Tuesday, June 8, 2010

Memento-வின் புதிர்கள் - பாகம் 3

முதல் போஸ்ட்ல, இந்தப் படத்துல என்ன ஸ்பெஷல்னும், கதையோட அமைப்பு எப்படி இருக்குதுன்னும் பார்த்தோம்..

ரெண்டாவது போஸ்ட்ல, கதையைப் பார்த்தோம்..

இந்த போஸ்ட்ல, படத்துல இருக்க புதிர்களையும், ஆச்சரியமான விஷயங்களையும் பார்ப்போம்...

நம்பகத்தன்மை இல்லாத விவரிப்பு (Unreliable Narration)

படத்துல நமக்கு கதை சொல்லற கதாபாத்திரமே, பொய் சொல்லற ஒருத்தராகவோ (Usual Suspects) அல்லது இல்லாத விஷயங்களை கற்பனை பண்ணிக்கிறவராவோ (Fight Club) அல்லது மனநோய் இருக்கறவராகவோ (A Beautiful Mind) இருந்தா, நமக்கு சொல்லப்படற கதையே உண்மையான்னு தெரியாது... இந்த வகை விவரிப்புதான் Unreliable Narration... அதேதான் இந்தப் படத்துலயும் வருது... ஹீரோவுக்கே மறந்து போகிற வியாதி... படம் முழுக்க அவருக்கு தோணறதை நமக்கு சொல்லிகிட்டு இருக்காரு... அதையெல்லாம் முழுசா நம்ப முடியாது... மேலே உதாரணம் சொன்ன படங்கள்ல எல்லாம், கடைசியா எது உண்மை, எது ஹீரோவோட கற்பனைன்னு சொல்லிடுவாங்க... ஆனா இந்தப் படத்துல அப்படியெல்லாம் சொல்லாம ஃப்ரீயா விட்டுட்டாங்க... ஆனா, அங்கங்க சில க்ளூ இருக்கு... அத வச்சு சில விஷயங்களை ஊகிக்கலாம்... மத்த விஷயங்களை நமக்கு பிடிச்சா மாதிரி வச்சுக்க வேண்டியதுதான்...

ஹீரோ விவரிக்கறதைதான் நமக்கு படமா காட்டறாங்க... இந்தப் படத்துல பல இடங்கள்ல வேணும்னே செய்யப்பட்ட தவறுகள் ஹீரோவோட விவரிப்பின் நம்பகமின்மையை உணர்த்துது... ஹீரோ வச்சுருக்கற, Teddy-யோட லைசென்ஸ்ல தேதி Februrary 29, 2001 அப்படின்னு இருக்கு... (2001 லீப் வருஷம் இல்ல...) பல இடங்கள்ல ஹோட்டல் பேரு, Teddy-யோட கார் நம்பர் (71U அல்லது 7IU) எல்லாம் எழுத்துப்பிழையோட மாறி மாறி இருக்கு... (இயக்குனர் நோலன் இதையெல்லாம் தெரியாம பண்ணறவர் இல்ல...) இதெல்லாம் ஹீரோ நமக்கு விவரிப்பதை நம்பமுடியாதுன்னு சொல்லறமாதிரி இருக்கு.. அவனோட கற்பனை அல்லது குழப்ப மனநிலையைக் காட்டற மாதிரி இருக்குது...

சரி.. சில கேள்விகளுக்கான விடையைப் பார்ப்போம்...

யாரு இந்த Teddy?

  • அவன் சொல்லற மாதிரியே போலீஸா இருக்கலாம்...
    • கெட்ட போலீஸா இருந்தா: Jimmy அப்படிங்கிற போதை மருந்து கடத்துறவன் கிட்ட இருக்கற பணத்தைப் பறிக்க, Jimmy-யைக்கொல்ல முடிவு பண்ணி, அதை அவனே செய்யாம, இப்படி ஞாபக மறதி இருக்கற ஹீரோவை அந்த கொலைக்கு உபயோகப்படுத்தி இருக்கலாம்.. இதுக்குதான் வாய்ப்பு அதிகம்னு நினைக்கிறேன்..
    • நல்ல போலீஸா இருந்தா: இப்படி பழிவாங்க அலையற ஹீரோ மேல பரிதாபப்பட்டு, ஹீரோ John G-ன்னு ஒருத்தனைக் கொன்னுட்டா, பழிவாங்கும் படலம் முடிஞ்சுடும்னு நினைச்சு, போதைப்பொருள் கடத்தற Jimmy-யை கொல்ல வச்சுருக்கலாம்... (இதைத்தான் Teddy சொல்லறான்...)
  • போதைப்பொருள் கடத்தற Jimmy-யோட கூட்டாளியா இருக்கலாம்... ஹீரோவை ஏமாத்த, போலியான போலீஸ் அடையாள அட்டை வச்சுருக்கலாம்... ஏன்னா, அந்த ஹோட்டல் ரிசப்ஷன்ல இருக்கறவன் முன்னாடி போலீஸ்னு சொல்ல அவன் பயப்படறான்... Jimmy-யோட பணத்தை சுருட்ட, ஹீரோவை விட்டு Jimmy-யை கொன்னுருக்கலாம்... (க்ளைமாக்ஸ்ல Teddy-யே ஹீரோகிட்ட அவனும் போதைப்பொருள் வச்சுருந்ததா சொல்லறான்... ஆனா அவனையும் நம்பமுடியாது...)
  • Teddy-யே உண்மையான John G-யா இருக்கலாம்... அவனை ஹீரோ கொல்லறதை தடுக்க, Jimmy-தான் John G-ன்னு பொய் சொல்லி இருக்கலாம்.. (எத்தனை ‘லாம்’...)

நடாலி ஏன் ஹீரோவுக்கு அந்த லைசென்ஸைக் கண்டுபிடிக்க உதவணும்?

  • ஹீரோ Dodd-ஐ அடிச்சு நடாலிக்கு உதவியதால, அவ திரும்ப நல்ல மனசோட ஹீரோவுக்கு உதவி இருக்கலாம்...
  • இல்லைன்னா, Teddy-தான் Jimmy-யைக் கொன்னதுன்னு ஊகிச்சு, Teddy-யைக் கொல்ல ஹீரோவுக்கு உதவி இருக்கலாம்...

ஹீரோவோட மனைவி எப்படி இறந்தாங்க?

  • ஹீரோ சொல்லற மாதிரி கொலை செய்யப்பட்டு இறந்திருக்கலாம்...
  • Teddy சொல்லற மாதிரி, ஹீரோவோட மனைவிக்குதான் சர்க்கரை வியாதியா இருந்து, அதிக இன்சுலின் போடப்பட்டு இறந்திருக்கலாம்... அதாவது, Sammy-யோட மொத்த கதையும் ஹீரோவோட சொந்தக் கதையா இருக்கலாம்... இதுக்குதான் வாய்ப்புகள் அதிகம்... ஏன்னா, படத்துல சில இடங்கள்ல இதுக்கு க்ளூ இருக்கு..

க்ளூ 1: Sammy-யோட மனைவி இறந்ததுக்கு அப்பறம், அவரை மனநல மருத்துவமனையில சேர்க்கறாங்க இல்ல..? அப்போ கடைசியா Sammy-யைக் காண்பிக்கறப்போ, யாரோ கேமிராவுக்கு முன்னாடி நகர்ந்து போறாங்க.. நகர்ந்து போனப்பறம், ஒரு அரை நொடி Sammy-க்கு பதிலா ஹீரோவைக் காண்பிக்கிறாங்க...!!! சத்தியமா நானும் கவனிக்கலைங்க... IMDB-ல போட்டுருந்தாங்க.... அப்பறம், படத்தை ஃப்ரேம் ஃப்ரேமா ஓட விட்டு பார்த்ததுல தெரிஞ்சது... (Fight Club-லயும் இப்படி ஒரு க்ளூ வரும்.. கவனிச்சு இருக்கீங்களா?) அந்த அரை நொடி காட்சியை நாலு ஃபோட்டோவா எடுத்து போட்டிருக்கேன்...

க்ளூ 2: நடாலி வீட்ல ஹீரோ டிவி பார்த்துகிட்டு இருக்கப்போ, கையில ரிமோட்டை வச்சுகிட்டு இருப்பான்.. கையில சிலவர் மோதிரம் போட்டு இருப்பான்... அந்த கையைப் பார்த்தவுடனே திடீர்னு அவனுக்கு ஏதோ தோணும்... நடுவுல ஒரு அரை நொடிக்கு, அவனுக்கு தோணறதைக் காண்பிப்பாங்க... அது என்னன்னு பார்த்தா, க்ளோஸ் அப்ல ஒரு கை இன்சுலின் ஊசி வச்சுகிட்டு இருக்கறதைக் காண்பிப்பாங்க... அந்தக் கையிலயும் சில்வர் மோதிரம்...!!! அதனால, அவன் மனைவிக்கு சர்க்கரை வியாதி இருந்து இருக்கலாம்.. ஆனா, நல்லா கவனிச்சதுல தெரிஞ்சது, Sammy-யும் அதே மோதிரம் போட்டுருக்காரு... அதே மாதிரி க்ளோஸ்-அப் இன்சுலின் காட்சி மற்றொரு முறை Sammy-யும் அவர் மனைவியையும் வச்சு வருது...

க்ளூ 3: John G-ஐ கொன்னப்பறம் கொன்னுட்டேன்அப்படின்னு பச்சை குத்திக்கறதுக்காக, மார்பில் காலி ஒரு இடத்தை வச்சுருக்கான் ஹீரோ... ஆனா, படத்தின் கடைசிக் காட்சியில, ஹீரோ தன்னோட மனைவியைப் பத்தி சில நொடிகள் நினைச்சுப் பார்க்கிறான்... அந்த சின்ன ஃப்ளாஷ்பேக்ல, அவனோட மார்புல அதே இடத்துல I’ve done it”-னு பச்சை குத்தியிருக்கு...!!! அதாவது, அவன் மனைவி இன்சுலின் ஊசியால இறக்கறதுக்கு முன்னாடியே, ஹீரோ உண்மையான John G-ஐ கொன்னுருக்கலாம்..

க்ளூ 4: Sammy-யோட மனைவி அதிக இன்சுலின் போடப்பட்டு இறந்துட்டாங்க... Sammy-க்கு அப்ப நடந்தது எதுவுமே ஞாபகம் இல்லை... அப்பறம் Sammy-யோட மனைவி எப்படி இறந்தாங்கன்னு ஹீரோவால எப்படி இவ்வளவு சரியா விவரிக்க முடியும்? இதுவும் ஒரு க்ளூவா இருக்கலாம்... ஹீரோவோட கற்பனைதான் Sammy அப்படிங்கிறதுக்கு... (இல்லைன்னா, ஹாலிவுட் பாலா போன போஸ்ட் கமெண்ட்ல சொன்ன மாதிரி, ஹீரோவோ, போலீஸோ, Sammy-யோட மனைவியின் போஸ்ட்மார்ட்டம் ரிபோர்ட்டை வச்சு இதை ஊகிச்சு இருக்கலாம்)

இந்த நாலு க்ளூ வச்சு பார்த்தா, ஹீரோதான் Saamy-யா இருக்கலாம்.... இவனாவே, இவன் மனைவி கொலைசெய்யப்பட்டதா நினைச்சுகிட்டு, பழிவாங்க சுத்திகிட்டு இருக்கலாம்...

இல்லைன்னா, இவனே ஒரு unreliable narrator... இவனோட நினைவில் இருந்து வர்ற இந்த நாலு க்ளூவுமே நம்பகத்தன்மையில்லாம இருக்கலாம்.. அதாவது, Sammy-ன்னு நிஜமாவே யாராவது இருந்து, அப்பப்போ (இந்த க்ளூ வர்ற இடங்கள்ல), இவனே தன்னை Sammy-ன்னு நினைச்சுக்கறதா இருக்கலாம்...

ஹோட்டல்ல இருந்து ஹீரோ யார்கிட்ட ஃபோன்ல பேசறான்? (கருப்பு வெள்ளை காட்சிகள்ல)

அது Teddy-யாதான் இருக்கணும்... Teddy-க்கு Jimmy-யை கொல்லணும்... அதை அவனே செய்யாம, பழிவாங்க சுத்திகிட்டு இருக்கற ஹீரோவுக்கு ஃபோன் பண்ணி, கொலைகாரன் John G ஒரு போதை மருந்து கடத்தறவன்னு பொய் சொல்லி அதை ஒரு தடயமா ஹீரோவை குறிப்பு எழுத வைக்கிறான்... அப்பறமா, Jimmy-தான் அந்த கொலைகாரன்னு சொல்லி, அவனைக் கொல்ல அனுப்பி வைக்கிறான்... (இதுக்கு வேற பதில்கள் இருக்குதா..?)

ஹீரோ சொல்லற Sammy கதையை, ஏற்கனவே பலமுறை தன்கிட்ட சொல்லியிருக்கறதா Teddy சொல்லறான்... அப்பறம் ஏன் கருப்பு வெள்ளை காட்சிகள்ல, ஃபோன்ல திரும்பவும் Teddy ஹீரோகிட்ட Sammy பத்தி கேட்கிறான்?

Teddy, ஹீரோவுக்கு ஃபோன் பண்ணறதோட நோக்கமே, அவன்கிட்ட கொலைகாரன் ஒரு போதை மருந்து விக்கிறவன்னு ஒரு ஆதாரத்தை சொல்லி, ஹீரோவை வச்சு Jimmy-ஐ கொலை செய்யதான்... ஆனா, அந்த ஆதாரம் சரியா தவறான்னு எல்லாம் ஹீரோ யோசிக்கக்கூடாதுன்னு, சில நிமிடங்களுக்கு Sammy பத்தி பேச்சை மாத்திடறான்... அப்பறம் சில நிமிஷங்களில, ஹீரோ யார்கிட்ட ஃபோன் பேசறான்னே மறந்துடறப்போ, Teddy ஃபோனை கட் பண்ணிடறான்... ஆக, Sammy பத்தி பேசி ஹீரோவை சில நிமிடங்கள் திசை திருப்பறான்.. (இதுக்கும் வேற பதில்கள் இருக்குதா...?)

உண்மையான John G யாரு?

  • தெரியாது... Teddy சொல்லற மாதிரி ஹீரோ John G-ஐ ஒரு வருஷம் முன்னாடியே கொன்னுருக்கலாம்... Teddy காண்பிக்கிற ஃபோட்டோல ஹீரோ சந்தோஷமா சிரிச்சுகிட்டே, மார்பில் அந்த இடத்தை காண்பிக்கிறான்... அந்த ஃபோட்டோ, ஒரு வருஷத்துக்கு முன்னாடி, உண்மையான John G-ஐ ஹீரோ கொன்னப்பறம் எடுத்த ஃபோட்டோன்னு Teddy சொல்லறான்... அது உண்மையா இருக்கலாம்...
  • ஒருவேளை ஒரு வருஷத்துக்கு முன்னாடி கொன்னவனும், சரியான John G-ஆ இல்லாம இருக்கலாம்...
  • Teddy-யே கூட உண்மையான John G-யா இருக்கலாம்...
  • இல்லை, John G-ன்னு ஒருத்தனே ஹீரோவோட கற்பனையா இருக்கலாம்... ஏன்னா, போலீஸ் அந்த சம்பவத்துல குற்றவாளி யாரும் தப்பிக்கலைன்னு சொல்லறாங்க...

வேற ஏதாச்சும் கேள்வி இருந்துச்சுன்னா பின்னூட்டத்துல கேளுங்க..

கதையை கருப்பு வெள்ளையிலயும், கலர்லயும் இரண்டு வரிசையா மாறி மாறி காண்பிக்கறப்போ, நமக்குத் தேவையான தகவல்களை இரண்டு வரிசையிலேயும் சரியா வெளியிடறாங்க... அதாவது, முதல்ல Teddy-தான் கொலைகாரன் போலவும், நடாலி ரொம்ப நல்லவள் போலவும் இருக்கறது, படம் போகப் போக அப்படியே மாறுது... ஹீரோ அவங்க ரெண்டு பேரையும் எந்த கண்ணோட்டத்துல பார்க்கிறாரோ, அதே கண்ணோட்டத்துல நாமும் பார்க்கிறோம்... நேரா சொல்லியிருந்தா, நடாலி கெட்டவள்னு அவ வர்ற முதல் காட்சியிலேயே நமக்கு தெரிஞ்சுருக்கும்... ஹீரோ எவ்வளவு குழப்பவாதின்னு படத்தின் நடுவுலயே தெரிஞ்சுருக்கும்...

கருப்பு வெள்ளைக் காட்சி கலரா மாறி, ரெண்டு வரிசையும் சேரும் க்ளைமாக்ஸ்ல, பல ட்விஸ்ட்களை வச்சுருக்காங்க... நேரா கதை சொன்னா அந்த ட்விஸ்ட் எல்லாம் பாதியிலேயே தெரிஞ்சுடும்... இந்தப் வரைபடத்தை பார்த்தீங்கன்னா புரியும்...

காட்சிகளை வேகமா வச்சுருக்கறதும், நம்மை அதிகம் யோசிக்க விடாம, ஹீரோவோட குழப்பத்தை நமக்கும் மெயிண்டெய்ன் பண்ணத்தான்...

Memento – இது வெறும் படமல்ல.. ஒரு அனுபவம்... நீங்க சினிமா ரசிகர்னா, வாழ்க்கையில தவறவிடக்கூடாத அனுபவம் இது... ஒருமுறை அனுபவிச்சுப் பாருங்க... ஒரு மாசத்துக்காவது, உங்க நண்பர்கள் கிட்ட இந்த படத்தைப் பத்திதான் புகழ்ந்துகிட்டு இருப்பீங்க..

இதோ.. இந்த விமர்சனம் எழுதறதுக்காக 7வது தடவையோ, 8வது தடவையோ படத்தைப் பார்க்கிறேன்... படத்தோட திரைக்கதை, எடிட்டிங், அர்த்தம் பொதிந்த வசனங்கள், மறைமுக அர்த்தங்கள்னு இன்னமும் என்னை மலைக்க வைக்குது... நூறு முறை பார்த்தாலும் சலிக்காது...

பி.கு.: சொல்லியிருக்கிற எல்லா விஷயங்களுமே என்னுடைய புரிதல்தான்.. சரியாவும் இருக்கலாம்.. தப்பாவும் இருக்கலாம்... இதுவும் unreliable narration-தான்... ;-) தவறா சொல்லியிருந்தா, பின்னூட்டமிடுங்க... மாத்திடலாம்..

ஓகே... டிஸ்கசன் ஸ்டார்ட்...





Related Posts with Thumbnails

65 comments:

  1. ஹா... நான் இந்த மாதிரி மேட்டருக்கு மட்டும் imdb போக மாட்டேன்.

    நான்.. நான்.. நான்.. நானேதான் கண்டுபிடித்தேன் ஐயா!!

    மீதியை படிச்சிட்டு வர்றேன்.

    ReplyDelete
  2. படிச்சு முடிச்ச உடனே லேசா தலை சுத்தற மாதிரி ஒரு பீலிங்க்.

    ReplyDelete
  3. ஒ. மிஸ் பணிட்டேனா. ஹாலி பாலி முந்திட்டாரா. மீ த செகண்டு.

    ReplyDelete
  4. // நான்.. நான்.. நான்.. நானேதான் கண்டுபிடித்தேன் //
    :-/ அந்த சில்வர் செயின் மேட்டரு நானேதான் கண்டுபிடிச்சேன்... ஒன் ஆல்.. சரியா போச்சு போங்க...

    // படிச்சு முடிச்ச உடனே லேசா தலை சுத்தற மாதிரி ஒரு பீலிங்க். //
    ஜாக்சன்வில்ல லெமன் டீ கிடைக்குமா? குடிச்சுட்டு வந்து திரும்ப முதல்ல இருந்து படிங்க...

    // ஒ. மிஸ் பணிட்டேனா. ஹாலி பாலி முந்திட்டாரா //
    ராமசாமி... அவரு இதுக்கே படத்தை இன்னைக்கு ஒரு தடவை பார்த்துட்டு வந்து வெயிட் பண்றாரு... இப்ப கமெண்ட் பறக்கும் பாருங்க...

    ReplyDelete
  5. சிறப்பான விமர்சனம் நண்பா,
    சாவகாசமா ஒரு ரீடிங் விடுறேன்.

    ReplyDelete
  6. நண்பா. . வாழ்த்துகள். ஆனா பதிவப் படிக்குற மூட்ல நான் இல்லை. நாளை வந்து விரிவா எழுதறேன். . என்னால இப்ப எதுவுமே எழுத முடியும்னு தோணல. . காரணம் - மூன்று வார்த்தைகள்- யூனியன் கார்பைட் தீர்ப்பு. . :’(

    ReplyDelete
  7. இவ்வளவு விளக்கமா டெடியை பத்தி ‘லாம்.. லாம்’-ன்னு எழுதியிருக்கவும் தேவையில்லைன்னு நினைக்கிறேன்.

    ஏன்னா.. லென்னி சொல்லுறது மட்டுமில்லை, டெடியும்.. சில இடங்களில் மாத்தி மாத்தி பேசுவது படம் முழுக்க வரும்.

    லென்னியின் மனைவி எப்படி இறந்தாங்க?
    1. இன்சுலினாலா
    2. கற்பழித்தா

    இவந்தான் ஜான் ஜி-ன்னு சொல்லி, ஜிம்மியை கொல்ல வச்சிட்டு (அப்புறமும்.. அதையே சொல்லி கன்வின்ஸ் பண்ண வைக்கப் பார்ப்பார்), ஒரு வருடம் முன்னாடியே ஜான் ஜி-யை கொன்னுட்டதா அப்பவே அந்தர் பல்டி அடிப்பார்.

    அப்ப.. சொன்ன எல்லா ‘லாம்’-மும்.. டைம் வேஸ்ட்ங்கற மாதிரி ஆய்டும்.

    ReplyDelete
  8. கார்த்திக்கேயன்... பொறுமையா வந்து படிங்க... அவசரமேயில்ல...

    க்ருந்தேள்... அடடா.. உங்க போபால் பதிவைதான் படிச்சுட்டு இருக்கேன்... நீங்க நாளைக்கு நல்ல மூட்ல வந்து படிங்க...

    ReplyDelete
  9. லென்னி மனைவியின் மரணத்தையும், டெடி மாத்தி பேசுவாரு. போன கமெண்டில் எழுத மறந்துட்டேன்.

    ReplyDelete
  10. அப்புறம் போனப் பதிவின் கமெண்டில் சொன்ன ‘யாரு நாடலி’ டயலாகும்.

    இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில்.. என் மண்டை ஓவர்லோட் ஆகுது. ஜாக்கிரதை.. ஜாக்கிரதை.

    ReplyDelete
  11. //இதெல்லாம் ஹீரோ நமக்கு விவரிப்பதை நம்பமுடியாதுன்னு சொல்லறமாதிரி இருக்கு.. அவனோட கற்பனை அல்லது குழப்ப மனநிலையைக் காட்டற மாதிரி இருக்குது..//

    இதுதான் நம்மை குழப்பி அவங்களும் குழம்பறமாதிரி செய்து கடைசியில் சரிசெய்வது...முதல் தடவை புரியல இப்ப சரியா விளங்குது..

    ReplyDelete
  12. //நேரா கதை சொன்னா அந்த ட்விஸ்ட் எல்லாம் பாதியிலேயே தெரிஞ்சுடும்... இந்தப் வரைபடத்தை பார்த்தீங்கன்னா புரியும்///

    தல இது சரியா???

    ஏன்னா.. படம்.. கடைசியில் ஆரம்பிச்சி, கடைசியில் முடியும். பாதியில் முடியாதுன்னு நினைக்கிறேன்.

    இப்ப கடைசி காட்சின்னு நாம நினைப்பது, டெடி சுடப்படுவதுன்னா.. அதுதான் முதலும் கடைசியும்.

    படத்தின் பாதி.. வேறு ஒரு இடத்தில் இருக்கும்.

    நான் நினைக்கறது சரியா??

    ReplyDelete
  13. நன்றி ஜெய்லானி...

    // ஹாலிவுட் பாலா said...
    இவ்வளவு விளக்கமா டெடியை பத்தி ‘லாம்.. லாம்’-ன்னு எழுதியிருக்கவும் தேவையில்லைன்னு நினைக்கிறேன். //
    சரிதான்... If else if loop-ல எல்லா possibility-யும் செக் பண்ணி இப்படி பழக்கமாயிடுச்சு... :-)

    // டெடியும்.. சில இடங்களில் மாத்தி மாத்தி பேசுவது படம் முழுக்க வரும். //
    சரிதான்.. கிட்டத்தட்ட வர்ற எல்லா குழப்பமுமே டெட்டி அடிக்கற பல்டியும், அவன் பொய் சொல்லற tone-லயே படம் முழுக்க பேசறதும்தான்.. அவன் உண்மை பேசிட்டா படத்துல எந்த குழப்பமுமே இருக்காது...

    ReplyDelete
  14. ////////Memento – இது வெறும் படமல்ல.. ஒரு அனுபவம்... நீங்க சினிமா ரசிகர்னா, வாழ்க்கையில தவறவிடக்கூடாத அனுபவம் இது... ஒருமுறை அனுபவிச்சுப் பாருங்க... ஒரு மாசத்துக்காவது, உங்க நண்பர்கள் கிட்ட இந்த படத்தைப் பத்திதான் புகழ்ந்துகிட்டு இருப்பீங்க.. ///////


    மறுப்பதற்கில்லை உண்மைதான் வியப்புகள் பல கதையின் நெடுகிலும் பின் தொடர்கிறது . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  15. // கடைசியில் ஆரம்பிச்சி, கடைசியில் முடியும். பாதியில் முடியாதுன்னு நினைக்கிறேன். //
    இல்ல பாலா.. படத்தோட கடைசி காட்சி, chronological order-ல நடுவுல வர்ற காட்சிதான்... அதாவது முதல்ல black n white, அப்பறம் jimmy கொலை.. அப்பறம் டாட்டூ பாட்லர்... அப்பறம் பார்.. நடாலி... கடைசிலதான் டெடி கொலை..

    முக்கிய ட்விஸ்ட் வர்றது ஜிம்மி கொலையப்போ, ஹீரோவும் டெட்டியும் பேசறதுலதானே...? க்ரெக்டா?

    //இப்ப கடைசி காட்சின்னு நாம நினைப்பது, டெடி சுடப்படுவதுன்னா.. அதுதான் முதலும் கடைசியும். //
    இல்லைன்னு நினைக்கிறேன்... chronological order-ல கடைசி டெட்டி கொலைதான்... ஆனா படத்துல முதல் பட்டும்தான் அது.. கடைசில ஜிம்மி கொலை மட்டும்தான்.. அது chrono order-ல நடுவுல வர்றது... அப்போ டெடியை மிரட்டுவான் ஹீரோ.. ஆனா கொல்ல மாட்டான்...

    ReplyDelete
  16. ஹா... ச்ச்சே..!!

    கரீகட்டு தல!! நாந்தான் ஓவர்லோட் ஆகிட்டேன்.

    ReplyDelete
  17. நல்ல இடுகையும் ,அபார உழைப்பும் ஜெய்.
    ஏற்கனவே பாலா பிரிச்சு பேன் பார்த்திருந்தார்.
    இனி 2 ரெஃபெரென்சுகள்.ஓட்டுக்கள் டன்

    ReplyDelete
  18. நன்றி சங்கர்...
    // வியப்புகள் பல கதையின் நெடுகிலும் பின் தொடர்கிறது //
    படம் முடிஞ்சப்பறமும் பல வருஷத்துக்கு பிந்தொடருதுங்க... :)

    @ பாலா..

    ஏன் ஃபோன்ல திரும்பவும் Teddy ஹீரோகிட்ட Sammy பத்தி கேட்கிறான்? இதுக்கான பதில்தான் எனக்கே கொஞ்சம் இடிச்சது... பதில் சரியா?

    அப்பறம், அந்த Fight Club க்ளூ கவனிச்சு இருக்கீங்களா? அதுவும் நானேதான் கவனிச்சேன்... ;-P முதல் தடவை எட்வர்ட் நார்டன் ஹாஸ்பிடல் போறப்பவே, ப்ராட் பிட் செவப்பு கலர் கோட் போட்டுட்டு ஒரு ஃப்ரேம் மட்டும் வந்துட்டு மறைவாரு..

    நன்றி கார்த்திக்கேயன்... :)

    ReplyDelete
  19. ஜெய்! என்னாதிது?! இப்ப‌டி ஓர் ஆராய்ச்சி....சீக்கிர‌மே டாக்ட‌ர் ஜெய் ஆக‌ ப்ராப்திர‌ஸ்து

    ப‌ட‌ம் பார்த்துட்டு மெய்ல் அனுப்ப‌றேன் :)

    ReplyDelete
  20. Flight Club-ல் அதை கவனிச்சதில்லை ஜெய்!

    அப்புறம் போனில் பேசினது டெடின்னா நீங்க சொன்ன விளக்கம் இன்னொரு கேள்வியை கொண்டு வரும்.

    போன் கான்வர்ஸேசன் நேரா போகுதுன்னா... முதல்ல டெடி மேட்டரைத்தான் பேசுவாங்க. நடுவில்தான் போதை மேட்டர் வரும்.

    //சில நிமிடங்களுக்கு Sammy பத்தி பேச்சை மாத்திடறான்... அப்பறம் சில நிமிஷங்களில, ஹீரோ யார்கிட்ட ஃபோன் பேசறான்னே மறந்துடறப்போ, Teddy ஃபோனை கட் பண்ணிடறான்...//


    அப்புறம்... லென்னியின் கையில் ஒரு பேண்டேஜ் போட்டிருக்கும். அதை அடிக்கடி காட்டுவாங்க. அப்புறம் அந்த பேண்டேஜில், "Don't answer the phone"-ன்னு பார்த்துட்டு, அதே நேரத்தில் யார்கிட்ட பேசறோம்னு மறந்து

    “who is this"- ன்னு கேட்டு, லென்னிதான் போனை கட் பண்ணுவார்ன்னு நினைக்கிறேன்.

    அப்புறம் திரும்பத் திரும்ப போன் அடிக்கும் போது, லென்னிதான் போன் எடுக்க மாட்டார்.

    ReplyDelete
  21. நெட்ஃப்ளிக்ஸில்.. முன்னாடி பின்னாடி போய் வர்றதுக்குள்ள தாவு தீருது. ஆஃபீஸில் உட்கார்ந்துகிட்டு.. என்ன வேலை பார்க்கிறேன் பாருங்க! :)

    ReplyDelete
  22. இது ரெண்டும் போனப் பதிவில் போட்ட கமெண்ட். இங்கயும் போட்டு வைக்கிறேன்.
    ====================================


    ஹாலிவுட் பாலா said...
    //ஆனா ஒரு கேள்வி, Sammy-யோட மனைவி இறந்துட்டாங்க.. Sammy-க்கு அதுகூட ஞாபகம் இல்ல.. அப்படின்னா, அவ்ங்க ரெண்டு பேர் மட்டும் வீட்ல இருந்தப்போ நடந்த காட்சி (sammy-யோட மனைவி இறக்கும் காட்சி) ஹீரோவுக்கு எப்படி தெரியும்..?//


    தெரியனும்னு அவசியமே கிடையாது. படத்தில் வெகு கடைசியா, அந்த கருப்பு வெள்ளைக் காட்சியில்.. ஸேமியை காட்டும் அந்த மருத்துவமனைக் காட்சியில், ஸேமியின் முகம் மாறி.. ஒரு செகண்டுக்கும் குறைவா.. லென்னியின் முகம் வரும்.

    இதை லிங்க் பண்ணினா... டெடி சொல்வது உண்மை.


    இதை வேற மாதிரி, லென்னி சொல்வது உண்மைங்கற மாதிரி யோசிப்போம்.

    க்ளெய்ம் அட்ஜஸ்டர் / இன்வெஸ்டிகேட்டர்-ங்கற முறையில்.. ஸேமியின் மனைவியின் மரணம் + ஸேமி... மருத்துவமனையில் அட்மிட் ஆவது ரெண்டும்.. லென்னிக்கு 100% தெரிந்தே ஆகணும்.

    அதில் ஸேமியின் மனைவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் அளவுக்கதிகமான இன்ஸுலின் இருப்பதும் தெரிந்திருக்கும்.

    ஆனா... ஸேமி.. ஒவ்வொரு 5-10 நிமிடத்திலும் போடுவது மாதிரி காண்பிப்பது வேணும்னா, லென்னியின் கூற்றாகவோ.. அல்லது.. போலீஸின் சந்தேகமாகவோ.. இன்வெஸ்டிகேஸனில் வந்திருக்கலாம்.

    விவாதம் எப்படி பண்ணுறதுன்னுதான் தெரியலை. விவாதம் பண்ண.. ஒரு சைடில் இருக்கனும். இங்கே அது சாத்தியமில்லைன்னு நினைக்கிறேன்.


    ===============================

    அப்புறம்... டெடி தானொரு போஸிஸ்-ன்னு சொல்வது!!

    ஆஃபீஸர் கேம்பல்-ன்னு லென்னி கூப்பிட்டதும்..., டெடி உடனே... மோட்டல் கவுண்டரில் இருக்கும் அட்டண்டரை ஒருமுறை, அவர் கவனிக்கிறாரா-ன்னு பார்ப்பார். அது.. ஒருவேளை டெடி போலீஸ் இல்லையோன்னு ஒரு சந்தேகம் வர வாய்ப்பு இருக்கு.

    ஆனா மோட்டலை விட்டு வெளியே வந்ததும்.. தான் அண்டர்கவரில் இருப்பதா சொல்லும் போது, போன பாராவின் சந்தேகம் அடிபடும்.

    அப்புறம்... கடைசியில் (அல்லது முதலில்?) டெடியை, லெனி அடித்து, டெடியின் பாக்கெட்டில் இருந்து அடையாள அட்டையை எடுத்துப் பார்த்து, ‘நீ நிஜம்மா போலீஸ்தான்’ -ன்னு சொல்லும் போது...

    அது போலியாகவும் இருக்கலாம்!!!!!

    =======

    அப்புறம்... நாடலி வீட்டில் இருந்து லென்னி வெளியே வரும்போது, நாடலி யாருன்னு மறந்திருக்கும்.

    அப்போ நீ நாடலியோட வீட்டில் இருந்துதான் வெளியே வர்ற. எனக்கு நாடலியை தெரியும். ஆனா அவளுக்கு என்னைத் தெரியாதுன்னு சொல்லும் டெடி..,

    மோட்டலில்.. டாட்-ஐ அடித்து போட்டிருக்கும் போது, யாரு நாடலி-ன்னு கேட்பார்.

    இது நம்பகத்தன்மையா.. அல்லது திரைக்கதை குழப்பமா-ன்னும் சொல்ல முடியாது.

    திரைக்கதை பிரச்சனைன்னாலும்... டெடி சொல்வது எதுவும் உண்மையில்லன்னு யோசிச்சா... திரைக்கதை சரின்னு ஆய்டும்.

    சரியா???????? :)

    ReplyDelete
  23. நண்பரே,

    பாராட்டுக்கள், உங்கள் அற்புதமான உழைப்பால் ஒரு அருமையான பதிவை வழங்கியுள்ளீர்கள். நான் படத்தை திருப்பி பார்ப்பதை விட வேறு வழியில்லை :) மெமரி லாஸ் வாழ்க.

    ReplyDelete
  24. // போன் கான்வர்ஸேசன் நேரா போகுதுன்னா... முதல்ல டெடி மேட்டரைத்தான் பேசுவாங்க. நடுவில்தான் போதை மேட்டர் வரும் //

    ஃபோன் கான்வர்சேஷன் நேராதான் போகுது(திரைக்கதையிலயும் அப்படிதான் சொல்லறாங்க..)
    தப்பா டைப் பண்ணிட்டீங்க.. முதல்ல ஸேமி மேட்டர் வரும்..(அதயும் அந்த முனையில இருக்கவன் கேட்டுதான் ஹீரோ பேச ஆரம்பிக்கற மாதிரி வருது...) அப்பறம் அந்த முனையில இருக்கவன் திரும்ப பண்ணறேன்னு வச்சுடறான்... (ஏன்?)

    திரும்ப கால் வருது... இது முதல் கால் பண்ணின அதே ஆளான்னு தெரியல.. ஆனா, இப்ப பேசறவன் ஆரம்பிக்கும்போதே போதை மேட்டர்லதான் ஆரம்பிக்கறான்.. பேசினதுல, ஹீரோ அந்த தடயத்தையும் பச்சை குத்த ஆரம்பிக்கரான்.. அந்த நேரத்துல ஸேமி பத்தி பேச்சு போகுது... அப்பதான் நடுவுல "who is this?"... ஆனா லென்னி கட் பண்ணற மாதிரி வரல... subtitle says "line goes dead" meaning, other end was cut...

    மூணாவது த்டவைதான் கதவுக்கு அடில பேப்பரெல்லாம் போட்டு டெடி கால் பண்றான்... ஹோட்ட்லுக்கு வெளியே வர சொல்லறான்... இந்த பார்ட் மட்டும் க்ளியர்... முதல் ரெண்டு ஃபோன் கால்தான் கொஞ்சம் இடிக்குது...

    நன்றி கனவுகளின் காதலன்... நானும் பாலாவும் நேத்துதான் படம் பார்த்தோம்.. திரும்ப குழப்பிகிட்டு இருக்கோம் பாருங்க.. :) மெமரி லாஸ் வாழ்க...

    ReplyDelete
  25. வேற வழியே இல்ல.. டவுன்லோடு போட்டு இருக்கேன் :)

    //ஹீரோ எவ்வளவு குழப்பவாதின்னு படத்தின் நடுவுலயே தெரிஞ்சுருக்கும்//

    //விவாதம் எப்படி பண்ணுறதுன்னுதான் தெரியலை. விவாதம் பண்ண.. ஒரு சைடில் இருக்கனும். இங்கே அது சாத்தியமில்லைன்னு நினைக்கிறேன்//

    இத படிச்சிட்டு சிரிசிட்டே இருக்கேன்..

    ReplyDelete
  26. நீங்க யாரை கதாநாயகனாக நினைத்து கொள்கிறீர்கள் என்பதே முக்கியமென்று நான் நினைக்கிறேன். பின் அவர்களை நம்ப துவங்கினால் அருமையாக இருக்கும்.

    lenny சொல்வது உண்மையென்று நம்பி ஒரு முறை படம் பாருங்கள். பின் teddy, nadali, இப்படி மூன்று பேரையும் நம்பி (தனித்தனியாக) படம் பார்த்தால் ஜாலி, ஜாலி.. :)

    "மனைவி இறந்து (எப்படி வேண்டுமானாலும்), தனக்கும் memory loss வந்த பின், வாழ்கையில் எதை பிடித்துக்கொண்டு சாகும் வரை வாழ்வது?
    John G-யை பழிவாங்குவது (எத்தனை John G-க்களையும் கொல்லலாம்) என்கிற பிடிப்பு அவனை தொடர்ந்து வாழவைக்கும்." என்பதாக நான் எடுத்துக்கொண்டு சமாதானம் அடைந்து கொண்டேன்.. :)

    ReplyDelete
  27. உண்மையில் மிக சிறப்பான படம். ஒவ்வொரு காட்சியும் perfection.. நோலன் ராக்ஸ்..

    ReplyDelete
  28. அய்யய்யோ
    இந்த அளவுக்கா பிரிச்சி மேய்வீங்க? தல சுத்துது. அந்த மோதிரம் மேட்டர் புதுசு தோழா.

    //"மனைவி இறந்து (எப்படி வேண்டுமானாலும்), தனக்கும் memory loss வந்த பின், வாழ்கையில் எதை பிடித்துக்கொண்டு சாகும் வரை வாழ்வது?
    John G-யை பழிவாங்குவது (எத்தனை John G-க்களையும் கொல்லலாம்) என்கிற பிடிப்பு அவனை தொடர்ந்து வாழவைக்கும்." என்பதாக நான் எடுத்துக்கொண்டு சமாதானம் அடைந்து கொண்டேன்.. :)//

    இதேதான் என் முடிவும்.

    ReplyDelete
  29. மிகுந்த பாராட்டுக்கள்.. இப்ப படத்தை பார்த்தா நானும் ஒரு படம் எடுக்கும் அளவுக்கு தேரிடுவேன்னு நினைக்கிறேன்..
    இதுக்கு முன்பு MATRIX படத்தை என் நண்பர் இப்படி விளக்கினார்..

    நன்றி நண்பா.. மீண்டும் வந்தனம் ..

    ReplyDelete
  30. கலக்கல் ஜெய். கண்டிப்பா இந்த அலசல் படத்தை வேறொரு கோணத்தில் பார்க்க உதவும்.

    ReplyDelete
  31. எக்சலன்ட்.

    கடைசியாக வந்த டிவிடி வெர்ஷனில் இந்த மாதிரி நான் லீனியர் ஆக இல்லாமல் லீனியராக இருக்கும்படி படத்தை பார்க்கும் ஒரு ஆப்ஷன் உள்ளது. ட்ரை செய்யவும்.

    ReplyDelete
  32. I will watch this again

    Gyanadevan

    ReplyDelete
  33. நன்றி பிரசன்னா... படம் பார்த்துட்டு சொல்லுங்க.. .

    நன்றி சரவணகுமார்...
    // lenny சொல்வது உண்மையென்று நம்பி ஒரு முறை படம் பாருங்கள். பின் teddy, nadali, இப்படி மூன்று பேரையும் நம்பி (தனித்தனியாக) படம் பார்த்தால் ஜாலி, ஜாலி.. :) //
    லென்னி, டெட்டி ஓகே... நடாலி சொல்லறது பொய்யா, உண்மையான்னு யோசிக்கத் தேவையில்ல்லைன்னு நினைக்கிறேன்.. அது கொஞ்சம் தெளிவான கேரக்டர்...

    @ சரவணகுமார், சுப.தமிழினியன்,
    // அந்த மோதிரம் மேட்டர் புதுசு தோழா. //
    நானும் ரெண்டு நாள் பார்க்கறப்போதாங்க கவனிச்சேன்...

    //"மனைவி இறந்து (எப்படி வேண்டுமானாலும்), தனக்கும் memory loss வந்த பின், வாழ்கையில் எதை பிடித்துக்கொண்டு சாகும் வரை வாழ்வது?
    John G-யை பழிவாங்குவது (எத்தனை John G-க்களையும் கொல்லலாம்) என்கிற பிடிப்பு அவனை தொடர்ந்து வாழவைக்கும்." என்பதாக நான் எடுத்துக்கொண்டு சமாதானம் அடைந்து கொண்டேன்.. :)//
    சமாதானமா ?? படத்துக்கு மட்டும்னா ஓகே... விட்டா சீரியல் கில்லரையெல்லாம் சப்போர்ட் பண்ணுவீங்க போல... :)

    நன்றி கே.ஆர்.பி.செந்தில்...
    // இதுக்கு முன்பு MATRIX படத்தை என் நண்பர் இப்படி விளக்கினார்.. //
    அதையும் ஒருநாள் பார்த்துடுவோம்... ஆனாலும் இந்த அளவுக்கு complex-ஆ இருக்காதுன்னு நினைக்கிறேன்.. .

    நன்றி ஷங்கர்...

    நன்றி விஸ்வா...
    // கடைசியாக வந்த டிவிடி வெர்ஷனில் இந்த மாதிரி நான் லீனியர் ஆக இல்லாமல் லீனியராக இருக்கும்படி படத்தை பார்க்கும் ஒரு ஆப்ஷன் உள்ளது. ட்ரை செய்யவும். //
    கேள்விப்பட்டேங்க.. ஹிஹி.. நாம என்னைக்கு டிவிடியெல்லாம் வாங்கி இருக்கோம்... அதுக்கும் டவுன்லோட் போட வேண்டியதுதான்... :D

    நன்றி Gyanadevan...

    ReplyDelete
  34. விவரித்த விதம் அருமை. பதிவும் ஹாலிபாலியுடனான விவாதங்களும் படத்தை மிகச் சரியாக புரிந்துகொள்ள உதவின.

    முக்கியமாக க்ளூக்களுக்கு மிக்க நன்றி.

    இந்த வீக் எண்ட் மெமண்டோவ திரும்பவும் பார்க்கணும்னு தோணுது.

    அருமையான உழைப்பிற்கு சல்யூட் தல.

    ReplyDelete
  35. அடடடடடா.... என்னப்பா இது? எனக்கு இந்த மோதிரமும் சரி, அந்த அரை நொடி ஹாஸ்பிடல் சீனும் சரி. நான் சத்தியமா கவனிக்கல. :-(

    ஒரு மாதிரியா கதை புரியிற மாதிரி இருந்ததும் அதோட விளங்கிகிட்டேன். ஹி ஹி ஹி.

    ஜாலியா ரொமாண்டிக்கா, மெலொ ட்ராமா கதைதான் நமக்கு ஒத்துவரும், இவ்ளோவெல்லாம் யோசிச்சா, மண்டை கொளம்பிடும்.

    ஆனா இன்னொன்னு பாக்க்கிற ஒவ்வொருவருக்கு ஒவ்வொருமாதிரியான் புரிதல்களை தரக்கூடிய ஒரே படம் இதுவாகத்தானிருக்கும்.

    குட் அட்டெம்ட். வாழ்த்துக்கள் ஜெய்.

    எனக்கும் இன்னொரு முறை படம் பார்க்கணும்ன்னு தோணுது, அந்த லினியர் மூவி லிங்க் கெடச்சா தெரியப்படுத்துங்க.

    :-)

    ReplyDelete
  36. ஜெய்,முழுப்பதிவும் வாசிச்சதுக்கப்புறம் தலை சுத்துது. இது மாதிரியான படங்கள் பார்க்குறதே கஷ்டம். இதுல இதை ஆராய்ஞ்சு 3 பதிவுகள் போட்டிருக்குற உங்களை நிச்சயம் பாராட்டணும்.

    ReplyDelete
  37. நண்பர் சரவணன் சொல்றதை நான் ஆதரிக்கிறேன்.உங்க stand point எதுவோ அதுக்கு ஏத்த மாதிரி போகும் கதை. :)

    நீங்க கதை confusing ன்னு stand point எடுத்து இருக்கீங்க.இந்த படம் பார்த்து ரெண்டு வருசத்துக்கு மேல ஆச்சு.இன்னொரு தடவ பார்த்தா தான் discussion ல கலந்துக்கலாம்.ஆனா,என்னய பத்தி ஊருக்கே தெரியும்.மகா சோம்பேறின்னு. :)
    ஸோ,நீங்க நடத்துங்க.முடிஞ்சா பாத்துட்டு வந்து நானும் கலந்துக்கிறேன்.இல்ல,தள்ளி நின்னு வேடிக்கை பாக்குறேன்.

    ஆனா,ஒண்ணு சொல்லணும் தல.உங்க உழைப்பு பிரமிக்க வைக்குது.நான் எந்த பதிவுக்கும் ரொம்ப நேரம் செலவழிக்க மாட்டேன்.சும்மா,just like that எழுதிட்டு போய்டுவேன்.ஆனா,உங்க தனித்தன்மையே ஆராய்ச்சி தான்.விட்ராதீங்க.கலக்குங்க. :)

    ReplyDelete
  38. ஏற்கனவே நீங்களும் சிலரும் சொல்லி இருந்தாலும்.. இதோ என் புரிதல்..

    1. lenni தான் Sammy.. இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் வாதங்களே போதும் என்று நினைக்கிறேன்..
    2. Teddi லென்னியை ஒரு வருடத்திற்கும் மேலாக, அவன் 'வேலைகளுக்கு', ஆட்களை தீர்க்க உபயோகப்படுத்துகிறான்.. இதில் Teddi, Lenni இருவருக்குமே ஆதாயம்.
    3. தன் காதலனை கொன்ற Teddi-யை பழி வாங்க.. லென்னியை உபயோகப்படுத்துகிறாள் Natalie.. Teddi பார்முலா அவனுக்கே ஆப்படிக்கிறது..

    அப்புறம் போன பதிவில் கடைசியாக இருக்கும் கேள்வி..
    How come Jimmy knows about Sammy? அப்படிங்கறது.
    ஒரு முக்கியமான க்ளூவாக.... டெட்டி,ஜிம்மி எல்லாரும் ஒரே கூட்டம் தான்.. அவர்கள் Lenniயை உபயோகப் படுத்திக்கொள்கிறார்கள்.. பிரதானமாக டெட்டி.. அதனால் ஜிம்மிக்கும் Sammy கதையை சொல்லி வைத்திருக்க வேண்டும் டெட்டி..
    Sammy கதை ஒரு Identification-ஆக அவர்களுக்கு உபயோகம் ஆகிறது..

    என்னை பயங்கரமாக கொழப்பும் ஒரு விஷயம்.. இதற்கு பதில் சொல்லுங்கள் பிளீஸ் :)

    அவன் மனைவி உயிருடன் இருக்கும் போதே எதற்கு பச்சை.. ;My wife has been raped and killed' என்று..? என்பதே..

    இதற்கு என் விளக்கங்கள்.. இப்படி இருக்கலாம்..

    மனைவிக்கு தெரிந்தே பழி வாங்கும் படலம் விளையாடப்பட்டு இருக்க வேண்டும்.. 'I have done it' பச்சையும் மற்றும் சந்தோஷமாக இருக்கும் அந்த Lenniyin பழைய போட்டோவும் இதை சாத்தியம் ஆக்குகிறது..
    இந்த 'விளையாட்டின்' மூலம் குணமாகி விடுவான் என்று அவன் மனைவி நினைத்திருக்கலாம்.. ஆனால் குணமாகவில்லை..

    ReplyDelete
  39. பாயின்ட் no.2கு உதவும் டெட்டியின் சில டயலாக்குகள்..

    "l gave you a reason to live
    and you were more than happy to help"

    "You're not a killer.
    That's why you're so good at it"

    "Look how happy you are.
    l wanted to see that face again"

    ReplyDelete
  40. இதற்கு ஒரே தீர்வு.. Christopher Nolan ஐ பிடித்து ஒரு ரூமில் அடைத்து, ரவுண்டு கட்டி..
    'யோவ் நோலா.. என்ன சொல்லி இருக்க மரியாதையா ஒத்துக்கோ' என்று சித்ரவதை செய்வது தான்..

    ReplyDelete
  41. // பிரசன்னா said...

    இதற்கு ஒரே தீர்வு.. Christopher Nolan ஐ பிடித்து ஒரு ரூமில் அடைத்து, ரவுண்டு கட்டி..
    'யோவ் நோலா.. என்ன சொல்லி இருக்க மரியாதையா ஒத்துக்கோ' என்று சித்ரவதை செய்வது தான்..//

    ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha

    ReplyDelete
  42. நன்றி சரவணகுமார்...

    நன்றி முரளி..
    // அந்த லினியர் மூவி லிங்க் கெடச்சா தெரியப்படுத்துங்க. //
    தேடினேன்... கிடைக்கலைங்க... யார்கிட்டயாவது இருக்குதா?

    நன்றி விக்னேஷ்வரி... தலை சுத்துதுன்னு பார்க்காம விட்டுடாதீங்க... அது ஒரு சந்தோஷம்... படம் பார்த்த பல நண்பர்கள் இதை டிஸ்கஸ் பண்ண எவ்வளவு ஆர்வமா இருக்காங்க பாருங்க...

    நன்றி இலுமி,
    // நீங்க கதை confusing ன்னு stand point எடுத்து இருக்கீங்க. //
    எதையுமே assume பண்ணிக்க மாட்டேன் அப்படின்னு வச்சுகிட்டா confusion-தான் stand point... That is, we are open to any option...

    நன்றி பிரசன்னா...
    // ஏற்கனவே நீங்களும் சிலரும் சொல்லி இருந்தாலும்.. இதோ என் புரிதல்.. //
    புரிதல் அப்படின்னு சொல்லறதை விட "உங்களுக்கு பிடிச்ச assumption" அப்படின்னு சொல்லலாம்... ஏன்னா, அந்த புரிதலை சரின்னு நிரூபிக்க முடியாதில்லையா...

    // 1. lenni தான் Sammy.. இதற்கு நீங்கள் கொடுத்திருக்கும் வாதங்களே போதும் என்று நினைக்கிறேன்.. //
    இதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு... ஆனா, அதுதான் சரின்னு சொல்ல முடியாது... ஏன்னா, மேல நான் சொன்ன 4 க்ளூவுமே, லென்னி நமக்கு சொல்லற unreliable narration-தான்... அதாவது ஸேமின்னு நிஜமாவே ஒரு நோயாளி இருந்துருக்கலாம்... அப்பப்போ, லென்னி தன்னையும் ஸேமியையும் ஒப்பிட்டு/குழப்பிகிட்டு சில நொடிகளுக்கு நினைச்சுக்கலாம்...(அந்த 4 க்ளூ வர்ற சில நொடிகள்)

    // 2.Teddi லென்னியை ஒரு வருடத்திற்கும் மேலாக, அவன் 'வேலைகளுக்கு', ஆட்களை தீர்க்க உபயோகப்படுத்துகிறான்.. இதில் Teddi, Lenni இருவருக்குமே ஆதாயம். //
    இந்த பாயிண்ட் தப்புன்னு சொல்ல முடியாது... ஆனா, சரின்னு நிரூபிக்க முடியாது... :) டெடி நல்ல போலீஸா இருக்கமுடியாதுன்னு எப்படி சொல்லறீங்க...?

    // 3. தன் காதலனை கொன்ற Teddi-யை பழி வாங்க.. லென்னியை உபயோகப்படுத்துகிறாள் Natalie.. //
    அப்படியா தல...? இதுக்கு எங்கயும் ஆதாரம் இருக்கற மாதிரி எனக்குத் தெரியல... டெடிக்கு நடாலியைத் தெரிஞ்சுருக்கு... ஆனா, நடாலிக்கு டெடியை தெரியுமான்னு தெரியல... (அவன் பேரு மட்டும் தெரியுது... ஜிம்மி அவகிட்ட டெடியை பார்க்கப் போறதா சொல்லியிருக்கான்... ) போதிய ஆதாரம் இருக்குதா? .இல்லைன்னா கேஸ் டிஸ்மிஸ் செய்யப்படும்... :-P

    // ஒரு முக்கியமான க்ளூவாக.... டெட்டி,ஜிம்மி எல்லாரும் ஒரே கூட்டம் தான்.. அவர்கள் Lenniயை உபயோகப் படுத்திக்கொள்கிறார்கள்.. பிரதானமாக டெட்டி.. அதனால் ஜிம்மிக்கும் Sammy கதையை சொல்லி வைத்திருக்க வேண்டும் டெட்டி..
    Sammy கதை ஒரு Identification-ஆக அவர்களுக்கு உபயோகம் ஆகிறது.. //
    ஹோட்டல் ரிஷப்ஷனிஸ்ட்தான் ஜிம்மிகிட்ட லென்னி பத்தி சொல்லியிருக்கான் அப்படின்னு டெடி சொல்லறான்... அது ஏன் உண்மையா இருக்கக்கூடாது?

    // அவன் மனைவி உயிருடன் இருக்கும் போதே எதற்கு பச்சை.. ;My wife has been raped and killed' என்று..? //
    இதுக்கு உங்க விளக்கம் சரியா இருக்கலாம்... :)

    // "l gave you a reason to live
    and you were more than happy to help"
    "You're not a killer.
    That's why you're so good at it"
    "Look how happy you are.
    l wanted to see that face again" //
    டெட்டி அவன் சொல்லற மாதிரியே ரொம்ப நல்ல போலீஸ் ஆபீசர்னும், நல்ல மனசோட லென்னிக்கு உதவறான்னு வச்சுப்போம்... அப்பவும் இந்த மூணு டயலாக்கும் அர்த்தமுள்ளதாதான் இருக்கு... திரும்ப படிச்சு பாருங்க... As if Teddy cares much for Lenny... இல்லையா?

    // இதற்கு ஒரே தீர்வு.. Christopher Nolan ஐ பிடித்து ஒரு ரூமில் அடைத்து, ரவுண்டு கட்டி..
    'யோவ் நோலா.. என்ன சொல்லி இருக்க மரியாதையா ஒத்துக்கோ' என்று சித்ரவதை செய்வது தான்.. //
    ஹா ஹா... அநேகமா அவருக்கும் பதில்னு ஒன்னு தெரியாது... வேற ஏதாச்சும் க்ளூ குடுத்துருக்காறான்னு வேணா கேக்கலாம்... 2 மணி நேர படத்துல எங்கயுமே உறுதியா சொல்லாத விஷயங்களை அவராலும் சொல்லமுடியாதுதான்... ஆதாரமில்லாம சொன்னா, அது “அவருக்கு பிடிச்ச assumption" ஆகிடும்... இப்படி audience-க்கு open option இருக்கணும்னுதானே, திறமையா பல வசங்களையும், கேரக்டர்களையும் கொண்டுவந்திருக்காரு... (அதாவது பல வசனங்கள் எப்படி assume பண்ணிகிட்டாலும், சரியா இருக்கும்... நீங்க மேலே சொல்ல 3 வசனங்கள் மாதிரி... ) ஒருவேளை அவர் எதெல்லாம் open option for audience, எதெல்லாம் உறுதியான விஷயங்கள் அப்படின்னும், எதுக்கு நிறைய வாய்ப்பிருக்கும்னும் சொல்லலாம்...

    ReplyDelete
  43. பதிவு புரியல :)

    பின்னூட்டம், ம்ம்ஹம்ம்... முடியல :)

    ReplyDelete
  44. ஜெய்...படிச்சவுடனே தலை சுத்துறா "மாதிரியெல்லாம்" இல்லை, நெஜமாவே சுத்துது..!!! இந்த படத்தை வச்சு பி.ஹெச்.டி. பட்டமே வாங்கிடலாம் போல இருக்கே...!!!
    உண்மைய சொல்லுங்க எத்தன தடவ இந்த படத்த பார்த்தீங்க...?
    பாதுகாக்க வேண்டிய பதிவுகள். ஜெய் ஒரு வேண்டுகோள், மூன்று பதிவையும் ஒரு PDF FILE-ஆக மாற்றி மெயில் செய்யவும். :)

    ReplyDelete
  45. மோகன்... :) படம் குறைந்தது ரெண்டு தடவை பார்த்தாதான் புரியும்... முதல் தடவை பார்த்துட்டு, இதைப் படிச்சா இதெல்லாம் புரியும்... ரெண்டாவது தடவை படம் பார்க்கறப்போ நல்லா புரியும்...

    சிவன்...
    // ஒரு வேண்டுகோள், மூன்று பதிவையும் ஒரு PDF FILE-ஆக மாற்றி மெயில் செய்யவும். :) //
    தல... http://www.primopdf.com/download.aspx இந்த சைட்ல PDF converter இருக்கும்... 7 MB-தான்... அதை டவுன்லோட் பண்ணீங்கன்னா, நம்ம பதிவு மட்டுமில்ல, எந்த வெப்சைட், எந்த பதிவானாலும் PDF-ஆ ப்ரிண்ட் பண்ணிக்கலாம்.. அதுல ஏதாச்சும் பிரச்சனைன்னா சொல்லுங்க... உடனே convert பண்ணி அனுப்பறேன்... :) ஓகே?

    ReplyDelete
  46. மிக்க சந்தோசம்

    மிக நல்ல உழைப்பு

    மிக சிறந்த விவரிப்பு

    தூள் கிளப்புங்க மச்சி

    ReplyDelete
  47. Excellent work Jai. Liked all 3 parts very much. Its really a good movie. Whenever we see this we will get new idea. As Prasanna said, we need to put Nolan in a room and make him watch Vijay moviews. He will tell answers for our confusions.
    Thanks

    ReplyDelete
  48. எப்படி இப்படி எல்லாம் கவனிச்சீங்க?

    ReplyDelete
  49. அருமையா ஆராய்ச்சி பண்ணி எழுதியிருக்கீங்க. உண்மையிலேயே ரொம்ப பொருமை. மிக அருமையான விமர்சனம்.

    ReplyDelete
  50. I also watch this movie 4 or 5 times.Whenever i watch. it leads to diffrent story or understanding :). I have special DVD which has a psychological test. When you play that DVD. you will get a screen wiht some objects such as telephone, revolver, apple clock etc .... If you select a object if will leads to specil features. First time It took some time play this DVD. But AMAZING !!!

    I believe, Enen Nolan bros does not know the story ;)

    FYKI, You may come across these links eventhoug
    http://www.christophernolan.net/

    http://www.christophernolan.net/memento_mem.php

    http://www.impulsenine.com/homepage/pages/shortstories/memento_mori.htm

    http://www.christophernolan.net/memento.php

    http://www.salon.com/entertainment/movies/feature/2001/06/28/memento_analysis/index.html

    ReplyDelete
  51. நன்றி சிபி, அனானி, பப்பு, ஜெயந்தி,
    கண்டிப்பா படம் பாருங்க...

    நன்றி திலகன்,
    லிங்க் எல்லாம் சூப்பர்... Jonathan-னோட கதை இனிமேதான் படிக்கணும்..

    ReplyDelete
  52. தல...இதை கன்வெர்ட் பண்ணுவதில் எனக்குக் பிரச்சினை இல்லை...இது உங்கள் ஆக்கம் உங்கள் உழைப்பு, அதனால் நீங்கள் செய்வது தான் முறை... :)
    BTW : I already have a PDF creator installed in my lappy :)

    ReplyDelete
  53. நேத்தே வரணும்னு நெனச்சேன்.. வழக்கம் போல கரண்ட கட் பண்ணி சதி பணிட்டாங்க..


    //ஏன்னா, அந்த புரிதலை சரின்னு நிரூபிக்க முடியாதில்லையா... //
    கண்டிப்பா முடியாது :)

    //lenni தான் Sammy.. // - இதுக்கு நிறைய வாய்ப்பிருக்கு... ஆனா, அதுதான் சரின்னு சொல்ல முடியாது... //
    காட்டப்பட்ட க்ளூக்களுக்கு மேல், ஏன் என்று (அவர் சொல்லாத) மிகப்பெரிய காரணமா நான் நினைப்பது.. இந்த நோய் அல்லது கண்டிஷன் மிக மிக rare. ஆனால், இது இவருக்கு தெரிந்த ஒருவருக்கு, அதுவும் கொஞ்ச நாள் முன்னாடி இருந்தது என்பதை ஏற்க முடியவில்லை..

    //டெடி நல்ல போலீஸா இருக்கமுடியாதுன்னு எப்படி சொல்லறீங்க...?//
    இதற்கு வாயப்பு ரொம்ம்ம்மம்ப குறைவு.. அதும் இல்லாமல், (அவ்வளவு பணத்துடன் வரும்) ஒரு போதை பொருள் டீலரிடம், ஒதுக்கு புறமான இடத்தில், நல்ல போலீஸ்க்கு என்ன வேலை?

    //லென்னியை உபயோகப்படுத்துகிறாள் Natalie.. - போதிய ஆதாரம் இருக்குதா?//
    Dodd -ஐ சமாளிக்க/கொல்ல லென்னியை உபயோகப்படுத்துகிறாள் நாடலி. ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா (இது வெளிப்படையாகவே.. சில காட்சிகளில் தெரியும்).. அப்புறம், அவள் ஜிம்மியின் தீவிர காதலி (இதுவும் தெளிவாக காட்டப்படுகிறது).. அவள் ஏன் டெட்டியை கொல்ல இவனை உபயோகப்படுத்தக்கூடாது? டெட்டி யார் என்பதை கண்டு பிடிப்பது நாடலிக்கு கடினமான வேலையாக இருக்காது அல்லவா?

    இதற்கு முத்தாய்பாக, நாடலி பற்றி லென்னியிடம் டெட்டி சொல்லும் இந்த வசனங்கள்.. He knows for sure she will be after him.. இது தான் தெள்ளிய ஆதாரம்..

    ...let me inform you,
    your business here is very much finished.
    - You're stil here because of Natalie.
    You'll want to make a note.
    You can't trust her.
    Because by now
    she's taken a look at the suit and the car...
    ..and she's figuring out ways
    of turning the situation to her advantage.

    //ஹோட்டல் ரிஷப்ஷனிஸ்ட்தான் ஜிம்மிகிட்ட லென்னி பத்தி சொல்லியிருக்கான்//
    இருக்கலாம்..ஆனால், Sammy-யின் கதை முதற்கொண்டு சொல்லி இருக்க முடியாது..

    //இதுக்கு உங்க விளக்கம் சரியா இருக்கலாம்... //
    இன்னிக்கி அதை படிக்கும்போது எனக்கே சிரிப்பா இருக்கு :))

    இதெல்லாம் சரியானு பாருங்க.. திரும்பியும் வரேன்.. இன்னிக்கி சாயந்திரம்..

    ReplyDelete
  54. சிவன்... உங்க நேர்மைக்கு தலைவணங்குகிறேன்.. கொஞ்ச நேரத்துல PDF அனுப்பிடறேன்.. :)

    @ பிரசன்னா,

    // நேத்தே வரணும்னு நெனச்சேன்.. வழக்கம் போல கரண்ட கட் பண்ணி சதி பணிட்டாங்க.. //
    அடப்பாவிகளா..இந்த பவர்கட்னால என் ப்ளாக் கூட பாதிக்கப்பட்டு இருக்கே...

    // இந்த நோய் அல்லது கண்டிஷன் மிக மிக rare. ஆனால், இது இவருக்கு தெரிந்த ஒருவருக்கு, அதுவும் கொஞ்ச நாள் முன்னாடி இருந்தது என்பதை ஏற்க முடியவில்லை.. //
    சரிதான்... rare-தான்... ஆனா, தெரிந்த ரெண்டு பேருக்கு இருக்கலாம் அப்படிங்கிற வாதத்தை eliminate பண்ண முடியாது இல்லையா? லென்னிதான் ஸேமி அப்படிங்கிறதுக்குதான் வாய்ப்பு மிக மிக அதிகம்.. அதுல எந்த வேறுபாடும் கிடையாது... ஆனா, கண்டிப்பா அது உண்மைன்னு சொல்ல முடியாது... 99.9% க்கும் 100% க்கும் நிறைய வித்தியாசம் இருக்கு... இல்லையா?

    // இதற்கு வாயப்பு ரொம்ம்ம்மம்ப குறைவு.. அதும் இல்லாமல், (அவ்வளவு பணத்துடன் வரும்) ஒரு போதை பொருள் டீலரிடம், ஒதுக்கு புறமான இடத்தில், நல்ல போலீஸ்க்கு என்ன வேலை? //
    ரொம்ம்ம்ம்ப்ப குறைவுன்னு ஒத்துக்கறேன்... ஆனா, டெடி சொல்லறமாதிரி அவன் undercover போலீஸா இருந்தா, போதை மருந்து விக்கிற கும்பலோட இருக்கற உளவாளியா இருக்கலாம் இல்லையா? (ஸ்ஸ்ஸப்பா... எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு...) எனக்கு முழுசா ஒரு நேரடியான ஆதாரம் கிடைக்கலைன்னா, இன்னும் open end-னுதாங்க தோணுது...

    // டெட்டி யார் என்பதை கண்டு பிடிப்பது நாடலிக்கு கடினமான வேலையாக இருக்காது அல்லவா? //
    எதுக்கு வாய்ப்பு அதிகமோ அதை நம்ப ஆரம்பிச்சுட்டீங்க பிரசன்னா... அது சரியில்லைதானே?
    1. 100% மறுக்கமுடியாத ஆதாரங்களை கண்டுபிடிச்சு, இதுதான் சரின்னு சொல்லலாம்...
    2. அது முடியலைன்னா, இந்த இந்த மாதிரி நடக்கவெல்லாம் வாய்ப்பு இருக்குன்னும், எதுக்கு நிறைய வாய்ப்பு இருக்குதுன்னும், பட்டியல் போடலாம்...
    இது ரெண்டும் சரி... ஆனா, நிறைய வாய்ப்பு இருக்கறதுதான் உண்மைன்னு சொல்லறதை நான் நம்பமாட்டேன்... Usual Suspects பார்த்துருக்கீங்க இல்ல? :)

    // இதற்கு முத்தாய்பாக, நாடலி பற்றி லென்னியிடம் டெட்டி சொல்லும் இந்த வசனங்கள்.. //
    நடாலி அவனைக் கண்டுபிடிச்சுடுவாளொன்னு டெடிக்கு ஒரு பயம் இருக்கலாம்... அதுனால லென்னியை ஊரை விட்டு போக சொல்லலாம்... நடாலிக்கு டெடிதான் John Gammel-னு தெரியும்னு படத்துல எங்கயும் சொல்லல...

    // இருக்கலாம்..ஆனால், Sammy-யின் கதை முதற்கொண்டு சொல்லி இருக்க முடியாது.. //
    அதுவும் சொல்லி இருக்கலாம்.. ஜிம்மியே கூட நேரடியா லென்னிகிட்ட ஹோட்டல்ல பேசி இருக்கலாம்... (டென்ஷன் ஆவாதீங்க... :-))

    எதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு அப்படிங்கிறதுல நமக்கு எந்த வேறுபாடும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.. ஆனா, இதுதான் சரின்னு நிரூபிக்க நாம இன்னும் பல தடவை படம் பார்க்கணும்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  55. நீங்கள் சொல்லி இருப்பது எல்லாமே, நான் எழுதும் போது எனக்கு தோன்றியவைதான் :) இதே மாதிரி ஒன்னும் புரியகூடாதுனு கொழப்புவதற்கு என்றே எடுக்க பட்ட படம் Mullholland Drive.. அது கூட ஒரு பகுதி முழுக்க கற்பனை என்று ஒதுக்க முடியும்.. இதில் அதற்கும் வாயப்பு இல்லை..

    ஒரு முக்கிய முடிவுக்கு வர விடாமல் தடுப்பது.. அந்த பச்சை குத்துவது தான்.. இது பல ஊகங்களை அப்படியே ஒன்றும் இல்லாமல் செய்து விடுகிறது, அல்லது ஒரு பாதையில் போக விடாமல் தடுக்கிறது.. Director is deliberate in choosing tattoo as a medium :)

    சரி அடுத்த படம் என்னது? (உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா)

    :))

    ReplyDelete
  56. @ பிரசன்னா,
    இன்னும் Mullholland Drive பார்க்கலைங்க..

    // சரி அடுத்த படம் என்னது? (உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா) //
    முடியலைங்க... நாலு நாளா தினமும் ரெண்டு மணி நேரம் இதைப் பத்தி பேசினதுல, தூக்கத்துல எல்லாம் மெமெண்டோதான் ஞாபகம் வருது... அடுத்த போஸ்ட் சின்னதா சிம்பிளா எழுதணும்...

    ReplyDelete
  57. //தூக்கத்துல எல்லாம் மெமெண்டோதான் ஞாபகம் வருது..//

    அதே தான்.. அதே தான்.. வேற நெனப்பே இல்ல.. இருந்தாலும் இது பிடிச்சிருக்கு.. :)

    ReplyDelete
  58. 2 வருஷம் முன்னாடி இந்த படத்தை பாத்திருக்கேன். மூனு முறை பாத்தும் ஒன்னும் புரியல. நீங்க முதல் பதிவுல சொன்ன மாதிரி கஜினிக்கும் இதுக்கும் என்ன இருக்கற லிங்க்ஸ் பத்தி மட்டும் பாத்துட்டு மறந்துட்டேன். இப்ப உங்க பதிவை படிக்கும் போது திரும்பவும் பாக்கனும்னு ஆசையா இருக்கு. உங்களோட ஆய்வுப் பார்வையும் சினிமா மீதான காதலும் பிரம்மிப்பா இருக்கு. பாலாவோட பின்னுட்டங்கள் உங்களுடைய விளக்கங்கள் பிரசன்னாவோட கருத்துக்கள் ரொம்ப ஆரோக்கியமா, ஆழமாக இருந்தது. கிரிஸ்டொபர் நோயல் நம்ம பேரரசு, ராமநாரயணன் படங்கள பாக்க வைக்கனும்.

    ReplyDelete
  59. Hi Jei,
    Appadiyae "DEJA VU" movie kum oru review podunga. Great movie but lots of confusions like MOMENTO.

    Expecting your review on DEJA VU.............

    ReplyDelete
  60. Thanks CSB,

    I haven't seen Deja Vu yet.. Will see and write...

    -Jay

    ReplyDelete
  61. இதற்க்கு மேல் சிறப்பாக விமர்சிக்க முடியாது.
    சிறந்த விமர்சகர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள்..
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  62. ஜெய்லானி said...
    //இதெல்லாம் ஹீரோ நமக்கு விவரிப்பதை நம்பமுடியாதுன்னு சொல்லறமாதிரி இருக்கு.. அவனோட கற்பனை அல்லது குழப்ப மனநிலையைக் காட்டற மாதிரி இருக்குது..//

    இதுதான் நம்மை குழப்பி அவங்களும் குழம்பறமாதிரி செய்வது.. ///

    இதை வழிமொழிகிறேன்..

    தாங்களின் விமர்சனம் அருமை..

    ReplyDelete
  63. நன்றாக இருந்தது நீங்கள் இந்த படத்தை பிரித்து மேய்ந்தது. இதனை போலவே கலைஞரின் செய்கைகளை யாரேனும் விவரித்தால் நன்றாக இருக்கும். unreliable narration அவருக்கு நன்றாக பொருந்துகிறது. அரசியல் பற்றி பேசியதற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  64. avi cutter/splitter வெச்சு, எல்லா சீனையும் கட் பண்ணி, ஒட்டி ஒரு தடவை திருப்பி பார்க்கப் போறேன்.

    ReplyDelete
  65. http://www.youtube.com/watch?v=d5MLaaBv3sU&feature=PlayList&p=81023B2C70F81116&playnext_from=PL&playnext=1&index=11

    யூ டியூபில் லீனியராக எடிட் செய்யப்பட்டுள்ளது, விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம். பொறுமை இருந்தால் :)

    ReplyDelete