Monday, June 7, 2010

Memento (2000) - படத்தோட கதை...

இது முந்தைய போஸ்ட்டோட தொடர்ச்சி... அதுல இந்த படத்துல என்ன ஸ்பெஷல்னும், கதையோட அமைப்பு எப்படி இருக்குதுன்னும் பார்த்தோம்.. இந்த போஸ்ட்ல கதையைப் பார்ப்போம்...

கதை...

கதை புரியற அளவுக்கு, தேவையான காட்சிகளை மட்டும் எழுதியிருக்கேன்...

கருப்புல எழுதி இருக்கறது, கருப்பு வெள்ளைக் காட்சிகள்..

நீலத்துல எழுதி இருக்கறது, கலர் காட்சிகள்...

சிவப்பு கலர்ல நம்பர் போட்டுருக்கதுதான் காட்சிகள் நடந்த கால வரிசை... நேரா படிச்சு புரியலைன்னா, நம்பர் வரிசையில படிச்சுப் பாருங்க...

(1) டைட்டில் போடறப்போ வர்ற காட்சியில, ஹீரோ போலராய்ட் கேமிராவுல எடுத்த ஃபோட்டோவை கையில வச்சுகிட்டு பார்த்துகிட்டு இருக்கான்.. ஃபோட்டோவுல, யாரோ கொலை செய்யப்பட்டு கீழே விழுந்து கிடக்கறாங்க... தெளிவா இருக்கிற அந்த ஃபோட்டோ கொஞ்சம் கொஞ்சமா மறையுது (அந்த காட்சி ரிவர்ஸ்ல காமிக்கறாங்கன்னு நமக்கு அப்போதான் புரியும்)... படம் ரிவர்ஸ்ல போகப்போகுதுன்னு சொல்லற மாதிரி இந்தக்காட்சி அமைச்சுருக்காங்க...

(18) ஊருக்கு வெளியே தனியா இருக்கிற ஒரு கட்டிடத்துல, Teddy அப்படிங்கிறவனை கொன்னுட்டு, அவனோட உடலை ஃபோட்டோ எடுத்துக்கறான் ஹீரோ... ஏன் கொன்னான்..? எப்படி அங்க வந்தாங்க..? தெரியாது... (பதில் அடுத்த காட்சியில புரியும்)

(17) அடுத்த காட்சி... (அதாவது, அதற்கு முன்னாடி நடந்தது) ஹீரோ தங்கியிருக்கிற ஹோட்டல்ல இருந்து ஹீரோவும், Teddy-யும் கிளம்பறாங்க... அதே யாருமில்லாத இடத்துக்கு கூட்டிட்டுப் போறான்... ஹீரோ வச்சுருக்கிற Teddy-யோட ஃபோட்டோவைப் பார்த்தா, அதுல “Teddy-யை நம்பாதே.. கொன்னுடு”-ன்னு எழுதியிருக்கு... அதுனாலதான் அவனை முதல் காட்சியில கொலை பண்ணியிருக்கான்... சரி... ஏன் Teddy-யை கொல்லணும்னு எழுதியிருக்கு...? நமக்கும் தெரியாது... ஹீரோவுக்கும் தெரியாது... எழுதியிருக்கு... பண்ணறான்.. அவ்வளவுதான்... (இதுக்கான பதில் அடுத்த காட்சியில புரியும்)

(2) படம் முழுக்க ஹீரோவோட விவரிப்புதான் (narration)... ஹீரோ ஒரு ஹோட்டல் அறையில தனியா இருக்கான்... அது என்ன ஹோட்டல், எவ்வளவு நாளா அங்க இருக்கான், எப்படி வந்தான்னு அவனுக்கே தெரியலன்னு நம்மகிட்ட சொல்லறான்... இதுக்கான பதில்கள் எல்லாம் பேப்பர்லயும், அவனோட உடம்புலயும் இருக்கறதைப் பார்க்கறான்..

(16) அடுத்த காட்சி... ஹோட்டல்ல இருக்கற ஹீரோ, அவன் உடம்பில எழுதி இருக்கிறதைப் படிக்கிறான்.. அதுல கொலைகாரன் பேரு John G-ன்னும், அவனோட லைசென்ஸ் நம்பரும் எழுதி இருக்குது... ஹீரோ கையில Teddy-யோட லைசென்ஸும் இருக்குது... அதைப் பார்த்தா, அதுல பேரு John Gammel-ன்னும், கொலைகாரனோட அதே லைசென்ஸ் நம்பராகவும் இருக்குது... இதுல இருந்து Teddy-தான் கொலைகாரன்னு புரிஞ்சுக்கிறான்.. Teddy-யை நம்பாதே.. கொன்னுடு”-ன்னு எழுதிக்கிறான்... (போன காட்சியில வந்ததே...) Teddy-க்கு ஃபோன் பண்ணி, அவனை ஹோட்டலுக்கு கூப்பிடறான்... எப்படி அந்த லைசென்ஸ் அவனுக்கு கிடைச்சது? தெரியாது...

(15) அடுத்த காட்சி... ஹீரோ பாக்கெட்ல இருக்கிற குறிப்புல, ஒரு இடத்துல நடாலி அப்படிங்கிற பொண்ணை சந்திக்கணும்னு எழுதி இருக்கு... அந்த இடத்துக்கு போறான்.. நடாலியை சந்திக்கிறான்... ஆனா, ஹீரோவுக்கு அவள் யார்னு தெரியாது... (நமக்கும் தெரியாது) ஹீரோ அவளுக்கு ஒரு உதவி பண்ணதால, அவள் திரும்ப ஹீரோவுக்கு உதவறதா சொல்லறா.. ஹீரோ அவகிட்ட, ஒரு லைசென்ஸ் நம்பர் யாருதுன்னு கண்டுபிடிக்க சொல்லி குடுத்திருக்கான்.. அதை அவள் கண்டுபிடிச்சு, லைசென்ஸை தர்றா.. (அதுதான் Teddy-யோடது) நடாலி ரொம்ப நல்லவளா இருக்கா... ஆனா, ஹீரோ நடாலிக்கு என்ன உதவி பண்ணினான்..? அந்த லைசென்ஸ் நம்பர் எப்படி ஹீரோவுக்கு கிடைச்சது..?

(3) ஹீரோவுக்கு ஏதோ விபத்து ஏற்பட்டு, விபத்துக்கு அப்பறம் நடக்கிற எல்லாமே சில நிமிடங்களுக்குதான் ஞாபகம் இருக்கும்... அதுனால தனக்கு இந்த வியாதி இருக்கு அப்படிங்கிற விஷயமே ஞாபகம் இருக்காது இல்லையா? அதுனால, அவர் கையில பச்சை குத்தி இருக்கிற Remember Sammyஎன்கிற வார்த்தை முக்கியமானது... அதைப்பார்த்ததும்தான் அவர் விபத்துக்கு முன்னாடி சந்திச்ச Sammy என்பவரை ஞாபகம் வருது... Sammy-க்கும் இதே வியாதிதான்... விபத்துக்கு முன்னாடி, ஹீரோ ஒரு மெடிக்கல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனில வேலை பார்த்துருக்கான்... அந்த கம்பெனில இன்ஸ்யூர் பண்ணியிருக்கிற ஒரு நோயாளிதான் Sammy… Sammy-க்கு short term memory loss இருந்ததால, கையில எழுதியிருக்கிற Sammy பேரைப் பார்த்ததும், ஹீரோவுக்கு தனக்கும் அதே வியாதி இருக்கறது புரியுது.. அப்பறம் உடம்புலயும், சுவர்லயும் எழுதி இருக்கிறதைப் பார்த்தும், தினமும் தன்னோட நிலையைப் புரிஞ்சுக்கறான்... அப்போ, அவருக்கு ஃபோன் வருது... ஃபோனை எடுத்து அடுத்த முனையில இருக்கறவர்கிட்ட Sammy பத்தி விவரிக்க ஆரம்பிக்கிறான்..

(14) Dodd அப்படிங்கிற ஒருத்தனை பயங்கரமா அடிச்சுட்டு, அவனை ஃபோட்டோ எடுத்துகிட்டு, நடாலி வீட்டுக்கு வர்றான் ஹீரோ... ஹீரோவுக்கு Dodd-ஐ ஏன் அடிச்சான்னு தெரியல... நடாலிதான் அவன்கிட்ட விளக்கமா சொல்லறா.. அவளுக்கு Jimmy அப்படின்னு ஒரு காதலன் இருந்ததாகவும், அவன் பணத்துடன் Teddy அப்படிங்கிற ஒருத்தனை பார்க்க போனப்போ, காணாமல் போயிட்டதாகவும், அந்த பணத்தைக் கேட்டு Dodd அவளை மிரட்டியதாகவும் சொல்லறா... அதனால, நடாலிதான் Dodd-ஐ அடிக்க ஹீரோவை அனுப்பியதாகவும் சொல்லறா.. அதற்கு நன்றியாக, ஹீரோ தேடிகிட்டு இருக்க John G அப்படிங்கிற கொலைகாரனோட லைசென்ஸ் நம்பரை வச்சு யாருதுன்னு கண்டுபிடிச்சுத் தர்றதா சொல்லறா... ஏன் அவன் நடாலியை வீட்டுக்கு வந்தான்..?

(13) ஹீரோ ஏதோ ஒரு ஹோட்டல் அறையில தூங்கி எழுந்திருக்கிறான்... அங்கே Dodd-னு ஒருத்தனை அடிச்சு கட்டிப் போட்டுருக்கான்... அது எந்த அறை, அவன் யார்னு எதுவுமே தெரியல ஹீரோவுக்கு... அவன் Dodd-ன் ஃபோட்டோ வச்சுருக்கான்... அதுல, “அவனை அடிச்சு அனுப்பிட்டு, நடாலியை சந்திக்கவும்”-னு எழுதியிருக்கு... அப்போ அங்கே Teddy வர்றான்... அவனோட உதவியோட, Dodd-ஐ ஊருக்கு வெளியே அனுப்பிவிட்டு, நடாலியை சந்திக்கப் போறான்... ஏன் Teddy அங்கே வந்தான்..?

(4) ஹீரோ விவரிக்கற அந்த ஃப்ளாஷ்பேக்.. Sammy-யோட மனைவிதான் இன்ஸ்யூரன்ஸ் பணத்தை வாங்க அலையறாங்க.. பணம் குடுக்கறதுக்கு முன்னாடி, வியாதி உண்மைதானான்னு செக் பண்ணறதுக்கு, ஹீரோவை அனுப்பறாங்க... ஹீரோ Sammy-க்கு பல டெஸ்ட் வச்சு அவரோட நோய் உடல்ரீதியானது இல்ல, மனரீதியானது, அதனால இன்ஸ்யூரன்ஸ் தரமுடியாதுன்னு சொல்லிடறான்...

(12) ஹீரோ ஒரு ஹோட்டல் அறையில யாருக்கோ காத்திருக்கிறான்... Dodd அங்கே வர்றான்... ஹீரோ அவனை அடிச்சு கட்டிப்போடறான்... ஹீரோவோட பாக்கெட்ல நடாலி எழுதின குறிப்பு இருக்கு... அதுல “Dodd-ஐ Teddy-யிடம் அனுப்பி வைக்கவும் அல்லது அடித்து விரட்டவும், இப்படிக்கு நடாலி”-ன்னு எழுதியிருக்கு... Dodd-ஐ ஒரு ஃபோட்டோ எடுத்து, அதில் அவனை அடிச்சு அனுப்பிட்டு, நடாலியை சந்திக்கவும்”-ன்னு எழுதிட்டு, Teddy-க்கு ஃபோன் பண்ணி அவசரமா வரசொல்லறான்... அவன் வர்றதுக்குள்ள தூங்கிடறான்... ஏன் ஹீரோ நடாலிக்கு உதவணும்...?

(11) ஹீரோ நடாலியோட வீட்டில் அவசரமா எதையோ எழுத, பேனாவைத் தேடிகிட்டு இருக்கான்... பேனா ரொம்ப நேரமா கிடைக்கல... அதுக்குள்ள என்ன எழுதணும்னே மறந்துடுது... அப்போ அங்கே நடாலி உதட்டில் ரத்த காயத்தோட வர்றா... Dodd-தான் அவளை அடிச்சதாகவும், ஹீரோ அவளுக்கு Dodd-கிட்ட இருந்து தப்பிக்க உதவி செய்யணும்னு சொல்லறா... அவமேல பரிதாபப்பட்டு, அவன் Dodd-ஐ அடிக்க அவன் தங்கியிருக்கிற ஹோட்டலுக்கு கிளம்பறான்... ஹீரோ என்ன எழுத பேனா தேடிகிட்டு இருந்தான்..?

(5) Sammy-யோட மனைவிக்கு சர்க்கரை வியாதி.. தினமும் இன்சுலின் ஊசி போடணும்... ஆனா, அதிக ஊசி போட்டாலும் உயிருக்கே ஆபத்து... உண்மையிலேயே Sammy-க்கு சில நிமிஷத்துல மறக்கற வியாதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்காக, 5 நிமிஷ இடைவெளியில திரும்ப திரும்ப Sammy-யை இன்சுலின் ஊசி போட சொல்லறாங்க.. Sammy-யும் எந்த ஞாபகமும் இல்லாம பலமுறை தொடர்ந்து ஊசி போடறதால அவரோட மனைவி இறந்துடறாங்க... Sammy-யை மனநல மருத்துவமனையில சேர்க்கப்படறாரு..

(10) ஹீரோ நடாலியோட வீட்டில் இருக்கான்... அப்போ நடாலி அங்கே வந்து, Dodd அவளைத் துரத்தறதாகவும், அவன்கிட்ட இருந்து காப்பாத்தினா பணம் தர்றதாகவும் சொல்லறா... ஹீரோ, தான் பணத்துக்காக வேலை பார்க்கிற அடியாள் இல்லைன்னு சொல்ல, பெரிய வாக்குவாதம் நடந்து, ஹீரோ நடாலியை அடிச்சுடறான்... அவளுக்கு உதட்டில் ரத்தம் வருது... அவள் அவனை திட்டிட்டு, அஞ்சு நிமிஷத்துல எல்லாம் மறந்துடுவன்னு சொல்லிட்டு, வீட்டுக்கு வெளியே போய் அஞ்சு நிமிஷம் நிக்கிறா... அவன் நடாலியின் ஃபோட்டோவில் அவள் கெட்டவள்னு எழுதணும்னு பேனா தேடறான்... (அதாவது முந்தைய காட்சியில சொன்னது பொய்.. நடாலியை Dodd அடிக்கல.. ஹீரோதான் அடிச்சுருக்கான்... அதையே மறந்துட்டான்...) நடாலியை ஹீரோவுக்கு எப்படி தெரியும்..?

(6) ஃபோன்ல அந்த முனையில இருக்கிறவன், ஹீரோவோட மனைவி இறந்ததைப் பத்தி கேட்கறான்... ஹீரோ, அவனோட மனைவி ரெண்டு பேரால தாக்கப்பட்டு இறந்துட்டதாகவும், காப்பாத்தப் போன ஹீரோவை ஒருத்தன் அடிச்சதுல, இந்த வியாதி வந்ததாகவும் சொல்லறான்... வந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் செத்துட்டதாகவும், John G அப்படிங்கிற இன்னொருத்தன் தப்பிச்சுட்டதாகவும் சொல்லறான்... ஆனால், போலீஸ் ஒரே ஒருத்தன்தான் வந்ததாக சொல்லி கேஸை மூடிட்டாங்கன்னும், அதனால இவனே கொலைகாரனைக் கண்டுபிடிக்கப்போறதாகவும் சொல்லறான்.. அந்த கொலைகாரனோட சில அடையாளங்களை ஹீரோ சேர்த்து வச்சுருக்கான்.. மறுமுனையில இருக்கிறவர், அந்த கொலைகாரன் ஒரு போதை மருந்து விக்கிறவன்னு சொல்லறான்.. ஹீரோ அதையும் அந்த குறிப்புல எழுதிக்கிறான்.. ரொம்ப நேரம் பேசினதுல, மறுமுனையில பேசறது யாருன்னே மறந்துடுது ஹீரோவுக்கு.. யாருன்னு கேட்டா, ஃபோன் கட் ஆகிடுது..

(9) ஹீரோ ஒரு கார்ல ஏறி உட்கார்றான்.. அவனோட பாக்கெட்ல, Bar-ல நடாலியை சந்திக்கச் சொல்லி ஒரு குறிப்பு எழுதி இருக்கு... அங்கே போய் நடாலியை சந்திக்கிறான்... நடாலி முதல்முறையாக ஹீரோவை சந்திக்கிறா... ஏன் அங்கே வந்திருக்கான்னு அவளுக்கும் தெரியல... அவனுக்கும் தெரியல... ஆனா, அவன் வச்சுருக்க குறிப்பு, நடாலி அவளோட காதலன் Jimmy-க்கு எழுதியது... ஹீரோ போட்டிருக்க ட்ரஸ்ஸும், அந்த காரும் Jimmy-யோடது.. அதனால, Jimmy-க்கு என்ன ஆச்சுன்னு சந்தேகப்பட்டு, ஹீரோவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறா.. Jimmy-க்கு என்ன ஆச்சு? Jimmy-யோட கார் ஹீரோவுக்கு எப்படி கிடைச்சது?

(7) இந்த ஃபோன் விஷயத்தை ஹீரோ மறக்கறப்போ, திரும்பவும் ஒரு ஃபோன் வருது... பேசறவன் தான் ஒரு போலீஸ் அதிகாரின்னும், ஹீரோவோட மனைவியைக் கொன்ன போதை மருந்து விக்கிறவனைப் பத்தின தகவல் வச்சுருக்கதாவும் சொல்லறான்.. அவன் பேரு Teddy-ன்னு சொல்லறான்.. அவனை சந்திச்சு ஹீரோ கொலைகாரனைப் பத்தின தகவல்களை வாங்கிகிட்டு, அவன் சொல்லற, யாருமில்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்கு தனியா போறான்... அங்கே வர்ற Jimmy அப்படிங்கிற போதை மருந்து விக்கிறவனைக் கொன்னுட்டு, அவன் உடலை ஃபோட்டோ எடுத்துக்கறான்... Jimmy-யோட உடையை எடுத்து போட்டுக்கிறான் ஹீரோ... அவன் எடுத்த போலராய்ட் ஃபோட்டோ கொஞ்சம் கொஞ்சமா கலரா மாறுது.. கூடவே கருப்பு வெள்ளைக் காட்சி, கலர் காட்சியா மாறுது...

இதுக்கப்பறம் முக்கியமான ட்விஸ்ட் வருது...

(8) அங்கே Teddy வர்றான்... Teddy யாருன்னே மறந்துட்ட ஹீரோ, அவனையும் அடிக்கிறான்... ஹீரோவோட மனைவியைக் கொன்னது யாருன்னு கேக்கறான்... அப்போதான், Teddy ஒரு உண்மையை சொல்லறான்.. உண்மையில ஹீரோவோட மனைவி அந்த சம்பவத்துல இறக்கவேயில்லை...!! அந்த சம்பவத்துல, ஹீரோவுக்கு மட்டும்தான் அடிபட்டது... ஹீரோவோட மனைவிக்கு எதுவும் ஆகல...

Sammy-ன்னு யாரும் கிடையாது...!! அது ஹீரோவோட கற்பனை... ஹீரோவோட மனைவிக்குதான் சர்க்கரை வியாதி... அவனோட சொந்த கதையைதான் Sammy-ன்னு வேற யாருடைய கதை மாதிரி சொல்லிகிட்டுத் திரியறான்... ஹீரோவோட மனைவி செத்தது அதிக இன்சுலின் போட்டதினால..!! அது மட்டும் இல்லை... உண்மையான John G-ஐ ஒரு வருஷம் முன்னாடியே ஹீரோ கொன்னுருக்கான்... ஆனாலும், கொன்னதை மறந்துபோய் திரும்பவும் John G-ஐ தேடி அலைஞ்சுருக்கான்... அந்த சமயத்துல Jimmy அப்படிங்கிற போதைமருந்து விக்கிறவனைப் பத்தி Teddy-க்கு தெரியவர, Jimmy-ஐ கொல்ல, ஹீரோவை பயன்படுத்திக்கிறான் Teddy..!!

இது எல்லாத்தையும் Teddy சொன்னப்பறம், ஹீரோவுக்கு அவனோட மனைவிக்கு சர்க்கரை வியாதி இருந்ததுன்னு ஞாபகம் வருது... இருந்தாலும் ஞாபகத்தை மாத்திகிட்டு இல்லவே இல்லைனு சாதிக்கிறான்... Teddy சொல்லறதெல்லாம் பொய்னு சொல்லறான்...

ஹீரோவைப் பொறுத்தவரை பழிவாங்கிறதுதான் அவன் வாழ்க்கையோட லட்சியம்... அவன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க, திரும்பவும் யாரையாவது பழிவாங்கணும்... அதுனால, Jimmy-ஐ கொன்னதை எடுத்த ஃபோட்டோவை எரிச்சுடறான்... திரும்பவும் யாரையாவது பழிவாங்கணும்னு நினைக்கிறான்...

ஹீரோவுக்கு அடுத்ததா ஒரு John G-ஐ தேடணும்... Teddy-யோட ஒரிஜினல் பேரு John Gammel-தானே... அதுனால அவன்தான் அடுத்த John G-ன்னு முடிவு பண்ணறான்... Teddy-யோட ஃபோட்டோல, “அவனை நம்பாதே..”-ன்னு எழுதறான்.. அவனோட லைசென்ஸ் நம்பரை குறிச்சுக்கிறான்.. Jimmy-யோட கார்ல ஏறி கிளம்பறான்..

அவ்ளோதாங்க... சுபம்..

ஆனா, விடையளிக்கப்படாத பல கேள்விகள் மனசுல ஓடிட்டு இருக்கு...

  • ஹீரோவோட மனைவி எப்படி இறந்தாங்க?
  • Teddy போலீஸ்தானா?
  • ஹோட்டல்ல இருந்து ஹீரோ யார்கிட்ட ஃபோன்ல பேசறான்?
  • உண்மையான John G யாரு?
  • Jimmy-க்கும் Teddy-க்கும் என்ன சம்பந்தம்..?

இதுக்கான பதில்கள், பல மறைமுகமான விஷயங்கள், ஆச்சரியமான தகவல்கள் எல்லாம் அடுத்த போஸ்ட்ல பார்ப்போம்... நாளைக்கே...





Related Posts with Thumbnails

38 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. முதல்ல ஓட்டுக்களை போட்டுக்கறேன்.;)

    ReplyDelete
  3. அருமையான இரண்டாம் பாகம் ஜெய்.
    என் நண்பர்கள் 2 பேருக்கு சொல்றேன்.பார்த்து விளங்கிக்கட்டும்.

    ReplyDelete
  4. //மனைவிக்கு சர்க்கரை வியாதி இருந்ததுன்னு ஞாபகம் வருது...//

    இங்க எதுவுமே நம்பத்தன்மையில் இல்லை ஜெய். அவன் மனசில் ஓடும் அந்தக் காட்சி நிஜமா இருக்கனும்னு அவசியமில்லை.

    டெடி சொல்வது உண்மைன்னா மட்டும்தான் அந்த காட்சி நிஜம்.

    ஆனா.. யார் சொன்னது உண்மைங்கறதுதான் பிரச்சனை.

    ReplyDelete
  5. enna uzaippu!!!!!. jai thalaya suththuthu athe neraththula padaththai paakkura aarvaththaiyum thoonduthu. supera irukku. Thanks jai.

    ReplyDelete
  6. ஆக‌ ந‌ட்டாலி தான் வில்லியா?? அடுத்த‌ பாக‌த்தை சீக்கிர‌ம் போடுங்க‌..!!

    ReplyDelete
  7. நன்றி ரகு..

    நன்றி கார்த்திக்கேயன்... 2 பேருக்கு நல்லதுன்னா, என்ன வேணும்னாலும் பண்ணலாம்.. :)

    நன்றி பாலா...
    // இங்க எதுவுமே நம்பத்தன்மையில் இல்லை ஜெய்..//
    ரொம்ப சரிதான் பாலா... இதே வரியை உங்க பதிவுல எழுதி இருந்தீங்க.. (http://www.hollywoodbala.com/2009/03/memento-2000.html) இன்னும் ஞாபகம் இருக்கு.. :)
    என்னோட இந்த போஸ்ட்ல மேலோட்டமான பார்வையில் எழுதப்பட்ட கதை மட்டும்தான் இருக்கு... அடுத்த போஸ்ட்ல இந்த மாதிரி சில பல விஷயங்களை விவாதிக்கலாம்... நானும் முழுசா புரிஞ்சுகிட்டேனான்னு சத்தியமா தெரியாது...

    ஆனா ஒரு கேள்வி, Sammy-யோட மனைவி இறந்துட்டாங்க.. Sammy-க்கு அதுகூட ஞாபகம் இல்ல.. அப்படின்னா, அவ்ங்க ரெண்டு பேர் மட்டும் வீட்ல இருந்தப்போ நடந்த காட்சி (sammy-யோட மனைவி இறக்கும் காட்சி) ஹீரோவுக்கு எப்படி தெரியும்..? ;-)

    I love to discuss this movie's open ends with people.. டிஸ்கசன் ஸ்டார்ட்...

    ReplyDelete
  8. நன்றி ஜீவன்பென்னி,
    ஒரு தடவை படம் பார்த்துட்டு அப்பறம் படிங்க.. நல்லா புரியும்... (படம் எப்படியும் முதல் தடவை புரியாது... )

    நன்றி பாரதி,
    நடாலி கெட்டவ... வில்லின்னு சொல்ல முடியாது.. ஹீரோவை பயன்ப்டுத்திக்கறா... ஹீரோ கூட ஒரு வகையில வில்லந்தான்... அடுத்த போஸ்ட்ல டிஸ்கஸ் பண்ணிடுவோம்...

    //ஜெய் said..
    இந்த போஸ்ட்ல மேலோட்டமான பார்வையில் எழுதப்பட்ட கதை மட்டும்தான் இருக்கு //
    அதாவது முதல்முறை பார்த்தா பொதுவா எப்படி தோணுமோ அப்படியே எழுதி இருக்கேன்... இன்னும் பல ட்விஸ்ட் அடுத்த பதிவுல... :)

    ReplyDelete
  9. நண்பரே,

    சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள், அதிரடி தொடரட்டும்.

    ReplyDelete
  10. விடியற்காலை மூன்று மணிக்கு ஒரு அட்டெண்டன்ஸ்.

    அதிரடி தொடரட்டும்.

    ReplyDelete
  11. எனக்கு காட்சிகள் எல்லாம் மறந்துடுச்சி. எதுக்கும்.. இன்னைக்கு முடிஞ்சா பார்த்துட்டு.. நாளைக்கு கோதாவில் இறங்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  12. இவ்வளவு விவரமாகவும் நுணுக்கமாகவும் அலசும் விமர்சனம் இப்போதுதான் படிக்கிறேன் ஜெய்...
    உங்களுக்கு என் பாராட்டுக்கள்

    ReplyDelete
  13. உங்களுக்கு ரொம்பப் பொறுமைங்க. ஒவ்வொரு காட்சியையும் விவரிச்சு எழுதிருக்குறது ஆச்சரியமா இருக்கு. ரொம்ப நல்லாருக்கு.

    ReplyDelete
  14. ///. நானும் முழுசா புரிஞ்சுகிட்டேனான்னு சத்தியமா தெரியாது...
    ///
    மெய்யாலுமே உண்மை. எல்லாருக்கும் இதுதான் நெலமை.

    ///எனக்கு காட்சிகள் எல்லாம் மறந்துடுச்சி. எதுக்கும்.. இன்னைக்கு முடிஞ்சா பார்த்துட்டு.. நாளைக்கு கோதாவில் இறங்க முயற்சிக்கிறேன்.///

    நாளைக்கு நல்லா இருக்கும்.

    ReplyDelete
  15. //ஹீரோ கூட ஒரு வகையில வில்லந்தான்...//

    கரீக்ட்டு.

    நான்கூட following பத்தி எழுதும் போது "நோலனின் எல்லா படங்களிலும் கதாநாயகன் யார், வில்லன் யார் என நமக்கு தெரிகிறதோ அது அப்படியே தலைகீழாக மாறிவிடும்"னு சொன்னேன், ஹாலிபாலாகூட "யோசிச்சி பார்த்தா.. பெரும்பாலான படங்கள் அப்படிதான் தெரியுது! :)" னு சொன்னாரு. டார்க்நைட்ல கூட பேட்மேன் யூ ஆர் தெ பெஸ்ட் அமாங் அஸ் னு சொல்றது இதுதானே.

    ReplyDelete
  16. ரைட்டு.. திரும்ப படத்தை பார்த்தாச்சி. நாளைக்கு ரெடி!!! :)

    சுப..., நாமல்லாம் யோசிக்கிற டைப்பா? சும்மா அடிச்சி விட வேண்டியதுதானே!! :)

    ReplyDelete
  17. நன்றி கனவுகளின் காதலர், ராமசாமி, கே.ஆர்.பி.செந்தில், விக்னேஷ்வரி...

    விஸ்வா... மூணு மணிக்கு என்ன பண்ணிட்டு இருக்கீங்க?? ;)

    // சுப.தமிழினியன் said...
    நோலனின் எல்லா படங்களிலும் கதாநாயகன் யார், வில்லன் யார் என நமக்கு தெரிகிறதோ அது அப்படியே தலைகீழாக மாறிவிடும் //
    சரியா சொன்னீங்க... Insomnia-ல கிட்டத்தட்ட இதுதான் போராட்டமே... வில்லன் ஹீரோ மாதிரி பேசுவான்... ஹீரோ வில்லன் மாதிரி கொலை பண்ணிட்டு முழிச்சுட்டு இருப்பாரு... Following, Memento, Dark Knight பத்தி சொல்லவே வேணாம்.. அதேதான்...

    // ஹாலிவுட் பாலா said...
    ரைட்டு.. திரும்ப படத்தை பார்த்தாச்சி. நாளைக்கு ரெடி!!! :) //
    ஆஹா... ஊரு ஒன்னு கூடிட்டாங்கப்பா... நாளைக்கு என்னை துவைச்சு காயப் போடப்போறாங்க...
    அப்பறம் தல, அந்த கேள்விக்கு பதில் ரெடியா?

    ReplyDelete
  18. படம் பார்த்தாச்சு. படம் புரிஞ்ச மாதிரி இருந்துச்சு. ஆனா கடைசியா இருக்குற கேள்விக்கு விடைமட்டும் தெளிவா தெரியல. இன்னோர் முறை பார்த்துட வேண்டியதுதான்.

    ReplyDelete
  19. //(5) Sammy-யோட மனைவிக்கு சர்க்கரை வியாதி.. தினமும் இன்சுலின் ஊசி போடணும்... ஆனா, அதிக ஊசி போட்டாலும் உயிருக்கே ஆபத்து... உண்மையிலேயே Sammy-க்கு சில நிமிஷத்துல மறக்கற வியாதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்காக, 5 நிமிஷ இடைவெளியில திரும்ப திரும்ப Sammy-யை இன்சுலின் ஊசி போட சொல்லறாங்க.. Sammy-யும் எந்த ஞாபகமும் இல்லாம பலமுறை தொடர்ந்து ஊசி போடறதால அவரோட மனைவி இறந்துடறாங்க... Sammy-யை மனநல மருத்துவமனையில சேர்க்கப்படறாரு..//

    இதுல தவறு இருக்கிறதா நினைக்கிறேன். ஸேமி மனைவி ஒரு கட்டத்துல வெறுத்து போய்விடுகிறார். இனி, பணம் கிடைக்காது என்பதால், இந்த முடிவை எடுக்கிறார். அதாவது, உயிர் போகும் தருவாயிலாவது ஸேமியின் Intution-ல் திரும்ப திரும்ப ஒரே செய்கை செய்வதை உணர்ந்து தன்னை காப்பாற்றுவாரா என்று சோதிக்கிறாள். இதில் தவறினால் அவள் செய்துகொள்வது தற்கொலை.

    //இது எல்லாத்தையும் Teddy சொன்னப்பறம், ஹீரோவுக்கு அவனோட மனைவிக்கு சர்க்கரை வியாதி இருந்ததுன்னு ஞாபகம் வருது... இருந்தாலும் ஞாபகத்தை மாத்திகிட்டு இல்லவே இல்லைனு சாதிக்கிறான்... Teddy சொல்லறதெல்லாம் பொய்னு சொல்லறான்...//

    டெட்டி சொல்வதை வைத்து கற்பனை மட்டுமே செய்து பார்க்கிறான் என்று நினைக்கிறேன். பின் தனக்கு தானே 'இதெல்லாம் இல்லை' என்று சொல்லி கொள்கிறான்.

    இந்த படத்தில் நாயகனை போலவே படம் பார்க்கும் பார்வையாளனுக்கும் குழப்பம் கொடுக்கிறார் இயக்குநர். நாயகன் நல்லவனா? கெட்டவனா? என்று பார்வையாளனே முடிவெடுத்துக்கிட்டும் என்று இயக்குநர் விட்டுவிட்டார்.

    ReplyDelete
  20. ரைட்டு ...உடனே பாத்துட வேண்டியது தான் ......

    ReplyDelete
  21. நாளைய பாகத்தை எதிர்பார்க்கிறேன் !!

    ReplyDelete
  22. நன்றி ஜீவன்பென்னி... படம் பார்த்தாச்சா... சூப்பர்... :)



    நன்றி சீனு... நீங்க சொல்லியிருக்கது சரியே... அதாவது பூவை பூ-ன்னு சொல்லலாம்... புய்பம்னும் சொல்லலாம்... நீங்க சொல்லற மாதிரியும் சொல்லலாம்.. :-P

    // உண்மையிலேயே Sammy-க்கு சில நிமிஷத்துல மறக்கற வியாதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்காக //
    நான் சுருக்கமா சொல்லியிருக்கற இதத்தான், நீங்க விரிவா சொல்லி இருக்கீங்க.. அதாவது ஸேமிக்கு இருக்கது physical ப்ராப்ளம் இல்லைன்னு ஹீரோ சொல்லறான்... மன அளவுலதான் வியாதி இருக்கும்னா, அவர் மனைவி பண்ணற தற்கொலைக்கு ஈடான முயற்சியின்போது, அந்த மனவியாதி தெளிய வாய்ப்பு இருக்கும்னு நம்பறா... அப்படி இல்லைன்னா, சாகவும் தயாரான ஒரு விரக்தி நிலைமையில இருக்கா... அதுனால, அவன் வியாதியை போக்கவோ/புரிஞ்சுக்கவோ அவ எடுக்கற கடைசி முடிவு அது...

    // டெட்டி சொல்வதை வைத்து கற்பனை மட்டுமே செய்து பார்க்கிறான் என்று நினைக்கிறேன் //
    இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம்... திரையில என்ன காண்பிக்கறாங்களோ, அதை மட்டும் இப்போ எழுதியிருக்கேன்... Insights எல்லாம் கண்டிப்பா நாளைக்கு போஸ்ட்ல பார்த்துடலாம்.. டிஸ்கசன்ல நீங்களும் கலந்துக்கணும்..

    // நாயகன் நல்லவனா? கெட்டவனா? என்று பார்வையாளனே முடிவெடுத்துக்கிட்டும் என்று இயக்குநர் விட்டுவிட்டார். //
    ரொம்ப சரி... ஆனா எந்தெந்த விஷயங்களை நமக்கு முடிவெடுக்க விட்டுருக்கார்... எந்தெந்த விஷயங்களை படத்துலயே காட்டி இருக்காங்க அப்படிங்கறதுதான் நாம யோசிக்க வேண்டிய விஷயம்னு நினைக்கிறேன்...



    நன்றி சுந்தர், இலுமி...

    ReplyDelete
  23. //ஹாலிவுட் பாலா said...
    எனக்கு காட்சிகள் எல்லாம் மறந்துடுச்சி.//

    இதே நிலை தான் எனக்கும் :)ஆனா உங்க போஸ்ட் படிச்சப்புறம் நிறைய ஞாபகம் வந்துருக்கு.. நாளைக்கு பாப்போம்..
    அப்புறம்.., நல்ல உழைப்பு இந்த போஸ்டில்.. ஹாலிவுட் பாலாவின் Pulp Fiction போஸ்டை போல :)

    ReplyDelete
  24. உண்மையிலேயே பாராட்ட வேண்டியது உங்களைதான் நல்ல அலசல் மற்றும் பொருமையா போட்டிருக்கீங்க ..வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  25. கதையை நல்லா விவரமா சொல்லியிருக்கீங்க. உடனே படம் பார்க்கணும்னு தோணுது.

    ReplyDelete
  26. //நண்பரே,

    சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள், அதிரடி தொடரட்டும்.//

    ரிப்பீட்டு !! அருமை !! காலையிலிருந்து பயங்கர வேலையாக இருப்பதால், இப்போது தான் படித்தேன் . . மிகவும் பிடித்தது. . .தொடருங்கள் அதிரடியை !

    ReplyDelete
  27. //ஆனா ஒரு கேள்வி, Sammy-யோட மனைவி இறந்துட்டாங்க.. Sammy-க்கு அதுகூட ஞாபகம் இல்ல.. அப்படின்னா, அவ்ங்க ரெண்டு பேர் மட்டும் வீட்ல இருந்தப்போ நடந்த காட்சி (sammy-யோட மனைவி இறக்கும் காட்சி) ஹீரோவுக்கு எப்படி தெரியும்..?//


    தெரியனும்னு அவசியமே கிடையாது. படத்தில் வெகு கடைசியா, அந்த கருப்பு வெள்ளைக் காட்சியில்.. ஸேமியை காட்டும் அந்த மருத்துவமனைக் காட்சியில், ஸேமியின் முகம் மாறி.. ஒரு செகண்டுக்கும் குறைவா.. லென்னியின் முகம் வரும்.

    இதை லிங்க் பண்ணினா... டெடி சொல்வது உண்மை.


    இதை வேற மாதிரி, லென்னி சொல்வது உண்மைங்கற மாதிரி யோசிப்போம்.

    க்ளெய்ம் அட்ஜஸ்டர் / இன்வெஸ்டிகேட்டர்-ங்கற முறையில்.. ஸேமியின் மனைவியின் மரணம் + ஸேமி... மருத்துவமனையில் அட்மிட் ஆவது ரெண்டும்.. லென்னிக்கு 100% தெரிந்தே ஆகணும்.

    அதில் ஸேமியின் மனைவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் அளவுக்கதிகமான இன்ஸுலின் இருப்பதும் தெரிந்திருக்கும்.

    ஆனா... ஸேமி.. ஒவ்வொரு 5-10 நிமிடத்திலும் போடுவது மாதிரி காண்பிப்பது வேணும்னா, லென்னியின் கூற்றாகவோ.. அல்லது.. போலீஸின் சந்தேகமாகவோ.. இன்வெஸ்டிகேஸனில் வந்திருக்கலாம்.

    விவாதம் எப்படி பண்ணுறதுன்னுதான் தெரியலை. விவாதம் பண்ண.. ஒரு சைடில் இருக்கனும். இங்கே அது சாத்தியமில்லைன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  28. நன்றி பிரசன்னா, ஜெய்லானி, ஜெயந்தி, கருந்தேள்...

    பாலா... கவுத்துட்டீங்க.. அடுத்த போஸ்ட்ல எழுதறதுக்கு, ஸ்க்ரீன்ஷாட் எல்லாம் போட்டு வச்சுருந்தேன்... எல்லாத்தையும் நச்சுனு சொல்லிட்டீங்க... அது சரி... தல இருக்கும்போது வால் ஆட முடியுமா...

    இருந்தாலும் எழுதி வச்சத போஸ்ட் பண்ணித் தொலையறேன்...

    ReplyDelete
  29. அப்புறம்... டெடி தானொரு போஸிஸ்-ன்னு சொல்வது!!

    ஆஃபீஸர் கேம்பல்-ன்னு லென்னி கூப்பிட்டதும்..., டெடி உடனே... மோட்டல் கவுண்டரில் இருக்கும் அட்டண்டரை ஒருமுறை, அவர் கவனிக்கிறாரா-ன்னு பார்ப்பார். அது.. ஒருவேளை டெடி போலீஸ் இல்லையோன்னு ஒரு சந்தேகம் வர வாய்ப்பு இருக்கு.

    ஆனா மோட்டலை விட்டு வெளியே வந்ததும்.. தான் அண்டர்கவரில் இருப்பதா சொல்லும் போது, போன பாராவின் சந்தேகம் அடிபடும்.

    அப்புறம்... கடைசியில் (அல்லது முதலில்?) டெடியை, லெனி அடித்து, டெடியின் பாக்கெட்டில் இருந்து அடையாள அட்டையை எடுத்துப் பார்த்து, ‘நீ நிஜம்மா போலீஸ்தான்’ -ன்னு சொல்லும் போது...

    அது போலியாகவும் இருக்கலாம்!!!!!

    =======

    அப்புறம்... நாடலி வீட்டில் இருந்து லென்னி வெளியே வரும்போது, நாடலி யாருன்னு மறந்திருக்கும்.

    அப்போ நீ நாடலியோட வீட்டில் இருந்துதான் வெளியே வர்ற. எனக்கு நாடலியை தெரியும். ஆனா அவளுக்கு என்னைத் தெரியாதுன்னு சொல்லும் டெடி..,

    மோட்டலில்.. டாட்-ஐ அடித்து போட்டிருக்கும் போது, யாரு நாடலி-ன்னு கேட்பார்.

    இது நம்பகத்தன்மையா.. அல்லது திரைக்கதை குழப்பமா-ன்னும் சொல்ல முடியாது.

    திரைக்கதை பிரச்சனைன்னாலும்... டெடி சொல்வது எதுவும் உண்மையில்லன்னு யோசிச்சா... திரைக்கதை சரின்னு ஆய்டும்.

    சரியா???????? :)

    ReplyDelete
  30. ஹைய்யோ.. தல.. கொஞ்சம் கம்முன்னு இருங்க!!! இதெல்லாம் ரொம்ப ஓவரு!!!

    ReplyDelete
  31. தல.. நீங்க ஃபுல் ஃபார்ம் போல.. என் போஸ்ட்டை விட உங்க கமெண்ட்லதான் நிறைய மேட்டர் இருக்குது..

    ReplyDelete
  32. unga kaala kaatunga... apdiye saasthangama vizhunthuda vendiyathu than... ithuku mela theliva ezhutha mudiyathunga...

    indha post ah english la maathi anupuna Nolan-ku assitant ah sera vaaipirukku nu patchi solluthu...

    itha udayanithi stalin-ku apdiye anupuna 7-m arivu director Murugadoss illa neenga than - ithayum patchi thanga solluthu :)

    ReplyDelete
  33. The drug dealer Jimmy says "Sammy" and dies after that. How come he knows about sammy? Or Jimmy was the one with whom the hero was talking on the phone? Or Hero and Jimmy had a meeting already?

    Please clarify if you have answer.

    BTW this is a very good post. i really liked it and saw the movie again.

    ReplyDelete
  34. The drug dealer Jimmy says "Sammy" to Hero and dies after that.

    How come he knows about Sammy?

    Or Jimmy was the one with whom the hero was talking on the phone?

    Or Hero and Jimmy had a meeting already?

    Please clarify if you have answer.

    BTW this is a very good post. i really liked it and saw the movie again.
    Still i am left with the same questions i asked above.

    ReplyDelete
  35. Thats a good question, CSB...
    ஆனா, அதுக்கு என்கிட்ட பதில் இல்ல... :D
    ஜிம்மிக்கு ஸேமி பத்தி தெரியறது completely open to audience-னு நினைக்கிறேன்... ஒரு க்ளூவும் கிடையாது... உங்களுக்கு பிடிச்ச மாதிரி நினைச்சுக்குங்க... டெடி சொல்லற மாதிரி ஜிம்மி அந்த ஹோட்டலுக்கு வந்தப்போ லென்னியைப்பத்தி அவனுக்கு எதேச்சையா தெரிஞ்சு இருக்கலாம்... ஒருவேளை, டெடி ஜிம்மி ரெண்டு பேரும் ஒரிஜினல் John G-யோட கூட்டாளிகளா இருக்கலாம்...

    // Hero and Jimmy had a meeting already? //
    அது கன்ஃபர்ம்... மீட் பண்ணியிருக்காங்க... ஜிம்மி பார்த்தவுடனே லென்னியை அடையாளம் கண்டுக்கறான்... நடாலிகிட்ட அவந்தான் லென்னி பத்தி சொல்லியிருக்கான்... ஆனா அப்படி மீட் பண்ணாங்கன்னுதான் தெரியல...

    பாலா... உங்களுக்கு ஏதாச்சும் தெரிஞ்சதா...?

    ReplyDelete
  36. ஜெய்...எனக்கு படம் பாக்கும்போது அவ்வளவாக புரியவும் இல்லை, பிடிக்கவும் இல்லை, இப்ப படிச்சவுடனே லைட்ட புரியிரா மாதிரி இருக்கு, திரும்ப பார்த்துட்டு வர்றேன். ரொம்ப சூப்பரா எழுதியிருக்கீங்க மச்சான், விவரிப்புகள் அருமை !!!

    ReplyDelete
  37. //The drug dealer Jimmy says "Sammy" to Hero and dies after that//
    இங்க தான் முக்கியமான ட்விஸ்ட் இருக்கு
    Lenny Jimmyயை அடிக்கும் போது Sammy பேர சொல்லல
    ஆனா Lenny Jimmy ய தூக்கிகிட்டு போகும் போது மட்டும்
    Sammy பேர சொல்லுவான்
    அப்படின்னா Lenny கையில பச்ச குத்தி இருந்த Remember Sammy jakins ங்கிற வார்தைய
    சொல்லி இருக்கணும். அதை தான் Lenny தவறா நினைக்கிறான்.

    ReplyDelete