Tuesday, May 4, 2010

ஸ்டான்லி குப்ரிக்கின் புதிர்கள் – Eyes Wide Shut [18+] – பாகம் 2

இது போன பதிவோட தொடர்ச்சி. அதுல படத்தோட கதையை பார்த்தோம். இந்த பதிவுல, படத்துல இருக்கற புதிர்களைப் பத்தி பார்க்கலாம்.

சப்வே ரெஸ்டாரண்ட்(Subway Restaurant)-க்கு ஒரு விளம்பர கட் அவுட் போட்டாங்களாம்.. SEX அப்படின்னு பெரிய்ய்......ய எழுத்துல எழுதி, குட்டியா அதுக்கு கீழே, ”Now we got your attention. Eat at Subway” அப்படின்னு போட்டு… பல கட் அவுட் இருக்கற இடத்துல எல்லாரும் அந்த கட் அவுட்டைதான் பார்த்தாங்களாம்… ’அந்த’ விஷயத்துக்குதானே நாமெல்லாம் அடிச்சு புடிச்சு படிக்கறோம்…

அதே மாதிரிதான் இந்த படமும்… ஏகப்பட்ட சீன் இருக்குன்னு கேள்விப்பட்டு படத்தைப் பார்த்தா... (பயப்படாதீங்க... நிறையவே இருக்குதான்...) ஆனா, அதுக்கு நடுவுல தத்துவம் சொல்லறாரு குப்ரிக்...

இன்னும் சரியா சொல்லணும்னா நாம வாழறதெல்லாம் ஒரு வாழ்க்கையா அப்படின்னு அசிங்கப்படுத்தி இருக்காரு... நல்ல வேளை, வழக்கம்போல மறைமுகமா சொல்லியிருக்காரு... நமக்கு Christopher Nolan, Quentin படம்னாலே புரியறது கஷ்டம்தான்... குப்ரிக் படம்னா சொல்லணுமா... முதல் தடவை படம் பார்க்கறப்போ அதெல்லாம் புரியல... புரிய வேண்டியது மட்டும் நல்லா புரிஞ்சது... :-) ஆனா, க்ளைமாக்ஸ்ல திடீர்னு ஹீரோயினோட படுக்கையில அந்த முகமூடி எப்படி வருதுன்னு மட்டும் ரொம்ப குழப்பமா இருந்தது... சரின்னு கூகிள்ல தேடினதுல படம் பத்தின பல விஷயங்கள் தெரிஞ்சது... அப்பப்பா.. ஒரு ஆராய்ச்சியே பண்ணலாம் போல.. அவ்வளவு சங்கதிய ஒளிச்சு வச்சுருக்காங்க படத்துல... படம் ரிலீஸாகி நாம டிக்கெட் வாங்கி பாக்கறதுக்குள்ள, குப்ரிக் டிக்கெட் வாங்கிட்டு மேல போயிட்டாரு... அவரு இருந்திருந்தா, இன்னும் என்னென்ன புதிர் இருக்குன்னு சொல்லியிருப்பாரு...

முதல் சீன்லயே ஹீரோயின் நிக்கோல் கிட்மன்(Nicole Kidman) நிர்வாணமா நிக்கறாங்க... நாம கண்ணை நல்லா விரிச்சு உத்து பாக்குறப்போதான் படம் பேரே போடறாங்க. Eyes Wide SHUT-னு... Eyes Wide Open தெரியும்… அதென்ன Eyes Wide Shut?? அதாவது இந்த கருமத்தை எல்லாம் நல்லா கண்முழிச்சு கவனிக்கறீங்க… ஆனா வாழ்க்கையோட முழு அர்த்தத்தையே பார்க்காம விட்டுடறீங்க... கண் “Wide”-ஆ முழிச்சுட்டு இருந்தாலும் மூடிட்டு இருக்கற மாதிரிதான் அப்படின்னு சொல்ல வர்றாரு குப்ரிக்.. (இந்த விளக்கத்துக்கு நம்ம Texas Mani என்னல்லாம் சொல்லப்போறாரோ..) நமக்கு இதெல்லாம் யோசிச்சு புரிஞ்சுக்க எங்க டைம் இருக்கு… ஹி.. ஹி.. அதுக்குள்ளதான் அடுத்த ‘சீன்’ வந்துருது இல்ல...

குப்ரிக் வழக்கம்போல ஒரு ஹீரோவையோ, ஒரு ஹீரோயினையோ, அவங்களோட தனிப்பட்ட வாழ்க்கை பத்தியோ எதுவும் சொல்ல வரல.. சமுதாயத்துல இருக்கற அசிங்கத்தைப் பத்திதான் சொல்லறாரு..

குப்ரிக்கைப் பொறுத்தவரைக்கும் இது பல ஆண்கள், பல பெண்கள் வரும் கதையில்ல... ஒரு ஆணின் metaphor-ம் ஒரு பெண்ணின் metaphor-ம் இடம்பெறும் கதை... (metaphor-ன்னா உவமைன்னு சொல்லலாமா??)

ஆனந்த விகடன்ல மதன் கார்ட்டூன் போடறப்போ, ‘தமிழர்கள்’ அப்படின்னு போட்டு, எலும்பும் தோலுமா கிழிஞ்ச சட்டையோட ஒருத்தரை வரைஞ்சு இருப்பாரு... அதாவது மொத்த குடிமக்களையும் ஒரு உருவத்துல காட்டியிருப்பாரு.. அது மாதிரி, ஹீரோ, ஹீரோயின், கதையில வர்ற மத்தவங்க எல்லாரையும், சமூகமாகத்தான் சிம்பாலிக்கா காட்டறாங்க.. ஹீரோயின், குழந்தை, Mandy, விலைமாது எல்லாரும் ஒரே metaphor-தான்.. எப்படி?

ஹீரோயினுக்கும் Mandy–க்கும் ஏதாவது ஒற்றுமை தெரிஞ்சதா..? ஹீரோயினும், Mandy-யும் முதல்ல அறிமுகம் ஆகறது பாத்ரூம்லதான்.. இரண்டு பேரும் ட்ரக்ஸ் எடுத்துக்கறாங்க.. அந்த Orgy–ல ஹீரோவைக் காப்பாத்தறது Mandy–யாவும் இருக்கலாம்.. ஹீரோயினாவும் இருக்கலாம்.. (அதாவது உண்மையா நடந்ததை அவங்க கனவுன்னு ஹீரோகிட்ட பொய் சொல்லி இருக்கலாம்)..

Mandy மட்டுமில்ல. ஹீரோயினோட அறையின் படுக்கை, கண்ணாடி எல்லாம் அந்த விலைமாதுவின் படுக்கை, கண்ணாடி அமைப்போடு ஒத்துப்போகுது..!! விலைமாதுவின் அறையில் பல முகமூடிகள் தொங்கிட்டு இருக்கு…!!

முதல் காட்சியில ஹீரோயின் கறுப்பு கலர் கவுனை கழட்டறதும், Orgy-யில எல்லாரும் கறுப்பு கலர் கவுனை கழட்டறதும் ஒரே ஸ்டைல்..!! ரெண்டு காட்சிலயும் உடம்பில துணி இல்ல.. ஆனா, கறுப்பு ஹைஹீல்ஸ் செருப்பு மட்டும் போட்டு இருக்காங்க.. (சாரி... இங்கே போட முடியற அளவுக்கு ஃபோட்டோ இல்லை)

அந்த குழந்தை வேணும்னு கேக்கற அதே ப்ளூ கலர் ட்ராலி, இன்னொரு காட்சியில் விலைமாதுவின் வீட்டு முன் இருக்கிறது..!!

கடைசிக்காட்சியில் குழந்தைக்கு பக்கத்துல இருக்க புலி பொம்மை விலைமாதுவின் படுக்கையில இருக்கு.. (இதெல்லாம் எதேச்சையா இருக்கலாம்னு நினைச்சீங்கன்னா குப்ரிக் பத்தின முந்தைய பதிவை கொஞ்சம் படிச்சுட்டு வந்துடுங்க... ஒரு வீடு செட் போடறதுக்கே நூற்றுக்கணக்கான வீடுகளை ஃபோட்டோ எடுத்த குப்ரிக் இதையெல்லாம் எதேச்சையா வச்சுருக்க மாட்டார்)

அந்தக்குழந்தை முதல் காட்சியில டிவியில பாக்கணும்னு சொல்லற நாடகம், ஒரு பொம்மை உயிருள்ள தேவதையா மாறுகிறதைப் பத்தின நாடகம்... அந்தக்குழந்தையும் ஒரு பார்பி பொம்மை வச்சுருக்கா... அவளும் தேவதை ட்ரஸ் போட்டு இருக்கா.. இதுவும் கனவுலகத்தையும், நிஜத்தையும் ஒப்பிடும் வகை..!! ஹீரோயினின் கனவையும், ஹீரோவின் நிஜத்தையும் ஒப்பிடுவது போல...

படத்தின் போஸ்டரிலேயே ஹீரோவும் ஹீரோயினும் கண்ணாடி முன் நிக்கற காட்சிதான்.. இந்தக் கண்ணாடி “பிரதிபலிப்பின்” சின்னம்.. நம்மையே பிரதிபலிக்கும் கதாபாத்திர அமைப்பைதான் இது காட்டுது..

பார்ட்டியில, பாத்ரூம்ல படுத்துகிட்டு இருக்கறதும், அதே அறையில பின்னாடி சுவர்ல இருக்கற ஒவியத்துல ஒரு பெண் நிர்வாணமா படுத்துட்டு இருக்கறதும் ஒரே ஸ்டைல், ஒரே ஆங்கிள்..!! இதுவும் கனவுலகத்துக்கும், உண்மைக்கும் உள்ள தொடர்பைக் குறிக்குது..

படத்தில கிட்டத்தட்ட எல்லா இடங்களுமே ரெண்டு ரவுண்ட் வருது.. அதாவது, முதலில் பார்ட்டி, வீடு, விலைமாதுவின் வீடு, நண்பனின் ஹோட்டல், துணிக்கடை.. மீண்டும் Orgy, வீடு, விலைமாதுவின் வீடு, நண்பனின் ஹோட்டல், துணிக்கடை..!! இதில் ஆச்சரியம் Zeigler–ன் பார்ட்டியும், Orgy-ம் எப்படி ஒத்துப்போகும்? இரண்டு இடத்திலேயும் ஹீரோ இருக்கிறான்.. Zeigler இருக்கிறார்.. Mandy இருக்கிறாள்.. நண்பன் Nick-தான் வாசிக்கிறான்.. இரண்டிலும் உறவுக்காட்சிகள் வருகின்றன.. முதல் பார்ட்டியில் வரும் டான்ஸ் ஆளும், அந்த இரண்டு பெண்களும், Orgy-யிலும் இருக்கலாம்..!! ஹீரோயின் முதல் காட்சியில் கேட்கிறார் ”Do you know why Zeigler invites us for such parties?” என்று.. குப்ரிக் இது போன்ற பார்ட்டிகளையும், Orgy-களையும் ஒப்பீடு செய்திருக்கலாம்..

இன்னும் எவ்வளவோ புரியாத புதிர்கள் இருக்கு.. முதல் காட்சியில ஹீரோயின் ட்ரஸ் கழட்டற அதே அறையிலதான், அடுத்த 10 வினாடிகள்ல ஹீரோ ட்ரஸ் பண்ணி முடிச்சுட்டு வெளியே வர்றாரு.. அதே அறை.. அதே ஆங்கிள்ல ஷாட் எடுத்துருக்காங்க.. அடுத்தடுத்த காட்சி.. ஆனா, அதுக்குள்ள கன்டின்யுவிட்டி தப்புகள் (?!)..

புதுசா தரையில ஒரு கார்ப்பெட் வந்துருக்கு.. லைட்டை காணோம்.. டென்னிஸ் ராக்கெட்டை காணோம்.. அந்த இடத்துல வேற ஏதோ இருக்குது..!! (குப்ரிக் தான் ஹாலிவுட்டின் பர்ஃபெக்ட்டான டைரக்டர்னு சொல்லறாங்க) இதுபோல பல தவறுகள் படம் முழுக்க இருக்கு... இதெல்லாம் கண்டிப்பா தப்பு கிடையாதுன்னும், படத்தின் கனவு நிலையை உணர்த்துதுன்னும் சொல்லறாங்க.. க்ளைமாக்ஸைத் தவிர, படம் மொத்தமும் ஹீரோவின் கனவாக இருக்கலாம்... கடைசில ஹீரோயினின் படுக்கையில முகமூடி இருக்குதே.. அதப்பத்தி ஹீரோயின் எதுவுமே சொல்லறதில்ல.. அது ஹீரோவுக்கு மட்டுமே தோணும் hallucination-ஆ இருக்கலாம்..

ஹீரோ அந்த நியூஸ்பேப்பர்ல படிப்பாரே.. அந்த கட்டிங் 5 செகண்ட் வருது.. அதை பாஸ் பண்ணி படிச்சா, அதுல கூட சில புதிர்களையும், சில ஒப்பீடுகளையும் வச்சுருக்காறாம் குப்ரிக்..

படம் முழுக்க பல பேர் (முதல் காட்சியில வர்ற பேபிசிட்டர், Zeigler, அந்த டான்ஸ் ஆள்) ஹீரோயினோட அழகை மட்டும்தான் புகழறாங்க.. அவங்க அதைக்கேட்டு சந்தோஷப்படறாங்க.. பல காட்சிகள்ல கண்ணாடியை பார்த்து தன் அழகை ரசிச்சுகிட்டே இருக்காங்க.. மேக்கப் போட்டுட்டே இருக்காங்க...

ஹீரோயின் அவளோட குழந்தைக்கு கணக்கு சொல்லித்தர்றது எந்த பையன்கிட்ட காசு நிறைய இருக்குன்னு கண்டுபிடிக்கற கணக்கா இருக்கு.. அதைத்தானே பலர் வாழ்க்கையில செஞ்சுகிட்டு இருக்காங்க, அதைத்தானே அடுத்த தலைமுறையும் கத்துகிட்டு வளர்றாங்க அப்படிங்கறதைதான் குப்ரிக் மறைமுகமா சுட்டிக்காட்டறாரு.. அதை கன்ஃபர்ம் செய்யற மாதிரி அதைத் தொடர்ந்து, ஹீரோயின் தன்னோட கனவில பல ஆண்களோட இருக்கறதை சொல்லறது பின்னணியில் கேக்குது..

ஏற்கனவே வீட்டுல நிறைய விளையாட்டுப் பொருள்கள் இருந்தும், அந்தக்குழந்தை ஷாப்பிங் போகணும்னு கேக்கறா.. இதுதான் ஹீரோ ஹீரோவினுடைய மனநிலையும்… வீட்டுலயே வச்சுகிட்டு வெளியில தேடிகிட்டு இருக்காங்க...

மொத்தத்துல மனைவியை படுக்கைக்கு மட்டும் பயன்படுத்தற கணவர்களையும், விலைமாது மாதிரி புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுக்கற மனைவிகளுக்கும், வீட்டுலயே தேவையானது எல்லாம் வச்சுகிட்டு மனச வெளியே அலைபாய விடற எல்லாருக்கும்... படம் புரிஞ்சிருந்தா ஒரு நெத்தியடி... புரியலைன்னா மற்றுமொரு 18+ படம்...

போன நூற்றாண்டின் சிறந்த இயக்குனர்னு, பெரிய தலைகள் எல்லாரும் குப்ரிக்கை சொல்லறாங்க.. கதை சொல்லறதை வசனம், திரைக்கதை, கதாபாத்திரம் இதையெல்லாம் மட்டும் வச்சு சொல்லிகிட்டு இருந்த சினிமா உலகத்துல, காட்சி அமைப்புகள், செட்டிங், பொருட்கள், நிறங்கள், உடையமைப்பு அப்படின்னு எல்லாத்தையும் கதை சொல்ல பயன்படுத்தி இருக்காரு.. அப்படிப்பட்ட ஒருத்தர் 50 வருஷ அனுபவத்துக்கு அப்பறம் எடுத்த கடைசி படத்தை இன்னும் முழுசா புரிஞ்சுக்காம இருக்கோம்.. :-(





Related Posts with Thumbnails

21 comments:

  1. நல்லா கவனிச்சு பார்த்து அனுபவிச்சு எழுதீருகீங்க :-)

    ReplyDelete
  2. நான் இதை 18+ ஆ மட்டும் பார்த்துக்கறேன். ;)

    ReplyDelete
  3. அந்த Orgy-யின் போது வரும் தமிழ்ப் பாட்டை விட்டுட்டீங்களே - "இது நரகமா...". முதல் முறை எதேச்சையாக இந்தப் படத்தைப் பார்த்தபோது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

    ReplyDelete
  4. நன்றி, இராமசாமி கண்ணண்.

    ஹாலிவுட் பாலா, எல்லாரும் அதே கேஸ்தான் தல.. :-) குப்ரிக்கிற்காக படத்தை பார்க்க ஆரம்பிச்சாலும், முதல் சீன்லயே ஆசையை காட்டிடறாங்க.. அப்பறம் எங்க படத்தை பார்க்கறது.. fast forward பண்ணி தேவையானதை மட்டும்தான் முதல்ல பார்த்தேன்..

    Selva, சரியா சொன்னீங்க.. accidental husband-னு ஒரு மொக்க படத்துல ரஹ்மான் பாட்டு கேட்டதுக்கே ஆச்சரியப்பட்டேன்.. குப்ரிக் படத்துல தமிழ் பாட்டுன்னா சொல்லணுமா.. ஆனா, நம்ம பசங்க அதுக்கும் பிரச்சனைய போட்டுருப்பாங்க போல.. http://en.wikipedia.org/wiki/Eyes_Wide_Shut#Usage_of_Hindu_prayers

    ReplyDelete
  5. @@@இராமசாமி கண்ணண் --//நல்லா கவனிச்சு பார்த்து அனுபவிச்சு எழுதீருகீங்க :-)//

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  6. குப்ரிக் எத குத்தி காட்ராருன்னு எனக்கு முன்னமே தெரிஞ்சு இருந்தது.ஆனா நீங்க சொன்ன அந்த மைநூட் தகவல்கள் புதுசு.நல்ல பதிவு....

    ReplyDelete
  7. இத படிக்க முடியாத நிலையில் இருக்கேன்.. செத்த இருங்க.. பாத்துட்டு வந்துடறேன் :)
    மேலும் மற்ற படங்களிலும் இது போல் நீங்கள் புரிந்து கொண்டதை தொடர்ந்து எழுதவும்.. பெரிதும் உதவும் :)

    ReplyDelete
  8. எனக்கு ரொம்பப் புடிச்ச ஒரு படத்தப் பத்தி அருமையன ஒரு பதிவு . . :-) ரொம்ப ரசிச்சிப் படிச்சேன் . . ஃபண்டாஸ்டிக் !!

    ReplyDelete
  9. நுண்ணிய தகவல்கள்.
    படத்தை மறுபடியும் பார்க்க தூண்டுகிறது!!

    ReplyDelete
  10. நல்ல பதிவு

    ReplyDelete
  11. ஜெய் பதிவு சூப்பர். இந்த படத்த ஏற்கனவே 18+ கண்ணோட்டத்துல 4 வருசத்துக்கு முன்னாடி பார்த்திருக்கேன். உங்க பதிவ படிச்சுட்டு மீண்டும் பார்த்தேன். படத்தோட கரு கொஞ்சம் விளங்குச்சு. இந்த பதிவ படிச்சு நான் புரிஞ்சுக்கிட்டது சரிதான்னு கன்பார்ம் பண்ணிக்கிட்டேன்.

    ReplyDelete
  12. அருமை நண்பா...

    நிச்சயம் மீண்டும் படத்தை உணர்ந்து பார்க்க வேண்டும்...

    ReplyDelete
  13. நண்பரே,

    மிகவும் சிரத்தையுடன் வித்தியாசமாக இப்பதிவை தயாரித்து இருக்கிறீர்கள். ஒரு ரசிகனின் பார்வையில் ஒரு படைப்பிற்கு கிடைக்கும் அர்த்தங்கள் ஆர்ச்சயம் தரவல்லவை என்பதை உங்கள் பதிவு நிரூபிக்கிறது.

    ReplyDelete
  14. நானும் படம் பார்த்தேன். ஆனால் இந்த அளவுக்கு அவதானிக்கவில்லை..!

    நல்ல பதிவு நண்பரே..!

    ReplyDelete
  15. நான் இந்த படம் இன்னும் பார்க்கலை மச்சான்...படிக்க படிக்க ஆச்சர்யமாய் இருக்கிறது....சீக்கிரம் பார்க்கணும்...
    நல்ல பதிவு...இன்னும் எழுதுங்கள்..

    ReplyDelete
  16. இன்னும் படம் பாக்கலங்க... சொ இந்த பதிவயும் படிக்கல இப்போதைக்கு... இன்னும் ரெண்டு நாள் டைம் கொடுங்க.. பாத்துட்டு படிக்கிறேன் :) :)

    ReplyDelete
  17. அருமையான பதிவு
    க்யூப்ரிக்குக்கு வந்தனம்

    ReplyDelete
  18. கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்

    ReplyDelete
  19. குப்ரிக்... nice sharing .... thank you man :)

    ReplyDelete
  20. I didn't read the other comments, Don't know whether anyone else has mentioned this, metaphor- uvamaanam, similie- uvamai!

    ReplyDelete