Sunday, March 28, 2010

சிறந்த திரைக்கதைகள் - 12 Angry Men(1957), Pulp Fiction(1994), Sixth Sense(1999)

எனக்குப் பிடித்த படங்கள்: பட்டியல் – 2.1
(மிகச்சிறந்த திரைக்கதை/கதை/இயக்கம் கொண்ட படங்கள்)
இது முந்தைய இடுகையின் தொடர்ச்சி. முதல் இடுகையைப் படிக்க இதை க்ளிக் செய்யவும்: எனக்குப் பிடித்த படங்கள்: பட்டியல் – 2

12 Angry Men (1957)

விவாதம் அப்படின்னா என்ன? அது எப்படி இருக்க வேண்டும்ணு தெரியணுமா? இந்தப்படத்தைப் பாருங்க. 96 நிமிட படத்துல, தொடர்ந்து 88 நிமிடம் ஒரு கோர்ட்டில் இருக்கற ஒரு அறையில் மட்டும். மொத்தம் 12 பேர் மட்டும் அந்த அறையில். ஒரு கொலை கேஸ் பத்தி விவாதிக்கறாங்க.. விவாதிக்கறாங்க.. விவாதிச்சுட்டே இருக்கறாங்க.. ஆனா, ரொம்ப subtitle படிக்கற மாதிரி இருக்கும்ணு நினைச்சுடாதீங்க. எளிமையான வசனங்கள். ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக இழுத்துச்செல்லும் படம்.

கதை என்ன? ஒரு 18 வயசுப்பையன் அவனோட அப்பாவையே கொன்னுட்டான்னு, கோர்ட்ல நிறுத்தி இருக்காங்க. நம்ம ஊர்லன்னா நீதிபதியே விசாரிச்சு தீர்ப்பு சொல்லிடுவாரு. ஆனா, அந்த ஊர்ல மக்கள் ஒவ்வொருத்தரும் வருஷத்துக்கு ஒரு தடவை கோர்ட்ல போயி, ஏதாவது ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்லணும். ஓட்டு போடற மாதிரி அதுவும் ஒரு கடமை. அதுக்கு ஆஃபீஸுல லீவு கூட குடுப்பாங்க. போக முடியாதுன்னா அபராதம் கட்டணும். சரி.. தனியா நாம் மட்டும் போயி ஏதாவது ஒரு தீர்ப்பு சொல்லிட முடியுமா? அதுனால, ஒரே வழக்குக்கு நிறைய பேரைக் கூப்பிடுவாங்க. நீதிபதி அவங்ககிட்ட வழக்கோட எல்லா விவரங்களையும் சொல்லுவார். அப்பறம் அவங்களை ஒரு அறையில தனியா விவாதிச்சு முடிவு எடுக்க சொல்லுவாங்க. ஆனா, எல்லாரும் ஒருமித்த தீர்ப்பை சொல்லணும். அதுவரை விவாதம் தொடரும்.

இந்தப்படத்துல அதுமாதிரி 12 பேரைக் கூப்பிடறாங்க. அவங்களுக்குள் யாரும் யாருக்கும் அறிமுகமானவங்க இல்ல. குற்றவாளியையும் இதுக்கு முன்னாடி தெரியாது. நீதிபதி சொல்லற ஆதாரங்களையும், குற்றவாளியோட வாக்குமூலத்தையும் கேட்டபின் ஒரு அறைக்கு 12 பேரை மட்டும் அனுப்பி வைக்கறாங்க. அவங்க முடிவு எடுக்க வேண்டியதுதான். 12 பேருல, 11 பேர் அந்தப்பையன்தான் குற்றவாளின்னு தீர்மானமா இருக்காங்க. ஒருத்தர் மட்டும் சாட்சிகள் பத்தாது, அதனால அந்தப்பையன் நிரபராதியா இருக்கலாம்னு சொல்றார். (அதாவது he has not done anything wrong legally அப்படிங்கறாரு – நன்றி:நித்தி). அதனால அவர் தன்னோட தீர்ப்பை மாத்தற வரையிலோ, இல்ல மீதி 11 பேரும் அவங்க தீர்ப்பை மாத்தற வரைக்குமோ அந்த அறையிலேயே இருந்து ஒருத்தரை ஒருத்தர் மாத்த முயற்சி செய்ய வேண்டியதுதான். இதெல்லாம் 10 நிமிடக்கதை.
இதுக்கப்பறம் என்ன பேசறாங்க அப்படிங்கறதுதான் படம்.

சரி.. 1948-ல் வந்த Rope படத்துலயே ஒரே வீட்டுக்குள்ளேயே 8 பேரை மட்டும் வச்சு படம் எடுத்துட்டாங்களே.. அதுக்கப்பறம் 10 வருஷம் கழிச்சு வந்த இந்தப்படத்துல அப்படி என்ன இருக்கு?
முதல் விஷயம் - கதாபாத்திரங்கள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம். சாது, கோபக்காரர், அடிக்கடி கருத்து மாறுகிறவர், பிடிவாதமாக கருத்தை நம்பறவர், கசப்பான சொந்த அனுபவங்களால் முடிவெடுப்பவர் என சமூகத்தை அப்படியே பிரதிபலிக்கும் கதாபத்திரங்கள். 10 பேரு டீக்கடையில உட்கார்ந்துகிட்டு சூடான ஒரு விஷயத்தைப் பேசினா எப்படி இருக்குமோ அதை அப்படியே காட்டி இருக்காங்க.
இரண்டாவது விஷயம் - வசனம். முதல்வன் படத்துல அர்ஜுனும் ரகுவரனும் இன்டர்வியூ காட்சில பேசுவாங்களே. அந்த அஞ்சு நிமிஷத்துக்கே அசந்துட்டீங்கன்னா, இங்க 90 நிமிஷமும் அப்படித்தான். இயல்பான விறுவிறுப்பான வசனங்கள்.
மூன்றாவது ஒவ்வொருவரும் மனம் மாறும் விதம். ஒவ்வொருவரையும் அவங்க கருத்து தப்புன்னு உணர வைப்பதையும், ஒரு விஷயத்தை எப்படி வெவ்வேறு கண்ணோட்டங்களில் காண்கிறார்கள் என்பதையும் அப்படியே திரையில் கொண்டு வந்திருக்காங்க. (இந்தப்படம் வந்து 53 வருஷம் கழிச்சு தமிழில போன மாசம் வந்த ஒரு படத்தைப் பார்த்தேன். மூனு ஹீரோயின். எப்படித்தான் க்ளைமாக்ஸுல இப்படி திடீர்னு குணம் மாறுகிறாங்களோ.. அது டைரக்டருக்கே வெளிச்சம்)
AFI, IMDB மாதிரி சிறந்த திரைப்பட வரிசைகளில் முதல் 10 இடத்தில் உள்ளது!! மொத்தப்படமும் உங்களை நிச்சயம் இருக்கையில் கட்டிப்போடும்.


Pulp Fiction (1994) [18+]

டைரக்டர் Quentin Tarantino. பக்கத்துல ஃபோட்டோல இருக்காரே அவருதான். தலைவரைப்பத்தி தனியா தொடர் இடுகைகளே எழுதணும். 18 வருஷத்துல 6 படம் எடுத்துருக்காரு. 5 படம் IMDB All Time Top 250 Movies List-ல இருக்கு. இந்தப்படம் 5வது இடத்துல இருக்கு.
இந்த திரைக்கதையை வச்சு ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம். இதைப்பத்தி எழுத ஒரு இடுகை பத்தாது. ஆரம்பிச்சா இன்னும் ரெண்டு மணி நேரம் எழுதணும். அப்பதான் முழுசா சொல்ல முடியும். அதனால இப்போ ஒரு அறிமுகம் மட்டும்.
அப்படி என்ன இருக்கு இந்தப்படத்துல?
திரைக்கதை: க்ளைமாக்ஸில் எல்லாரும் திருந்தி, குடும்பத்தோட சிரிச்சுகிட்டே போஸ் தர்றதெல்லாம் நம்ம K.S.Ravikumar படத்துலதான் நடக்கும். Gangster படத்துல எல்லாம் நடக்காது இல்லயா? ஆனாலும் அந்த effect கொண்டு வந்திருக்காரு டைரக்டர் Quentin. எப்படி? காட்சிகளை அத்தியாயங்களா பிரிச்சு அத முன்ன பின்ன மாத்திப்போட்டு. மூன்று வெவ்வேறு கதைக்களங்கள். ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய கதைகள். Non linear-ஆக மாறி மாறி வரும் ஏழு அத்தியாயங்கள். ஏழு அத்தியாயங்களை ஏன் இப்படித்தான் பிரிக்க வேண்டும்? அந்த ஏழும் ஏன் அந்த குறிப்பிட்ட வரிசையில்தான் வரவேண்டும்? இதற்கான பதில்தான் படத்தின் ஸ்பெஷல். படத்துல வர்ற முக்கியமான ஏழு கதாபாத்திரங்களும் கதையின் ஏதாவது ஒரு இடத்தில் நல்ல, நேர்மையான (Positive character) கதாபாத்திரமாக உள்ளன. வேறு ஒரு இடத்தில் மிகக் கெட்டதாக (Negative Character) உள்ளன. இந்த நல்ல கதாபாத்திரத்தை முடிவில் கொண்டுவர அத்தியாயங்கள் மாற்றிக் காட்டப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மைப் பிரியும்போது Positive Character-ஆகவே பிரிகின்றன.

வசனங்கள்: எதிரியின் வீட்டினுல் நுழையும்முன் பாதத்தை மசாஜ் செய்வது பற்றி பேசுவதும், கொல்லப்போன இடத்தில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கூலாக பர்கர் சாப்பிடிவதும், 10 நிமிடத்திற்கு இரண்டு பேர் உட்கார்ந்து மில்க்‌ஷேக் பற்றிப் பேசுவதும், Gangster-ஆக இருப்பவன் பைபிளில் இருந்து கருத்து சொல்வதும் மிகப்புதிது. எப்போதும் துப்பாக்கியை வைத்து சுட்டுக்கொண்டு இருக்கும் Gangster படங்களுக்கு நடுவே இது மிக வித்தியாசம். நிஜமாவே Gangster எல்லாம் இப்படி ஜாலியாவும் பேசிப்பாங்க போல எனத்தோன்றும்.
Genre: எவ்வளவு முறை பார்த்தாலும், இதை ஒரு Genre-ல் சேர்க்க முடியாது. Crime, dark comedy, thriller, drama, mystery, noir என எல்லாம் கலந்து இது ஒரு புதுவகை.
Forrest Gump, Shawshank Redemption மாதிரியான படங்கள் வந்த வருடம், முன்ன பின்ன தெரியாத ஒரு டைரக்டர் இயக்கத்தில் வெளிவந்து, 320 மில்லியன் டாலர் வசூலையும், 5 ஆஸ்கரையும் வாங்கியது இந்தப்படம்.
Sixth Sense (1999)
நிறைய கேள்விப்பட்டிருப்பீங்க இந்தப்படம் பத்தியும் டைரக்டர் பத்தியும். டைரக்டர் மனோஜ் ஷ்யாமளனுக்கு இது முதல் படம். நம்ம பாண்டிச்சேரிதாங்க இவருக்கு பூர்வீகம்!! அமெரிக்கால குடியேறின குடும்பம். இந்தப்படம் எடுக்கறப்போ பையனுக்கு 28 வயசு. (எனக்கு இ எழுதவே யோசிக்க வேண்டியிருக்கு) 17 வயசுலயே 45 குறும்படம் எடுத்து இருக்காறாம்!!
பொதுவா அமெரிக்க படங்கள்ல யாரு திருடன், யாரு கொலைகாரன் இப்படின்னு சின்ன சின்னதா ட்விஸ்ட்(twist) வச்சுகிட்டு இருந்தாங்க. நம்மாளு வந்து வச்சாரு பாருங்க ட்விஸ்ட். (கவுண்டமணி பாஷையில சொல்லணும்னா, உலக மகா ட்விஸ்ட்டுடா சாமீ..) அத இங்க சொல்லிட்டா எல்லாரும் சேர்ந்து என்னை அடிச்சுடுவாங்க. படம் பார்க்காதவங்க கூகிள்ல தேடாதீங்க. யாருகிட்டயும் கேக்காதீங்க. முதல்ல படத்தைப்பாருங்க. பார்த்தவங்க ட்விஸ்ட் பத்தி வெளியே பேசாதீங்க.

சரி. கதையில திருப்பம் மட்டுமா? நமக்குக் கொஞ்சம் கூட சந்தேகமே வராத அளவுக்கு ஒவ்வொரு காட்சியையும் கொண்டு போயிருக்காரு. Usual Suspects மாதிரி ட்விஸ்ட் இருக்கற படங்கள்ல (இந்த படத்தைப்பத்தி அப்பறம் பேசலாம்), எங்கடா மாட்டிப்போமோ அப்படின்னு டைரக்டர் ஒரு க்ளூ கூட நமக்கு குடுக்காம, கடைசியா ஒருத்தன திருடன்னு காட்டுவார். இந்தப்படத்துல அப்படியில்ல. எல்லாக்காட்சிலயும் நமக்கு க்ளூ இருக்குது. அதக்கண்டுபிடிக்கறது நம்ம திறமை.
ஒரே படத்துல மொத்த ஹாலிவுட் உலகமும் ஷ்யாமளன்தான் அடுத்த ஸ்பீல்பெர்க்-னு கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கப்பறம் அவரு இந்த அளவுக்கு ஒரு படம் எடுக்கலைங்கறது வேற விஷயம்.

கதையா? ஹீரோ Bruce Willis மனநல மருத்துவர். அவர்கிட்ட சிகிச்சைக்காக ஒரு 10 வயசு பையனை சேர்க்கறாங்க. கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ள, அப்பப்போ திகிலடைந்து கத்தற, அதிகம் பேசாத பையன் (Haley Joel Osment - Artificial Intelligence படத்துல வர்ற பையன், Forrest Gump-ல இவர்தான் Tom Hanks-ன் மகன்). பையனுக்கு அப்பா இல்ல. அம்மா மட்டும்தான். பள்ளிக்கூடத்துல அதிகமா யார்கிட்டயும் பேசறது இல்ல. இந்தப் பள்ளிக்கூடம் 100 வருஷத்துக்கு முன்னாடி தூக்குல போடற இடமா இருந்ததுன்னு டீச்சர்கிட்ட சொல்றான். Drawing வகுப்புல எல்லாரையும் படம் வரைய சொன்னா, இவன் மட்டும் ஒரு கொலையை படமா வரையறான். தனியா படுக்க பயப்படறான். இதனாலதான் அவன் நம்ம டாக்டர்கிட்ட சிகிச்சைக்கு வர்றான். இவனுக்கு என்னதான் பிரச்சனைன்னு கண்டுபிடிக்கறார் அவர். அவருக்கும் சொந்த வாழ்க்கையில கொஞ்சம் பிரச்சனை. மனைவி சரியா பேச மாட்டேங்கிறாங்க. (இது நல்ல விஷயம்தானே!!) மருத்துவரும், இந்தப்பையனும் எப்படி அவங்களோட பிரச்சினைகளைத் தீர்க்கறாங்கன்னு படத்துல பாருங்க.

க்ளைமாக்ஸுக்கு முன்னாடியே ட்விஸ்ட்டை கண்டுபிடிக்கறவங்களுக்கு, 'சிறந்த கணிப்பாளர்' விருது வழங்கப்படும் என அறிவித்துக்கொள்கிறோம்.




Related Posts with Thumbnails

16 comments:

  1. Superb collection.. Favourites for me too..

    ReplyDelete
  2. Pulp Fiction http://www.hollywoodbala.com/search/label/Quentin%20Tarantino

    ReplyDelete
  3. //அதாவது ஒவ்வொரு கதாபாத்திரமும் நம்மைப் பிரியும்போது Positive Character-ஆகவே பிரிகின்றன.//

    அட... அழகு.. :))

    கலக்கறீங்க..

    ReplyDelete
  4. மூன்றுமே அருமையான படங்கள் மச்சான்... மேலும் சில திரைப்படங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்... :)
    - மச்சான்ஸ்.

    ReplyDelete
  5. Friend,your taste and mine is nearly same.I was planning on writing a review on Sixth sense and 12 angry men soon.Well,now I don't know. :)
    Keep up the good job.

    ReplyDelete
  6. ஹாய் நண்பா.. மிக நல்ல முயற்சி.. திரைப்படங்களை வெகு இயல்பாக விமர்சித்திருக்கிறீர்கள். இன்னும் பல திரைப்படங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். Alignment மட்டும் கொஞ்சம் சரியா பார்த்துக்குங்க. மத்தபடி உங்க விமர்சனங்கள் கலக்கல்

    ReplyDelete
  7. அழகான அருமையான முயற்சி... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. எழுத்துக்களை மட்டும் சற்று பெரிதாக்கலாமே? வாழ்த்துகள் நல்ல முயற்சிக்கு.

    ReplyDelete
  9. நண்பரே.

    அருமையாக எழுதியிருக்கிறீர்கள். தொய்வே இல்லாது பரபரவென்று நகர்கின்றன உங்கள் வரிகள். பாராட்டுக்கள் நண்பரே.

    ReplyDelete
  10. அருமை நண்பரே.

    ReplyDelete
  11. Pulp fiction பார்த்து இருக்கேன்..ஆனா Sixth sense இன்னும் முழுவதும் பார்த்ததில்லை..பார்க்கனும்..ஆனா அந்த TWIST என்னானு தெரியுமே..!

    ReplyDelete
  12. தல....

    ///5 ஆஸ்கரையும் வாங்கியது இந்தப்படம்.////

    இந்த ஒரு மேட்டரைத் தவிர... மத்ததெல்லாம் சூப்பர். படம் ஒரு ஆஸ்கரை மட்டுமே வாங்குச்சி. அதுவும் திரைக்கதைக்காக.

    12 Angry Men மாதிரியே Conspiracy -ன்னு ஒரு டெலிஃபிலிம் இருக்கு. யூதர்களை கொல்ல நாஜிக்கள் போடும் திட்டம். படமுழுக்க ஒரே ரூமில் மட்டும்தான். 1-2 ஷாட் வெளிய காட்டுவாங்க.

    ReplyDelete
  13. ரொம்ப நல்ல முயற்சி..நல்லா எழுதிவருகிறீர்கள். நிறைய பகிருங்கள்.நன்றி.

    ReplyDelete
  14. ச்சு..ச்சூ..... ச்சூ...! என்னது அங்கே?? :)

    ReplyDelete
  15. 12 Angry men, சிக்ஸ்த் சென்ஸ் இன்னும் பாக்கலங்க...

    பல்ப் பிக்‌ஷன் உண்மையிலேயே அற்புதமான படம்... நான் அத பாத்து வியந்துருக்கேன்... அப்படி ஒரு ஸ்கிரீன்ப்ளே.... எவ்ளோ வாட்டி பாத்தாலும் சலிக்காது....

    ReplyDelete
  16. டாம் ஹாக் எப்போதும் மிகைப்படுத்ததாத நடிப்புக்கு சொந்தகாரர். 'காஸ்ட்ட வே, சேவிங் பிரைவேட் ராயன்' போன்ற படங்கள் டாமின் மிகச் சிறந்த நடிப்பால் உலகப் புகழ் பெற்றன. உங்களது மிக எளிதான விமர்சனம் படத்திற்கு மேலும் அழகூட்டியது.
    --
    தோழன் மபா
    தமிழன் வீதி

    ReplyDelete