Monday, May 31, 2010

Christopher Nolan-னும் அரை டஜன் குழப்பங்களும்

பேரு: கிறிஸ்டொஃபர் நோலன்

வயசு: 39

தொழில்: ஹாலிவுட்ல ஒரு முக்கியமான இயக்குனர்

எடுத்தது: 6 படங்கள், Following (1998), Memento (2000), Insomnia (2002), Batman Begins (2005), Prestige (2006), The Dark Knight (2008) (இதுல 4 IMDB Top 250-ல இருக்கு...)

பொழுதுபோக்கு: படம் பார்க்கறவங்களோட மூளையைக் குழப்பறது

பிடிச்சது: மனநோய் இருக்கற கதாபாத்திரங்களை

பிடிக்காதது: Linear-ஆ இருக்கற படங்களை

சிறப்பம்சம்: அதைத்தான் இந்த பதிவுல தெரிஞ்சுக்கப்போறீங்க..

சில படங்கள்ல பார்வையாளனை சிரிக்கவச்சே வயிறு வலி வரவழைச்சுடுவாங்க.. சில படங்கள்ல பயமுறுத்தியே ஹார்ட் படபடன்னு அடிச்சுக்கும்.. கிறிஸ்டொஃபர் நோலன் கொஞ்சம் வித்தியாசம்.. பார்வையாளனின் மூளையோட விளையாடறவர்.. எப்படின்னு பார்ப்போம்..

Non-linear கதை:

Non-linear-னா என்னன்னு தெரிஞ்சவங்க இந்த பாராவை ஸ்கிப் பண்ணிடுங்க.. படத்துல இருக்கற காட்சிகள் அல்லது அத்தியாயங்கள், எந்த காலவரிசையில நடந்ததோ, அதே வரிசையில வராம, மாத்தி மாத்தி வந்ததுன்னா அதுதான் non-linear.. ஃப்ளாஷ்பேக் கொஞ்சம் வேறவகை.. அதாவது 1234567 இதுதான் 7 காட்சிகள் நடந்த வரிசைன்னா, படத்துல வர்றது 23414567 அப்படின்னு வரும்.. இதுல 4 ரெண்டு தடவை இருக்கே..? அதாவது 4வது காட்சிக்கு நடுவுல யாராவது ஒரு கதாபாத்திரம் முன்னாடி நடந்ததை நினைச்சுப்பார்க்கிற மாதிரியோ, இல்ல யார்கிட்டயோ சொல்லற மாதிரியோ வரும்.. ஃப்ளாஷ்பேக் (1வது காட்சி) முடிஞ்சவுடனே விட்ட இடத்துல இருந்து நிகழ்காலக்கதை (4வது காட்சி) திரும்ப தொடரும்.. non-linear அப்படியில்ல.. எந்த கதாபாத்திரமும் நினைச்சுப் பார்க்கற மாதிரியோ, சொல்லற மாதிரியோ வராது.. 1234567 இதுதான் நடந்த வரிசைன்னா, படத்துல வர்றது 4271365 மாதிரி மாத்தி மாத்தி வரும்.. நாமதான் குத்துமதிப்பா புரிஞ்சுக்கணும்..

நோலன் எடுத்த ஆறு படங்கள்ல, Following, Memento, Prestige இந்த மூனும் non-linear. நம்ம Quentin கூடதான் non-linear படம் எடுக்கறாரு.. ஆனா இந்த விஷயத்துல Nolan தான் பெரிய ஆளு.. (இதுக்கு எத்தனை பேரு என்னை அடிக்கப்போறாங்களோ..)

சில பேர் கதை சொல்லிட்டு இருக்கும்போது ஏதாவது ஒரு விஷயத்தை சொல்ல மறந்துடுவாங்க.. பின்னாடி தேவைப்படும்போதுதான், அடடா அதை சொல்ல மறந்துட்டேனே அப்படின்னு, விட்ட சீனை சொல்லுவாங்க.. க்வெண்டினோட Reservoir Dogs, Kill Bill ரெண்டு படத்துலயும் வர்ற non-linear கிட்டத்தட்ட இந்த வகைதான்.. புரிஞ்சுக்கறது ரொம்ப சுலபம்.. அதுமட்டுமில்லாம பெரும்பாலான படங்கள்ல non-linearity வர்றதே படம் பார்க்கறவங்களுக்கு சில காட்சிகளை சொல்லாததால கதையில வர்ற ஆர்வம்தான்..

ஆனா Memento படத்துல non-linear டெக்னிக்கை பயன்படுத்துனதுல ஒரு புரட்சின்னுதான் சொல்லணும்.. இது எவ்வளவு முக்கியமானதுன்னு சொல்ல கொஞ்சம் திரைப்பட வரலாற்றில நடந்த சில சம்பவங்களை பார்க்கவேண்டி இருக்குது..

1890-கள்ல வந்த படங்கள் ஊமைப்படங்களாகவே இருந்தது.. அப்பறம் கதாபாத்திரம் சோகமா இருந்தா, அதே சோகத்தை பார்க்கிறவங்களுக்கும் கொண்டு வரணும்னு, சோகமா வயலின் இசையை சேர்த்தாங்க..

1920-கள்ல சில படங்கள்ல த்ரில் சேர்க்கிறதுக்காக, முன்னாடி நடந்த மர்மமான ஒரு விஷயத்தை சொல்லற மாதிரி ஃப்ளாஷ்பேக் கொண்டுவந்தாங்க..

1954-ல வந்த Rear window படத்துல, கால் உடைஞ்ச ஹீரோ படம் முழுக்க நகர முடியாம ஒரே ரூம்ல ஒரே நாற்காலியில உட்கார்ந்துகிட்டு, எதிர்வீட்டை நோட்டமிட்டுகிட்டு இருப்பாரு.. ஹீரோ எப்படி ஃபீல் பண்ணறாரோ அதே மாதிரி நாமும் ஃபீல் பண்ணணும் அப்படிங்கிறதுக்காக, படம் முழுக்க ஒரே அறையில்தான் கேமிரா இருக்கும்.. ஹீரோவோட அதே பார்வையிலதான் நாமும் பார்ப்போம்.. ஹீரோ எதிர் வீட்டைப் பார்க்க, நாம பார்க்கற மாதிரி தோணும்.. கடைசில, எதிர்வீட்டுக்காரன் ஹீரோவைத் தாக்க வர்றப்போ, நம்மைத் தாக்க வர்ற மாதிரி பயம் வரும்.. அந்த ஃபீலிங்கை வெறும் கேமிராவை வச்சு சாதிச்சார் ஹிட்ச்காக்..

1972-ல வந்த காட்ஃபாதர் படத்துல, மார்லன் பிராண்டோ அடிக்கடி சொல்லற முக்கியமான வசனம் இது: Never let others know what you think. அப்படி சொல்லற மார்லன் பிராண்டோ என்ன நினைக்கிறார்னு நமக்கு தெரியக்கூடாது இல்லையா.. அதுனால அவர் வர்ற காட்சிகள் முழுக்க அவர் தலைக்கு நேரா மேல லைட்டிங் வச்சு, அவரோட கண்கள் எப்போதும் நிழல் இருட்டுலதான் இருக்கும்.. ஒருத்தரோட கண்களைப் பார்க்காம, அவர் சந்தோஷப் படறாரா, வருத்தப்படறாரா, பயப்படறாரான்னு சொல்லறது கஷ்டம்.. அதுனால அவர் என்ன நினைக்கிறார்னு புரிஞ்சுக்க முடியாத குழப்பத்தை நமக்கு உண்டாக்கினாங்க..

இசை, வசனம், கதை, ஃபளாஷ்பேக், கேமிரா, லைட்டிங் எல்லாமே படத்தின் elements (அம்சங்கள்). இந்த அம்சங்களை வச்சு எப்படி பார்வையாளனை ஃபீல் பண்ண வச்சுருக்காங்களோ, அதே மாதிரி, நம்மாளு நோலன் எடுத்த Memento படத்துல, திரைக்கதை அப்படிங்கிற ஒரு அம்சத்தை வச்சு, கதாபாத்திரத்துக்கு இருக்க அதே ஃபீலிங்கை பார்வையாளனுக்கு கொடுத்திருக்கார்..

ஹீரோவுக்கு Short Term Memory Loss. சில நிமிடங்களில் நடந்தது மறந்து விடும். (கஜினி சூர்யா போல) அதனால் யார் நல்லவர், யார் கெட்டவர், யார் நண்பர், யார் எதிரி, யாரை நம்பலாம் நம்பக்கூடாதுன்னு எதுவுமே புரியாது ஹீரோவுக்கு. ஹீரோவுக்கு இவ்ளோ குழப்பம் இருக்கப்போ, அந்த குழப்பம் நமக்கும் இருக்கணும் இல்ல. ஆனா நமக்குதான் Short Term Memory Loss இல்லயே. சாதாரணமா கதை சொன்னா, நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு நமக்கு தெரிஞ்சுடும். அதனால, படத்துல கதையே Reverse-ல போகுது. இதை reverse chronology-ன்னு சொல்லுவாங்க.. non-linear-ல ஒரு வகை இது.. அதாவது படத்தோட முதல் காட்சியே, கிட்டத்தட்ட climax மாதிரிதான். வேற யாரும் இந்த அளவுக்கு non-linear-ஐ பொருத்தமா உபயோகப்படுத்தியதா தெரியல..

நோலன் சொன்ன அற்புதமான கருத்து இது:

நாவல்களில் ஒரு கதாபாத்திரம் நினைப்பதை, அப்படியே வாசிப்பவனுக்கு சொல்வது போல narration-ஆக எழுதலாம்.. ஆனால், திரைப்படங்களில் அதை அப்படியே காட்ட ஒளியும், ஒலியும் இருப்பதால், பெரும்பாலும் narration தேவையில்லையென தவிர்த்து விடுகின்றனர்.. இதனால திரையில் பல விஷயங்களைப் பார்த்தும், கேட்டும், கதாபாத்திரத்தை விட அதிகமாக தெரிந்துகொள்கிற வசதி வந்துவிடுகிறது பார்வையாளனுக்கு..

படம் முழுக்க, கதாபாத்திரம் மட்டுமின்றி, அங்கு ஒரு கேமிராமேன் நின்று படமெடுக்கிறார் என்ற உள்ளுணர்வும் பார்வையாளனுக்கு இருந்து கொண்டே இருக்கிறது.. இதனால் நாவல்களில் கிடைக்கிற, கதாபாத்திரத்துடன் ஒன்றுவது போன்ற உணர்வு சினிமாவில் கிடைப்பதில்லை.. கதாபாத்திரத்துக்கு எவ்வளவு விஷயம் தெரியுமோ, அவ்வளவு விஷயம் மட்டுமே பார்வையாளனுக்கும் தெரிந்தால், பார்வையாளனும் கதாபாத்திரத்தைப் போலவே யோசிப்பான்.. அதனால் கதாபாத்திரத்தோடு ஒன்றி விடுவான்.. (Rear Window மாதிரி..) Memento-வின் ஹீரோ கதாபாத்திரம் காலையில் எழுந்தால், அது யார் அறை, அது என்ன ஊர், என்ன நாள் எதுவுமே ஹீரோவுக்கு தெரியாது.. கதையை நேராக சொன்னால், (கஜினி படம் போல) ஹீரோ எங்கிருக்கிறான், ஏன் இங்கிருக்கிறான் என்று பார்வையாளனுக்குத் தெரிந்துவிடும்.. அதெல்லாம் பார்வையாளனுக்குப் புரிந்துவிட்டால், ஹீரோவின் மனக்குழப்பத்தை உணரமுடியாது.. எனவே கதையோடு ஒன்றி இருக்கமாட்டார்கள்.. அதனாலேயே non-linear-ஆக எடுத்தேன்..

இது மட்டும் இல்ல.. இன்னொரு விஷயம் சொன்னாரு.. அதாவது...

வாழ்க்கையில நாம கேள்விப்படற அல்லது தெரிஞ்சுக்கற எல்லா விஷயங்களையும், நடந்த அதே வரிசையில தெரிஞ்சுக்கறது இல்ல.. உதாரணத்துக்கு, முதல்ல உங்க பக்கத்துவீட்டுக்காரர் ஒரு குடிகாரன்னு தெரியுது, அப்பறம் அவர் எங்க வேலை பார்க்கறார்னு தெரியுது, அப்பறம் அவர் சொந்த ஊர் எதுன்னு தெரியுது.. இதெல்லாம் வேற வேற வரிசையில தெரிஞ்சாலும், நம்மால சரியா பொருத்தி முழுசா புரிஞ்சுக்க முடியுது.. நாம வாழ்க்கையிலேயே தினமும் non-linear இருக்கு.. இதெல்லாம் நமக்கு புதுசு இல்ல..

அது மட்டுமில்ல.. ஒரு கதையை எப்படி சொல்லணுமோ அப்படி சொன்னா அது linear.. மாத்தி சொன்னா, அது non-linear.. Memento-வை பார்வையாளன் ஃபீல் பண்ணற மாதிரி சொல்லணும்னா, இப்படிதான் சொல்ல முடியும்.. அதுனால இது non-linear இல்ல.. linear-தான்.. ஒருவேளை இந்த படத்தை நேரா சொன்னாதான் பார்வையாளனை ஃபீல் பண்ண வைக்கணும்கிற நோக்கம் நிறைவேறாது.. குழப்பத்தை அனுபவிக்க, பார்வையாளன் காட்சிகளை மாத்தி யோசிச்சுக்க வேண்டியிருக்கும்.. அதுனால இந்த படத்தை நேரா எடுத்திருந்தாதான் அது non-linear.. -அப்படிங்கறாரு..

புரிஞ்சுடுச்சா..? இவரு பேசுறதே இப்படி இருக்கறப்போ, ரெண்டு வருஷம் யோசிச்சு படம் எடுத்தா எப்படி இருக்கும்?

Memento-வை சுருக்கமா எழுதினாலும் ஒரு தனி போஸ்ட் வேணும்.. அதுனால அடுத்த போஸ்ட்ல Memento-வைப் பார்க்கலாம்.. அதுக்கு முன்னாடி படத்தை ஒருமுறை பார்த்துட்டு வந்துட்டீங்கன்னா, படிக்க வசதியா இருக்கும்..

Psychological thrillers:

Psychological thriller அப்படிங்கறது த்ரில்லர் படங்கள்ல ஒரு உட்பிரிவு.. இந்த மாதிரி படங்கள்ல, ஹீரோவும் வில்லனும் மற்ற த்ரில்லர் படங்கள் மாதிரி துப்பாக்கி எடுத்துட்டு துரத்திட்டே இருக்க மாட்டாங்க.. ரெண்டு பேருக்கிடையில, Mind game எனப்படும் உளவியல் ரீதியான விளையாட்டுக்களே நடக்கும்.. பொதுவா வில்லன் புத்திசாலியா இருந்தாதான், ஹீரோ கேரக்டருக்கு மரியாதை கூடும்.. (இதுனாலதான் முதல்வன், படையப்பா, சிவாஜி போன்ற படங்கள்ல வில்லன் கேரக்டருக்கும் ஒரு கெத்து இருக்குனு நினைக்கிறேன்..) Psychological thriller படங்கள்ல கேட்கவே வேண்டாம்.. வில்லன் பெரும்பாலும் ஹீரோவை விட புத்திசாலியா இருப்பான்.. ஹீரோவோட பலம், பலவீனம், எங்க அடிச்சா எங்க வலிக்கும்னு எல்லாம் தெரிஞ்சு வச்சுருப்பான்.. ஹீரோவும் அவனை சமாளிக்கற அளவுக்கு இருப்பாரு..

நாமெல்லாம் செஸ் விளையாடினா அடுத்த மூவ் என்ன பண்ணலாம்னுதான் யோசிப்போம்.. ஆனா, விஸ்வநாதன் ஆனந்த் மாதிரி ஜாம்பவான்கள் எதிராளி என்ன பண்ணுவான், அடுத்தது நாம என்ன பண்ணலாம், அதுக்கு எதிராளி திரும்ப என்ன பண்ணுவான் அப்படின்னு அடுத்த ஆறேழு மூவ் யோசிப்பாங்களாம்.. Psychological thriller படங்கள்ல ஹீரோவும் வில்லனும் அப்படிதான் யோசிப்பாங்க.. அடுத்தவங்க என்ன பண்ணுவாங்க, அதை எப்படி சமாளிக்கறது அப்படின்னே போட்டி இருக்கும்..

நோலனோட எல்லா படமுமே இந்த வகைப்படங்கள்தான்.. Psychological Thriller வகைக்கே இவர் படங்கள்தான் உதாரணம்னு சொல்லலாம்..

வேகமான காட்சிகள்:

எப்படி கதாபாத்திரங்களை அறிமுகப் படுத்தணும், எவ்வளவு நேரம் ஒரு காட்சியைக் காட்டணும், எப்படி கதையில பிரச்சினையைக் கொண்டுவரணும் இப்படியெல்லாம் ஹாலிவுட் படங்கள்ல பல திரைக்கதை விதிமுறைகள் இருக்கு.. நோலன் எதையும் மதிச்சதில்லை.. குப்ரிக், க்வெண்டின் எல்லாம் மெதுவா கதை சொல்லற வகைன்னா, இவர் அதுக்கு நேரெதிர்.. பரபரன்னு வேகமா போகும் காட்சிகள்..

ஹீரோவும் வில்லனும் யோசிக்கறதை நாம புரிஞ்சுக்கறதுக்குள்ள, அடுத்த சீன் வந்துடும்.. இதெல்லாம் பார்வையாளனுக்கு புரியணுமே அப்படிங்கற கவலையெல்லாம் எப்பவுமே கிடையாது நோலனுக்கு..

வேகமான காட்சிகள்.. ஹீரோ வில்லன் ரெண்டு பேரும் புத்திசாலித்தனமா பேசிக்கறாங்க, உளவியல்ரீதியா விளையாடறாங்க.. அதுக்கு மேல non-linear வேற.. எப்படிப்பா படம் புரியும்னு நோலனைக் கேட்டா, “சரிதானே.. நான் ரெண்டு வருஷமா யோசிச்சது, உங்களுக்கு எப்படி ரெண்டு மணி நேரத்துல முழுசா புரியும்?”-னு சொல்லறாரு..

ஆனா, இவர்கிட்ட பிடிச்ச விஷயமே, சும்மா குழப்பிவிட்டுப் போறதில்லை இவரோட நோக்கம்.. குழப்பத்துக்குப் பின்னாடி, திரைக்கதையில புதுமைகள், கதாபாத்திர படைப்பில் புதுமைகள்னு பல விஷயங்கள் இருக்கும்.. அந்த புதுமையான அனுபவத்தைக் கொண்டுவர குழப்பம் தவிர்க்க முடியாததாக இருக்கும்.. பலமுறை பார்த்து ஒரு வழியா குழப்பத்தைப் போக்கினதுக்கு அப்பறம், அடடா இப்படி ஒரு படம் எடுத்துருக்காரே அப்படின்னு ஒரு வியப்பு வரும் பாருங்க.. அதுக்காகவே படம் பார்க்கணும்..

திரைக்கதை எழுதுவதில் புதுமை:

திரைக்கதை எப்படி எழுதணும்னு சில விதிமுறைகள் இருக்கு.. Capital Letters, Small Letters, Paragraph, Explanation of characters, places அப்படின்னு பல விஷயங்கள் இருக்கு.. ஏன் இப்படிதான் எழுதணும்னு அந்த ரூல்ஸையும் தூக்கி குப்பையில போட்டுட்டாரு.. எல்லாரும் அவர் எழுதற புதுமாதிரியான ஸ்டைலை ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லறாங்க..

உதாரணத்துக்கு, இது Memento-வின் ஆரம்பக்காட்சி..

A POLAROID PHOTOGRAPH, clasped between finger and thumb: a crude, crime scene flash picture of a MAN'S BODY lying on a decaying wooden floor. A BLOODY MESS where his head should be.

இதை மற்ற திரைக்கதை எழுதுபவர்கள் எழுதினால், கிட்டத்தட்ட இந்த ஸ்டைலில் இருக்கும்..

We see A POLAROID PHOTOGRAPH which is clasped between finger and thumb: there is a crude, crime scene flash picture of a MAN'S BODY lying on a decaying wooden floor. Now we see a BLOODY MESS where his head should be.

இந்த அதிகப்படியான வார்த்தைகள் நாம் படிப்பது வெறும் ஸ்கிரிப்ட்தான் அப்படிங்கிற உள்ளுணர்வை தந்துகிட்டே இருக்கு.. அந்த உணர்வே முழுமையா காட்சியை கற்பனை செஞ்சு பார்க்கவும் தடையா இருக்கு.. அதனால தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்தாம, படிக்க, படிக்க, அப்படியே காட்சி மனசுல விரியற உணர்வை கொண்டுவருது இவரோட ஸ்கிரிப்ட்...!!

வசூலில் பெரிய சாதனைகள்:

முதல் படம் எடுக்க இவர்கிட்ட காசு இல்லை.. தயாரிப்பாளர் யாரும் உதவி பண்ணல.. இவரும், இவரோட நண்பர்களும் சேர்ந்து வெறும் 6000 டாலர் செலவில், சனி ஞாயிறு மட்டும் ஷூட்டிங் எடுத்து முடிச்ச படம் Following (1998). (தமிழ்ல வாமணன்னு ஒரு படம் வந்துச்சே.. அது இந்த படத்தோட தழுவல்தான்..) முதல் படத்தை வச்சுதான் அடுத்த படத்துக்கான தயாரிப்பாளரை பிடிக்க முடிஞ்சது.. இந்த விஷயத்தில் க்வெண்டினுக்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள்..

ஆனா, இப்போ வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பில் படம் எடுக்க ஆரம்பிச்சப்பறம், காசுக்கு பஞ்சமேயில்லை.. வசூலும் கொட்டுது.. இதுவரை உலக வரலாற்றில் 6 படங்கள்தான் 1 பில்லியன் டாலர் வசூலை தாண்டியிருக்கு.. அதுல Dark Knight(2008)-ம் ஒன்னு.. (ஏழாவதா சுறா படம் இருக்கும்னு பரவலா பேசிக்கறாங்க..)

இவருக்கு ஒரு சகோதரர் இருக்கார்.. ஜொனாத்தன் நோலன்.. அவரும் பல படங்கள்ல சேர்ந்து வேலை பார்த்திருக்கார்.. அவர் எழுதுன சிறுகதையில இருந்துதான் Memento கதை உருவாச்சாம்..

இவரோட எல்லா படத்துக்கும் சில ஒற்றுமைகள் இருக்கு.. யாராவது ஒருத்தரோட மரணம் ஹீரோவை பாதிச்சு இருக்கும்.. Batman Begins தவிர வேறு எதுவும் happy ending கிடையாது.. யாராவது மனவியாதி பாதிக்கப்பட்டவங்க இருப்பாங்க.. ஆனா, பல ஒற்றுமைகள் இருந்தாலும், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு வகைதான்.. அதுவும் தொடந்து மெருகேறிட்டே வர்றது தெரியும்..

இவரோட அடுத்த படம் Inception.. படம் பேரை நல்லா ஞாபகம் வச்சுக்குங்க.. ஏன்னா, இன்னும் ரெண்டு மாசத்துல ஊரெல்லாம் இந்த படத்தைப் பத்திதான் பேச்சாயிருக்கும்..

ஜூலை 16ம் தேதி ரிலீஸாகுது.. கொஞ்சமா கதையை சொல்லி இருக்காங்க.. அதுக்கே தலை சுத்துது.. கதை என்னன்னா..

ஹீரோ டி-காப்ரியோ அடுத்தவங்களோட கனவுக்குள்ள புகுந்து, அங்கேயிருந்து அவங்களோட பர்சனல் விஷயங்களை எல்லாம் அவங்களுக்கு தெரியாமலேயே திருடி, அதை வச்சு பணம் சம்பாதிக்கறவன்.. இதனால, அவனோட வாழ்க்கையில முக்கியமான விஷயங்களை இழந்துடறான்.. அது திரும்ப கிடைக்கணும்னா, அவன் ஒரு கஷ்டமான கனவுத்திருட்டை செய்யணும்னு சொல்லறாங்க.. அந்த வேலையை செய்யறதைத் தடுக்க, இவனை விட சக்திவாய்ந்த ஒரு வில்லன் கூட்டம் அலையுது.. அதை எப்படி சமாளிக்கறான் அப்படிங்கிறதுதான் படம்.. கனவுக்குள்ள கனவுன்னு சுத்திகிட்டே இருக்குமாம்.. பல கனவுலகங்கள்ல ஒரே சமயத்துல நடக்கிறதை, மாத்தி மாத்தி காட்டியிருக்காங்களாம்.. பல பேர் மாத்தி மாத்தி narration பண்ணற மாதிரி வருதாம்..

படத்தோட கான்செப்ட்டை வச்சு ஒரு கேம் கூட வச்சுருக்காங்க.. http://inceptionmovie.warnerbros.com/

இது எப்பவும் போடற மாதிரி மொக்க ட்ரெய்லர் இல்ல.. இப்படி ஒரு ட்ரெய்லர் என் சர்வீஸ்ல பார்த்தது இல்லைங்க.. ஒரு தடவை பாருங்க.. நீங்களும் என்ன மாதிரி ஜூலை 16 எப்ப வரும்னு காத்திருப்பீங்க..





Related Posts with Thumbnails

53 comments:

  1. நண்பா . . ஒரு பின்னூட்டம் பெரியதாக எழுதி, அது டோட்டலாக டிலீட் ஆகிவிட்டதால், மறுபடி இதை எழுதுகிறேன் . .

    நோலன் சகோதரர்கள் பற்றி அட்டகாசமான ஒரு ஆய்வுக் கட்டுரை போல இருக்கிறது. . நான் லீனியர் பற்றி அவரது கருத்து பின்னிவிட்டது !!

    அதே போல், திரைக்கதை பற்றி அவரது கண்ணோட்டம் - அவரது ஸ்டைலை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன் . .

    இன்ஸெப்ஷனுக்குப் பல நாட்களாக ஆவலோடு காத்திருக்கிறேன் . . :-)

    ReplyDelete
  2. மிகச்சிறிய வயதில் நிரம்ப சாதித்தவர்,இவரின் படங்கள் பாடங்களாய் உள்ளது,மிக நல்ல பதிவு ஜெய்.இவர் படம் பற்றி எத்தனையோ பதிவெழுதலாம்.

    ReplyDelete
  3. பாஸ் பின்றீங்க.

    ReplyDelete
  4. வாவ்.. நான் இன்னும் சிலமுறை படிக்கவேண்டும். அருமை நண்பரே!!

    மற்றபடி கருந்தேளின் கருத்தே என்னுடையதும். :-)

    ReplyDelete
  5. இதை படிக்கவே பொருமை வேனும் அவ்வளவு விசயம் உள்ள இருக்கு ஜெய் !!கலக்கிட்டிங்க பாஸ் !!

    ReplyDelete
  6. ஜெய் ஒரு தளத்தின் சுவாரஸ்யம் என்பது.. இது போன்ற அற்புதமான உழைப்பின் பதிவுகளை சொல்ல் வேண்டும்... இதற்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும் தமிலிஷ் தமிழ்ம்ணத்திள் ஓட்டுக்கள் போட்டேன்...
    ஜெய் சோலனைதான் நாம ஹாலிவுட் பாலான்னு சொல்லனும்...
    இந்த அதிகம் படிக்காதவன் இது போலான பதிவுகளை படிப்பதன் மூலம் அவர்கள் திரைக்கதை கண்ணோட்டங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது...

    என்னோட பேவரைட் டார்க் நைட்தான்.. அதில் வில்லனின் ஆளுமை சான்சே இல்லை

    இது போன்ற பதிவுகளை எதிர்பார்த்து காத்து இருக்கும்

    ஜாக்கி

    ReplyDelete
  7. நல்லா எழுதி இருக்க தம்பி..
    பெரிய விஷயம்..மனசுல கோர்வைய வார்த்தையா அதை டைப் செய்வது சாதாரண விஷயம் இல்லை..ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க..
    அந்த உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்

    குப்ரிக் பற்றி நீ எழுதிய பதிவு...குப்ரிக்கோட ரோம்ப குளோசா வாழ்த்தது போல இருந்தது அந்த பதிவு

    ஒரு விஷயத்தை சின்சியரா செஞ்சா, அல்லது எழுதினா அது உன் எழுத்துல தெரியும்னு சொல்லுவாங்க... அதை நான் குப்ரிக் நோல்ன் அதை இரண்டு போஸ்ட்லியும் பார்த்தேன்...

    ReplyDelete
  8. கலக்கலா எழுதி இருக்கீங்க.
    எனக்கு தற்போதைய நான் லீனியர் திரைக்கதை உத்திகளில், அதை படமாக்குவதில் இயக்குனர்கள் Nolan, Quentin, Guy Ritchie மூவரையும் மிகப்பிடிக்கும்.
    மூவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன்.. மிக அற்புதமான படங்கள் ஒவ்வொன்றும்.

    மூவரையும் 1,2,3 என்று வரிசைபடுத்த சொன்னால்..
    Nolan
    Guy Ritchie
    Quentin
    என்றே சொல்வேன்.. முதல் இருவரும் Quentin விட psychological ஆக சிறப்பாக பேசுபவர்கள் என்பதால். :)

    ReplyDelete
  9. Inception போஸ்டர் தான் என்னோட desktop wallpaper.. ரொம்ப ஆவலா வெயிட் பண்றேன்.. ஆனா மேட்ரிக்ஸ் மாதிரி (கதை அல்ல, அந்த சாயல்) இருந்திடக்கூடாது என்று ஆசைப்படுகிறேன்.

    ReplyDelete
  10. ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

    சரவணக்குமார்..!!! :) :) :)

    ============

    ஜெய்... வேற என்னத்தைச் சொல்ல...!! அதான் மேலயே எல்லோரும் சொல்லிட்டாங்களே?

    அப்புறம்..

    ///சில நிமிடங்களில் நடந்தது மறந்து விடும். (கஜினி சூர்யா போல)///

    இதுல.. ப்ராக்கட்ல போட்டு கஜினியென்னும் கலைக்காவியத்தை கொச்சை படுத்திட்டீங்களே?? :)

    இதையெப்படி.. நம்ம கார்த்திக்கேயன் விட்டார்?

    ReplyDelete
  11. நன்றி கருந்தேள்.. அவர் non linear பத்தி சொன்னதை ஒரு பாராவுக்கு எழுதியிருக்கேனே.. நோலன் அதை ஒரு வரியில சொல்லியிருந்தார்..
    “ really is a question of finding the most suitable order for releasing information to the audience and not feeling any responsibility to do it chronologically, just like we don't in life.” அப்படின்னு.. படம் மாதிரியே பரபரன்னு பேசுறாரு.. பேசிட்டு போனதுக்கப்பறம் நாம குப்புற படுத்து யோசிக்க வேண்டியிருக்கு.. என்னமோ சொன்னாரேன்னு.. :)

    நன்றி கார்த்திக்கேயன்.. நீங்களும் நோலனைப் பத்தி கண்டிப்பா எழுதணும்.. அவரைபத்தி ஒவ்வொரு விஷயமும் ஆச்ச்ர்யம்தான்..

    நன்றி ராமசாமி, பலாபட்டறை..

    நன்றி ஜெய்லானி, பொறுமையா படிங்க.. எல்லாம் அவ்வளவு சுவாரஸ்யமான நல்ல விஷயங்கள்..

    நன்றி ஜாக்கி அண்ணே.. Insomnia-ன்னு நோலனோட படம் ஒன்னு பார்த்துருக்கீங்களா.. Robin Williams தான் வில்லன்.. Al Pacino ஹீரோ.. அதுலயும் அப்படிதான்.. வில்லன் ஹீரோவை கதிகலங்க வைப்பாரு..

    நன்றி சரவணகுமார்.. நினைச்சேன்.. ஜாக்ஸன்வில்ல இருந்து ஒரு கல் வரப்போகுதுன்னு.. :) வந்துடுச்சு..
    மேட்ரிக்ஸ் சாயல் தெரியாம இப்படி ஒரு கதையை எடுத்துருக்கவே முடியாதுன்னுதான் நினைக்கிறேன்.. ட்ரெய்லர்லயே கொஞ்சம் தெரியுது..

    நன்றி பாலா.. ஹா ஹா.. அடுத்த பதிவு Memento-தான்.. அங்க இருக்கு கஜினிக்கும் முருகதாஸுக்கும் ராஜமரியாதை..

    ReplyDelete
  12. நண்பரே,

    மிக மிக அருமையான பதிவு. சுவையான, எளிமையான நடை. சுவைத்துப் படித்தேன். த பிரெஸ்டிஜ், நோலனின் படங்களில் நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம்.

    ReplyDelete
  13. Another Excellent Post no no Research!

    அபாரத் திறமை பாஸ் உங்களுக்கு! ஆமா என்ன வேலை பாக்குறீங்க? திரைக்கதை எழுதுவதைப் பற்றி நீங்கள் சொன்னது இதுவரை நான் எங்கும் கேட்டிராத ஒன்று, அதான் கேட்டேன். நீங்களும் சினிமாத் துறையில் உள்ளீர்களா? இல்லை வேறு துறையா?

    ReplyDelete
  14. என்னங்க போங்க

    நோலனைப் பத்தி இவ்ளோ தெளிவா எழுதியிருக்கீங்க, சரியில்லைங்க.

    நானும் ஜீலை16க்கு ரொம்ப நாளா வெயிட்டிங்.

    //அடுத்த பதிவு Memento-தான்.. அங்க இருக்கு கஜினிக்கும் முருகதாஸுக்கும் ராஜமரியாதை..//
    ராஜ மரியாதையா?
    ம்ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்.

    ReplyDelete
  15. மிக‌ அருமையான‌ ப‌திவு ஜெய்

    ஒவ்வொரு ப‌திவும் புதுப்புது ப‌ட‌ங்க‌ளை அறிமுக‌ம் செய்து, பார்த்தே ஆக‌வேண்டும் என்ற‌ உந்துத‌லையும் ஏற்ப‌டுத்துகிற‌து

    ReplyDelete
  16. சூப்பரா இருக்கு பாஸ்..

    ஆனா யாரோ நெகடிவ் ஓட்டுப் போட்டுட்டுப் போயிருக்காங்க. குவெண்டின் ரசிகர்களா இருக்குமோ?

    ReplyDelete
  17. ஜெய்,

    நல்ல விளக்கமான பதிவு

    என்னைப்போல நான் - லினியர் கதைகளுக்கு புதிய ஆட்களுக்கு புரிகிற விதத்தில் சொல்லி இருக்கிறீர்கள்.

    ஆனால் அந்த நான் - லினியர் முறையில் எதற்க்காக சொல்லவேண்டும் என விளக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  18. அங்க இருக்கு கஜினிக்கும் முருகதாஸுக்கும் ராஜமரியாதை//

    ஐயா ஜாலி.....
    எனக்கு ரொம்ப பிடிச்ச டைரடக்கரு இந்த கிருஸ்ட்டோபர். மொமெண்ட்டோ வுக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  19. நல்ல ஆழமான பதிவு நண்பரே.உங்கள் உழைப்பு என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது(ஹிஹி,basically நான் ஒரு முழு சோம்பேறி). :)
    memento,dark knight எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.
    அதிலும் dark knight என்னுடைய பர்சனல் favorite film no.1!!!
    அதுக்கு நான் batman ரசிகன் அப்டிங்கறது ஒரு முக்கிய காரணம்.ஆனா joker ஓட character அ தெளிவா,பயமுறுத்துற அளவு காட்டினது ரெண்டே ரெண்டு தான் டாப்.
    ஒண்ணு killing joke(comics),இன்னொண்ணு dark knight....
    என்ன ஒரு படம்!!
    அதை பத்தி ஒரு review எழுதுனும்ங்கறது என் ஆசை.என் கனவு போஸ்ட் அதுன்னு கூட சொல்லலாம்.ஆனா எழுதாம தள்ளிப் போட்டு கிட்டே இருக்கேன்...சொதப்பிடுவமொன்னு ஒரு பயம் தான்.பாக்கலாம்.
    அப்புறம்,அடுத்து memento வா?
    நீங்க சொன்னது சரி.என்ன பொறுத்த வரை அந்த படத்துக்கு ரெண்டு கிளைமாக்ஸ்.ஒண்ணு ஆரம்பம்,அடுத்தது முடிவு....
    அத மாதிரி ஒரு படம் இனி வருமான்னு தெரியல.
    by the by, inception க்கு நானும் வெயிட்டிங்.... :)

    ReplyDelete
  20. ஜெய் ஒவ்வொரு வசனத்திலும் பதிவிற்கான உங்களது தேடலையும், உழைப்பையும் புரிந்துக்கொள்ள முடிகின்றது (உங்கள் பாஷையில் குப்ரிக்கின் படங்களைப் போல:) )

    நானும் ஆங்கிலப்படங்களின் ரசிகன் தான். உங்கள் எழுத்தில் படங்களையும் தாண்டி இயக்குனர்களையும் பார்க்கமுடிகிறது.

    ஒவ்வொரு பதிவை வாசிக்கும்போதும், ஒரு மியூசியத்திற்கு சென்று வருவதைப் போன்று உணர்கின்றேன். காரணம் பதிவின் நீளமும், ஆழமும்! மிகவும் நன்றி.

    உங்கள் அடுத்த பதிவுகளிலும் இந்த தேடலும், ஆழமும் தொடரட்டும்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. //உங்கள் உழைப்பு என்னை ஆச்சர்யப்பட வைக்கிறது(ஹிஹி,basically நான் ஒரு முழு சோம்பேறி)//

    அப்படியே ரிப்பீட்டுகிறேன் :))

    Inception - சாதா உலகத்துலேயே சுத்தம்.. இதுல கனவுலனா? புகுந்து விளயாடபோறார்.. இங்க ரிலீஸ் உண்டா ?

    ReplyDelete
  22. நன்றி கனவுகளின் காதலரே..

    நன்றி Phantom Mohan, (அட.. பருப்பு பேர மாத்தியாச்சா?)
    // நீங்களும் சினிமாத் துறையில் உள்ளீர்களா? இல்லை வேறு துறையா? //
    நான் சாஃப்ட்வேர் என்ஜினியரா இருக்கேங்க.. சினிமா பார்க்கறதை தவிர எனக்கும் சினிமாத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க..

    நன்றி சுப.தமிழினியன், ரகு..

    நன்றி முகிலன்,
    // யாரோ நெகடிவ் ஓட்டுப் போட்டுட்டுப் போயிருக்காங்க. குவெண்டின் ரசிகர்களா இருக்குமோ? //
    முருகதாஸ் ரசிகரா இருந்தாலும் இருக்கும்..

    நன்றி யாசவி,
    // நான் - லினியர் முறையில் எதற்க்காக சொல்லவேண்டும் என விளக்கி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் //
    முன்னாடி எழுதின ஒரு பதிவுல கொஞ்சம் டீடெய்லா எழுதியிருந்தேன்.. http://worldmoviesintamil.blogspot.com/2010/03/2.html
    கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. அடுத்த வாரம் விரிவா எழுதிடலாம்..

    நன்றி முரளி.. :-)

    நன்றி illuminati,
    // dark knight.... என்ன ஒரு படம்!! அதை பத்தி ஒரு review எழுதுனும்ங்கறது என் ஆசை.என் கனவு போஸ்ட் அதுன்னு கூட சொல்லலாம்.ஆனா எழுதாம தள்ளிப் போட்டு கிட்டே இருக்கேன். //
    அட.. சீக்கிரம் எழுதுங்க.. நல்ல விஷயத்தையெல்லாம் தள்ளிப் போடக்கூடாது..

    நன்றி மனோரஞ்சன்,
    // உங்கள் அடுத்த பதிவுகளிலும் இந்த தேடலும், ஆழமும் தொடரட்டும்! //
    கண்டிப்பா தொடரும்.. தொடந்து வாசியுங்கள்..

    நன்றி ப்ரசன்னா,
    // Inception - சாதா உலகத்துலேயே சுத்தம்.. இதுல கனவுலனா? புகுந்து விளயாடபோறார்.. இங்க ரிலீஸ் உண்டா ? //
    இல்லாமலா.. அதே ஜூலை 16தான்.. அதுனால அமெரிக்காவுக்கு 12 மணி நேரம் முன்னாடியே ரிலீஸ் ஆகுதுன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  23. Inception ஐ விடவும் உங்களது அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

    அப்புறம்
    //தமிழ்ல வாமணன்னு ஒரு படம் வந்துச்சே.. அது இந்த படத்தோட தழுவல்தான்..

    இது உறுதியான தகவல்தானா ?

    ReplyDelete
  24. நன்றி Madhav.
    // இது உறுதியான தகவல்தானா ? //
    ஆமாங்க.. ஹீரோ ஜெய், கதாபாத்திரங்களைப் புரிஞ்சுக்கறதுக்காக ரகுமானைத் ஃபாலோ பண்ணறதும், ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு த்ரில்லுக்காக வீடு புகுந்து திருடறதும், அதுனால அந்த பொண்ணு கூட ஜெய் ஃப்ரெண்ட் ஆகறதும், அந்த பொண்ணே கொலை செய்யப்படறதும், கடைசியில எல்லாமே ஜெய்யை மாட்ட நடந்த சதின்னு தெரியறதும், அப்படியே Following படம்தான்.. Following Plot படிச்சு பாருங்க.. (ஆனா கடைசில பல ட்விஸ்ட் இருக்கும்.. )
    http://en.wikipedia.org/wiki/Following#Plot

    வாமனன் படத்துல மீதி இருக்கற, முதலமைச்சர் மற்றும் அரசியல் தொடர்பான கதைப்பகுதி, சுஜாதாவின் ‘24 ரூபாய் தீவு’ அப்படின்னு ஒரு நாவலோட மேலோட்டமான தழுவல்..
    ஆனா Following அவ்வளவா ஃபேமஸான படம் இல்லைங்கிறதால, வேற யாரும் இதப்பத்தி சொன்ன மாதிரி தெரியலைங்க..
    இங்க வேற யாரவது இந்த ரெண்டு படமும் பார்த்து இருக்கீங்களா நண்பர்களே.. ஹாலிவுட் பாலா? கருந்தேள்? கீதப்பிரியன்? க.காதலர்?

    ReplyDelete
  25. Madhav,
    ஒரு நண்பர் அவரோட பதிவுல சொல்லியிருக்காரு..
    http://www.swatikrish.com/2009/12/2009.html

    ReplyDelete
  26. தகவல்களுக்கு நன்றி ஜெய்.

    ReplyDelete
  27. வழக்கம் போல சுவாரஸ்யமான கட்டுரை..

    //ஹீரோ டி-காப்ரியோ அடுத்தவங்களோட கனவுக்குள்ள புகுந்து, அங்கேயிருந்து அவங்களோட பர்சனல் விஷயங்களை எல்லாம் அவங்களுக்கு தெரியாமலேயே திருடி, அதை வச்சு பணம் சம்பாதிக்கறவன்.. இதனால, அவனோட வாழ்க்கையில முக்கியமான விஷயங்களை இழந்துடறான்.. அது திரும்ப கிடைக்கணும்னா, அவன் ஒரு கஷ்டமான கனவுத்திருட்டை செய்யணும்னு சொல்லறாங்க.. அந்த வேலையை செய்யறதைத் தடுக்க, இவனை விட சக்திவாய்ந்த ஒரு வில்லன் கூட்டம் அலையுது.. அதை எப்படி சமாளிக்கறான் அப்படிங்கிறதுதான் படம்.. கனவுக்குள்ள கனவுன்னு சுத்திகிட்டே இருக்குமாம்.. பல கனவுலகங்கள்ல ஒரே சமயத்துல நடக்கிறதை, மாத்தி மாத்தி காட்டியிருக்காங்களாம்.. பல பேர் மாத்தி மாத்தி narration பண்ணற மாதிரி வருதாம்.. //

    பா. வெங்கடேசன் எழுதிய சிறுகதையான ராஜன் மகளின் கருவும் இதுதான்.. :)))

    கதையை அனுப்பி வைக்கறேன். படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க தலைவரே

    ReplyDelete
  28. இதுக்கு கூட ஒருத்தன் கவுத்திக் குத்தியிருக்கானே...

    இன்செப்சன் - நல்ல அறிமுகம் நண்பா...

    தொடருங்கள்...

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. காப்பிக்கும் homageக்கும் சின்ன வித்தியாசம்தான். குவிண்டினுக்கும் முருகதாஸ்கும் இருப்பது போல. குவிண்டின் எடுப்பவை ’ஹோமேஜ்’கள். அவர் பழைய பட ஸ்டைல்களைத் திருடி, சொல்லிவிட்டு செய்கிறார். முருகதாஸ் ஒரு எலிமெண்டை திருடினார்.
    இன்னொரு வகை இருக்கு. அப்படியே சுட்டுட்டு kante, zindagi என Reservoir Dogsஐயும் Old Boyஐயும் எடுத்துவிட்டு கமுக்கமா இருப்பது. இவங்கதான் பிரச்சனை. இல்ல?

    நோலன் விசிறி நான். கடைசியில் காட்சியில் ‘ஙே’ என முழிக்க வைத்துவிடுவார்.Insomniac தவிர எல்லாவற்றையும் பார்த்தாச்சு!

    ReplyDelete
  31. நன்றி சென்ஷி..
    // பா. வெங்கடேசன் எழுதிய சிறுகதையான ராஜன் மகளின் கருவும் இதுதான்.. :))) //
    அப்படியா!!! சீக்கிரம் அனுப்பி வைங்க.. வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..

    நன்றி அகல்விளக்கு, யாதவன்..

    // சென்ஷி said..
    நான் போட்ட கமெண்டைக் காணோம் :( //
    இப்ப வந்திருச்சு பாருங்க.. நான் எதுவும் பண்ணறதில்லைங்க.. :) ப்ளாக்கர்ல ஏதோ பிரச்சினை போல..

    நன்றி பப்பு..
    // முருகதாஸ் ஒரு எலிமெண்டை திருடினார். //
    திருடினா பரவாயில்லைங்க.. பல பேர் பண்ணறாங்க.. Memento-வை விட நல்லா எடுத்திருக்கோம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டாரு பாருங்க.. அதுதான் ஓவரா இருக்கு..
    // kante, zindagi //
    மே ஹிந்தி நஹீ மாலும்.. :-D
    // .Insomniac தவிர எல்லாவற்றையும் பார்த்தாச்சு //
    கண்டிப்பா பாருங்க.. வேட்டையாடு விளையாடு கிட்டத்தட்ட இதே ஸ்டைல்லதான் இருக்கும்.. (காப்பி இல்ல.. ஸ்டைல் மட்டும்..)

    ReplyDelete
  32. ஒரு பதிவு போடுவதற்கு எவ்வளவு தகவல்கள் தேவை என்று இப்பொழுது தான் தெரிகிறது உங்கள் உழைப்பிலிருந்து

    Thanks a lot Mr. Jai

    Keep it up

    ReplyDelete
  33. மெமண்டோ ஒரு பகுதிக்கு மேல என்னால பாக்கமுடியல :-))
    உங்க கருத்தோட ஒத்துப்போறேன்
    அவன் எந்த ரூம்ல தங்கிருக்கான்னு அவனும் குழம்பி நம்மையும் குழப்புவான்
    ஆனா அந்த உணர்வு கஜினில இல்லைங்க
    நல்ல பதிவு பாஸ் :-))

    ReplyDelete
  34. கலக்கல் ஜெய்!! வழக்கம்போலவே..ஆனா உன் பதிவுகளோட மிக பெரிய பலமே, ஒரு திரைப்படத்த இயக்குனரோட பார்வைலயோ , ஒரு விமர்சகரோட பார்வையிலோ இல்லாமல், ஒரு நல்ல சினிமா ரசிகனோட பார்வையில் இருப்பதுதான். அது மட்டும் இல்லாம, ஆங்கிலப் படத்த வெறும் படமா மட்டும் பார்கர என் மாதிரி பாமர மக்களுக்கு அந்த திரைப்படத்துக்கு பின்னால் இருக்கற உருவாக்கிகளையும் (சொல்லாடல் சரியா!!??) வெளிச்சம் போட்டு காமிக்கறது ரொம்பவே அருமை.. தகவல்கள் நிரம்பிய இந்த பதிவ எழுதினதுக்கு மிக்க நன்றி..
    (// யாரோ நெகடிவ் ஓட்டுப் போட்டுட்டுப் போயிருக்காங்க. குவெண்டின் ரசிகர்களா இருக்குமோ? //
    முருகதாஸ் ரசிகரா இருந்தாலும் இருக்கும்..
    // (ஏழாவதா சுறா படம் இருக்கும்னு பரவலா பேசிக்கறாங்க..)//
    இத பார்த்துட்டு குவென்டின் மற்றும் முருகதாஸ் ரசிகரா இருக்கும்னு ஆராய்ச்சி பண்றீங்களே நண்பர்களே!!!
    உங்களை நினைத்தால் ஒரே நகைச்சுவையாய் இருக்கிறது... ;)

    ReplyDelete
  35. நன்றி சிபி,
    // ஒரு பதிவு போடுவதற்கு எவ்வளவு தகவல்கள் தேவை என்று இப்பொழுது தான் தெரிகிறது //
    பதிவுக்காக மட்டுமில்லை.. நாம சொல்லி நாலு நண்பர்கள் படம் பார்த்துட்டு வந்து படம் ரொம்ப அருமையா இருந்ததுன்னு சொல்லறப்போ இருக்க சந்தோஷமே தனி.. அதுக்காகதான் எழுதறதே..

    நன்றி கார்த்திக்,
    // மெமண்டோ ஒரு பகுதிக்கு மேல என்னால பாக்கமுடியல :-)) //
    கவலையே படாதீங்க.. அடுத்த பதிவுக்கப்பறம் பார்க்க வச்சிடுவோம்.. :)

    நன்றி அருள்மொழி,
    // உருவாக்கிகளையும் (சொல்லாடல் சரியா!!??) //
    சொல்லாடல் அப்படிங்கிறது சரியான்னு சொல்லற அளவுக்கு கூட எனக்கு தமிழ் அறிவு கிடையாது.. இருந்தாலும், உன்ன மாதிரி ஒரு கவிஞன் என்னைப்பார்த்து இப்படி ஒரு கேள்வி கேட்டதை நினைச்சு பெருமைப்படறேன்.. :-D

    // // (ஏழாவதா சுறா படம் இருக்கும்னு பரவலா பேசிக்கறாங்க..)//
    இத பார்த்துட்டு குவென்டின் மற்றும் முருகதாஸ் ரசிகரா இருக்கும்னு ஆராய்ச்சி பண்றீங்களே நண்பர்களே!!! //
    ஆஹா.. இது தெரியாம போச்சே..

    ReplyDelete
  36. //முருகதாஸ் ஒரு எலிமெண்டை திருடினார்//

    கிழிஞ்சது...!!

    ReplyDelete
  37. ஆஹா ட்ரைலர் மிரட்டுதே... ரொம்ப்ப்ப டீட்ட்டெயிலா இருக்கிறதால இந்த சின்னவனுக்கு எதும் புரியல. Insomnia மட்டுமே பார்த்திருக்கிறேன். கண்டிப்பா Inception பாத்திர வேண்டியது தான்

    ReplyDelete
  38. பின்னிட்டிங்க..பிரமாதமான கட்டுரை..இன்னும் எழுதுங்க..

    என்னுடைய ஆதர்சன இயக்குனர்..எப்போதெல்லாம் மனம் சோர்வடைகிறதோ அப்போதெல்லாம் இவரின் Dark Knight படம் பார்க்கும் பழக்கம் இப்போதெல்லாம் என்னிடம் இருக்கிறது. என்னுடைய PSP-இல் Dark Knight படம் எப்போதும் இருக்கிறது.

    ReplyDelete
  39. //இங்க வேற யாரவது இந்த ரெண்டு படமும் பார்த்து இருக்கீங்களா நண்பர்களே..//

    நான் பாத்துருக்கேன் ஜெய்.. அப்பட்டமான திருட்டு தான்.. அதுமட்டும் இல்லை.. வாமனனில் வரும் அந்த தாதா-போலீஸ் ஷூட் அவுட் சீன எந்த வில் ஸ்மித் படம் தெரிகிறதா ;)

    ReplyDelete
  40. எட்வின், insomnia-தான் நோலனோட படங்கள்ல கொஞ்சம் சுமார்னு சொல்லலாம்.. (அது மட்டும் திரைக்கதை அவருது இல்ல) மத்த 5 படங்களும் சூப்பர் டூப்பர்.. கண்டிப்பா பாருங்க..

    நன்றி விஜய், அதுவும் முக்கியமா நோலனோட படங்கள் மூனு நாலு ஃபோட்டோகிராஃபிக்காக ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கு.. உங்க ஏரியாவாச்சே..

    பிரசன்னா,
    // அப்பட்டமான திருட்டு தான்..//
    :-)
    // அந்த தாதா-போலீஸ் ஷூட் அவுட் சீன எந்த வில் ஸ்மித் படம் தெரிகிறதா //
    எலெக்ட்ரிக் ட்ரெய்ன்ல வர்ற சீனா? தெரியலையே..

    ReplyDelete
  41. ரொம்ப அருமையான கட்டுரை ஜெய்.நல்ல மனுஷந்தான் கிருட்டோபர்....என்னா ரெண்டு,மூணு தபா பாத்தாதான் என் மரமண்டைக்கு ஏறும்.நன்றி.

    ReplyDelete
  42. நல்லதொரு பகிர்வு நண்பரே. உங்களை பற்றி எனது தளத்தில் எழுதியிருக்கிறேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    ReplyDelete
  43. His movie THE PRESTIGE is awesome. Everyone must watch it.

    ReplyDelete
  44. கட்டுரை எளிமையாகவும் அதே நேரத்தில் அந்த படத்தைப் பார்க்கவும் தூண்டுகிறது. மார்ட்டின் ஸ்கார்சிசி படங்களையும் இதே போல் அனுபவித்து எழுத கோருகிறேன்!

    ReplyDelete
  45. ஜெய் உங்களின் விமர்சனம் மற்றும் இந்த கட்டுரை அருமையா இருக்கு. வித்தியாசமான சினிமா பதிவுகளை படிக்கிறேன் . தொடரட்டும் உங்கள் ராஜாங்கம்

    ReplyDelete
  46. அருமையான பதிவு ஜெய்... உண்மையிலேயே தெளிவா சொல்லிட்டீங்க...

    குவெண்டினை விட நொலனின் நான் - லீனியர் காட்சிகள் சிறப்பு வாய்ந்தவை.... குவெண்டின் ப்ள்ப் பிக்‌ஷன்க்கு பிறகு கொஞ்சம் மக்களுக்கு ஒரு வாட்டியிலேயே பாத்து புரியணும்-னு எடுக்குற மாறி இருக்கு...

    நானும் இன்செப்ஷனுக்காக வெயிட்டிங்... எத்தன வாட்டி பாத்து புரியுமோ....

    ReplyDelete
  47. உண்மையிலேயே என்னைப் போன்ற‌ ந‌ல்ல‌ சினிமாவை தேடி பார்க்க‌ ஆர‌ம்பித்திருப்ப‌வ‌ர்க‌ளுக்கு அருமையான‌ க‌ட்டுரைக‌ளை எழுதிவ‌ருகிறீர‌க‌ள்.. ந‌ன்றி..!!
    த‌ற்போதுதான் Memento பார்த்தேன்..மீண்டும் பார்க்க‌ வேண்டும்..!!சினிமா நுணுக்க‌ங்க‌ளை அறிந்து மீண்டும் பார்ப்ப‌து நிச்ச‌ய‌ம் புது அனுப‌வ‌த்தையே த‌ரும்..!இக்க‌ட்டுரையை வாசித்த‌ பின் Christoper Nolan ன் அனைத்துப் ப‌ட‌ங்க‌ளையும் பார்க்க‌ ஆவ‌லாய் இருக்கிற‌து!!

    ReplyDelete
  48. மிக மிக அருமையான அலசல்.

    ReplyDelete
  49. குழந்தைக்கு சொல்லிக் குடுக்குற மாதிரி ஒவ்வொன்னா புரியற மாதிரி எழுதியிருக்கீங்க. இனி நோலன் பத்தி நிறைய எனக்குத் தெரியும்னு சொல்லிக்கலாம். தேங்ஸ்.

    ReplyDelete
  50. ஏன் உச்சி மண்டைல சுர்ருங்குது...உங்க பதிவு படிச்சாக்க கிர்ருங்குது...உங்க உழைப்பை நினைச்சாக்க டர்ருங்குது..டொர்ருங்குது..ட்ருருருருரு....

    மிக அருமையான பதிவு...சினிமா பற்றி வந்த மிக நல்ல பதிவு...தொடருங்கள்...

    ReplyDelete