்... பசங்களுக்கு ஹாஸ்டல்ல சாப்பாடு சரியா போடறதில்ல... பள்ளிக்கூடத்துல போதுமான வசதியில்ல... மொத்தம் பள்ளிக்கூடத்துல நாலு ஆசிரியர்கள்தான்... அதுல ரெண்டு பேரு லேடீஸ்... ஒன்னு அவரோட மனைவி..!! இன்னோன்னு துணைவி..!! இந்த விஷயம் ஊருக்கே தெரிஞ்சதுதான்... இருந்தாலும் அவனுக்கு பயந்து யாரும் எதுவும் பேசறதில்ல...

ஸ்கூல் அவனோட மனைவியோடது... பேரு கிறிஸ்டியானா... அவளுக்கு சின்ன வயசுதான்... இருந்தாலும், ஏதோ குணப்படுத்தமுடியாத வியாதி... பாவம்... அவ ரொம்ப அப்பாவி... பயந்த சுபாவம்... அவளை தினமும் திட்டி, அடிச்சு கொடுமைப்படுத்தறான் மைக்கேல்...

துணைவின்னு சொன்னேனே... அவ பேரு நிக்கோல்... கொஞ்சம் தைரியமானவ... இருந்தாலும், அப்பப்போ மைக்கேல் அவளையும் கொடுமைப்படுத்தறான்...

இந்த மனைவிக்கும், துணைவிக்கும் ஒரு நல்ல understanding இருக்குது... (இது படத்தோட கதைதாங்க... உண்மைக் கதாபாத்திரங்களோடு பொருந்தினால் அதற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது...) ரெண்டு பேரும் தினமும் மைக்கேல் கிட்ட திட்டு வாங்கறதுனால, அவன் மேல கடுப்புல இருக்காங்க... இது கொஞ்சம் ஓவரா போயி, ஒருநாள் அவனை தீர்த்துக்கட்ட ப்ளான் பண்ணறாங்க... துணைவிதான் எல்லா ப்ளானும் பண்ணறா... மனைவி ரொம்ப பயந்தாலும், அதுக்கு உடன்படறா... பக்காவா ப்ளான் பண்ணி, அவங்க வெளியூர் போன மாதிரி எல்லார்கிட்டேயும் காட்டிகிட்டு, மைக்கேலை பாத்ரூம் தொட்டியில அழுத்தி கொலை பண்ணிட்டு, பள்ளிக்கூட நீச்சல் குளத்துல டெட்பாடியை போட்டுடறாங்க...

அடுத்த நாள் பார்த்தா, டெட்பாடியைக் காணோம்...!! ரெண்டு பேருக்கும் டென்ஷன்... அப்பறம் பார்த்தா, அவன் சாகறப்போ போட்டுருந்த சட்டை சலவைத்துணியோட வருது...!! ஸ்கூல்ல படிக்கற பையன் ஒருத்தன், ஹெட்மாஸ்டர் மைக்கேலை இப்பதான் பார்த்தேன்னு அடிச்சு சத்தியம் பண்ணறான்... சின்னப்பையன் பொய் சொல்லவும் மாட்டான்... இவங்களுக்கு இன்னும் டென்ஷன்... ரெண்டுநாள் கழிச்சு, நிர்வாணமான நிலையில டெட்பாடி ஒரு ஆத்தங்கரையில ஒதுங்கி இருக்குன்னு போலீஸ் கண்டுபிடிக்கறாங்க... இன்னும் டென்ஷன்... இதுக்கு நடுவுல, ஒரு புத்திசாலி போலீஸ்காரன் வேற, ஒவ்வொரு க்ளூவா கண்டுபிடிக்கறான்... ஒருநாள், ஸ்கூல்ல ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்தா, அதுல மைக்கேலோட முகம் மட்டும் பின்னணியில இருக்குது...!! ஹைப்பர் டென்ஷன்... இவ்வளவு நாள் பேயை நம்பாத துணைவி, இப்போ பயந்து ஊரை விட்டு ஓடறா... மனைவியும் அழுது பயந்து நடுங்கறா...

அன்னைக்கு ராத்திரி..................... அங்கதான் க்ளைமாக்ஸ் வச்சாங்க... ஆங்... அத மட்டும் சொல்லமாட்டேன்... எப்படி அந்த டெட்பாடி வேற இடத்துக்கு போச்சு... பேய் பழிவாங்குதா இல்ல, விஷயம் தெரிஞ்ச வேற யாராச்சும் விளையாடுறாங்களா... எல்லாம் படத்துல பாருங்க...

பழைய தமிழ்ப்படம் “அதே கண்கள்ல வர்றமாதிரி, படத்தோட முடிவை வெளியே சொல்லாதீங்கன்னு கடைசில போடுறாங்க... ஷ்ஷ்ஷ்...

இப்ப வந்த Usual Suspects, Sixth Sense எல்லாம் பார்த்துட்டு, க்ளைமாக்ஸ்ல ஆஆஆ-ன்னு நின்னோமே... அந்த எஃபெக்ட்டை 50 வருஷம் முன்னாடியே குடுத்துருக்காங்க...

டவுன்லோட் பண்ணறவங்க நல்லா பார்த்துக்குங்க... இது 1955-ம் வருட படம்... 1996-ல இதே கதையை ரீமேக் பண்ணியிருக்காங்க... ஷாரன் ஸ்டோன் வச்சு... ;-) அது ரெம்ப கேவலமா இருந்ததுன்னு கேள்விப்பட்டேன்... அத டவுன்லோட் போட்டுடாதீங்க...

வித்தியாசமான கதாபாத்திரங்களை புரியவைக்கறதுக்காக படம் முதல்ல கொஞ்சம் மெதுவா போகும்... அதுனாலயும், சப்டைட்டில் வச்சு பாக்கறதாலயும், படத்தை பார்க்காம விட்டுட்டா, உலக சினிமாவின் முக்கியமான த்ரில்லர் படத்தை மிஸ் பண்ணுவீங்க... அவ்ளோதான் சொல்லுவேன்...

என்ன விடுங்க... எத்தனை பேரு என்னல்லாம் சொல்லறாங்கன்னு ட்ரெய்லர்லயே பாருங்க...

Related Posts with Thumbnails

27 comments:

 1. நல்லாத்தான் சொல்லிருக்கீங்க. டவுன்லோடு போட்ற வேண்டியதுதான்.

  ReplyDelete
 2. வழக்கமா உங்க போஸ்ட் அரை மணி நேரம் படிப்பேன். இத மட்டும் அஞ்சு நிமிசத்துல படிச்சுட்டேன் :-).

  ReplyDelete
 3. @ ராமசாமி... இந்த படத்தைப் பத்தி இதுக்கு மேல எழுதுனா, அந்த க்ளைமேக்ஸை எழுதியே ஆகணும்... அதான் ஷார்ட்டா முடிச்சுட்டேன்...

  ReplyDelete
 4. நல்ல படம்தேன் .ஆனா இப்புடி சஸ்பென்ஸா விட்டுப்புட்டீகளே?

  ReplyDelete
 5. //இப்ப வந்த Usual Suspects, Sixth Sense எல்லாம் பார்த்துட்டு, க்ளைமாக்ஸ்ல ஆஆஆ-ன்னு நின்னோமே... அந்த எஃபெக்ட்டை 50 வருஷம் முன்னாடியே குடுத்துருக்காங்க...//

  மிகவும் சரி,செம படம்.
  50களுக்கு இது மிகப்பெரிய தொலைநோக்கு.நல்லா எழுதினீங்க.

  ReplyDelete
 6. நல்ல படம்.. முடிவ சொல்லுங்க ஓரே சஸ்பென்ஷா இருக்கு..!!

  ReplyDelete
 7. Padatha download pannu romba naal aachu.. innum paakala... neenga solliteengala.. indha week pathudren :) :)

  ReplyDelete
 8. ரைட் ஜெய்.இப்ப தான் பேருக்கு ஏத்த மாதிரி போஸ்ட் எல்லாம் போட்ரீறு! :)
  படத்த பார்த்துடலாம்.

  ReplyDelete
 9. //ஷாரன் ஸ்டோன் வச்சு... ;-) அது ரெம்ப கேவலமா இருந்ததுன்னு கேள்விப்பட்டேன்... //

  நானு ஸ்டார் மூவீஸ்ல என்னோட குழந்தைப் பருவத்துல பார்த்த இந்தப் படத்தைப் பத்தி இப்புடி சொன்னத கண்டிச்சி, 18+, 21+, 30+ படங்கள் வரிசையாகப் பார்க்கும் போராட்டத்தை ஆரம்ப்பிக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளூம் இந்த நேரத்தில், அதே குழந்தைப் பருவத்தில், லோக்கல் கேபிள் டீவீயில் இந்தப் படத்தின் ‘மேற்படி’ மேட்டர்கலையும் பார்த்துவிட்டேன் என்பதையும் இங்கு பதிவு செய்கிறேன் ;-)

  ReplyDelete
 10. ஆஹா....

  செம சஸ்பென்ஸ் த்ரில்லரா இருக்கும் போலயே....

  இன்னும் என்னடா யோசிக்கிறா... விட்ரா வண்டியா டோரண்டுக்கு....

  ReplyDelete
 11. தல, டவுன்லோட் போட்டாச்சு! நல்ல எழுதிருக்கீங்க, படத்த பார்த்திட்டு நாளைக்கு மறுபடியும் வர்றேன்.

  ReplyDelete
 12. @ மயில்ராவணன், ஜெய்லானி, ஜீவன்பென்னி,
  நெட்ல தேடிப்பாத்ததுல கூட, படத்தோட க்ளைமாக்ஸ் அவ்ளோ ஈஸியா கிடைக்கலைங்க... விகிபீடியா, IMDB-ன்னு எங்கயும் க்ளைமாக்ஸ் பத்தி பேசல.. இப்படி ஒரு ரகசியத்தை நான் உடைச்சேன்னா, தேடி வந்து அடிப்பாங்க...

  @ கீதப்பிரியன்,
  // 50களுக்கு இது மிகப்பெரிய தொலைநோக்கு //
  அதேதான்... ஹிட்ச்காக் கூட இந்த படத்தை பார்த்து பல விஷயங்களை கத்துகிட்டாருன்னு பேசிக்கறாங்க...

  @ கனகு, இலுமி, அகல்விளக்கு, மோகன்,
  அவசியம் பார்க்கவேண்டிய படம்...

  @ கருந்தேள்,
  // 18+, 21+, 30+ படங்கள் வரிசையாகப் பார்க்கும் போராட்டத்தை ஆரம்ப்பிக்கிறேன் //
  ஸ்ஸ்ஸப்ப்ப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே... சுத்தி பார்த்தா எல்லாரும் salo, hard candy, lions & lioness-னு டெர்ரர் காமிக்கறீங்க... இது இன்னும் 30+ எல்லாம் போனா...!!! யாராச்சும் children of heaven மாதிரி எழுதுங்கப்பா...

  ReplyDelete
 13. You have a very good blog that the main thing a lot of interesting and useful!hope u go for this website to increase visitor.

  ReplyDelete
 14. நண்பரே,

  அருமையான அறிமுகம். சஸ்பென்ஸ் பார்க்கத் தூண்டுகிறது. சாரன் ஸ்டோன் நடிப்பதை நான் பார்ப்பதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :)

  ReplyDelete
 15. கனவுகளின் காதலரே... ஷாரன் ஸ்டோன் “நடிப்பதை” நாம் யாருமே பார்ப்பதில்லைதான்... ;)

  ReplyDelete
 16. பொதுவா பிளாக் அன்ட் ஒயிட் படங்கள் நான் பார்பது இல்லை.. இந்த படம் கிடைத்தால் நிச்சயம் பாக்கவேண்டும் என்ற உந்துதால் எனக்கு இந்த எழுத்தின் மீது கிடைக்கின்றது...

  ReplyDelete
 17. தங்களது பதிவை முழுவதும் படித்துவிட்டு கருத்து சொல்லனும்னு முயற்சி செய்ததில் Memento-வின் புதிர்கள் - பாகம் 1 முதல் 3 வரை முயற்சி செய்து இதைதான் முழுமையாக படித்து முடித்தேன். உண்மையில் தங்களது விமர்சனம் அருமை. அப்படியே கதைக்களத்துக்கு கொண்டு போறீங்க... ஆனா.. கடைசியில என்ன ஆகுதுன்னு சன்டிவில வர திரை விமர்சனம் மாதிரி முடிச்சியிருக்கீங்க..! உங்க பதிவை படிக்கும் போதே படம் பார்க்கும் ஆவலை அதிகமாக்கிவிடுகிறது. தொடர்ந்து பல பதிவுகள் படைத்திட வாழத்துகள் மற்றும் பாராட்டுகளுடன்... பிரவின்குமார்.

  ReplyDelete
 18. கொஞ்ச நாளா எனக்குள் தூங்கிட்டு இருந்த சினிமா வெறிய தூண்டி விட்ட ஜெய்யை வன்மையாக கண்டிக்கிறேன் ;)

  ReplyDelete
 19. நன்றி மங்குனி அமைச்சர், ஜெயந்தி...

  நன்றி ஜாக்கி அண்ணே,
  // பொதுவா பிளாக் அன்ட் ஒயிட் படங்கள் நான் பார்பது இல்லை.. //
  கொஞ்சம் போர் அடிக்கும்கிறது உண்மைதான்... ஆனா, ஹிட்ச்க்காக் எல்லாம் கலருக்கு போட்டியாவே ப்ளாக் அண்ட் ஒயிட் படம் எடுத்தவரு... அதெல்லாம் பார்க்கலைன்னா, கொஞ்சம் கஷ்டப்பட்டு பாருங்க... அப்பறம் கண்டிப்பா பிடிக்கும்... எனக்கு ரொம்ப பிடிச்ச ப்ளாக் & ஒயிட் படங்கள்: Casablanca, It's a wonderful life, Psycho, rebecca, to kill a mocking bird, 12 angry men, duck soup, it happened one night,
  குப்ரிக்கின் Dr.Strangelove, Paths of glory, killing.. சாப்ளினின் great dictator, city lights, modern times...

  @ பிரவீன், :)

  @ பிரசன்னா, வெறி வந்துச்சா? வந்துச்சா? அப்படியே நேரா போயி ஒரு சினிமா போஸ்ட் போடுங்க... இந்த மாசம் நண்பர்கள எல்லாம் 18+ கொஞ்சம் ஓவ்ரா போயிட்டதால நீங்களாவது 18- போடுங்க... :)

  ReplyDelete
 20. Jai, Thanks for introducing the movie.. Just now watched and really its interesting than Hitchcock's movies... Still i'm thinking how come i didn't guess the climax... Story is so interesting..

  ReplyDelete
 21. இம்புட்டு பண்ணுற நீங்க, உங்க போட்டோவயே போடலாமே.. எதுக்கு ஜிம்கேரி போட்டோ..? ஆமா.. அது ஜிம்கேரி தான..?

  ReplyDelete