டைரக்டர் குப்ரிக்கோட கடைசி படம்... டைட்டில் போடறதுக்கு முன்னாடி இருந்து, The End-னு போடற வரைக்கும் ஒன்லி 18+.
கிட்டத்தட்ட பாதி படம், ஒரே ராத்திரில நடக்கற விஷயங்கள்தான்.. ஹீரோ டாம் க்ரூஸ் (Tom Cruise) ஒரு டாக்டர்... ஹீரோயின் நிகோல் கிட்மன் (Nicole Kidman) அவரோட மனைவி... அவங்க ஹவுஸ்வைஃப்... அவங்களுக்கு ஒரு 5 வயசு குழந்தை இருக்கு... ஹீரோவும், ஹீரோயினும் Ziegler-னு ஒரு நண்பர் தர்ற பார்ட்டிக்கு போறாங்க... அங்க ஹீரோ அவரோட கல்லூரி நண்பரை பாக்கறாரு. நண்பர் நிக் (Nick) ஒரு இசைக்குழுவில் வேலை பாக்கறாரு... ஹீரோவும் Nick-ம் பேசிகிட்டு இருக்கற சைக்கிள் கேப்புல, தனியா நிக்கற ஹீரோயின் கூட இன்னொருத்தர் வந்து டான்ஸ் ஆட ஆரம்பிக்கறார்.. நாசூக்கா பேசி ’அது’க்கும் கூப்பிடறார்.. இதுக்கு நடுவில, நண்பர்கிட்ட பேசிட்டு திரும்பி வர்ற ஹீரோவை ரெண்டு பொண்ணுங்க பிக்-அப் பண்ண பாக்கறாங்க.. அதை ஹீரோயின் கவனிச்சுடறாங்க.. இருந்தாலும் பிசியா இன்னொருத்தரோட டான்ஸ் ஆடிட்டு இருக்கறதால விட்டுடறாங்க.. (குட் ஃபேமிலி...)