Friday, March 19, 2010

எனக்கு பிடித்த படங்கள்: பட்டியல் – 1

முதல் முறை கணிணியில் தமிழில் எழுதுகிறேன். பள்ளி முடித்து 10 வருடங்களில் நூற்றுக்கண்க்கில் நாவல்களும், ஆயிரக்கணக்கில் வலைப்பதிவுகளும், வார இதழ்களும் படித்து இருந்தாலும், முதல் முறை இவ்வளவு எழுதுகிறேன். பிழையிருந்தால் அடியேனை மன்னிக்கவும்.
பிற மொழிப் படங்களைப் பற்றி எழுதப்படும் தமிழ் வலைப்பதிவுகள் பல இருந்தாலும், அவைகளில் பல விறுவிறுப்பான/மசாலா படங்களைப் பற்றியே அதிகம் கூருகின்றன. மிகச்சிறந்த கதைகள், கருத்துக்கள் உள்ள படங்கள், வித்தியாசமான திரைக்கதை/கரு/தொழில்நுட்பம் உள்ள படங்களைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும் என்பதே இந்த வலைப்பதிவின் நோக்கம். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம். உஙகள் கருத்துக்கள் அன்புடன் வரவேற்கப்படுகின்றன.
எனக்கு பிடித்த படங்கள்:
முதலில் எந்த படங்களை எழுத வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். இதுவரை நான் பார்த்த அனைத்து படங்களில் இருந்தும், எனக்கு மிக மிகப் பிடித்த படங்கள் என ஒரு பட்டியல் தயாரித்தேன். 28 படங்கள் உள்ளன. அவற்றை முதலில் சொல்ல வேண்டும். இந்த படங்களை 4 பிரிவுகளில் சொல்லலாம்.
அதில் முதல் பிரிவாக 8 படங்களைப் பற்றி சின்னதாக ஒரு intro. ஒவ்வொரு படத்தையும் விரிவாக மீண்டும் பார்க்கலாம்.
பட்டியல் – 1
இவை அனைத்தும் வாழ்க்கையைப் பற்றி பேசும் படங்கள், அதே சமயம் மிகவும் விறுவிறுப்பானவை. மீண்டும் மீண்டும் பார்க்கலாம். படம் முடியும் போது

வாழ்க்கை குறித்த உஙகள் பார்வை மற்றும் மனநிலையே கொஞ்சம் மாறி இருக்கும், நிச்சயமாக.
Forrest Gump (1994) வாழ்க்கையை இவ்வளவு எளிதாக வாழ முடியுமா என ஆச்சரியப் படுத்தும் படம். மற்ற படங்கள் எல்லாம் காதல், பாசம், குடும்பம் என ஒரிரண்டு விஷயங்களைப் பற்றி மட்டும் பேச, மொத்த வாழ்க்கையையும் வாழக் கற்றுக் கொடுக்கிறது இப்படம். 15 முறையாவது பார்த்துள்ளேன். பிடிக்கவில்லை என இதுவரை யாரும் சொன்னதில்லை. உண்மையிலேயே என் character-யே கொஞ்சம் மாற்றி விட்டது. 6 ஆஸ்கர் வாங்கிய படம். Tom Hanks நடிக்கவில்லை... வாழ்ந்தே உள்ளார், Forrest Gump-ஆக.
It’s a Wonderful Life (1946) முந்தைய படம் எப்படி வாழ வேண்டும் என்றால், இது ஏன் வாழ வேண்டும் என காட்டும் படம். தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு, counseling தேவையே இல்லை. இந்த படத்தை ஒரு முறை பார்த்தால் போதும். இதைப்போல ஒரு மகிழ்ச்சியான ஒரு இறுதிக்காட்சி எந்தப்படத்திலும் இல்லை!!
Casablanca (1942) – இதுவரை வெளிவந்த படங்களிலேயே மிகச்சிறந்த காதல் படம் என அனைவராலும் சொல்லப் பட்ட படம். இனிமேலும் இப்படி எடுக்க முடியுமா என்பது சந்தேகமே. பாடல் கிடையாது. Romance காட்சிகள் கிடையாது. காதல் என்றால் புரிந்து கொள்ளல், விட்டுக் கொடுத்தல் மட்டுமே என உணர்த்தும் படம். American Film Institute (AFI)’s All Time 100 best dialogues list ல், கடந்த 100 வருடங்களில் வந்த அனைத்து படங்களின் 100 சிறந்த வசனங்கள் பட்டியல் இடப் பட்டுள்ளன. அதில் 6 இந்த பட்த்தில் இருந்து மட்டும்!! மற்ற எந்த படத்தில் இருந்தும் 3க்கு மேல் இல்லை.
Cast Away (2000)வாழ்க்கையில் நம்பிக்கை எவ்வளவு முக்கியம்? அனைத்தும் இழந்த பிறகும், ஏன் வாழ வேண்டும் என காட்டும் படம். மீண்டும் Forrest Gump Director Robert Zemickis, நடிகர் Tom Hanks கைகோர்த்த படம். படத்தின் நடுவே 80 நிமிடங்களுக்கு, மொத்த வசனமே பத்து வரிகள்தான்!! ஒரு volley ball பந்தை ஹீரோ பிரியும் போது நமக்கே அழுகை வரும். அந்த பந்துக்கும் ஹீரோவுக்கும், best screen pairs அவார்ட் கொடுத்து உள்ளார்கள்!!
Schindler’s List (1993) இரண்டாம் உலகப் போரின் போது, 1100 Jew இனத்தை சேர்ந்தவர்களைக் காப்பாற்ற, Oskar Schindler என்ற Businessman என்ன செய்தார் என காட்டும் படம். நான் அழுத ஒரே படம். (நம்மூருல இப்ப வர்ர படங்கள்ல எல்லாம் வேற மாதிரி அழ வைக்கறாங்க). 1993-ல் எடுத்து இருந்தாலும், கதை 1940-களில் நடப்பதால், 5 நிமிடம் தவிர 3 மணி 10 நிமிடம் முழுக்க கருப்பு வெள்ளை திரைப்படம் தான். மிகச்சிறந்த கதாபாத்திரங்கள், மனதை பிசையும் இசை, கதைக்களத்திற்கே நம்மை இழுத்து செல்லும் ஒளிப்பதிவு என.. இன்னும் சொல்லி கொண்டே போகலாம். நான் பார்த்த்திலேயே மிகச்சிறந்த இயக்கம் என்பதில் சந்தேகமே இல்லை. Steven Spielberg, Jurassic Park படம் எடுத்து 5 மாதங்களிலேயே இவ்வளவு பெரிய மற்றும் சிறந்த படத்தை எடுத்து உள்ளார். 7 ஆஸ்கர் வாங்கிய படம்.
Life is Beautiful (1997) - மீண்டும் இரண்டாம் உலகப் போர் சார்ந்த படம். எவ்வளவு துன்பம் வந்தாலும், நம்பிக்கையும் கற்பனையும் இருந்தால், சந்தோஷமாக இருக்கலாம் என்பதுதான் கதையின் மையம். அப்பா மகனுக்காக செய்யும் தியாகமும், அதை நகைச்சுவையாக செய்யும் திறமையும் அருமை.
Amelie (2001) – வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் எவ்வளவு ஆர்வமானவை? சின்ன வயதில் இருந்த மகிழ்ச்சி, குறும்பு, துள்ளல் எல்லாம் வாழ்க்கை முழுதும் இருந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்? அது சாத்தியமா? அடுத்தவர் வாழ்க்கையில் ஆர்வத்தை கொண்டு வர முடியுமா? மக்ழ்ச்சியுடன் எப்போதும் குறும்பாக இருக்கும் இளம்பெண்ணின் வாழ்க்கை இந்த ஃப்ரென்ச் படம். இங்க்லீஷ் சப் டைட்டில் கிடைக்கும். (opensubtitles.org)
Artificial Intelligence (2001) – அடுத்த நூற்றாண்டில் நடக்கும் கதை. தத்து எடுக்கப்படும் 11 வயது Robot சிறுவனின் கதை. Robot சிறுவனுக்கு மனிதனின் உணர்ச்சிகளை கொண்டு வருவதில் வெற்றி அடைகின்றனர் மனிதர்கள். மனிதர்களையும் இயந்திரங்களையும் வித்தியாசப்படுத்துவதே மனித நேயமும், பாசமும்தான். அதை மனிதர்கள் இழந்து, எந்திரங்களுக்கு புகுத்தி விட்டால்? சென்ற நூற்றாண்டின் சிற்ந்த இயக்குனராக கருதப்படும் Stanley Kubrick-ன் கதை. Spielberg-ன் இயக்கம். சொல்லவா வேண்டும்?
உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள். நன்றி.
அடுத்த பதிவு: பட்டியல்–2 (மிகச்சிறந்த திரைக்கதை கொண்ட 9 படங்கள்)




Related Posts with Thumbnails

22 comments:

  1. நல்ல முயற்சி.நிறைவாகச் செய்யுங்கள் தோழரே...வாழ்த்துக்கள்..படங்களின் போஸ்டர்ஸ் இணைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்...ஆல் தி பெஸ்ட்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நண்பரே. நல்லதொரு துவக்கம், அதிலும் எனக்கும் பிடித்த படங்கள் உங்கள் வரிசையில் இருப்பது மகிழ்வை தருகிறது.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்..

    ஓவ்வொரு படத்தினை பற்றியும் ஒரு பதிவு எழுதலாம்.இன்னமும் விரிவாக எதிர்பார்க்கிறோம்.
    நன்றி.

    பின்னூட்டங்களுக்கான வேர்ட் வெரிபிகேஷனை அவசியம் எடுத்துவிடவும்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்.. நண்பரே.. பதிவுலகம் உங்களை இருகரம் விரித்து வரவேற்கிறது.. வாழ்த்துகள்

    கேபிள் சஙக்ர்

    ReplyDelete
  5. நண்பரே, வாழ்த்துக்கள். உங்கள் தரமான பதிவுகளால் எங்களை மகிழ்வியுங்கள்.

    ReplyDelete
  6. நல்ல அறிமுகம். பின்னர் இன்னும் விரிவாக எழுதுங்கள். படத்தைப் பற்றின பொதுவான தகவல்களை விட அது உங்களை எவ்விதம் பாதித்தது என்பதை குறித்து எழுதுவது உங்கள் பதிவிற்கான தனித்தன்மையாய் அமையும்.

    ReplyDelete
  7. Forrest gump.......
    தான் நினைக்கும் வாழ்க்கையை தான் நினைத்தவாறே வாழும் ஒரு புத்திசாலி முட்டாளின் கதை.......
    Life is Beautiful......
    ஒரு சோகமான கதையை இவ்வளவு ஹுமரோடு சொல்ல முடியுமா என்று என்னை வியக்க வைத்த படம்.கடைசியில் அந்த முடிவு,சூப்பர்.
    மகனுக்காக அப்பா செய்யும் தியாகங்கள் பற்றிப் பேசும் படங்களின் வரிசையில் மறக்க முடியாதவை இதுவும்,Pursuit of happiness உம்.....

    ReplyDelete
  8. எல்லாமே நான் பார்த்து ரசித்த படங்கள்,நிறைய பேரை பாதித்த படங்கள்.நானும் அறிமுகம் செய்வது யாருக்கும் தெரியாமல் போன நல்ல படங்களையே.
    உங்களுக்கு நல்வரவு,எழுத்துப்பிழையை தவிர்க்க முயலுங்கள்.

    ReplyDelete
  9. ஆரம்பமே அசத்தலா ஆரம்பிச்சிட்டிங்க.
    பெரிய பெரிய தலை எல்லாம் வந்து உங்களை வாழ்த்திட்டாங்க, நாம என்ன சொல்றது.
    எல்லோரையும் ஏதோ ஒரு விதத்துல பாதிச்ச படங்களை பட்டியலிட்டிருக்கீங்க, சொல்லி அடிக்கிறதுன்றது இதானோ? வாரத்துக்கு மூனு பதிவா ஹ்ம்ம்ம்ம்ம்ம் கலக்குங்க, எங்களுக்கும் நல்ல வேட்டைதான்.

    ReplyDelete
  10. ஆரம்பமே அசத்தல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அடுத்தது என்ன தலைவரே?

    ReplyDelete
  12. எல்லாமே நல்ல படங்கள் நண்பரே....நல்ல அறிமுகம்
    தொடரட்டும் உமது சினி பணி... :)
    - மச்சான்ஸ்

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  14. நல்ல அறிமுகம்...வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. பெரியவங்க எல்லாம் வந்து வாழ்த்தறீங்க.. சந்தோஷம். மிக்க நன்றி.

    @ சுரேஷ் கண்ணன், இந்த அனைத்து படங்களையும் விரைவில் தனி பதிவாக விரிவாக எழுதுகிறேன்.

    @ கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும், நிச்சயமாக இனி எழுத்துப்பிழையை தவிர்க்கிறேன்.

    @ King Viswa, இன்னும் மூன்று பதிவுகளுக்கு, படங்களின் பட்டியல்.. பின்னர் ஒவ்வொரு படத்தையும் விரிவாக அலசலாம்.

    @ ஹாலிவுட் பாலா, நீங்கள் சொல்வது சரியே. படத்தின் தரம் என்று பார்க்கும்போது AI இரண்டாம்பட்சம்தான். அதுவும் Spielberg-ன் டச் நடுவில் ஒரு மணி நேரம் மிஸ்ஸிங். ஆனால், மனிதநேயத்தை இழந்துவரும் சமூகத்தை பிரதிபலிக்கும் குப்ரிக்-ன் கதையும் அந்த கடைசி 15 நிமிட க்ளைமாக்சும், என்னை மிகவும் கவர்ந்து விட்டது. ஃபீல் இருந்தது.
    2 மணி நேரம் டைம் கிடைத்தால் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம் Its a wonderful life. குடும்பத்தோடு பார்க்கலாம். யாருக்கும் பிடிக்காமல் போக வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
  16. நல்ல படங்கள் ..அவற்றை உள்வாங்கிய விதமும் பிடித்திருந்தது.. ஆனால் என் எல்லாம் ஹாலிவுட் படங்கள் மட்டுமே? உலக சினிமா இன்னும் விரிவான தளத்துல இயங்குது. உதாரணத்துக்கு matrix க்கு முன்னாடியே japan mangai வகை animation (Ghost in the shell வகையறா) படங்கள் அது ஒத்த நிறைய கதைகள் சொல்லி இருக்காங்க.
    நீங்க சொன்னதுல நான் இன்னும் ROPE பாக்கலே.. பாக்கும் ஆர்வம இப்போ உள்ளது.
    இன்னும் நிறைய பாருங்க நிறைய எழுதுங்க..

    ReplyDelete
  17. மனநிறைவு தர கூடிய படங்களே உங்க விருப்பம்னு நினைக்கிறேன், நீங்க சொன்ன படங்கள பாத்தா நிச்சயம் நீங்க feel good ஆசாமியா இருக்கணும் அப்படியே big fish, one flew over the cuckoo's netஉம் பாருங்க நிச்சயம் விரும்புவீங்க. இன்னும் நிறைய எழுதுங்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. Innum Schindler's listum, it's a wonderful life-um paakalanga... seekram paakanum...

    Cast away-la andha volleyball oru character... romba nalla irukkum... adhe maathri ore character-ah vachi avlo gripping ah padam epdi pannangane theriyala..

    Forrest gump-un enaku pudicha padam than...

    ReplyDelete
  19. it is very fantastic

    ReplyDelete
  20. இது தான் பயணத்தின் தொடக்கமா?

    ReplyDelete